"உன் தானதர்மங்களின் பயனை எனக்கு கொடுப்பாயா.?"
வயோதிக வேடதாரியின் சுயம் புரிந்த கர்ணன் கசப்பாய் புன்னகைத்தான்.
"கொடுக்க அது மட்டுமே எஞ்சியுள்ளது.!பெற்றுக் கொள்ளும்.!"
இருகைகளினால் வழியும் ரத்தத்தை கொண்டு தர்மபலனை வழங்கினான் கர்ணன்."பீஷ்மனை தானே சாகும் வரம் காத்தது போல் உன்னை காத்த தர்மபலனை யாசகமாய் பெற்றேன்.!மன்னித்து விடு கர்ணா.!உனை வீழ்த்த எனக்கு வேறு வழியில்லை.!"
சுயஉருவெடுத்தான் கண்ணன்.!
"நீர்தான் என்பதை நான் முன்பே அறிவேன்.!என்விதி மரணம் என தெரியுமெனக்கு.பாண்டவர்களோடு அறுவரானாலும்,துரியோதனனின் தங்கை துச்சலை நீங்கலாக 99பேரோடு சேர்ந்து நூற்றுவர் ஆயினும் என் மரணம் நிச்சயம்.!ஆனால் என் தானதர்மங்களை உனக்கு வழங்கிய தர்மபயன் இதுவரை நான் கொடுத்ததை விட அதிகம்.!அது என்னை காப்பாற்றும்.!"
நெருங்கிய கருத்த உருவம் "நான் மரணதேவன்.!உன் உயிரை கவர வந்திருக்கிறேன்.!"
புரியாமல் பார்த்த கர்ணனை பார்த்து புன்னகைத்தான் கண்ணன்."இறக்கும்போதும் ஈன்றதை உன் பெருமிதமாக,கர்வமாக நினைத்தாய் இல்லையா கர்ணா.!"
"ஆம்.!கொடுப்பதற்கென்றே பிறந்தவன் நான்.!
"நீ தானம் கேட்டவர்களுக்கு இல்லையென்று சொன்னதேயில்லையா.?"
"இல்லை.!இல்லவே இல்லை.!இந்த வார்த்தை என் வாயில் வந்ததில்லை.!"
"ஏன் இல்லை.?பாலகன் அபிமன்யூ நிராயுதபாணியாக போராடிய போது வீர மரணமடைய விரும்பி உன்னிடம் ஒரு வாளை தானமாக கேட்டானே.?நீ கொடுத்தாயா.?மறுத்தாய்.!மறுக்க முடியுமா உன்னால்.!"
"ஆம்!உண்மை!நீ என் அடிமை என்று துரியோதனன் தடுத்தானே.?எஜமானனை மீறி ஒரு அடிமை என்ன செய்ய முடியும்.?"
"கேட்டதும் கொடுப்பது உன் இயல்பு.கவசகுண்டலத்தை துரியோதனனின் அனுமதி பெற்றா கொடுத்தாய்.?சற்றுமுன் கொடுத்த தர்மபலனும் உன் விருப்பத்தின் பேரிலேயே கொடுத்தாய்.!"
"நானும் ஒரு தானத்தை செய்யாத பாவியானேன்.இப்போதே இந்த கணமே கர்ணன் இறந்தான்.!என் கர்வம் தொலைந்தது.!"
கண்ணனை வணங்கிவிட்டு மரணதேவன் தன் வேலையை துவக்கினான்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக