சனி, 21 நவம்பர், 2015

மாத்தி யோசி.!

"கணபதி கடைசியாக என்னதான் சொல்கிறாய்.?"

"தாயே.!நான் முதலிலிருந்தே திருமணம் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.!"

"நீ திருமணத்திற்கு மறுத்தால் நான் விசம் குடிப்பேன்.!"
அருகிருந்த சிவன் "நான் ஏற்கனவே ஆலகால விசத்தை விழுங்கி விட்டேன்.!தொண்டையிலிருப்பதை வயிற்றுக்குள் தள்ளினால் போதும்.!"

"விளையாடாதீர்கள்.! திருமணத்திற்கு நீ ஏன் மறுக்கிறாய்.?"

"என் தந்தைக்கும்,தமையனுக்கும் இரண்டு மனைவிகள்.!இருவரும் படும்பாட்டை பார்த்தே மறுக்கிறேன்.!"

"இல்லற இன்பம் பெறாதவனுக்கு சொக்கம் கிட்டாதென தெரியாதா உனக்கு.?"

"பிரம்மசரிய சொர்க்கத்தில் வாழும் என்னை இல்லற நரகத்தில் தள்ளாதீர்கள்.!"

"உன் மனைவி பற்றி கற்பனைகள்,நிபந்தனைகள் உண்டெனில் கூறு.!"

"நீ விரும்பும் எந்த பெண்ணையும் நான் படைப்பேன்.!"என்றான் பிரம்மன்.!

"அப்படியானால் என் தாயைப்போல் மனைவி வேண்டும்.!"

"குணத்திலா.?அழகிலா.?"

"இரண்டிலும்.!"

"ஈரேழு லோகங்களிலும் தேடுவோம்.!கிடைக்காவிட்டால் படைப்போம்.!"

"உள்ளர்த்தம் தெரிந்துதான் பேசுகிறீர்களா.?"

"ஏன் அப்படி சொல்கிறாய்.?"

"பெண்ணை தேடுங்கள். கிடைத்தால் மணக்கிறேன்.!"
விநாயகன் விஷமச்சிரிப்புடன் கிளம்பினான்.
யோசித்த கிருஷ்ணன் சிரித்தான்.
"மாப்பிள்ளை புத்திசாலி.!பெண் கிடைத்தாலும் திருமணம் நடக்காது.!"
"எப்படி சொல்கிறாய்.!மாயக்கிருஷ்ணா.?"
"புரியவில்லையா.?தாய் உருவப் பெண்ணுடன் எப்படி தாம்பத்யம் வைத்துக் கொள்ள முடியும்.!நடக்க இயலாத விசயத்தை நிபந்தனையாக வைத்து திருமணத்திலிருந்து தப்பிவிட்டான்.!"
விநாயகரின் நிபந்தனையின் விஷமம் புரிந்து அனைவரும் குழம்பினர்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக