அவன் பசியோடு சுற்றியலைந்து கொண்டிருந்தான்.நாம் படைத்த பூமி எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நினைத்து வியப்படைந்தான்.அழுக்கு வேட்டி,கிழிந்த சட்டை,எண்ணெய் காணாத பரட்டைதலை கொண்ட தான்தான் கடவுள் என்பது அவனுக்கு தெரியும்.திண்ணையில் உட்கார்ந்து பிரபஞ்சத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்த கடவுளை விரட்ட வந்தவன்."யோவ்.!யார்யா நீ.!இங்கேயெல்லாம் உக்காரக்கூடாது.!எந்திரிச்சு போ.!"என்றான்."நான் கடவுள்.!"என்றார் கடவுள்.
"நீயா.?"என்று சிரித்தவன் "அந்த போர்டுல இருக்கிறதுதான் கடவுள்.!"என்று காட்டிய திசையில் போர்டில் நகைகளுடன் முருகன் சிரித்தான்."கடவுள் இப்படித்தான் இருக்கனும்னு நீங்க வரைஞ்சு வைச்ச மாதிரியே எதிர்பார்த்தால் நான் என்ன செய்வது.?கடவுள் பஞ்சபராரியாக இருக்ககூடாதா.?"கேள்விக்கு பதில் தேடி கிளம்பினார் உண்மைகடவுள்.!
சனி, 21 நவம்பர், 2015
நானும் கடவுளே.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக