சனி, 21 நவம்பர், 2015

அத்தியாயம் 2

மறுநாள் கோட்டைக்கு வெளியே ஒதுக்கப்பட்ட மைதானத்தில்வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர் கருணாகரனும்,சென்னியும்.வலிமையான வாள் வீச்சில் உடைந்த வாளை சோகமாகப் பார்த்த கருணாகரன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை "விடுதி அறையில் உள்ள வாளை எடுத்து வா.!"என்றான்.குதிரையில் கிளம்பிய கரிகாலனை வழிமரித்த பாம்பாட்டி ஒருவன் "பணம் கொடு.!இல்லையேல் பாம்பை கொத்த விடுவேன்! "என மல்லுக்கட்டினான்.பொறுமை இழந்த கரிகாலன் அவனை எட்டி மிதிக்க அவன் கையிலிருந்து நழுவிய பாம்பு ஒரு பெண்ணை கடித்தது.
"மூடனே.!வாயால் ரத்தத்தை உறிஞ்சி அந்த பெண்ணை காப்பாற்று.!"
"எனக்கு பல் இல்லையே.!"என்றான் பாம்பாட்டி பொக்கை வாயை காட்டி.வேறு வழியின்றி அந்த பெண்ணின் கால்களில் வாயை வைத்து விசத்தை வெளியேற்றி விட்டு அவள் தோழியிடம் "பார்த்து அழைத்துச் செல்! "என்று வெளியேறினான்.மழை இன்னும் தூறிக் கொண்டிருந்தது.அந்த கல்லும்,வாளும் அனாதையாய் மழையில் நனைந்து கொண்டிருந்தது.நேற்று பிடுங்காத இந்த வாளை இப்போது பிடுங்கி கொண்டு போனால் என்ன.?என்ற எண்ணத்துடன் விரைந்தவனை யாரும் கவனிக்கவில்லை.அவன் வாளை பிடுங்கிய போது பெரிய இடியோசை ஒன்று நீண்ட முழுக்கத்தை எழுப்பியது.வாளோடு குதிரையை கிளப்பிக் கொண்டு மைதானத்தை நோக்கி விரைந்தான்."நான் எதை பிடுங்குவது.?"என்ற வெளியூர் வியாபாரியின் கேள்விக்கு கோட்டையின் கொத்தவால் பார்த்த போது வெறும் கல்தான் இருந்தது.வாளைக் காணவில்லை.அவன் இடையிலிருந்த கொம்பை ஊத தொடங்கினான்.கோட்டைக்குள்ளிருந்த சிறுபடை ஆயுதங்களுடன் தயாரானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக