சனி, 21 நவம்பர், 2015

யாரிவன்.?

கதவை தட்டியவுடன் திறந்தவன் போலீசைபார்த்து மிரண்டான்.
"சொல்லுங்க.!"
"உம்மேல ஒரு கம்ளைண்ட் வந்துருக்கு.!"
"யார் கொடுத்தா.?என்னன்னு.?"
"பக்கத்து ரூம்காரர்.!உன் ரூம்ல யாரோ ஒரு பெண்ணோட பேச்சு சத்தம் கேட்குதாம்.யாரையாவது கடத்தி வச்சிருக்கியான்னு செக் பண்ணனும்.!"
"தாராளமா.!"
அவன் விலகி வழி விட்டான்.தேடலில் ஒன்றும் கிடைக்காமல் அவர் "ஸாரி.!"சொல்லி வெளியேறினார்.அவன் கதவை சாத்திக் கொண்டான்.போலீஸ்காரர் போவதை கையை பிசைந்தபடி பார்த்த பக்கத்து ரூம்காரன் மேஜிக் ஐ வழியே பார்த்த போது அவன் தன் முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் தலையை நேர்வாக்கெடுத்து சீவிவிட்டு.,ஒரு ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில் நெற்றிக்கு நடுவே ஒட்டிவிட்டு "ஸாரி.!ஜெனிபர் இன்னைக்கு லேட்டாயிருச்சு.!"என்றான்.
"பரவாயில்லை.!"இப்போது பெண்குரலில் அவனே பதில் பேசிக் கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக