நாம் அறியாத இந்திய பெருஞ்சுவர்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதைப்பூரில் அமைந்துள்ள கும்பல்கர் மலைக்கோட்டைச் சுவர் (Kumbhalgarh Fort) சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது.
பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது.
இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீ திசையில் அமைந்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் எல்லை சுவர்களின் நீளம் மட்டுமே சுமார் 36 கி.மீ நீளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சீன பெருஞ்சுவர் அளவிற்கு இந்த சுவர் புகழடையாததற்கு நாமே காரணம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக