வாளின் கனத்திலேயே வித்தியாசத்தை கண்டுவிட்டான் கருணாகரன்."இது நம்முடையதல்ல.!எங்கே கிடைத்தது இது.?"
"நேற்று கோட்டை முகப்பிலிருந்த கத்திதான் இது.!"
"ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டாய் மகனே.!"
தூரத்தில் கொம்பூதும் ஒசையை கேட்டவன் "ஆபத்து.!நாம் உடனடியாக தப்பியாக வேண்டும்.!"
அவர்கள் குதிரையில் ஏறி விரைய முற்பட்டு நாலாதிசையிலும் சுற்றி வளைக்கப்பட்டனர்.இனி தப்புவது சாத்தியமல்ல என்ற நிலையில் "விலகுங்கள் "என்ற பெண்குரல் அவர்களின் காதில் தேன் வார்த்தது.வந்தவள் பாம்புக்கடிபட்டவள்."என்ன வீரனே.!என் கொலுசில் மாட்டிய கழுத்து சங்கிலி வேண்டாமா.?"
கொத்தவால் "இளவரசி! நீங்கள் எங்கே இங்கு மாறுவேடத்தில் வந்தீர்கள்.?"என பதற,சங்கிலியை வாங்க குதிரையிலிருந்து இறங்கிய கரிகாலன் கட்டாரியை அவள் கழுத்தில் வைத்தான்.!
"நெருங்கினால் இவள் பிணமாவாள்.!"
"வீரனே.!நீ செய்வது தவறு.!"
"எங்களின் உயிருக்கு முன்னால் எதுவும் சரி."!
அவர்களின் ஆயுதங்கள் மூட்டை கட்டப்பட்டு தூர எரியப்பட்டன.பணயக்கைதியோடு அவர்கள் கிளம்பினார்கள்.
சனி, 21 நவம்பர், 2015
அத்தியாயம் 3
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக