ஞாயிறு, 29 நவம்பர், 2015

திடுக்.!

கணேஷ் உள்ளே நுழைந்த போது நிமிர்ந்து பார்த்த ராம்நாத் "உக்காருப்பா! என்னாச்சு.!ஏதாவது தெரிஞ்சுதா.?"
"ஒரே குழப்பமா இருக்கு.!"
"இதுல என்ன குழப்பம்.!எம் பையனை ஆறு மாசமா காணாம்.கண்டு புடிக்க சொல்லி சொன்னா இப்ப வேட்டிய அவுத்து காட்டுர.!"
"பையனுக்கு கெட்ட பழக்கம் ஏதாவது.?"
"பழம்யா அவன்.!நான் சரக்கடிச்சுட்டு பாத்ரூம் போனாக்கூட அத யூஸ் பண்ண மாட்டான்.!"
"ஆனா லேடீஸ யூஸ் பண்ணுவானோ? "
"என்னப்பா சொல்ர.?"
"பக்கத்து பங்களாகாரர் டெய்லி நைட்டு ஒரு பொண்ணு பால்கனில நிக்குரதா சொல்ராரே.?"
"ஏதாவது லவ் மேட்டர்ல இழுத்துட்டு ஒடிருப்பானா.?இத்தன கோடியும் அவனுக்குத்தானே.?"
"ரூமை செக் பண்ண கட்டிலுக்கு கீழ பொண்ணுங்க டிரஸ்ஸ மறைச்சு வச்சுருக்கான்.!"
"பொம்பள சவகாசம் வேறயா.?என்னை மாதிரியே இருக்கான்.அம்மா இல்லைன்னு ஆஸ்டல்ல வளர்த்தேன்.!மீனாட்சி இதெல்லாம் பாக்க கூடாதுன்னு முன்னாடியே போயிட்டியா.?"
"அவனை யாரும் கடத்துல.!பொண்ணுகூடவும் ஒடலை.!"
"அப்ப எங்க இருக்கான்.?"
"ஒரு அதிர்ச்சிக்கு தயாரா இருந்தா சொல்ரேன்.!"
"அதை சொன்னாதான் பீஸே தருவேன்.டென்சன் பண்ணாம சொல்லுப்பா.!"
"ரூம்ல பொண்ணுங்க டிரஸ்,காஸ்மேட்டிக் அயிட்டம் இருந்துச்சு.ஆனால் காண்டம் எதுவும் கிடைக்கலை.வாட்ச்மேனுக்கு தெரியாம எந்த பொண்ணும் உள்ள வர முடியாது.ஒரே ஒத்துமைதான் நெருடுச்சு.!பையனோட டிரஸ் சைசும்,பொண்ணோட டிரஸ் சைசும் ஒரே சைஸ்.!"
"பொம்பளைங்க டிரஸ்ஸ எதுக்குய்யா போடனும்.?செலவுக்கு நிறய பணம் கொடுத்தேனே?என்னன்னு தெளிவா சொல்லுப்பா.!"
"பையன் பேர் என்ன.?"
"குமாரு.!"
"அவன் இப்ப குமாரி ஆயிட்டான்.!டைரில பாம்பே ஹாஸ்பிடல் அட்ரஸும்,போன் நம்பரும் எழுதி வைச்சிருக்கான்.போய் அடையாளம் பார்த்து மகனையோ,மகளையோ கூட்டி வாங்க.!"
"அடக்கடவுளே.!இனி மாப்பிள்ளை தேடனுமா.?""என்று சாய்ந்தவரை "செக்கை ஆபிசுக்கு அனுப்புங்க.!நான் கிளம்பரேன்.!"
கணேஷ் அட்ரஸ் கொடுத்துவிட்டு கிளம்பினான்.#சிகை பட போஸ்டர் தூண்டுதலில்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக