கிருஷ்ணணின் மகன் ஜாம்பவான் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான்.அருகே ஆழ்ந்த நித்திரையில் கிருஷ்ணன்.அந்தகார இருள் கிழித்து நடந்த ஜாம்பாவை மெல்லிய சிரிப்பு சத்தம் வழி மறித்தது.இருளில் ஒலி வந்த திசை நோக்கி நடந்தான். சாத்தப்பட்ட அறைக்குள்ளிருந்து வந்தது ஒலி.துடுக்குத்தனத்தில் கிருஷ்ணனை விஞ்சியவன் ஜாம்பா.!முனகலும்,சிரிப்பொலியும் ஆர்வம் தூண்ட ஆண்பெண் சம்போகம் அறியாதவன் சாவி துவாரத்தில் கண் வைத்தான்.உள்ளே உத்தரையும்,அபிமன்யூவும் கூடலில் இருப்பது இருளில் தெரிந்தது.என்னதான் செய்கிறார்கள் என்று கவனித்தவனின் காலடிதடம் சத்தம் எழுப்ப,"யார் அது.?"கூடல் கெடுத்த கோபத்தில் அபிமன்யூ கதவு திறந்து இருளில் தேட,ஜாம்பா இருளில் தேடிப் பிடிக்கும் விளையாட்டை துவக்கினான்.கண்ணாமூச்சி விளையாட்டென்று நினைத்தவன் அபிமன்யூவாளை உருவியவுடன் பயந்து போனான்.இருளுக்குள் இருவரும் நடத்திய ஒடிப்பிடி விளையாட்டு நெடுநேரம் நடந்து அபிமன்யுவின் சினம் கிளப்பியது.கடைசியாக கிருஷ்ணனின் அறைக்குள் அடைக்கலமானான்.கோபத்தில் கொந்தளித்த அபிமன்யூ கதவில் வாளை சொருகிவிட்டு வெளியேறினான்.பாலகனின் விசும்பல் கேட்டு எழுந்த கிருஷ்ணன் கதவில் பாய்ந்த கத்தியை கண்டு கோபம் கொண்டான்."என் பாலகனை பயமுறுத்தியவன் இதே போல் உடலில் வாள் பாய்ந்து மடிவானாக.!"என்றொரு சாபம் இருளில் பிறந்தது.தான் வாள் பாய்ச்சிய அறையில் கிருஷ்ணன் இருந்ததை அபிமன்யூ அறியான்.!அபிமன்யூவிற்கு சாபம் கொடுத்ததை கிருஷ்ணனும் அறியான்.அன்றைய இரவு அனைத்தும் அறிந்தும் மரணிக்கிறது.!#அபிமன்யூ ஏன் உடலில் வாள் பாய்ச்சி கொடூரமாக கொல்லப்பட்டான் என்பதற்கு ஜாவா தீவில் வழங்கப்படும் ஒரு கதை.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக