சனி, 21 நவம்பர், 2015

அத்தியாயம்4

பாம்பை கடிக்க வைத்து அது சாவதை ரசித்தான் கார்கோடன்."உன்னைவிட என் உடம்பிலும்,மனதிலும் விசம் அதிகம்.!"என்றபடிகையிலிருந்த கடிவாய் ரத்தத்தை துடைத்துக் கொண்டு திரும்பியவனுக்கு தகவல் காத்திருந்தது.வந்து நின்ற ஒற்றன் "வாள் பிடுங்கப்பட்டு விட்டது மன்னா.!போதாதாற்கு இளவரசியையும் கடத்தி சென்று விட்டார்கள்.! "என்றதும் தன் நீண்ட நகத்தை அவன் முகத்தில் வீசினான்.கன்னத்தில் இரத்தகோடு விழவாயில் நுரைதள்ள விழுந்தவனை தாண்டி நடந்தவன்"அமைச்சரே.!எனக்கான எமன் வந்து விட்டான்.வீர விளையாட்டில் பங்கு பெற வந்தவர்களை இந்த மனிதவேட்டைக்கு களம் இறக்குங்கள்.வெல்பவனுக்கு கஜானா முழுவதும் சொந்தம்.என் மகள் என்னிடம் சேதாரமின்றி வர வேண்டும்.உடனே அறிவியுங்கள்.!"
அடுத்த சிலமணி நேரங்களில் மைதானம் காலியானது.காட்டிற்குள் ஒரு மனித வேட்டை துவங்கியது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக