அன்புள்ள லாரா.!
உன் கணவன் எட்வர்ட் பிரபு மரணதருவாயில் இருப்பதை நினைத்து ஊரோடு சேர்ந்து நாமும் துக்கப்படுவது போல் நடித்தாலும் நம் உள்ளம் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைக்கிறதென்பதை நீ அறிவாய்.எட்வர்டின் குடும்ப மருத்துவனான நான் எவ்வளவு சிகிச்சை தந்தாலும் அவன் பிழைக்க போவதில்லை.!அதற்கு காரணமாக இருப்பது நீ அவன் உண்ணும் உணவில் கலக்கும் ஆர்சனிக் என்னும் மெல்லகொல்லும் நஞ்சு.திரண்ட சொத்துகளை கொண்ட அவன் இறந்த பின் நாமிருவரும் வாழ்வில் இணையும் தருணத்தை எதிர் பார்த்திருக்கும் உன் ஆசை நாயகன் மார்ட்டீன்.!
இரண்டாவது கடிதம்.!
அன்புள்ள வக்கீல் டேவிட்டிற்கு.!எட்வர்டின் கடிதம்.!
லாரா என் மருத்துவனுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்கிறாள் என்று நீ சொன்னது உண்மைதான்.காலம் கடந்து விட்டது.என் முதல் மனைவி இறந்த பிறகு நான் லாராவை இரண்டாவது திருமணம் செய்திருக்க கூடாது.ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் என் குழந்தைகளுக்கு என் சொத்துகளை எழுதி வைத்திருக்கிறேன்.துரோகிக்கு தூரத்திலுள்ள நிர்வகிக்க முடியாத என் பண்ணை வீட்டை எழுதி வைக்கிறேன்.நான் இறந்த பிறகு வரும் இரண்டாவது சனிக்கிழமையில் லாராவும்,டாக்டரான மார்ட்டினும் ஒரு வார காலம் தங்கியிருந்தால் மட்டுமே அந்த சொத்து அவர்களை சேரும்.!
அதற்கான டாக்கு மெண்டுகளை தபாலில் உனக்கு அனுப்பியுள்ளேன்.அதனுடன் உள்ள மற்றோரு உயிலை லாரா பண்ணைவீட்டில் தங்கி முடித்த பின் திறந்து பார்க்கவும்.!
அன்புடன் எட்வர்ட்.
மூன்றாம் கடிதம்.!
அன்புள்ள டயாரியஸ்.!உன் பெற்றோரிடமிருந்து என் தந்தை அபாண்டமாக அபகரித்த உன் பண்ணை வீட்டை உனக்கு திரும்ப தர உத்தேசித்துள்ளேன்.!கூலிக்கொலைகாரனாக வாழும் உன் வாழ்நாள் கனவு அந்த பண்ணை வீடு என்பதை நான் அறிவேன்.அந்த மோசமான வழியில் உன் வாழ்க்கை பயணப்பட என் குடும்பமும் ஒரு காரணம்.இதோ உனக்கான ஒரு வாய்ப்பு.!
நான் இறந்த பிறகு வரும் இரண்டாவது சனிக்கிழமையிலிருந்து எனக்கு துரோகமிழைத்த இருவர் தங்கப் போகிறார்கள்.அவர்களை உன் முழு திறமையை பயன்படுத்தி விபத்து போல் கொலை செய்ய வேண்டும்.இதை செய்தால் அந்த பண்ணை வீடும் கணிசமான பணத்தையும் என் வக்கீலை சந்தித்து பெற முடியும்.!என்னிடமிருப்பது பழிவாங்கும் உணர்வல்ல.!என் குழந்தைகளின் உயிருக்கு அவர்களால் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த கொலை திட்டத்திற்கு உதவி செய்யும்படி உன்னை கேட்கிறேன்.இந்த கடிதத்தை படித்தவுடன் எரித்து விடவும்.!நம்மிடையேயான ஒப்பந்தத்திற்கான எந்த சாட்சியமும் இல்லாதிருப்பதையே விரும்புகிறேன்.!
அன்புடன் எட்வர்ட்.!
அருமை!
பதிலளிநீக்கு