செவ்வாய், 26 ஜூலை, 2022

ரகசியதீவுஅத்தியாயம்18

ரகசிய தீவு

அத்தியாயம் 18

தப்பிக்கும் படலம்

நிலவு நடு வானத்திற்கு வந்து தன்னுடைய வெண்மையான ஓளியை பூமி பந்து எங்கும் கசிய விட்டு கொண்டிருந்த இரண்டாம் சாமம் தொடங்கியிருந்தது. சிறை கூடத்திற்குள் இருந்த ஆழ்ந்த அமைதியைசில்வண்டுகளின் ரீங்கார ஓலியும், தூக்கத்தில் ஆழ்ந்து விட்ட காவலர்களின் மெல்லிய குறட்டை ஒலியும் குலைத்து கொண்டிருந்தன. ஆதித்தன் இருள் ந்த சிறைகூடம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

கலை கூத்தாடி குழுவினர் ஆதித்தனின் திட்டம் என்னவென்று தெரியாமல் ஒருவரை ஓருவர் பார்த்து கொண்டிருந்தனர். யவனன் ஆதித்தனை பார்த்து இதுதான் சரியான சமயம் பேசு என்று சைகை செய்தான். ஆதித்தன் எழுந்து நின்று எல்லோரையும் ஒரு முறை கூர்மையாக பார்த்தான். அவன் எழுந்து நின்றதை பார்த்ததும் அவன் எதையோ பேசப் போகிறான் என்று ஊகித்து கொண்டவர்கள் அவனையே அமைதியாக பார்க்க தொடங்கினர். தன் தொண்டையைகனைத்து கொண்ட ஆதித்தன் மெல்லிய குரலில் பேச தொடங்கினான். அவனது குரலில் அதீதமான எச்சரிக்கையும் கவனமும் இருந்தது. அவர்கள் இருந்த சிறைகூடத்திற்குள் மட்டும் கேட்கும்படியான மெல்லிய குரலில் அவன் பேச ஆரம்பித்தான்.

"நண்பர்களே.!நாம் தெரிந்தோ தெரியாமலோ மதிமாறனின் கோபத்திற்கு ஆளாகி சிறைபட்டு விட்டோம். சிறைவாசம் நம்மை நண்பர்களாக்கி விட்டது. நாம் அனைவரும் இங்கிருந்து எப்படியாவது தப்பி செல்ல வேண்டும்"

"இங்கேயிருந்து நாம் எப்படி தப்பிப்பது?" என்றான் கடோத்கஜன்.

"அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது. நான் சொல்வதை போல் நீங்கள் நடந்தால் நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்"

"சரி. நீ சொல்வது போல் நாம் இங்கிருந்து தப்புகிறோம் என்றே வைத்து கொள். அப்படி தப்பிய நாம் எங்கே செல்வது? இது ஒரு தீவு . இங்கிருந்து தப்பி செல்ல கடலை தவிர வேறு மார்க்கமில்லை. கடலை கடக்க படகு தேவை. அந்த படகுகளும், கப்பல்களும் துறைமுகத்தில் தான் இருக்கின்றன. நாம் தப்பித்து செல்ல வேண்டுமென்றால் துறைமுகத்திற்குத் தான் செல்ல வேண்டும். அங்கே நாம் செல்வது கசாப்பு கடையை தேடி ஆடு தானாக வலியசெல்வதை போன்றது. நாம் தப்பித்து செல்வது வீண் வேலை என்றுதான் தோன்றுகிறது" என்றான் கலை குழுவில் ஓருவன்.

"அதற்காக பேசாமல் சிறையிலேயே இருந்து இறந்து விடுவோமா? அடுத்த நொடி என்ன அதிசயம் நடக்கும் என்று தெரியாதது தான் வாழ்வின் சுவாரஸ்யம். நாம் தப்பித்த பின் நம்முடைய வாழ்விலும் எதாவது அதிசயம் நிகழும் என்று நம்புவோம். அந்த அதிசயம் நம்முடைய வாழ்வில் நடக்க வேண்டுமானால் முதலில் நாம் இங்கிருந்து தப்பித்து செல்ல வேண்டும்" என்றான் யவனன் கோபத்துடன் .

"நீ சொல்வதும் சரிதான். தப்பித்து செல்ல நமக்கு வேறு ஏதாவது வழிகள் கிடைக்கலாம். முதலில் நாம் இங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சி செய்வோம்." என்றான் கடோத்கஜன்.

" பாருங்கள் நண்பர்களே! நாளை உங்கள் கலை குழுவின் தலைவன் இங்கே வருகை தரப் போகிறான். நாம் இன்று இரவு இங்கிருந்து தப்பித்து சென்று விட்டால் மதிமாறனின் கோபம் அதிகரிக்கும். செங்கோடன் அவனிடம் அகப்பட்டு விட்டால் அவனுடைய நிலைமை பரிதாபகரமாகி விடும். தனிமை சிறையில் இருக்கும் எங்கள் நண்பன் நீலனை வேறு நாங்கள் மீட்டாக வேண்டும். அந்த முகமூடி வேறு உங்கள் குழுவை சார்ந்த பெண்ணை கடத்தி சென்று விட்டான். அவளை வேறு நாம் மீட்க வேண்டும். இப்போதைக்கு இந்த தீவில் மாயாவி போல் மறைந்து திரிபவன் அந்த முகமூடி ஓருவன்தான். அவனை கண்டுபிடித்து விட்டால் அவன் நம்மை மறைத்து வைத்து காப்பாற்றுவான். அந்த பெண் சந்திரவதனாவும் நமக்கு திரும்ப கிடைப்பாள். நாம் தப்பி செல்ல அந்த முகமூடியே ஏதாவது ஏற்பாட்டை செய்து தரலாம்"

"நீ சொல்வது சரிதான். இப்போது இங்கிருந்து தப்பி செல்லும் நாம் எங்கே சென்று பதுங்குவது? இருள் விலகி பகல் வந்ததும் நாம் எளிதில் பிடிபட்டு விடுவோம். பகலில் நாம் எங்கே மறைந்து இருப்பது?"

"முதலில் நாம் தப்பி செல்வோம். பிறகு அதைப் பற்றி யோசிப்போம்" என்றான் ஆதித்தன்.

"ஆதித்தன் சொல்வது தான் சரி. நாம் முதலில் இங்கிருந்து தப்பித்து செல்வோம். பிறகு நம்முடைய அதிர்ஷ்டத்தை பரிசோதனை செய்து பார்ப்போம். சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதை விட எதையாவது செய்து கொண்டிருப்பது மேல் " என்றான் கடோத்கஜன்.

"நண்பர்களே! நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். நமக்கு சிறையில் தரப்பட்ட படுக்கை விரிப்புகளை பிரித்து பாருங்கள். அதில் இருக்கும் தேங்காய் நார்களை பயன்படுத்தி நாம் உடனடியாக ஒரு கயிறை தயார் செய்ய வேண்டும்" என்றான் ஆதித்தன்.

" செய்து விடலாம். ஆனால் அது எத்தனை அடி நீளம் இருக்க வேண்டும் என்று நீ குறிப்பிடவில்லையே? " என்றான் கடோத்கஜன்.

" சொல்கிறேன். இந்த சிறைகூடத்தில் இருக்கும் ஓரே ஒரு சன்னல் இது தான் " என்ற ஆதித்தன் நான்கடி அகல உயரத்தில் இருந்த இரும்பு கம்பிகள் நிறைந்த சன்னலை சுட்டி காட்டினான்.

"நம்முடைய அதிர்ஷ்டம் இந்த சிறைகூடம் கடலை ஓட்டியே அமைந்திருக்கிறது. அந்த சன்னலிலிருந்து இருபதடி தொலைவில் ஒரு பாறை இருக்கிறது. அந்த பாறைக்கு செல்லும் தூரம் வரை நமக்கு கயிறு தேவை."

"அதாவது இருபதடி நீளத்திற்கு கயிறு தேவை என்கிறாய்?"

"ஆமாம்"

"தயார் செய்து விடுவோம்" குழுவினர் அவசரமாக களத்தில் இறங்கினர். சிறையில் இருந்த படுக்கைகள் பிரிக்கப்பட்டு அதிலிருந்த தேங்காய் நார்கள் கயிறுகளாக திரிக்கப்பட்டன. கைகள் வலித்த போது தொடைகளை பயன்படுத்தி வெகு வேகமாக கயிறு தயாரானது. அதன் உறுதியையும் நீளத்தையும் சோதித்து பார்த்து திருப்தியடைந்த ஆதித்தன்" முதல் கட்டம் தயாராகி விட்டது.இனி இரண்டாவது கட்டத்தை நோக்கி செல்வோம்." என்றவன்" இப்போது உன்னுடைய முறை" என்றான் கடோத்கஜனன பார்த்து.

"நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான் கடோத்கஜன் குழப்பத்துடன்

"இந்த நான்கடி சன்னலில் இருக்கும் சில இரும்பு கம்பிகளை உன் பலத்தை பயன்படுத்தி நீ உடைத்து எடுக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"அதற்கென்ன செய்து விட்டால் போயிற்று" என்றபடி சன்னலை நோக்கி நகர்ந்த கடோத்கஜனை இடை யிட்டு தடுத்தான் யவனன்.

" என்ன?" என்றான் கேள்விக்குறியோடு கடோத்கஜன்.

"இந்த கம்பிகளை வளைக்க ரசிகர்களின் கை தட்டலும், ஆரவாரமும் தேவை என்று நீ சொல்லிவிடுவாயோ என்று ஒரு நிமிடம் நான் ஆடிப்போய்விட்டேன்" என்றான் குறுஞ் சிரிப்புடன் யவனன்.

அனைவரிடமும் ஒரு மெல்லிய சிரிப்பலை எழுந்தது.

"நீ தவறாக சொல்கிறாய். நான் கம்பிகளை வளைத்து முடித்த பின் தான் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரமும் கை தட்டலையும் செய்வார்கள்." என்றான் கடோத்கஜன்.

"உன்னுடைய ரசிகர்கள் இங்கே காத்திருக்கிறோம். அதே ஆரவாரத்தை தர முடியாத சூழல். எங்கே உன் திறமையை காட்டு பார்ப்போம்" என்றான் யவனன் குறும்பு புன்னகையுடன் .

"இதோ காட்டுகிறேன் பார் என்னுடைய திறமையை" என்ற கடோத்கஜன் தன் பலத்தை பிரயோகித்து கம்பியை வளைக்க ஆரம்பித்தான்.

கம்பிக்கும் அவனுக்குமான மல்லுக்கட்டு துவங்கியது. அவனுடைய புஜம் வழக்கத்திற்கு மாறாக நரம்புகளால் புடைத்தது. வெகு விரைவிலேயே அவனுடைய வலிமையை தாங்க முடியாமல் கம்பிகள் வளைந்து உடைந்து கையோடு வந்து விட்டன. சில நிமிடங்களிலேயே அந்த சன்னலில் ஆள் நுழையும் அளவிற்கு இடம் கிடைத்து விட்டது.

"இப்போது இந்த இருபதடி நீளம் உள்ள கயிற்றை அந்த பாறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னால் சன்னல் கம்பிகளில் ஓன்றை கொக்கி போல் வளைத் தாக வேண்டும்"

" வளைத்தாகி விட்டது" என்றான் கடோத்கஜன் கம்பி ஓன்றை எடுத்து வளைத்தபடி.

கடோத்கஜன் கொடுத்த கொக்கியின் ஓரு முனையில் கயிற்றை இறுக்கி கட்டினான் ஆதித்தன்.

" இதை அந்த பாறையை நோக்கி தூக்கி எறிந்து அது அங்கிருக்கும் ஏதாவது பாறை பிளவில் மாட்டிக் கொள்ள நூற்றில் ஒரு பங்கு தான் வாய்ப்பு இருக்கிறது"

"இல்லை. நான் அப்படி முயற்சி செய்ய போவதில்லை. இதை அந்த பாறைக்கு கொண்டு செல்ல நம்முடைய நண்பன் ஒருவன் உதவ காத்திருக்கிறான்"

"யார் அது?"

"ஹேர்குலஸ்.யவனனின் வளர்ப்பு பறவை" என்றான் ஆதித்தன்.

யவனன் விசித்திரமான சீழ்க்கை ஒலி ஒன்றை எழுப்பியதும் இருட்டிலிருந்து பறந்து வந்து சிறைக்குள் பிரவேசித்தது ஹேர்குலஸ்.

அதன் காதில் எதையோ சொன்ன யவனன் கொக்கி கட்டப்பட்ட கயிற்றை அதன் வாயில் வைத்தான். அடுத்த நிமிடம் அந்த விசுவாசமான பறவை பாறையை நோக்கி சிறகை விரித்தது. சிறைக்குள் இருந்தவர்கள் லாவகமாக கயிறை விட விட அந்த பறவை கயிற்றை சுமந்து கொண்டு பாறையை நோக்கி முன்னேறியது.

பாறையில் வந்தமர்ந்த ஹேர்குலஸ் கொக்கியை கீழே போட்டது. அவர்கள் கயிற்றை இழுக்க ஆரம்பித்தனர். ஒன்றிரண்டு முயற்சிகளுக்கு பிறகு கொக்கி ஒரு பாறை பிளவில் வசமாக சிக்கி கொண்டது.

"நாம் சாதித்து விட்டோம்" என்று குதூகலித்தான் யவனன்.

"ஆமாம். நாம் சாதித்து விட்டோம். சன்னல் மேட்டு பகுதியில் இருந்திருந்தால் கொக்கி ஓன்றை தயார் செய்து கயிற்றில் மாட்டி ஒவ்வொருவராக அதில் தொங்கியபடி பயணம் செய்து பாறையை அடைந்திருக்கலாம். ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. இரண்டும் சம உயரத்தில் இருக்கின்றன. கயிற்றின் மீது நடந்து தான் போக முடியும் " என்றான் ஆதித்தன்.

"கலைகுழுவினர் நாங்கள். யாருக்காவது உடல் நிலை சரியில்லையென்றால் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் உடம்பு சரியில்லாதவனின் வித்தையையும் நாங்களே செய்வோம். எல்லோருக்கும் எல்லா வித்தையும் தெரியும். அதனால் கயிற்றின் மீது நடந்து செல்வது பெரிய விசயமல்ல "என்றான் கலை குழுவில் ஒருவன்.

" என்னுடைய கம்பி வளைக்கும் வித்தையை மட்டும் யாரும் கற்று கொள்ள முன்வர மாட்டார்கள். ஆனால் அது தான் இப்போது தப்பிக்க உதவி செய்கிறது " என்றான் கடோத்கஜன்.

"அந்த மிதப்பில் தான் நீயும் கயிறு மீது நடக்கும் வித்தையை கற்று கொள்ளாமல் அசட்டையாக இருக்கிறாய். இப்போது நீ எப்படி தப்பிப்பாய்?" என்றான் அவன்.

"உனக்கு கயிறு மீது நடக்க தெரியாதா?" என்றான் ஆதித்தன்.

"ம்ஹ்ம். உங்களுக்கும் தான் அந்த வித்தை தெரியாது." என்றான் கடோத்கஜன்.

"அப்படியானால் நாம் மூவரும் வேறு வழியாகத்தான் தப்பித்தாக வேண்டும். முதலில் சன்னலில் கயிற்றை இறுக்கிகட்டுங்கள். அதன் மீது நடந்து செல்லும் கடைசி நபர் கொக்கியின் முனையில் இருக்கும் கயிற்றை அவிழ்த்து விட்டு விடுங்கள். நாங்கள் மூவரும் அதன் வழியாக இறங்கி துறைமுகத்திற்கு சென்று கழுகை ஓட்டி வருகிறோம். எரி அம்புகள் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுங்கள். அனைவரும் படகில் தப்பி சென்று விடலாம்" என்றான் ஆதித்தன்.

" கடோத்கஜா! நீ சிறை கதவில் இருக்கும் கம்பிகளை அகற்று. நாம் அந்த குடிகாரக் கிழவனை சிறையிலிருந்து மீட்டு செல்வோம்." என்றான் யவனன்.

கலை குழுவினர் கயிற்றின் மீதாக நடந்து தப்பி செல்லும் போது கடோத்கஜன் கதவின் கம்பிகளை அகற்றினான்.

மூவரும் சிறையிலிருந்து வெளியேறி நீலனை தேடி நடந்தனர். வழியில் இருந்த தீப்பந்தத்தை எடுத்து கொண்ட ஆதித்தன் நீலன் இருந்த சிறையை நெருங்கினான்.

தீப்பந்த வெளிச்சத்தில் நன்றாக தேடிய போது அந்த அறையில் நீலன் இல்லை. கதவுக் கருகே ஒருவன் விழுந்து கிடப்பதை பார்த்த ஆதித்தன் " இவன் யார்?"
 என்றான்.

தீப்பந்த வெளிச்சத்தில் இறந்து கிடந்தவனின் முகத்தை பார்த்த கடோத்கஜன் "இது எங்கள் தலைவர் செங்கோடன். யாரோ அவரை கொன்று விட்டார்கள்" என்று கதறினான்.

"நீலன் எங்கே போயிருப்பான்?" என்றான் யவனன்.

"தெரியவில்லை" என்றான் ஆதித்தன் குழப்பத்துடன் .

வெள்ளி, 22 ஜூலை, 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 17

இரண்டில் ஒன்று

செங்கோடனை வீரர்கள் இழுத்து சென்ற பின்னர் மதிமாறன் யோசனையில் ஆழ்ந்தான். நீண்ட வருடங்களுக்கு பிறகு அதிர்ஷ்டம் அவனை தேடி வந்திருக்கிறது. செங்கோடனுக்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த ஒரு உண்மையை வேறு யாரும் தெரிந்து கொள்ள கூடாது என்பது தான் மதி மாறனின் எண்ணம். சிறையில் அடைக்கப்படும் செங்கோடன் தன்னுடைய அறையில் இருக்கும் சக கைதிகளுடன் சந்திரவதனா தான் தயாநிதியின் உண்மையான மகள் என்ற உண்மையை பகிர்ந்து கொண்டு விட்டால் மதிமாறனின் அத்துணை திட்டங்களும் பாழாகி விடும். இருவருக்கு மட்டுமே தெரிந்த இந்த உண்மை தயாநிதியின் காதுகளை சென்றடைந்து விட்டால் மதிமாறனின் நிலை பரிதாபகரமாகி விடும்.

சந்திர வதனா வை மகள் என்று ஏற்றுக் கொள்ளும் தயாநிதி கண்டிப்பாக அவளை தனக்கு மணம் செய்து தர மாட்டான் என்று மதிமாறன் நினைத்தான். தயாநிதியின் மகளான சந்திர பிரபாவை மணந்து எவன் அவருக்கு மருமகனாகிறானோ அவனுக்கே ரகசிய தீவும், மார்க்கதரிசியின் புதையலும் சொந்தமாகிவிடும். தானும் ரகசிய தீவின் ஆளுநர் பதவியிலிருந்து துரத்தப்படுவோம் என்பதை அவன் தெளிவாக தெரிந்து வைத்திருந்தான். அதனால் தான் செங்கோடன் உண்மையை யாரிடமும் சொல்லாதிருக்க அவனது நாவை அறுக்க உத்தரவிட்டான். ஆனாலும் அவனுக்கு தன்னுடைய திட்டத்தில் ஏதோ ஒரு குறை இருப்பது போல் தோன்றிக் கொண்டே இருந்தது.

சிகப்பு முகமூடி கடத்தி சென்ற சந்திரவதனா வை அவன் எப்படியாவது மீட்டாக வேண்டும். அதன் பிறகு ரத்னாவதிக்கு தெரியாமல் அவன் ரகசியமாக சந்திர வதனா வை திருமணம் செய்ய வேண்டும். தன்னை தவிர மதிமாறன் வேறு எந்த பெண்ணையும் மதிமாறன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான் என்று நம்பிக் கொண்டிருக்கும் ரத்னாவதி மதிமாறன் சந்திரவதனாவை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்ற செய்தியை அறிந்தால் கண்டிப்பாக அதற்கு இடையூறு ஏற்படுத்தவே முயற்சி செய்வாள். அதனால் அவளது காதுக்கு இந்த விவகாரம் தெரிய வே கூடாது என்று மதிமாறன் முடிவு செய்தான். சந்திரவதனாவை திருமணம் செய்த பிறகு தங்க ஆபரணம் கிடைத்ததாக கூறினால் தயாநிதிக்கு அந்த திருமணத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை. சந்திரவதனாவை கடத்தி சென்ற முகமூடியை இதை சாக்காக வைத்து எப்படியாவது பிடித்து ஓழித்து விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

அவனுக்கு திடிரென்று ஒரு யோசனை தோன்றியது. சிகப்பு முகமூடி தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே வரும் வரை அவன் காத்திருக்க விரும்பவில்லை. அவன் உடனடியாக வெளியே வந்தா க வேண்டும் என்று நினைத்த மதிமாறனின் மனதில் அந்த கொடுர எண்ணம் உதித்தது. "ம்!அது தான் சரி" என்று முணுமுணுத்தவன் அந்த நள்ளிரவு வேலையையும் பொருட்படுத்தாமல் இருளில் கிளம்பினான்.

தனி சிறையில் இருந்த நீலனோ பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தான். சிறையில் ஆடுவதும், பாடுவதும் சுவற்றில் மோதுவதுமாக அமளி செய்து கொண்டிருந்தான். அவனது கலாட்டாவினால் காவலர்கள் யாரும் தூங்க முடியவில்லை. தினமும் மது அருந்தி பழகிய நீல னால் தன்னுடைய மதுப் பழக்கத்தை திடிரென்று நிறுத்த முடியவில்லை. தன்னுடைய மது பழக்கத்தால் தான் இப்படி ஓரு இக்கட்டில் சிக்கியிருக்கிறோம் என்று அவன் மூளைக்கு தெரிந்தாலும் மனமும் உடலும் அவன் சொல்வதை கேட்க மறுத்தன. மது அருந்தாத விரக்தியை அவன் ஆர்ப்பாட்டம் செய்து தீர்த்து கொண்டிருந்தான்.

அவனது அமளி தாளாத காவலன் ஓருவன் ஆதித்தனிடம் முறையிட்டான்.

"இங்கே பார்தம்பி. உன்னுடைய கிழட்டு நண்பன் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறான். இன்று இரவு எங்களில் யாரையும் தூங்க விட மாட்டான் போல் தெரிகிறது"

"அய்யா. அவன் ஒரு மது அடிமை.திடிரென்று தன்னுடைய மது பழக்கத்தை அவன் நிறுத்த முயற்சி செய்ததால் விளைந்த விபரீதம் இது."

"இப்போது என்ன செய்வது?"

" அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மது பழக்கத்தை கைவிட முயற்சி செய்திருக்க வேண்டும். ஒரேயடியாக நிறுத்த முயற்சி செய்து தான் இப்படி அல்ல ல்படுகிறான். படுத்துகிறான். அவனுக்கு ஒரு புட்டி நிறைய மதுவை கொடுங்கள். அதை குடித்துவிட்டு அமைதியாகி விடுவான்."

"அதை குடித்துவிட்டு இன்னும் அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன செய்வது?"

"நியாயமான கேள்வி தான். அப்படி எதுவும் செய்ய மாட்டான் என்று தான் நினைக்கிறேன். அப்படி செய்தால் அவனை பாதாள சிறையில் அடையுங்கள். அவனது சத்தம் வெளிகேட்காது." என்றான் ஆதித்தன்.

"இந்த சிறை கொட்டடியில் பாதாள சிறை எங்கேயப்பா இருக்கிறது.? வேண்டுமானால் கடலை ஒட்டிய சிறை அறையில் அவனை அடைக்க வேண்டியதுதான். அலைகளின் ஆர்ப்பாட்ட சத்தத்தில் இவனது சத்தம் அடங்கி விடும்" என்றான் காவலன்.

அவன் அங்கிருந்து கிளம்பியதும் யவனன்" நீ அவனது நண்பனா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவனை பாதாள சிறையில் அடைக்க ஆலோசனை கூறுகிறாயே?" என்றான் சினத்தோடு.

"அப்படி சொன்னதால் தான் இந்த சிறையில் பாதாள அறைகளே இல்லை என்ற உண்மை நமக்கு தெரிய வந்தது. நாளை காலை சூரிய உதயத்தின் போது நாம் இங்கே இருக்கப்போவதில்லை" என்றான் ஆதித்தன்.

"அப்படியானால் எங்கள் நிலைமை?" என்றான் கடோத்கஜன்.

"எங்களை சிறையிலிருந்து விடுவிக்க போவதே நீ தானே ? " என்று புன்னகைத்தான் ஆதித்தன்.

ஆதித்தன் சொல்வதை புரியாமல் கேட்டு கொண்டிருந்தான் கடோத்கஜன்.

"நீ சொல்வது எனக்கு புரியவில்லை" என்றான் கடோத்கஜன்.

"நண்பா! நான் சொல்வதை கவனமாக கேள். தானியங்களை தின்று தீர்த்து சேதாரத்தை உருவாக்குவது எலிகளின் வேலை. அதன் பற்கள் விரைவிலேயே வளர்ந்துவிடும் இயல்பு கொண்டது. அதை தடுக்க எதையாவது கொறித்து கொண்டிருப்பது எலிகளின் இயல்பு. இப்படி கொறித்து தன்னுடைய பல்லில் தேய்மானத்தை உண்டாக்கும் எலி கூண்டில் மாட்டி கொண்டால் தன்னுடைய கொறிக்கும் திறமையை மறந்து விட்டு இந்த கூண்டில் இருந்து தப்பிக்க முடியாதோ என்று பயந்து நிலை கொள்ளாமல் அலைய ஆரம்பித்து விடும். கூண்டை கொறித்து தன்னால் தப்பி செல்ல முடியும் என்பதையே எலி மறந்து விடும். அந்த எலியின் நிலைமையில் தான் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். உங்கள் திறமையை பயன்படுத்தித் தான் நாம் இங்கிருந்து தப்பிக்க போகிறோம்" என்று சிரித்தான் ஆதித்தன்.

அனைவருக்கும் ஏதோ புரிவது போல் இருந்தது.

"நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு புரிந்து விட்டது" என்று ஆதித்தனை கட்டி கொண்டான் யவனன்.

அதே நேரம் நீலன் தன் முன்னால் வைக்கப்பட்ட மதுபுட்டியை பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தான்.

"ஓ! என் பழைய நண்பா! உன்னை பார்க்காமல் நான் தவியாக தவித்து போய் விட்டேன். உன்னை விரும்புகிறது மனம். உன்னை வெறுக்கிறது என்னுடைய அறிவு. இரண்டுக்கும் இடையில் தடுமாறுகிறான் இந்த நீலன் "

"போதும் உன் உளறல்களை நிறுத்தி கொள். அதை அருந்தி விட்டு காலி புட்டியை வெளியே வை. உனக்கு மதுபானம் தரப்பட்டது தெரிந்தால் தளபதி எங்களை கடுமையாக தண்டிப்பார் " என்றான் காவலர்களில் ஓருவன்.

"உன்னை வேறு சிறைக்கு மாற்ற போகிறோம். விரைவாக அதை அருந்தி விட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடு"

"இதோ இப்போதே இவனை முடித்து விடுகிறேன்" என்ற நீலன் புட்டியை திறந்து அதிலிருந்த திரவத்தை அப்படியே வாயில் ஊற்றி கொண்டான்.

"மொடக்குடியன் போலிருக்கிறது"

"இதோ காலி புட்டி. என்னுடைய புதிய அறையை காட்டுங்கள்" என்றான் நீலன்.

புதிய அறை ஒன்றினுள் தள்ளி பூட்டப்பட்டான் நீலன்.

அலைகளின் ஓசை அவனது காதை நிறைத்தது.

"அடக்கடவுளே! இங்கே கத்தி கதறினாலும் இந்த அலை ஓசையை தாண்டி ஓரு சத்தமும் வெளியே போகாதே?" என்று புலம்பி கொண்டிருந்த நீலன் மதுபோதையில் அப்படியே உறங்கி போனான்.

அவன் நன்றாக உறங்கிய பிறகு அந்த சிறைகூடத்திற்கு வந்து சேர்ந்தான் புதிய விருந்தினன் ஒருவன். அவன் செங்கோடன்.

மதிமாறனின் உத்தரவுப்படி அவனது நாக்கு துண்டிக்கப்பட்டிருந்தது. வாயில் ரத்தம் வழிய அலறிக் கொண்டிருந்தான் அவன்.

"இப்போது தான் ஒருவனது கூச்சல் ஓய்ந்தது. இதோ கத்தி கூப்பாடு போட்டு நம் உறக்கத்தை கெடுக்க இன்னொருவன் வந்து விட்டான். இன்று இரவு சிவராத்திரி தான் நமக்கு "சிறை காவலர்களில் ஒருவன் அலுத்து கொண்டான்.

"நாவை அறுக்கும் அளவிற்கு என்ன குற்றம் செய்தானோ இவன்?"

"நம் ஆளுநரை எதிர்த்து எதையாவது பேசி தொலைந்திருப்பான். அதனால் தான் இப்படி ஓரு தண்டணை கிடைத்திருக்கிறது" 

" சரி. இவனை அந்த குடிகார கிழவன் இருக்கும் அறையில் அடையுங்கள்" என்றான் சிறையின் தலைமை அதிகாரி.

சற்று நேரத்தில் நீலன் இருந்த சிறை அறைக்குள் தள்ளப்பட்டான்செங்கோடன். அவன் தன்னுடைய நாக்கு அறுக்கப்பட்டதற்காக கூட வருந்தவில்லை. இது நாள் வரை வறுமையில் வாடிய தன்னுடைய செல்ல மகள் ஒரு அரச பிரமுகரின் மகள் என்பதை அவன் எப்படியாவது தயாநிதியிடம் தெரிவித்து விட விரும்பினான். தன் மகள் இனியாவது சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று அந்த நாடோடியின் மனம் விரும்பியது. தன் மகள் நன்றாக வாழ்வதை விட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருந்து விட போகிறது?

தான் தவறான நேரத்தில் தவறான நபரிடம் சிக்கி கொண்டுவிட்டதையறிந்து செங்கோடன் கலங்கி நின்றான். அறையில் எழுந்த குறட்டை ஓலி இன்னொரு நபர் அங்கே இருப்பதை அறிவித்தது. அறையின் ஒரு மூலையில் உருண்டு கொண்டிருந்தான் நீலன்.

அவனது இடுப்பில் இருந்த மதுபுட்டி உருண்டு ெசங்கோடனின் காலடியில் நின்றது.

செங்கோடன் அதை கையில் எடுத்து கொண்டு சுவற்றின் ஓரம் தளர்ந்து உட்கார்ந்தான்.

மூன்றாம் சாமம்.

சிறை ஆழ்ந்த அமைதியில் உறக்கத்தில் இருந்தது..

தனது அறைக்கு வெளியே ஏதோ ஒரு உருவம் நடமாடுவதை உணர்ந்த செங்கோடன் அது யார் என்று பார்க்க சிறை கதவின் அருகே வந்தான். அவன் கம்பிக்கு அருகே வந்ததும் மின்னல் வேகத்தில் ஒரு சுருக்கு கயிறு அவன் கழுத்தில் விழுந்து இறுக ஆரம்பித்தது.

நாக்கு அறுப்பட்ட வேதனையில் இருந்த செங்கோடனால் குரல் எழுப்பி வலுவாக கத்த முடியவில்லை. யார் அந்த உருவம் என்று பார்க்க பெரும் முயற்சி செய்தான் அவன். அந்த உருவம் தன்னுடைய முகத்தை காட்டியது. அது மதிமாறன்.

"நீ உயிரோடு இருப்பது என்றைக்கிருந்தாலும் எனக்கு ஆபத்து. செத்து ஓழி. இந்த உலகில் சந்திரவதனாவை பற்றிய உண்மை தெரிந்த ஒரே ஆள் நான் தான். நாளை உன் பிணத்தை பார்க்க உன் மகள் வந்து தானேயாக வேண்டும்?" என்று கொடூரமாக சிரித்தான்மதிமாறன்.

செங்கோடன் உயிரற்ற உடலாக சரிந்தான்.மதிமாறன் கயிற்றை உருவிக்கொண்டு ரகசிய வழியாக வெளியேறினான்.

புதன், 20 ஜூலை, 2022

ரகசியதீவு

அத்தியாயம்16

தேடாமல் கிடைத்தது,

தனக்கு பின்னால் நின்ற நிழலுருவை பார்க்காமலேயே " நீ வருவாய் என்று எனக்கு தெரியும் " என்றான் மதி மாறன் .

"நான் தான் வந்திருக்கிறேன் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்றது ஓரு இனிமையான குரல். அதற்கு பிறகு மதிமாறனின் பின்புறமிருந்து இரண்டு வளை கரங்கள் அவனது தோளில் விழுந்து அவனை அணைத்து கொண்டன.

மதிமாறன் அந்த கரங்களை ஆதுரத்துடன் பற்றி கொண்டான். "இந்த இரவு நேரத்தில் என்னை பார்க்க உன்னையன்றி யார் வருவார்கள் ரத்னாவதி? உன் கூந்தலில் உள்ள மல்லிகைப் பூவாசமும், உன் உடலில் எழும் சுகந்த மணமும் நீ வரும் முன்பே என் நாசியை வந்தடைந்து விடுகின்றன. அதன் பிறகு ஆளை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இருப்பதில்லை" என்றான் மதி மாறன் .

" குறும்புகாரர்தான் நீங்கள் " என்ற ரத்னாவதியின் கைகளை பிடித்து ஒரு சுழற்று சுழற்றி விட்டான் அவன்.

அவள் அழகாக ஓரு சுற்று சுற்றி அவனது மடியில் வந்து விழுந்தாள்.

" ரத்னா" என்றான் மோகப் பெருமூச்சுடன் மதிமாறன்.

"சொல்லுங்கள்" என்றாள் ரத்னாவதி அவன் முகத்தை ஆசையுடன் பார்த்தபடி.

" சொல்வதற்கு எதுவுமேயில்லை ரத்னா. நீ என் வாழ்வில் வந்தது நான் செய்த அதிர்ஷ்டம்"

"இல்லை. நான் தான் அதிர்ஷ்டம் செய்தவள். இழி தொழில் செய்து வந்த என்னை உங்களுக்கு மட்டுமே உரிமையாக்கி கொண்டு விட்ட உத்தமர் நீங்கள். யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை " என்றாள் ரத்னாவதிநெக்குருகலுடன்.

போடி பைத்தியகாரி . என் உடல் தேவைக்காகத் தான் நான் உன்னை பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். உன் மீதான மோகம் எப்போது குறைகிறதோ அப்போது உன்னுடைய பழைய தொழிலுக்கே நீ திரும்ப சென்று விடுவாய்.அதுவரை என்னுடைய தயவால் இந்த அரச போகங்களை அனுபவித்து கொள் என்று மனதில் நினைத்து கொண்ட மதிமாறன் " உன் பழைய வாழ்க்கையை பற்றி இப்போது ஏன் பேசுகிறாய் ரத்னா ? அதை எல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு நாம் நம்முடைய புதிய வாழ்க்கையை பற்றி சிந்திப்போம்" என்றான்.

"நீங்கள் இருக்கும் வரை என்னுடைய வாழ்க்கைக்கு என்ன குறை? ஆமாம். இன்று துறைமுகத்தில் அந்த முகமூடி மீண்டும் தோன்றியதாக கேள்விப்பட்டேன்"

"அதற்குள் விசயம் உன் வரை வந்துவிட்டதா? பரவாயில்லை. நாட்டு நடப்பை விரல் நுனியில் வைத்திருக்கிறாய். அந்த முகமூடி இன்றும் என் வழியில் குறுக்கிட்டான். கொஞ்சம் ஏமாந்திருந்தால் என் உயிரையும் எடுத்திருப்பான். நல்ல வேளையாக விபரீதம் எதுவும் நடக்கவில்லை."

" அவன் யார் என்று யாருக்கும் தெரியவில்லையே?"

"அவனைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவன் பெயர் கரிகாலன் அவனுக்கும் எனக்கும் தீர்க்கப்பட வேண்டிய கணக்கு ஓன்று மீதமிருக்கிறது. அந்த கணக்கை அவன் உயிரைக் கொண்டு தான் தீர்க்க வேண்டும். ஏற்கனவே ஒரு முறை அந்த கணக்கை நான் தீர்க்க முயற்சி செய்தேன். அது எப்படியோ தப்பிதமாக முடிந்து விட்டது. பயல் உயிர் பெற்று மீண்டும் வந்து விட்டான்."

"நாம் வரியாக வசூலிக்கும் பணம், ஆயுதங்கள் முதலியவற்றை அவன் தேடித் தேடி கொள்ளையடிக்கிறான். அந்த ரகசியங்கள் எப்படி அவனுக்கு தெரிகின்றன என்பது தான் புதிராக இருக்கிறது."

"எனக்கும் அதே சந்தேகம் இருக்கிறது. நம் நிர்வாகத்தில் இருக்கும் முக்கியமான யாரோ ஓரு நபர் அவனுக்கு தேவையான விசயங்களை கொடுத்து உதவி செய்கிறார்கள். அவனை கண்டுபிடித்து விட்டால் முகமூடியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும்" என்றான் மதி மாறன் .

"இந்த முகமூடி விசயத்தில் கவனம் செலுத்தாமல் கருணாகரன் என்ன தான் செய்கிறார்?"

"அவனும் முடிந்த வரை முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறான். இறுதியாக இப்போது ஒரு யோசனை சொல்லியிருக்கிறான். சிகப்பு முகமூடியை பிடிக்க பெரும் தொகை ஓன்றை அறிவிக்கும் படி சொல்லியிருக்கிறான். பணத்திற்கு ஆசைப்பட்டு யாராவது துரோகிகள் அவனை காட்டி கொடுப்பார்கள் என்று நம்புகிறான். அதையும் செய்து பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்"

"உங்கள் நிம்மதியை குலைக்கும் அந்த முகமூடியை நினைத்தால் எனக்கு கோபம் கோபமாக வருகிறது" என்றாள் ரத்னாவதி .

"கோபப்படும் போது கூட நீ அழகாகத் தான் இருக்கிறாய் ரத்னா. நான் ராஜ்ஜிய விவகாரங்களில் நொந்து போய் தான் ஆறுதலுக்காக இங்கு வருகிறேன். எனக்கு இதமாக மனோகரமான வார்த்தைகளை பேசி என் மனதிற்கு ஆறுதல் தருவதை விட்டு விட்டு நீயும் அரசியல் பேசுகிறாய் ரத்னா. அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை" என்றான் மதிமாறன் முகச் சுழிப்புடன்.

"என்னை மன்னித்து விடுங்கள்.உங்கள் மனதிற்கு ஆறுதலை நான் தருகிறேன். வாருங்கள் நந்தவனத்தில் சற்று நேரம் உலாவி வரலாம்"

"இப்போது சொன்னாயே இது தான் சரி" என்று சிரித்தான்மதிமாறன்.

அதே நேரம் வில்லவன் சந்திரவதனாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"பெண்ணே! நாம் படுக்கைக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டது. நீ எதையும் சாப்பிட மறுக்கிறாய். வெறும் வயிற்றோடு படுக்கைக்கு செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல "

"ஆமாம். சந்திரவதனா! உன் கவலைகளை ஓரம் கட்டி வைத்துவிடு. கொஞ்சமாவது சாப்பிடு.பார்த்திபன் எல்லா வற்றையும் பார்த்து கொள்வான்." என்றாள் அவனது மனைவி .

" என் தந்தை நாளை என்னை தேடிக் கொண்டு வருவார். அந்த கயவன்மதிமாறன் என் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். அவரை பணயமாக பிடித்து வைத்து கொண்டு என்னை அடைய முயற்சி செய்வானோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது." என்றாள் குழப்பத்து சந்திரவதனா

"கவலைப்படாதே பெண்ணே! நாளை காலையில் பார்த்திபனின் ஆட்கள் துறைமுகத்தில் காத்திருப்பார்கள். உன் தந்தையை கண்டுபிடித்து கூட்டி வருவதே அவர்களின் தலையாய பணி. நாளை உன் தந்தை உன் அருகில் இருப்பார். இப்போது கொஞ்சமாவது சாப்பிடு"

இருவரின் ஆறுதலால் சமாதானம் அடைந்த சந்திரவதனா சாப்பிட இசைந்தாள்.

நதிகளும் வரலாறும் எப்போதும் நேராக செல்வதில்லை. அதே போல் நாம் நினைத்ததும் நடப்பதில்லை. இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்த அதே நேரம் செங்கோடன் ரகசிய தீவில் கால் பதித்திருந்தான்.

செங்கோடன் சங்கிலியை அடமானம் வைத்திருந்த நபர் வெகு விரைவிலேயே ஊருக்கு திரும்பி வந்து சேர்ந்து விட்டார். அவரிடமிருந்து நகையை மீட்டு கொண்டவன் அவசர அவசரமாக துறைமுகத்திற்கு விரைந்தான். அவனுடைய அதிர்ஷ்டம் ரகசிய தீவிற்கு செல்லும் ஒரு வணிக கப்பலில் அவனுக்கு இடம் கிடைத்ததுதான். கப்பலின் சுமைகள் இறக்கப்பட்டு விட்டதால் எடை குறைந்த அந்த வணிக கப்பல் கடலில் வெகு விரைவாகவே பயணித்தது. வேகமாக வீசிய  கடல் காற்றும் அதன் வேகமான பயணத்திற்கு துணை புரிந்தது.

இரண்டின் ஓத்தாசையால் அவன் பயணித்த கப்பல் குறித்த நேரத்திற்கு முன்பாகவே ரகசிய தீ வை வந்தடைந்து விட்டது. இருள் கவியும் நேரத்தில் ரகசிய தீவில் இறங்கிய செங்கோடன் தன்னுடைய ஆட்களை தேட ஆரம்பித்தான்.

வழக்கமாக அவனது ஆட்கள் அரசாங்க சத்திரங்களில் தான் தங்குவார்கள். அதனால் அவனது முதல் தேடல் அரசாங்க சத்திரமாகவே இருந்தது. அங்கே கிடைத்த பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தது.

இங்கே வராவிட்டால் வேறு எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்த செங்கோடன் எதிர் பட்டவர்களிடம் தன்னுடைய குழுவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். சொற்ப நேரமே அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டதால் அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

சிகப்பு முகமூடியை பற்றி நஞ்சுண்டன் விசாரிப்பதை பார்த்த பார்த்திபனின் ஆட்களிடமே கூட அவன் தன் குழுவினரை பற்றி விசாரித்தான். காலையில் வரும் நபருக்காக காத்திருந்த அவர்களும் கலை கூத்தாடி குழுவைப் பற்றி விசாரிக்கும் அவனை அசட்டையாக நினைத்து கடந்தனர்.

தன் குழுவை தேடி களைத்து போன அவன் கடைசியாக ஒரு காவலனை அணுகினான்.

"ஐயா' எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?"

"சொல் .! என்ன வேண்டும் உனக்கு?" என்றான் அதிகார தோரணையுடன் அவன்.

"நான் கலை கூத்தாடிகள் குழுவை சார்ந்தவன். எனக்கு முன்பாக இங்கே வந்த என் குழுவினரை காணவில்லை. அவர்களை நீங்கள் எங்காவது பார்த்தீர்களா?"

"அவர்களை பார்க்க வேண்டுமென்றால் நீ சிறைசாலைக்குத் தான் போக வேண்டும்"

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் அதிர்ச்சியுடன் செங்கோடன்.

காவலன் நடந்தவற்றை விளக்கி கூறினான்.

" இப்படி ஒரு சம்பவத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை." என்றான் உடைந்த குரலில் செங்கோடன்.

"உன்னை பார்த்தால் நல்லவனை போல் தெரிகிறது. நீயும் அவர்களில் ஒருவன் என்று ஊருக்குள் உளறிக் கொண்டு திரியாதே! உன்னையும் கைது செய்து விடுவார்கள். நானே உன்னை கைது செய்வேன். ஆனால் உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்பதால் விட்டு செல்கிறேன்"

"அவர்களை காப்பாற்ற வேறு ஏதாவது வழிகள் இருக்கிறதா?"

"ஓரே வழிதான் இருக்கிறது. நீ மதி மாறனை சந்தித்து அவனது மனம் மகிழம் படி எதாவது பரிசை கொடுத்தால் அவன் மனம் இளகி உன் ஆட்களை விடுவிக்க உத்தரவிடலாம். எதற்கும் முயற்சி செய்து பார்"

" நல்லது. அப்படியே செய்கிறேன்" என்ற செங்கோடன் அவனிடமே வழியை விசாரித்து கொண்டு மதிமாறனின் மாளிகையை நோக்கி நடந்தான்.

வாசலில் யாரோ காவலர்களுடன் மல்லுகட்டுவதை கேட்ட மதிமாறன் "அங்கே என்ன சத்தம்?" என்றான்.

"அந்த கலை கூத்தாடிகளின் சார்பாக ஒருவன் வந்திருக்கிறான். உங்களை பார்த்தே தீர வேண்டும் என்கிறான்"

"அவனை உள்ளே அனுப்பு"

உள்ளே வந்த செங்கோடன் வினயமாக வணங்கி விட்டு " வணக்கம் ஐயா" என்றான்.

"யார் நீ?"

" காலையில் நீங்கள் கைது செய்த கலை குழவின் தலைவன் நான். என் பெயர் செங்கோடன் "

" இருக்கட்டும். இங்கே எதற்காகவந்தாய்?"

" என் குழுவை மீட்டு ேபாக "

"அது அவ்வளவு எளிதல்ல "

"உங்களுக்காக நான் ஒரு அன்பளிப்பை கொண்டு வந்திருக்கிறேன்"

"என்ன அது?"

செங்கோடன் அந்த தங்க சங்கிலியை எடுத்து நீட்டினான்.

அதை பார்த்ததும் மதிமாறனின் முகம் மாறியது.

மதிமாறனை ரகசிய தீவின் ராஜ பிரதிநிதியாக தயாநிதி எதற்காக நியமித்து வைத்தானோ எதை இருபது வருடங்களாக அவன் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறானோ அந்த தங்க சங்கிலி ஒரு சாதாரண கலை கூத்தாடியின் கையில் இருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் எதை தேடி கொண்டிருந்தானோ அது தேடாமலேயே இப்போது கிடைத்து விட்டது.

ஓரு கல்லில் மூன்று மாங்காய்கள்
ெசங்கோடன் தன் குழுவை மீட்க லஞ்சமாக கொடுக்க முன் வந்த அந்த தங்க சங்கிலியை பார்த்த மதிமாறன் அதிர்ச்சியில் கல்லாக உறைந்து நின்றான். மலைநாட்டு அரசவையில் தனித்த செல்வாக்கு கொண்ட தயாநிதி எதை தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ எதை தேட தன்னை ஆளுநராக நியமித்தானோ அந்த பொருள் இப்போது தேடாமலேயே அவன் கண் முன்னால் இருந்தது.
அவனது விக்கித்து திகைத்து போன பார்வையை பார்த்த செங்கோடன் " ஐயா! இந்த ஏழையிடம் இருக்கும் கடைசி சொத்து இதுதான். இதுவரை நான் இந்த நகையை பிரிந்து இருந்ததில்லை. இப்போது என் குழுவினர் முக்கியம் என்று நினைப்பதால் வேறு வழியின்றி இதை உங்களுக்கு பரிசாக தருகிறேன். இதை வாங்கி கொண்டு என் குழுவினரை நீங்கள் விடுவிக்க வேண்டும்" என்றான் குரலில் பணிவை காட்டி.
கற்சிலை போல் எந்த உணர்வும் இல்லாமல் நின்று கொண்டிருந்த மதிமாறன் அவனுடைய பேச்சை கேட்டு சுய நினைவுக்கு வந்தான்.
"உன்னுடைய பெண் .. அவள் பெயர் கூட?" என்று பெயர் நினைவுக் கு வராமல் குரலை இழுத்தான்மதிமாறன்
"சந்திரவதனா" என்று அவன் மறந்து போன பெயரை எடுத்து கொடுத்தான் செங்கோடன்
"ஆம். அதுதான் அவளது பெயர் .இப் போது நினைவுக் கு வந்துவிட்டது. அவள்... அந்த சந்திரவதனா உன்னுடைய வளர்ப்பு மகள் தானே?" என்றான் மதி மாறன் துடிக்கும் இதயத்தை கட்டுப்படுத்தியபடி.
இந்த முறை செங்கோடனின் முகத்தில் இருள் படிந்தது. யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக தான் பொத்தி வைத்திருந்த ரகசியம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்ற அதிர்ச்சி அவனை தாக்கியது.
"அது எப்படி உங்களுக்கு தெரியும்?"
"எதிர் கேள்வி கேட்காதே! அவள் உன்னுடைய வளர்ப்பு மகள்தானே?"
"ஆமாம்.வ ளர்ப்பு மகள் தான்."
"அவள் உனக்கு எப்படி கிடைத்தாள்?"
"அது வந்து "
"எனக்கு தேவை உண்மை மட்டும் தான். பொய் சொல்லி மாட்டி கொள்ளாதே" என்றான் மதி மாறன் மிரட்டும் தொனியில் .
"இல்லை. நான் உண்மையை சொல்லிவிடுகிறேன். அவள் என்னுடைய வளர்ப்பு மகள் தான். ரத்னபுரியில் நாங்கள் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது என் மனைவி பூரண கர்ப்பிணி . கடற்கரை நகரம் ஒன்றில் தான் எங்களுடைய நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் இரவு என் குழுவினர் மது போதையில் மயங்கி கிடந்தனர். என் மனைவிக்கு உள்ளூர் மருத்துவச்சி உதவியுடன் பிரசவம் பார்த்தேன். அந்த பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. குழந்தை இறந்து பிறந்ததை எப்படி என் மனைவியிடம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ரோஜாப்பூ போல் இருந்த குழந்தையின் உடலை எடுத்து கொண்டு அதை புதைக்க கடற்கரைக்கு போனேன். அங்கே என் குழந்தையின் உடலை புதைத்து விட்டு கடவுளை சபித்து விட்டு நான் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தேன்.
அப்போதுதான் கடவுள் என் மீது மனம் இறங்கினார். திடிரென்று அந்த இருளில் ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டேன். ஒரு வேளை மயங்கி கிடந்த என் குழந்தையைத் தான் நான் இறந்து விட்டதாக நினைத்து புதைத்து விட்டேனோ என்று பதறி போனேன். குழந்தையை புதைத்த இடத்தில் ஈர மண் அப்படியே இருந்தது. அங்கேயிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. இருள் கவிழ்ந்த கடலில் அந்த அழுகை ஓசை கேட்பதை பிறகுதான் உணர்ந்தேன். நிலவின் வெளிச்சத்தில் ஒரு சிறு படகில் ஒரு குழந்தை இருப்பதை கண்டேன். அதை நான் எடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். எல்லோரும் அதை என்னுடைய சொந்த குழந்தையாகவே நினைத்தனர். நிலவின் வெளிச்சத்தில் அந்த குழந்தை கிடைத்ததால் அதற்கு சந்திரவதனா என்று பெயர் வைத்தேன். அந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரே ஆபரணம் இதுதான். அதை நான் எடுத்து வைத்து கொண்டு என் ஏழ்மை நிலையின் போது பயன்படுத்தி கொண்டு விட்டேன்" என்றான் செங்கோடன்.
"நல்ல காரியம் செய்தாய்செங்கோடா! நீ வளர்த்தது ஒரு பெண்ணையல்ல. என் எதிர்காலத்தின் அதிர்ஷ்டத்தை" என்று சிரித்தான்மதிமாறன்.
"எனக்கு ஓன்றும் புரியவில்லை பிரபு" என்றான் செங்கோடன் குழப்பத்துடன் .
"உனக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நான் என்னுடைய கதையை கூற வேண்டும். அப்போதுதான் கதையின் முக்கிய திருப்பம் நீ என்பது உனக்கு புரியும். " என்ற மதிமாறன் தன்னுடைய கதையை கூற தொடங்கினான்.
மலை நாட்டின் செல்வ வளம் மிகுந்த குடும்பம் ஒன்றில் பிறந்தவன் தான் மதி மாறன் . பிறந்ததிலிருந்தே செல்வ செழிப்பில் வளர்ந்ததால் யாரையும் மதிக்காமல் தான் தோன்றித்தனமாக நடந்து வந்தான். வாலிப வயதில் மது, மங்கை, சூது போன்ற கெட்ட பழக்கங்களும் அவனுக்கு பழக்கமாகி விட்டன. தொடக்கத்தில் இவற்றையெல்லாம் தன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்து வந்தான்.
ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டி கொள்வது தானே வாடிக்கை.செல்வமும், அந்தஸ்தும் நிறைந்த தன்னுடைய குடும்பத்தில் இப்படி ஓரு தறுதலை பிறந்திருப்பதை எண்ணி மதிமாறனின் தந்தை கலங்கித்தான் போனார். அரசின் சின்னஞ் சிறு பதவியில் எப்படியோ ஒட்டிக் கொண்டு விட்ட மதிமாறன் தன்னுடைய தீய பழக்கங்களை மாற்றி கொள்ள கொஞ்சமும்முனையவில்லை. இப்படி சொந்த ஊரில் எந்த உலக அனுபவமும் இல்லாமல் மதிமாறன் இருப்பதையும் தன்னுடைய தீய பழக்கத்தால் பெயரை கெடுத்து கொள்வதையும் பார்த்து இவனுக்கு யார் பெண் தருவார்கள் என்று கவலையடைந்த அவனது தந்தைக்கு அப்போதுதான் தன்னுடைய பால்ய கால நண்பனான தயாநிதியின் ஞாபகம் வந்தது.
இருவரும் நண்பர்கள் மட்டுமல்லாமல் ஒரு வகையில் உறவினர்களும் கூட. ரகசிய தீவின் ஆளுகை முழுவதும் அவனிடம் இருப்பதை அறிந்து வைத்திருந்த அவனது தந்தை ஒரு நாள் அவனை தயாநிதியிடம் அழைத்து சென்றான். அங்கே மதிமாறன் மிகுந்த அடக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டான். தயாநிதியும் மதிமாறனும் பால்ய கால நினைவுகளை பேசி முடித்த பின் தன்னுடைய மகனை அறிமுகம் செய்து வைத்தான் அவன்.
தயாநிதி ரகசிய தீவின் ஆளுநராக நியமித்திருந்த குணசேகரன் வயது மூப்பானதால் தனது கடைசி காலத்தை தாய் நாட்டில் கழிக்க விரும்பி தன்னை பதவியிலிருந்து விடுவிக்கும் படி கேட்டுக் கொண்டிருந்தான்.மதிமாறனின் நடத்தையை பார்த்த தயாநிதி இவனையே ரகசிய தீவின் ஆளுநராக நியமித்தால் என்ன என்று யோசித்தான். தனது யோசனையை வாய் விட்டு அப்பாவிடமும் மகனிடமும் கேட்டு வைத்தான்.
மதிமாறன் தனக்கு வாய்த்த அதிர்ஷ்டத்தை நினைத்து கல்லாக சமைந்தான். பொறுப்பை ஏற்க சம்மதிப்பதாக வாக்குறுதியளித்தான்.
"இங்கே பார்மதி மாறா !உன்னை ரகசிய தீவின் ஆளுநராக நியமிக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன். ஓன்று மார்க்கதரிசி என்ற கடல் கொள்ளையனின் புதையல் நம்முடைய தீவில் எங்கோ புதைக்கப்பட்டு இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அதை கண்டுபிடித்து நீமீட்க வேண்டும். இன்னொன்று என்னுடைய அந்தரங்கமான விசயம்." என்ற தயாநிதி தன்னுடைய கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை காட்டினான்.
"இது என்னுடைய பரம்பரை ஆபரணம். இதன் இன்னொரு ஜோடி என் மனைவியிடம் இருக்கிறது. அவள் இப்போது உயிரோடு இல்லை. அவளும் என் மகளும் பயணித்த கப்பலை கடல் கொள்ளையர்கள் தாக்கி நிர்மூலமாக்கி விட்டார்கள். அதில் என் மனைவி இறந்து விட்டாள். ஆனால் என்னுடைய ஒரே மகள் மட்டும் எப்படியோ தப்பி விட்டாள். ஆனால் அவள் எங்கிருக்கிறாள் என்பது மட்டும் இன்று வரை தெரியவில்லை. நானும் அவளை இருபது ஆண்டுகளாக தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த தங்க ஆபரணம் தான் அவள் இருக்கும் இடத்தை காட்டும் ஒரே வழி. அந்த இரண்டையும் கண்டுபிடித்து மீட்க வேண்டியதுதான் உன்னுடைய வேலை" என்றான் தயாநிதி .
"கவலைப்படாதீர்கள். விரைவிலேயே அந்த மார்க்க தரிசியின் தங்க புதையலையும், உங்கள் மகளையும் கண்டுபிடித்து நான் மீட்கிறேன்." என்றான் மதி மாறன் துடிப்புடன்
" நல்லது. நாளை இங்கே வா. உனக்கான நியமன கடிதம் தயாராக இருக்கும். அதை வாங்கி கொண்டு விரைவிலேயே ரகசிய தீவிற்கு பயணமாகு" என்றான் தயாரிதி.
இருவரும் விடை பெற்று வெளியே வந்தனர். வழியெங்கும் தொணதொணத்தபடி அறிவுரை கூறிய தந்தையின் பேச்சை வேறு வழியின்றி கேட்டு கொண்டிகுந்தான்மதிமாறன்.
தன்னுடைய கதையை கூறி முடித்தான்மதிமாறன்
உன் மகள் அரச பிரமுகர் ஒருவரின் மகள் .அதற்கான அத்தாட்சி தான் இந்த சங்கிலி" என்றான் மதி மாறன் .
செங்கோடன்மதிமாறன் சொன்னதை கேட்டு நம்ப முடியாமல் திகைத்து போய் நின்றான்.
" என் மகளுக்கு இப்படி ஒரு பூர்வாசிரம கதை இருக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவள் ஏழ்மையில் வளர்ந்து விட்டாள். இனியாவது அவளுடைய வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் "
"நன்றாகத்தான் இருப்பாள். நீ மட்டும் மனது வைத்தால் ?"
" என்ன சொல்கிறீர்கள்?"
"உன் மகளை அந்த சிகப்பு முகமூடி கடத்தி சென்று விட்டான். அவனை நான் பிடித்தாக வேண்டும். உன் மகளையும் நான் மீட்டாக வேண்டும். அதற்கு தூண்டில் புழு நீ தான் "
"தூண்டில் புழுவா?"
"ஆமாம். தூண்டில் புழுதான். உன்னை நான் சிறையில் அடைக்கப் போகிறேன். உ ன்னை மீட்க கண்டிப்பாக அந்த சிகப்பு முகமூடி வருவான். அவனை முதலில் பிடிப்பேன். பிறகு அவன் மூலம் உன் மகளை "
"என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள். என் மகளை மீட்டு அவளின் உண்மையான தந்தையிடம் சேர்ப்பித்து விடுங்கள்"
"சேர்த்து விடுகிறேன். அதற்கு முன் நான் அவளை மணந்து கொள்ள போகிறேன். அவனை மணப்பதன் மூலம் இந்த தீவின் நிரந்தர ஆளுநராக நானே இருந்து கொள்வேன். திருமண பரிசாக மார்க்க தரிகியின் தங்க புதையலையும் நானே வைத்து கொள்வேன். தயாநிதியின் மறைவுக்கு பிறகு அவனது பதவி எனக்கு வந்து சேரும் - எப்படி ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்."
"அட மோசக்காரா. நீ என் மகளை மணக்க நான் சம்மதிக்கவே மாட்டேன்"
"தயாநிதியின் மகள் தான் உன்னுடைய மகள் என்ற உண்மை உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். உன்னை வெளியே விட நானும் சம்மதிக்க மாட்டேன். யார் அங்கே ? இவனை சிறையில் அடையுங்கள்." என்று தன் கைகளை தட்டி ஆட்களை அழைத்தான்மதிமாறன்.
செங்கோடன் கைது செய்யப்பட்டான்.
"அவனை சிறைக்கு கொண்டு செல்லும் முன் கவனது நாவை துண்டித்து விடுங்கள். அவன் யாரிடமும் பேசக் கூடாது" என்ற மதிமாறனின் முகத்தில் கொடூரம் மின்னியது.

செவ்வாய், 19 ஜூலை, 2022

ரகசிய தீவு

அனுகூல சத்ரு

விரைந்து ஓடும் சாரட் வண்டியில் சந்திரவதனா கவலையுடன் அமர்ந்திருந்தாள். முன் பின் அறியாத இந்த தீவில் காலடி வைத்த சில மணி நேரங்களிலேயே அரசாங்கத்தின் முக்கிய புள்ளி தன் மீது ஆசைப்படுவான் என்றோ அவனது பகைமைக்கு தன்னுடைய குழுவினர் ஆளாவார்கள் என்பதையோ அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

யாரோ ஓரு முகம் தெரியாத மனிதன் சொன்னதை நம்பி இப்படி வண்டியில் பயனமாவதை எண்ணி அவள் தன்னையே நொந்து கொண்டாள். அந்த கலை கூத்தாடி குழுவின் தலைவனும் சந்திரவதனாவின் தகப்பனுமான செங்கோடன் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது என்று அவள் நினைத்தாள். இதற்கு முன்பாக செங்கோடன் நிகழ்ச்சி நடத்திய இடத்தில் போதுமான வருமானம் இல்லாமல் குழு சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டது.

இந்த வறுமையும், ஏழ்மையும் அவர்களுக்கு புதியது அல்ல. வருமானம் அதிகமாக இருக்கும் போது தாராளமாக செலவு செய்வதும், வருமானம் குறைவாக இருக்கும் போது பசி, பட்டினி என்று வாழ்வதும் அந்த குழுவிற்கு சகஜமான விசயம்தான். அப்படி வறுமையான காலகட்டங்களில் அவனுக்கு கைகொடுப்பது சந்திரவதனாவின் கழுத்து சங்கிலி தான் .அதை அவன் அணிந்திருந்த நாட்களை விட செங்கோடனிடம் இருந்த நாட்களே அதிகம். அவள் அணிந்திருந்த சொற்ப நாட்களிலும் அதில் இருந்த வினோதமான பதக்கத்தை பார்த்து பல முறை வியந்திருக்கிறாள். யானையின் பாதி முகத்தை கொண்ட அந்த சங்கிலியின் மறுபாதி வேறு யாரிடமோ இருப்பதாக அவளுக்கு தோன்றும்.

விவரம் தெரிந்த வயதிலிருந்து வறுமையையும் ஏழ்மையையும் பார்த்து பழகிய சந்திரவதனாவிற்கு இந்த விலை உயர்ந்த பொருள் தன்னுடைய தகப்பனுடையதாக இருக்காது என்று பல முறை தோன்றும். அந்த தங்க சங்கிலி எங்கே கிடைத்தது என்ற அவளுடைய கேள்விக்கு செங்கோடன் இதுவரை சரியான பதிலை சொன்னதில்லை. பேச்சைதிசை மாற்றி வேறு எதையோ பேசி அவளை சமாதானப்படுத்தி விடுவான். அதை எப்போதும் தன்னுடைய மடியில் பத்திரமாக வைத்திருக்கும் அவன் அதை ஒரு போதும் விற்க முனைந்ததில்லை.

தன்னுடைய மனைவி மரண படுக்கையில் இருந்த போது பணம் இல்லாமல் தவித்த போது கூட அவன் அந்த தங்க சங்கிலியை விற்க முயலவில்லை. அதை அடமானம் வைத்து தன் குழுவின் பசியை போக்குவதும் பணம் வந்த பிறகு எப்பாடுபட்டாவது அந்த நகையை மீட்டு விடுவதையும் அவன் வழக்கமாக வைத்திருந்தான். கடைசியாக நிகழ்ச்சி நடத்திய இடத்தில் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. தன் குழுவினரை பட்டினி போட விரும்பாத செங்கோடன் வழக்கம் போல தன்னுடைய நகையை அடமானம் வைத்து விட்டான்.

ரகசிய தீவிற்கு பயணமாகும் முன்பாக தன்னுடைய நகையை மீட்க சென்ற செங்கோடனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நகையை அடமானம் பெற்றவர் பக்கத்து ஊருக்கு போயிருந்தார். அவர் வரும் வரை செங்கோடன் காத்திருக்க வேண்டியதிருந்தது.

எள் காயலாம். எலி புழுக்கை ஏன் காய வேண்டும் என்று நினைத்தவன் தன் குழுவை ரகசிய தீவிற்கு போகும் கப்பலில் ஏற்றி முன்னால் அனுப்பி விட்டான். மறுநாள் நகையை வாங்கியவர் வந்ததும் அவருக்கு தர வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு நகையை மீட்டு கொண்டு ரகசிய தீவிற்கு வந்து தன் குழுவுடன் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு .

அந்த ஏற்பாடு இப்போது சின்னாபின்னமாகி அவனது குழுவினர் சிறைக்குள் அடைக்கப்பட்டு விட்டனர். அவனது ஒரே மகளும் சிகப்பு முகமூடியால் கடத்தப்பட்டு விட்டாள். இதையெல்லாம் கேள்விப்பட்டால் செங்கோடனின் நிலைமை என்னாவது என்று அவளது உள்ளம் துடியாக துடித்தது.

அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

" வண்டியை நிறுத்துங்கள்" என்றாள் சந்திரவதனா

" மன்னித்து விடுபெண்ணே.! உன்னை பத்திரமான இடத்தில் மறைத்து வைக்கும் படி பார்த்திபனின் உத்தரவு .அதை நான் நிறைவேற்றியாக வேண்டும்" என்றான் வண்டியின் சாரதி.

"பார்த்திபனா? யார் அது?" என்றாள் சந்திரவதனா குழப்பத்துடன் .

"ஓ! நீ ஊருக்கு புதிய வள் என்பதை நான் மறந்து விட்டேன். உன்னை ஆபத்திலிருந்து மீட்ட சிகப்பு முகமூடி அணிந்த ஆசாமியின் பெயர் தான் பார்த்திபன் " என்று பதில் சொன்னான் சாரதி

"இந்த தீவில் அவர் தான் பெரிய புரட்சி காரரோ ? " என்றாள் சந்திரவதனா.

"ஆம்.மதிமாறனை எதிர்க்க இங்கே அவனை விட்டால் வேறு ஆட்கள் இல்லை"

"என்னை எங்கே கொண்டு செல்வதாக உத்தேசம் "

"எனக்கு தெரியாது பெண்ணே. குறிப்பிட்ட இலக்குவரை தான் இந்த பயணம் .பிறகு வண்டி மாறி விடும். பயணியும், பயணமும் மாறாது. இதோ அந்த இலக்கு நெருங்கி விட்டது. உனக்காக இன்னொரு வண்டியும், சாரதியும் காத்திருக்கிறார்கள் உன்னுடைய மீதி பயணம் அந்த வண்டியில் தொடரும் "

" ஆட்சியாளர்களிடம் அகப்படாதிருக்க அட்டகாசமாகத் தான் திட்டமிடுகிறீர்கள்."

"உன் பாராட்டிற்கு நன்றி. இறங்க தயாராக இரு" என்றான் வண்டியோட்டி.

வண்டி நின்றது.

சந்திரவதனா வேறு ஒரு வண்டியில் ஏற்றப்பட்டாள். பழைய வண்டி வேறு திசையில் விரைந்தது.

வண்டி மெதுவாக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. சந்திரவதனாவின் கேள்விகளுக்கு வண்டியொட்டி ஆழ்ந்த மவுனத்தையே பதிலாக தந்தான்.

சாரதி எதையும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த சந்திரவதனா " நீ ஏன் எதையும் பேச மறுக்கிறாய்? நீ என்ன ஊமையா? " என்றாள் கோபத்துடன் .

" அழகான பெண்களை பார்த்தால் நான் வாயடைத்து போய்விடுவேன் பெண்ணே" என்றான் வண்டியோட்டி.

" துடுக்காக பேசுகிறாய். முறை தவறி பேசுகிறாய்.இது பார்த்திபனுக்கு தெரிந்தால் ?"

" மன்னித்து கொள் பெண்ணே .! பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளிடம் முறை தவறி நடந்தால் தலைவருக்கு கெட்ட கோபம் வந்துவிடும். கடும் தண்டனைகள் கொடுத்து தண்டிப்பார். என்னை பற்றி அவரிடம் எந்த புகாரும் சொல்லி விடாதே பெண்ணே. நான் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்" என்று கெஞ்ச ஆரம்பித்தான் சாரதி .

"அந்த பயம் இருக்கட்டும் " என்றாள் சந்திரவதனா .

"பெண்ணே என்று தான் உங்களை நான் அழைக்க வேண்டியதிருக்கிறது. உங்களுக்கு இன்னும் பெயர் வைக்க வில்லையா?" என்றான் அவன் மறைப்புக்கு முன்னால் இருந்தபடி.

"சந்திரவதனா "

"நல்ல பெயர் .நிலவை போன்ற முகம் கொண்ட பெண் .உனக்கு பெயர் வைத்தவர் ரசனை மிகுந்தவர் தான். ஆனால் நிலவில் இருக்கும் குளுமை உன் பேச்சில் இல்லை. ஒரே உருட்டலும் மிரட்டலுமாக இருக்கிறது"

"வாய் பேச்சு வீரரே! நாம் போக வேண்டிய இடம் வெகு தொலைவோ? இன்னும் நான் எவ்வளவு நேரம் உமது உளறலை கேட்டு கொண்டிருப்பது "

"அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம் அம்மணி. இதோ நீ வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது"

வண்டி மெதுவாக நின்றது.

வண்டியின் கதவுகள் மெல்ல திறந்தன.

"இறங்கு பெண்ணே" என்றது அவனது குரல் .

அவள் வண்டியிலிருந்து இறங்கினாள். அவளுக்கு எதிரே வினயமாக கைகளை கட்டியபடி நின்று கொண்டிருந்தான் சிகப்பு முகமூடி அணிந்த மனிதன்.

" வண்டியை ஓட்டி வந்தது?" என்றாள் சந்திரவதனா கேள்விகுறியோடு.

"பார்த்திபனாகிய நானே தான் " என்று சிரித்தான் அவன். தன்னுடைய முகமூடியை கழற்றி தன்னுடைய முகத்தை காட்டினான் அந்த வாலிப வீரன்.

வசீகரமான ேதாற்றத்துடனும், புன்னகையுடனும் நின்றவனை பார்த்து திக் பிரமை பிடித்து நின்றாள் சந்திரவதனா.

" என்ன பெண்ணே! இப்போது நீ ஊமையாகிவிட்டாயா?" என்றான் அவன் மீண்டும் சிரித்தபடி.

"என்னால் இதை நம்ப முடியவில்லை" என்றாள் சந்திரவதனா.

"நம்பு. சிகப்பு முகமூடியும் நானே தான் பார்த்திபனும் நானே தான்."

" இந்த வீடு ?"

" என் நண்பர்களுடையது. அவர்களின் மனைவிகள் உன்னை பத்திரமாக பார்த்து கொள்வார்கள். எந்த பயமும் இன்றி நீ இங்கே இருக்கலாம்"

"என் குழுவினரை நான் சந்தித்தாக வேண்டும்"

"அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். விரைவில் அவர்களை நான் மீட்கிறேன்." என்றான் பார்த்திபன்.

" நாளை என்னுடைய தந்தையும் இங்கே வருவார்"

"கவலைப்படாதே. அவரையும் இங்கே கொண்டு வந்து விடலாம்" என்ற பார்த்திபன் பூட்டியிருந்த வீட்டின் கதவை மூன்று முறை விட்டு விட்டு தட்டினான்.

சமிக்ஞை சரியாக இருந்ததால் கதவு திறக்கப்பட்டது. தீப்பந்தம் ஒன்றை ஏந்தியபடி வெளியே வந்தவன்" பார்த்திபா! என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்?" என்றான்.

"வில்லவா ! வழக்கம் போல் உன்னிடம் ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்" என்றான் பார்த்திபன்.

" என்ன செய்ய வேண்டுமென்று சொல். உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்"

"இந்த பெண்ணை வெகு கவனமாக இங்கே மறைத்து வைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இவள் மதிமாறன், கருணாகரன் இருவரின் கண்களிலும் பட்டு விட கூடாது" என்றான் பார்த்திபன்

" யார் இந்த பெண் ? இவளை காப்பாற்ற நீ ஏன் துடிக்கிறாய்?" என்றான் வில்லவன்.

துறைமுகத்தில் நடந்த சம்பவத்தை விளக்கமாக எடுத்துரைத்தான் பார்த்திபன்.

"பயப்படாதே பெண்ணே.. இங்கே நீ பத்திரமாக இருக்கலாம்" என்ற வில்லவன்" பார்வதி ! இந்த பெண்ணை உள்ளே அழைத்து செல்" என்றான். வெளியே வந்த அவனது மனைவி சந்திரவதனா வை உள்ளே அழைத்து சென்றாள்.பயப்படாதே! என்று கண்களால் தைரியமூட்டி உள்ளே அனுப்பி வைத்தான் பார்த்திபன்.

"சரி! நான் கிளம்புகிறேன்" என்றான் பார்த்திபன்.

"பொறு பார்த்திபா! உன்னிடம் முக்கியமான ஓரு விசயத்தை சொல்ல வேண்டும்"

"என்ன அது?"

"துறைமுகத்தில் இன்று காலையிலிருந்து ஒருவன் உன்னைப் பற்றி விசாரித்து கொண்டிருந்தான். அவனை நம் ஆட்கள் சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருக்கிறார்கள்"

"யார் அவன்? அவனுடைய பெயர் என்ன?" என்றவனின் புருவங்கள் முடிச்சிட்டன.

" அவன் பெயர் நஞ்சுண்டன் .தன்னை ஒரு மீகாமன் என்று சொல்கிறான்"

"அப்படி யாரையும் எனக்கு தெரியாது. அவன் மதி மாறனுக்காக வேலை செய்யும் உளவாளியாக இருக்கலாம். நம்முடைய பாணியில் அவனை விசாரியுங்கள். நாளை காலை நான் அவனை சந்திக்கிறேன்" என்றான் பார்த்திபன்.

"இப்போது எங்கே கிளம்பி விட்டாய்.? பேசாமல் இங்கேயே தங்கிவிட்டு காலையில் போகலாமே?" என்றான் வில்லவன்.

"முதல் சாமம் தொடங்கி விட்டது. நான் அப்பாவியை சந்தித்தாக வேண்டும்"

"இதே போல் தான் உன் அண்ணன் கரிகாலனும் அவனை தனிமையில் சந்தித்து வந்தான். அவன் இப்போது உயிரோடு இல்லை. இப்போது நீயும் அவனது ஆட்டத்தில் பொம்மையாகிவிட்டாய்" என்று பெருமூச்சு விட்டான் வில்லவன்.

" அவன் யார் என்று கண்டுபிடிக்கவாவது அவன் பேச்சை நான் கேட்டாக வேண்டும். அவன் நமக்கு அனுகூல சத்ருவாக இருப்பானோ என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது. எனக்கு வேறு வழியில்லை" என்ற பார்த்திபன் அங்கிருந்து வண்டியில் கிளம்பினான்.

வில்லவன் பெருமூச்சு விட்டான்.

"கண்ணுக்கு தெரியாத அந்த மாயாவியிடமிருந்து பார்த்திபனை காப்பாற்று கடவுளே " என்று முணுமுணுத்தன அவன் உதடுகள்.

வியாழன், 14 ஜூலை, 2022

செவ்வாய், 12 ஜூலை, 2022

ரகசியதீவு

பன்றி வைத்தியம்

நண்பர்களும் கலை கூத்தாடி கூட்டமும் கைது செய்யப்பட்டு வீரர்களால் அழைத்து செல்லப்பட்டனர்.

" இவர்களை என்ன செய்வது?" என்றான் கருணாகரன்.

கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டாமல் போனதை போல் கையருகே இருந்த அழகான பெண் சில நிமிடங்களில் தன் கைக்கு அகப்படாமல் நழுவி விட்டதை ஜீரணிக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் மதி மாறன் . மக்களுக்கு நடுவே தன்னுடைய மதிப்பையும் அந்தஸ்தையும் சிதறடித்து விட்ட அந்த சிகப்பு முகமூடியை நினைத்து அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது.

கருணாகரன் கேட்டது முதலில் அவன் காதில் தெளிவாக விழவில்லை. ஆனால் அவன் ஏதோ கேட்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவன்" என்ன கேட்டாய்?" என்று வினவினான்.

மதிமாறனின் கவனம் வேறு பக்கம் திரும்பி விட்டதை அவனது கேள்வி மூலம் புரிந்து கொண்டு விட்டவன்" உங்கள் கவனம் இங்கே இல்லை போலிருக்கிறதே?" என்றான் என்றான்.

"ஆமாம். என் கவனம் இங்கு இல்லைதான். அந்த கிளி என்னிடம் அகப்படாமல் பறந்து விட்டது" என்றான் மதி மாறன் .

" எல்லாம் அந்த முகமூடியால் !" என்று பல்லைக் கடித்தான் கருணாகரன்.

"இந்த சின்னஞ் சிறு தீவில் அவன் எங்கு பதுங்கி கிடக்கிறான் என்று நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. வெட்கம் " என்று குமுறினான்மதிமாறன்.

" அவனுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் நம்மால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை. அவனை பிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு பெரிய தொகையை பரிசாக அறிவித்தால் அவன் அகப்பட வாய்ப்பிருக்கிறது. அந்த தொகைக்கு ஆசைப்பட்டு அவனது ஆட்களில் யாராவது துரோகியாக மாறி அவனை காட்டி கொடுத்து விட்டால் நம்முடைய வேலை சுலபமாகிவிடும்" என்றான் கருணாகரன்.

"கருணாகரா! போன முறையும் இந்த சிகப்பு முகமூடியை நான் தான் உயிரோடு பிடித்து கொன்றேன். அது விசயமாக உனக்கு என் மீது வருத்தம் இருப்பதை நான் அறிவேன். அதனால் தான் இந்த முறை நீ இவனை பிடிக்க வேண்டும் என்று நான் வாளாவிருக்கிறேன். நான் கொன்ற அந்த கரிகாலன் எப்படி மீண்டும் உயிர் பெற்று எழுந்து வந்தான் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை." என்றான் மதி மாறன் .

"அதற்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. அவனை நீங்கள் முழுமையாக சொல்லாமல் விட்டிருக்க வேண்டும். அதனால் தான் அவன் இன்னமும் உயிரோடு திரிகிறான்."

" பயல் எப்படியோ உயிர் பிழைத்து விட்டான். அவனது மறுபிறப்பு எனக்குத் தான் பெரும் இன்னலை தருகிறது. மக்கள் வேறு அவனை சாகாவரம் பெற்ற மாயாவி என்று கொண்டாட துவங்கி விட்டார்கள்."

"கவலைப்படாதீர்கள்.இந்த சிறிய தீவில் அவன் எங்கே பதுங்கி இருக்க முடியும். விரைவில் அவன் பிடிபடுவான்"

"நான் வேறு கப்பலில் ஆயுதம் வருவதை உணர்ச்சி வேகத்தில் அவனிடம் உளறி கொட்டி விட்டேன். அவன் இனி எச்சரிக்கையாக இருப்பான்."

"இல்லை. நான் வேறு விதமாக நினைக்கிறேன். நமக்கு ஆயுதம் கிடைத்து விட்டால் அவனது ஆட்டம் முடிந்துவிடும் என்பதால் பயல் இனி நம்மிடம் வாலை ஆட்டமாட்டான்."

"அப்படியா சொல்கிறாய்? நீ சொன்னபடி நடந்தால் நல்லதுதான். அந்த கலை கூத்தாடிகளை தனியாக அடைத்து வை.நீலனை தனியாக அடைத்து வை. அவனுடைய கப்பலைப் பற்றி நாம் விசாரித்தாக வேண்டும்" என்றான் மதி மாறன் .

"உத்தரவு" என்றான் கருணாகரன்.

சற்று நேரத்தில் அந்த இடம் சந்தடி எதுவுமின்றி அமைதியாக இருந்தது.

சிறைகொட்டடியில் அடைபட்டு கிடந்தனர் நண்பர்களும் கலை கூத்தாடிகளும்.

" எல்லாம் இந்த கிழவனால் வந்தது.இவன் மட்டும் வாயை மூடிக் கொண்டு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் எந்த வில்லங்கமும் வந்து சேர்ந்திருக்காது" என்றான் கடோத்கஜன் கோபத்துடன் .

சுவற்றின் மூலையில் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான் நீலன்.

"என்னை மன்னித்து விடு தம்பி. இரண்டு நாட்களாக மது எதையும் அருந்தாததால் என்னுடைய மூளை சிந்திக்கும் திறனை இழந்து விட்டது. அதனால் தான் கன்னாபின்னா வைன்று உளறி கொட்டி விட்டேன்" என்றான் மெல்லிய குரலில் நீலன்.

"ஏன் பொய் சொல்கிறாய்? உன் மடியில் ஒரு மது புட்டி இருப்பதை நான் பார்த்தேன், என்றான் கடோத்கஜன் -

"அது ஒரு நினைவு சின்னம். ஒரு இக்கட்டிலிருந்து அந்த புட்டி என்னுடைய உயிரை காப்பாற்றி இருக்கிறது. அதனால் நன்றி உணர்வாக அதை எப்போதும் என் இடுப்பில் வைத்திருக்கிறேன். உங்களின் இந்த நிலைக்கு நான் தான் காரணம். உங்களை நானே விடுவிக்கிறேன்." என்ற நீலன் சிறிது நேரம் யோசித்தான்.

"மூளை சிந்திக்கிறதோ?" என்றான் யவனன்.

" அவனது யோசனையை முதலில் கேட்போம்." என்றான் ஆதித்தன். அவனது மனதில் வேறு ஒரு திட்டம் உருவாகி கொண்டிருந்தது.

" நம்மை எதற்காக கைது செய்து சிறையில் வைத்திருக்கிறார்கள் என்ற காரணத்தை நம்மிடம் அவர்கள் சொல்லவே இல்லை. ஆக நம் மீது எந்த குற்றசாட்டுகளும் இல்லை. நாம் நிரபராதிகள். அதனால் நாம் ஓன்றாக இணைந்து "குற்றம் என்ன செய்தோம்? நிரபராதிகளை விடுதலை செய்" என்று கோசமிடுவோம்" என்றான் நீலன்.

'அதை கேட்டு அவர்கள் நம்மை விடுதலை செய்து விடுவார்களா?" என்றான் யவனன்.

" விடுவிக்க மாட்டார்கள் தான். ஆனால் நம்மை கைது செய்ததற்கு ஏதாவது ஒரு காரணத்தை கூற வேண்டு மல்லவா? இங்கேதான் காரணம் எதுவும் இல்லையே?"என்றான் நீலன்.

"இதுவும் நல்ல யோசனைதான் " என்றான் யவனன்.

சற்று நேரத்தில் சிறைகொட்டடியில் இருந்து கோசம் எழும்பலாயிற்று.

"நிரபராதிகளை விடுதலை செய்.கைதுக்கு காரணம் கூறு" என்று கத்தி கொண்டிருந்தார்கள் அனைவரும்

சிறை காவலன்"ஏன் வீணாக கத்தி சக்தியை விரையம் செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவு தான் கத்தி கதறினாலும் இங்கே எதுவும் நடக்காது" என்றான்.

"அப்படியா ? இன்று இரவு முழுவதும் நாங்கள் இப்படியே கத்தி கொண்டிருக்க போகிறோம். நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம்" என்றான் நீலன் மிரட்டும் தொனியில் .

"தளபதி வரட்டும். உனக்கு சரியான பதிலை அவர் தருவார்" என்றான் சிறை காவலன்.

அவன் தளபதி என்று கருணாகரனை குறிப்பிட்டான். 

சற்று நேரத்தில் தன்னுடைய குதிரையில் அங்கு வந்து சேர்த்தான் கருணாகரன். குதிரை ல கானை காவலன் கையில் கொடுத்தவன் "அங்கே என்ன சத்தம்?" என்றான் கோசம் வந்ததிக்கை பார்த்து.

வழக்கமாக அவனது வருகையை பார்த்தவுடன் சிறைக்குள் மயான அமைதி நிலவும். அதற்கு மாறாக இன்று எழும் கோசத்தை கண்டு அவனது முகம் மாறியது.

"இன்று கைது செய்யப்பட்ட அந்த கலை கூத்தாடிகள் தான் இப்படி சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.இன்று இரவு முழுவதும் இப்படியே சத்தம் போட்டு நம்முடைய தூக்கத்தை கெடுக்க போகிறார்களாம்"

" என்ன வேண்டுமாம் அவர்களுக்கு?"

"கைதுக்கு காரணம் வேண்டுமாம்"

" காரணம்? ஹா ஹா" என்று நகைத்த கருணாகரன் கலை கூத்தாடிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு வந்தான்.

"எதற்காக இப்படி கத்தி கூச்சல் போடுகிறீர்கள்?" என்றான் கருணாகரன் கடுகடுத்த முகத்தோடு.

"எங்கள் கைதுக்கு காரணம் தெரிய வேண்டும். இல்லையென்றால் இரவு முழுவதும் இப்படித்தான் கத்தி கூப்பாடு போடுவோம்" என்றான் நீலன்.

"ஓ! நீ தான் இவர்களின் புரட்சி தலைவனா ? உனக்கு காரணம் தேவை. அவ்வளவுதானே?"

"அவ்வளவுதான். எங்கே காரணத்தை கூறு பார்ப்போம்" என்றான் நீலன்.அவன் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

"ஓரு காரணம் வேண்டுமா? இல்லை இரண்டு காரணங்கள் வேண்டுமா?" என்றான் கருணாகரன் விசம சிரிப்புடன்.

"உனக்கு ஒரு காரணம் கிடைப்பதே கடினம்" என்றான் நீலன்.

"என்னிடம் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை இங்கே அனுப்பி வைக்கிறேன்" என்று புதிர் போட்டான் கருணாகரன்

"இரண்டு காரணங்களை அனுப்பி வைக்கிறாயா?" என்று விழித்தான் நீலன்.

சிறை காவலனின் காதில் எதையோ கிசுகிசுத்தவன் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

"ஆதித்தா! அவனுடைய பேச்சு மிகவும் புதிராக இருக்கிறது" என்றான் நீலன்.

" அவன் நம்முடைய போராட்டத்தை அடக்க எதையோ செய்ய தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது." என்றான் ஆதித்தன்.

"இன்னும் சற்று நேரத்தில் அவன் என்ன செய்ய போகிறான் என்று தெரிந்துவிடும். பொறுமையாக இருங்கள்" என்றான் யவனன்.

சற்று நேரத்தில் கருணாகரன் இரண்டு காவலர்களுடன் திரும்ப வந்தான்.

"அதை உள்ளே விடுங்கள்" என்றான் கருணாகரன் அடுத்த நிமிடம் சிறை கதவு திறக்கப்பட்டு இரண்டு பன்றிகள் உள்ளே வீசப்பட்டன.

அவை மனிதர்களை பார்த்து அஞ்சி அங்கேயும் இங்கேயும் ஓட ஆரம்பித்தன.

அவர்கள் காலுக்கு அடியில் ஓடும் பன்றிகளை பார்த்து அருவறுத்து சிறைக்குள் ஓட துவங்கினர்.

"என்ன இது? காரணம் என்று சொல்லிவிட்டு பன்றிகளை கொண்டு வந்து விட்டிருக்கிறாய்?" என்று கத்தினான் நீலன்.

அதை கண்டுகொள்ளாமல் திரும்பி நடந்தான் கருணாகரன். அரை மணி நேரத்தில் கோசம் எழுந்தது. "பன்றிகளை வெளியேற்று."

கருணாகரன் சிரித்து கொண்டான். தவறே செய்யாத நிரபராதிகள் கூட இப்போது பன்றிகள் இல்லாத சிறை சுகமாக இருப்பதை உணர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் குற்றத்தை மறந்து பன்றியை இடையூராக நினைக்க தொடங்கி விட்டார்கள். கருணாகரன் இப்படியான வழிமுறைகள் மூலமாகத்தான் பலரை சிறை வாசத்துக்கு உள்ளாக்கி இருந்தான்.

"அந்த பன்றிகளை இப்போது வெளியில் எடுத்து விடுங்கள்" என்று உத்தரவிட்டான் கருணாகரன்.

"சிறையிலிருந்து சிறு ஓசை எழுந்தாலும் அடுத்த நிமிடமே சிறைக்குள் பாம்புகளை விடுவேன் என்று அந்த கிழவனிடம் சொல்லுங்கள். அப்படியே அவனை தனி சிறைக்கு மாற்றுங்கள்" என்றான் அவன்.

அவனது உத்தரவை கேட்ட அனைவரும் சப்த நாடியும் ஓடுங்கி போய் அமர்ந்தனர்.நீலனை மட்டும் வேறு சிறைக்கு மாற்றிய போது யவனன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"பாம்பை விட இவனது குறட்டை ஓலிமோசமானது. நாம் அனைவரும் அதிலிருந்து தப்பித்தோம் " என்றான் யவனன்.

அதே நேரம் தனது மாளிகையில் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்மதிமாறன். அவனது நாற்காலிக்கு பின்னால் சப்தமின்றி வந்து நின்றது அந்த நிழலுருவம்.

" உன்னைத்தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். என் முன்னால் வா" என்றான் மதி மாறன் .

தன் வருகையை முன்பே உணர்ந்து கொண்டு விட்ட மதி மாறனை நினைத்து திக் பிரமை பிடித்து நின்றது அந்த உருவம்.

வெள்ளி, 8 ஜூலை, 2022

ரகசிய தீவு

சிகப்பின் வருகை

பெண் பித்தனான மதிமாறன் அந்த ஆடழலகியை நோக்கி நடந்த போது அவனது கால்களுக்கு அருகே பாய்ந்த அம்பு அவனது மகிழ்ச்சியை குலைத்தது. அடுத்ததாக எழுந்த எச்சரிக்கை குரலால் எரிச்சலடைந்தவன் அம்பு வந்த திசையை ஏறிட்டு பார்த்தான்.

அங்கிருந்து ஐம்பதடி தூரத்தில் ஒரு மாளிகையின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான் அவன். அவனது முகத்தை முழுதாக பார்க்க விடாமல் ஒரு சிகப்பு நிற துணி கண்களுக்கு கீழாக கட்டப்பட்டிருந்தது. அவனது தோளின் பின்புறம் வில்லும் அம்பு கூடும் இருந்தன. அவனது தோள்களுக்கு பின்புறமாக ஒரு கருப்பு அங்கி ஓன்று தொங்கியது. அவன் தன்னுடைய கால்களில் ஓன்றைமொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரின் மீது வைத்திருந்தான்.

"நீயா?" என்றான் மதி மாறன் அதிர்ச்சியுடன் .

"ஆம். நானே தான்." என்றபடி அவன் சிரிப்பது முகமூடி அசைவ திலிருந்து தெரிந்தது. அவனது வலது கையில் இருந்த குறுவாள் மதி மாறனை குறி பார்த்து கொண்டிருந்தது.

"அந்த பெண்ணை விட்டு விடு. இல்லையென்றால் இந்த முறை என்னுடைய குறி தவறாது " என்றான் சிகப்பு முகமூடி.

"உன்னை இங்கே நான் எதிர்பார்க்கவில்லை" என்றான் கோபத்துடன் மதி மாறன் .

"நீ எதை செய்தாலும் அதை எதிர்க்க நான் வருவேன் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். நீ நல்லது எதையுமே செய்ய போவதில்லை என்று எனக்கு மட்டும் தான் தெரியும்." என்றான் அவன்.

"உன்னை நான் அன்றே முழுதாக கொன்றிருக்க வேண்டும். எப்படியோ தப்பி பிழைத்து விட்டாய்"

" நீ எதைத்தான் முழுதாக செய்து முடித்தாய்.? நீ செய்வதெல்லாம் அறைகுறையான விசயங்கள் தானே?"

" கருணாகரா! ஏன் இன்னமும் வாளாவிருக்கிறாய்? கண் எதிரே நிற்கும் இவனை உன்னால் எதுவும் செய்ய முடியாதா?" என்று கருணாகரனை பார்த்து உறுமினான்மதிமாறன்.

" எதையாவது செய்து தான் பாருங்களேன்" என்ற முகமூடி தன்னுடைய குறுவாளை மேலும் கீழமாக அசைத்து வீசப் போவது போல் சைகை செய்தான்.

"அமைதியாக இருங்கள். ஏடாகூடமாக பேசி அவன் கோபத்தை அதிகரித்து உங்கள் உயிருக்கு உலை வைத்து கொள்ளாதீர்கள். இப்போது அவன் கை ஓங்கியிருக்கிறது. நாம் பொறுத்துதான் போக வேண்டும்" என்றான் கருணாகரன் பல்லை கடித்து கொண்டு.

" புத்திசாலிநீ! நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு விட்டாய்" என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தான் முகமூடி.

"இப்போது உனக்கு என்ன வேண்டும்?" என்று கடுகடுத்த முகத்தோடு கேட்டான் மதி மாறன் .

"நீ இப்போதைக்கு இந்த பெண்ணை விட்டு விலக வேண்டும். இந்த பதவியை விட்டு விட்டு மலைநாட்டுக்கே நீ திரும்ப ஓட வேண்டும்"

"எனக்கு பிறகு வருபவன் என்னை விட மோசமானவனாக இருந்தால் நீ என்ன செய்வாய்?"

"உன்னை விட கடைந்தெடுத்த அயோக்கியன் உலகத்திலேயே கிடையாது. நீ சொல்வது போல் அடுத்து வருபவனும் உன்னை போலவே இருந்து விட்டால் என்ற கேள்வி எனக்குள்ளும் வந்திருக்கிறது. அதனால் தான் இந்த தீவின் அதிகாரத்தை நானே கைப்பற்ற தீர்மானித்து விட்டேன்"

"அது ஒரு போதும் நடக்காது. விரைவிலேயே எனக்கு ஆயுத உதவி வந்து சேரப்போகிறது. அதன் பிறகு நீ ஓடி ஒளிய இங்கே இடமே இருக்கப் போவதில்லை. இந்த தீவில் நீ எங்கே சென்று பதுங்கினாலும் உன்னை தேடிக் கண்டு பிடிப்பேன்." என்ற மதிமாறன் தன்னுடைய நாக்கை கடித்து கொண்டான்.

உணர்ச்சி வேகத்தில் ஓரு அரசியல் ரகசியத்தை சபை நடுவே சிதறு தேங்காய் போல போட்டு உடைத்து விட்டு வாயடைத்து போய் நின்றான் மதி மாறன் .

முகமூடியின் புருவங்கள் முடிச்சிட்டன.மதிமாறன் இப்படி ரகசியமாக ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருப்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் சுதாரித்து கொண்டு முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படியான ஒரு தகவல் அவனுக்கு கிடைத்துவிட்டிருந்தது.

என்ன பேசுவதென்று தெரியாமல் ஒரு நிமிடம் திகைத்து நின்றான் முகமூடி.

"உன்னுடைய கதை விரைவிலேயே முடிந்துவிடும். அல் பாயுளில் மடியாமல் ஆயுதங்களை கிழே போட்டுவிட்டு என்னிடம் சரணடைந்து உயிர் பிச்சை கேள். உன்னை உயிரோடு விட்டு விடுகிறேன். இந்த தீவை விட்டு அகன்று வேறு எங்காவது சென்று பிழைத்து கொள். இது நான் உனக்கு தரும் கடைசி சலுகை." என்று உறுமினான்மதிமாறன்.

" உன் உயிரே இப்போது இந்த கத்தி முனையில் தான் இருக்கிறது. அதை உணராமல் நீ எனக்கு உயிர் பிச்சை தருவதாக பேசுவது தான் வேடிக்கை" என்ற முகமூடி வினோதமான சீழ்க்கை ஒலி ஓன்றை எழுப்பினான்.

சற்று நேரத்தில் ஒரு சாரட் வண்டி ஒன்று கூட்டத்தை பிளந்து கொண்டு வந்து நின்றது.

அதை ஓட்டி வந்தவனும் ஒரு முகமூடி அணிந்து தன்னுடைய முகத்தை மறைத்திருந்தான்.

"பெண்ணே! உன் பெயர் என்ன?" என்றான் சிகப்பு முகமூடி.

அவள்" என்னுடைய பெயர் சந்திரவதனா " என்றாள்.

"பயப்படாதேசந்திரவதனா! நீ இப்போது பாதுகாப்பான கரங்களில் இருக்கிறாய். இந்த கயவன் உன் கற்போடு விளையாட தீர்மானித்து விட்டான். உன்னை காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் அதை வண்டியில் ஏறிக் கொள். அவர்கள் என்னுடைய ஆட்கள்தான். அவர்களின் நிழல் கூட உன் மீது படாது. என்னை நம்பு பெண்ணே" என்றான் சிகப்பு முகமூடி.

அவள் தப்பித்தால் போதும் என்று வண்டியில் ஏறினாள். வண்டி மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பியது.

வண்டி கண் மறையும் வரை பார்த்து கொண்டிருந்தான் முகமூடி. வண்டியை யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன்" உன்னிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றி விட்டேன். அது போதும் எனக்கு" என்றான்.

காவலர்கள் புடைசூழ நின்று கொண்டிருந்த நீலனின் கண்கள் கூட்டத்தின் நடுவே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டனின் மீது நிலைத்தன.

முத்தழகியின் வடிவத்தையும் பெயரையும் மாற்றிய நஞ்சுண்டன் ரகசிய தீவின் துறைமுகத்திற்கு கப்பலை கொண்டு வர வே இல்லை. சிறிய படகுகள் மூலமாக ரகசிய தீவின் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய சரக்கை இறக்கி விற்று காசாக்கிவிட்டான்.முத்தழகியை பற்றி விசாரித்தவர்களிடம் அது பழுதாகி கடலில் நின்று விட்டதாக பொய் கூறி சமாளித்து விட்டான்.முத்தழகியில் இருந்த பணியாளர்கள் ஓருவர் கூட ரகசிய தீவில் கால் பதிக்காமல் பார்த்து கொண்டு விட்டான் நஞ்சுண்டன் .ஆனால் இரண்டு நாட்களாக அலைந்து திரிந்தும் அவனால் சிகப்பு முகமூடியை பற்றிய சிறு விவரத்தை கூட அறிய முடியவில்லை. ஆயுதங்களை விற்று செல்வத்தை ஈட்டும் தன்னுடைய திட்டம் தோல்வியை தழுவிவிடுமோ என்ற அச்சம் கூட அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

இரண்டாவது நாளாக தீவில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன், சிகப்பு முகமூடியை பற்றி நஞ்சுண்டன் நைசாக விசாரித்து கொண்டிருப்பதை பார்த்த ஒருவன் "தம்பி! இப்படியே அவனைப் பற்றி நீ விசாரித்து கொண்டிருப்பதை ஒற்றர்கள் கவனித்தால் முதலில் உன்னைத்தான் சிறையில் தள்ளுவார்கள்" என்று எச்சரித்தான்.

நஞ்சுண்டன் அவனது எச்சரிக்கையில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்டான். ஓரு தேடப்படும் குற்றவாளியை பற்றி விசாரிப்பது எவ்வளவு பெரிய பிசகு என்று உணர்ந்து கொண்டவனாக துறைமுகத்திற்கு திரும்பி கொண்டிரு ந்தான்.

திரும்பும் வழியில் தான் அவன் இந்த கலை கூத்தாடிகளை பார்த்தான். அதன் பிறகு நடந்த களேபரங்களை அவன் எதிர்பார்க்கவில்லை.குறிப்பாக கல்லறைதீவில் தனியாக தவிக்க விட்டு விட்டு வந்த நீலன் உயிரோடு இங்கே இருப்பது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நரன். உண்மையிலேயே திறமைசாலி தான் .இந்த முறையும் எப்படியோ உயிருடன் தப்பி வந்து விட்டான். அவனது கண்ணில் பட்டு விட்டால் நம் கதி அதோ கதிதான்." என்று நினைத்தவன் அவன் பார்வையில் படாமல் மறைந்து கொண்டான்.

நீலனை கைது செய்ய சொல்லி மதிமாறன் உத்தரவிட்டதும் அதை கேட்டு மகிழ்ந்த முதல் ஆள் நஞ்சுண்டன்தான். அப்பாடி தலைக்கு வந்த ஆபத்து தலை பாகையோடு போயிற்று என்று அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். தன்னை மறைத்து கொள்ளும் முயற்சியை அவன் கைவிட்டான்.

ஆடழலகியின் மீது மதிமாறனின் கண் பட்டதும் அதற்கு இடையூராக சிகப்பு முகமூடி வந்ததும் அவன் எதிர்பாராத நிகழ்ச்சிகள். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல எவனை தேடி இரண்டு நாட்களாக நஞ்சுண்டன் அலைந்து கொண்டிருந்தானோ அவனே கண் முன்னால் பிரதட்யண்யமாகி விட்டான்.

இனி வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று நினைத்த நஞ்சுண்டன் கூட்டத்திலிருந்து முன்னால் வந்தான். அவனை பார்த்து விட்ட நீலனின் இரத்த ஓட்டமும் கோபமும் எகிறியது.

"துரோகி. நீ இங்கு தான் இருக்கிறாயா?" என்றபடி காவலுக்கு இருந்த வீரர்களை தள்ளி விட்டு விட்டு நஞ்சுண்டனை நோக்கி ஓடினான்.

"அவனை பிடியுங்கள்" என்றான் மதி மாறன் .

காவலர்களால் வழிமறித்து குண்டு கட்டாக தூக்கப்பட்டான் நீலன்.மதிமாறன் நிமிர்ந்து பார்த்த போது மொட்டை மாடியில் நின்றிருந்த சிகப்பு முகமூடி காணாமல் போயிருந்தான்.

" அவன் இங்கிருந்து வெகுதூரம் சென்றிருக்க முடியாது. அவனை தேடிப் பிடியுங்கள்" என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான் கருணாகரன்.

இந்த கலவரத்தில் நஞ்சுண்டன் கூட்டத்தில் நழுவினான்.

"நான் சொல்வதை கேளுங்கள். அவனை உடனே பிடியுங்கள். முட்டாள்களே! ஏன் தப்பு தப்பாக காரியம் செய்கிறீர்கள்" என்று கதறினான் நீலன்.

"வாயை மூடு முட்டாளே! என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும் " என்றான் கருணாகரன்.

" நீலா! எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?" என்றான் ஆதித்தன்.

"அந்த விரியன் இங்கு தான் இருக்கிறான். அவனை நான் பார்த்தேன்" என்றான் நீலன்.

"நஞ்சுண்டனையா?"

"ஆமாம்"

" இவர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள், " என்று உத்தரவிட்டான் கருணாகரன்.

கலை கூத்தாடிகளின் குழவும், நண்பர்களும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் அழைத்து செல்லப்படுவதை மறைந்து நின்று ரசித்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் .

"அப்பாடா!தொல்லை விட்டது.இனி நிம்மதியாக நம்முடைய வேலையை பார்க்கலாம்" என்று மகிழ்ந்தான் நஞ்சுண்டன் .

இருளில் நடந்த வன்முச்சந்தியில் நால்வரால் மடக்கப்பட்டான்.

அதில் மையமாக நின்றவன் நஞ்சுண்டனின் கழுத்தில் வாளை வைத்தான்.

"நான் சொன்னதை கேட்டால் உன் தலை தப்பும். இல்லையென்றால் "

"புரிகிறது." என்றான் நஞ்சுண்டன்

" வில்லங்கமாக எதையும் செய்ய நினைக்காமல் என்னோடு நட " என்று கட்டளையிட்டான் அவன்.

நஞ்சுண்டனின் கண்கள் துணியால் கட்டப்பட்டன. அந்த கார இருள் அவனை சூழ்ந்தது.

திங்கள், 4 ஜூலை, 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 11

வாய்த் துடுக்கால் ஏற்பட்ட விபரீதம்  

ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகளின் நடுவே தத்தளித்து கொண்டிருக்கும் போது நீலன் தன்னுடைய துடுக்குத் தனமான பேச்சால் வேறு ஒரு புது பிரச்சனையை கொண்டு வந்து விட்டான். அவனை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த யவனனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவன் தன்னுடைய கோபத்தை மிகுந்த முயற்சியின் பேரில் கட்டுப்படுத்திக் கொண்டான்.

" வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் வீண் பேச்சு எதற்கு நண்பா ?'' என்றான் நீலனை கண்டிக்கும் வகையில் .

கடோத்கஜன் தன்னுடைய நண்பனை காப்பாற்ற முனையும் யவனனை உற்று பார்த்தான். அவன் முகம் மக்களின் கேலி சிரிப்பால் கன்றி சிவந்திருந்தது.
"அந்நியனே.! இந்த பிரச்சனை எனக்கும் இவனுக்கும் நடுவிலானது. இதில் நீ மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்" என்றவன் "நீ சொன்னதை மீண்டும் ஒருமுறை திரும்ப சொல் " என்று நீலனை அதட்டினான்.

"ஏன் நான் பேசுவது உன் காதில் விழவில்லையா? பாவம் காது கேளாதவனா நீ? உன் நிலைக்கு நான் பரிதாபப்படுகிறேன்" என்றான் நீலன்.அவன் இப்படி கம்பியை வளைப்பவன் தன் மென்னியை திருகுவான் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நிலைமையை இயல்பாக்க நினைத்து மேலும் மேலும் பிரச்சனையை அதிகமாக்கி கொண்டிருந்தான்.

நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஆதித்தன் "நண்பா! என் நண்பன் பேசுவதை மனதில் வைத்து கொள்ளாதே! அவன் சற்று வாய் துடுக்காக பேசக் கூடியவன்தான். அவனது பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உன் அபார திறமையை பாராட்டி இதோ இந்த பொற்காசை என் அன்பளிப்பாக தருகிறேன். பெற்று கொள். " என்ற ஆதித்தன் அவனது கையில் ஒரு பொற்காசை திணித்தான்.

"இது ஒரு கொல்லனுக்கு தர வேண்டிய நியாயமான கூலி தான் " என்றான் நீலன்.கடந்த இரண்டு நாட்களாக மதுவருந்தாத எரிச்சலில் சூழ்நிலை புரியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான் அவன்.

கடோத்கஜன் மின்னலாக திரும்பி சென்று ஒரு இரும்பு கம்பியை எடுத்து வந்து நீலனின் கழுத்தில் வைத்து வட்ட வடிவமாக இறுக்கினான்.

" கிழவா! உன்னுடைய உளறுவாயை மூட எனக்கு இதைவிட சிறந்த வழி தெரியவில்லை." என்றான் கடோத்கஜன்.

யவனனும் ஆதித்தனும் ஆளுக்கொரு பக்கமாக கம்பியை பிடித்து இழுத்து நீலனை விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

"இங்கே என்ன சத்தம்?" என்ற கணீர் குரல் அங்கே எதிரொலித்தது. அந்த குரல் எதிரொலித்து முடிக்கும் முன்பாகவே அங்கே பரபரப்பு அடங்கி ஆழ்ந்த அமைதி நிலவியது. மூவரும் யார் அந்த மனிதன் என்று அவனை கவனிக்க தொடங்கினர்.

அந்த மனிதன் ஆறடிக்கும் குறையாத உயரத்தையும் கட்டுமஸ்தான தேகத்தையும் கொண்டிருந்தான். அவனது சிறிய கண்களின் கூர்மையான பார்வை யாரையும் குத்தி கிழித்து விடும் வல்லமையை பெற்றிருந்தன. அவன் முகத்தின் குறுக்காக ஒரு வெட்டு தழும்புவிழுந்து அவன் முகத்தை கொடுரமாக காட்டியது.அவனது இடையில் நீண்ட வாள் ஓன்று தொங்கி கொண்டிருந்தது.

"யார் நீங்கள்? போக்குவரத்திற்கு இடையூராக பாதையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்றான் மீண்டும் கணீர் குரலில்.

கடோத்கஜன் தன் உடம்புக்கு சற்றும் பொருந்தாத வகையில் அவனைப் பார்த்து வணங்கினான்.

"நாங்கள் கலை கூத்தாடிகள். நாடோடிகளாக அலைவதே எங்கள் வாழ்க்கை.இங்கேயும் மக்களை மகிழ்வித்து பொருள் ஈட்ட வே வந்திருக்கிறோம். பிரபுவின் தயவு எங்களுக்கு தேவை " என்றான் கடோத்கஜன்.
.
"நீதான் இந்த குழவிற்கு தலைவனா ? " என்றான் நெடிய மனிதன்.

"இல்லை. எங்களின் தலைவர் நாளை தான் இங்கே வருவார்."

"பொது இடத்தில் வித்தை காட்ட அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று உனக்கு தெரியாதா? மற்ற இடங்களில் இப்படித்தான் தான்தோன்றி தனமாக வித்தை காட்டி கொண்டிருந்தீர்களா?"

" மன்னிக்க வேண்டும் பிரபுவே! நாங்கள் செய்தது தவறுதான். பெரிய மனதுடன் மன்னிக்க வேண்டும்"

"விசாரிப்பது தான் என்னுடைய வேலை. மன்னிப்பதெல்லாம் என் அதிகாரத்தில் வராது. அதை ராஜ பிரதிநிதியும் ஆளுநருமான மதிமாறன் தான் முடிவு செய்ய வேண்டும்"

"நான் அவர்களை மன்னித்து விட்டேன் கருணாகரா!" என்றது மற்றொரு குரல்.

கூட்டத்தை பிளந்து கொண்டு முன்னேறி வந்தது ஒரு புரவி .அதன் மீது ஆரோகணித்திருந்தான்மதிமாறன். தன் குதிரையை விட்டு குதித்து இறங்கிய மதிமாறன் " இந்த தீவில் பொழுதுபோக எதுவுமே இல்லை. அந்த குறையை போக்க நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.இந்த தீவின் சார்பாக உங்களை நான் வரவேற்கிறேன். உங்களின் சில திறமைகளை வெளிகாட்டுங்கள். அதை பார்க்கும் மக்கள் வாய் வழியாக
விளம்பரம் செய்வார்கள். நானும் உங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி தருவதா வேண்டாமா என்று ஒரு முடிவுக்கு வர இந்த சிறு நிகழ்ச்சி உதவி செய்ய கூடும்" என்றான் மதி மாறன் .

"உங்கள் நிகழ்ச்சி தொடங்கட்டும்" என்று உத்தரவு கொடுத்தான் கருணாகரன்.கருணாகரன் மதி மாறனின் வலது கை.ரகசிய தீவின் தளபதி. அவனுக்கு தெரியாமல் ஓரு ஈ எறும்பு கூட தீவிற்குள் நுழைய முடியாது. மதி மாறனை கொல்ல முயன்ற ஒரு கூட்டத்திடமிருந்து அவனை காப்பாற்றி அவனது நன்மதிப்பை பெற்று தளபதியாக இருப்பவன் கருணாகரன். மார்க்கதரிசியின் தங்க புதையலை தேடிக் கொண்டிருப்பவனும் இவன்தான். சிகப்பு முகமூடியை தேடுபவனும் இவன் தான்.மதிமாறன் சொல்லும் வேலைகளை உடனடியாக செய்து முடிப்பவனும் அவன் தான்.

கருணா கரனின் உத்தரவால் கடோத்கஜனின் முகம் மலர்ந்தது. மதிமாறனிடம் தன்னுடைய செல்வாக்கை ஸ்தாபிதம் செய்து கொள்ள விரும்பியவன்" உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி பிரபு. இதோ இங்கே ஒருவன் எங்கள் நிகழ்ச்சிக்கு இடையூறு செல்கிறான். உங்களை மகிழ்விக்கும் எங்களின் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தாலும் அவன் இடையூறு செய்யக் கூடும்" என்றான்.

"யார் அவன்? உங்கள் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்பவன்?" என்றான் மதி மாறன் கோபத்துடன் .

"அதோ அந்த கிழவன் தான் " என்று நீலனை நோக்கி கையை நீட்டினான்கடோத்கஜன்.

யார் கண்ணில் பட்டு விடக் கூடாது என்று நினைத்தார்களோஅந்த மதிமாறனின் கண்களிலேயே பட்டு விட்டார்கள் மூவரும்.

"யார் அந்த கிழவன் ? அட நம்முடைய நீலன்?" என்றான் கருணாகரன் வியப்புடன்.

"யாரது? முத்தழகியின் நீலனா? தலை பாகை இல்லாததால் எனக்கு அவனை அடையாளம் தெரியவில்லை." என்றான் மதிமாறன்.

" கப்பலை துறைமுகத்தில் காணவில்லை. ஆனால் கப்பலின் மீகாமன் மட்டும் தனியாக வந்திருப்பது தான் விந்தையாக இருக்கிறது." என்றான் கருணாகரன்.

" என்ன? துறைமுகத்தில் கப்பல் இல்லையா?" என்ற மதிமாறனின் முகம் மாறியது. ஆயுதம் இல்லாமல் வெறும் கையோடு வந்து நிற்கும் அவன் மீது கோபம் கொந்தளித்தது. மக்களுக்கு நடுவே ஆயுதங்களை பற்றி விசாரித்தால் உளவாளிகள் மூலம் சிகப்பு முகமூடிக்கு தகவல் போய்விடும் என்பதால் அவன் வேறு விதமாக யோசித்தான்.

கருணாகரனைப் பார்த்து கண்களை காட்டிய மதிமாறன் "அரசாங்க விருந்தாளிக்கு உரிய மரியாதையை தருவது நம்முடைய கடமை. கருணாகரா! நீலனை நன்றாக கவனித்து கொள்ள ஆட்களை அனுப்பு" என்று சொல்லி விட்டு விசமத்தனமாக சிரித்தான்.

அவனது சிரிப்பை புரிந்து கொண்ட கருணாகரன் கைகளை தட்டினான். அடுத்த விநாடி நீலனை சில காவலர்கள் சூழ்ந்து கொண்டனர்.

யவனன் மகேந்திரனின் கட்டளையை நினைத்து கொண்டான் .ஒரு நொடி கூட நீலனை பிரிந்து விடக் கூடாது என்று மகேந்திரன் கட்டளையிட்டிருப்பதால் அவன் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினான்.

"அவனை தொடாதீர்கள்" என்று நீலனுக்கு முன்னால் வந்து நின்றான் யவனன்.

"இவன் யார்?, என்றான் மதி மாறன் .

" மோகினி தீவில் ஒரு யவனன் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது இவன் தான் என்று நினைக்கிறேன்" என்றான் கருணாகரன்.

"அது நான் தான் " என்றான் இப்பாலஸ்.

" நல்லது. அவனையும் அரசாங்க விருந்தாளியாக மாற்றுங்கள். அவனை நாம் பிறகு விசாரிப்போம். வேறு யாருக்காவது அரசு விருந்தினராக வேண்டும் என்ற ஆசை இருந்தால் முன்னால் வரலாம்"

"ஆதித்தா! எங்களை யாரென்று காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இரு" என்றான் நீலன் கிசுகிசுப்பான குரலில்.

ஆதித்தன் தன் காலடியை முன்னால் வைத்தான்.

"நீ யார்?" என்றான் கருணாகரன்.

" இவர்களின் நண்பன்" என்றான் ஆதித்தன்.

"இவன் மேலும் ஒரு கண் வையுங்கள்" என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்ட கருணாகரன் " ஏன் பிரமை பிடித்தது போல் நிற்கிறாய்? உன் நிகழ்ச்சியை ஆரம்பி. பாவம் அவர்களும் அதை கண்டு களிக்கட்டும் " என்று கடோத்கஜனுக்கு உத்தரவிட்டான்.

"உத்தரவு" என்ற கடோத்கஜன் தன் ஆட்களுக்கு சைகை செய்தான். அடுத்த நிமிடம் இசை முழங்க நிகழ்ச்சிகள் அரங்கேற துவங்கின.

எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து கொண்டிருந்த மதிமாறனின் கண்கள் கம்பி மேல் நடக்கும் வித்தையை செய்யும் பெண்ணைப் பார்த்ததும் தன் கண்களை மூட மறந்தான். இந்த தீவில் இப்படியொரு அழகான பெண்ணா என்று திகைத்தவன் கருணாகரனை அழைத்து "அந்தப் பெண் ? " என்று இழுத்தான்.

அவனது பெண்ணாசையைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த கருணாகரன் விசமமாக சிரித்தான். "இன்று இரவு .அவள் உங்களின் உறவு" என்று சிரித்தான் கருணாகரன்.

நிகழ்ச்சிகள் வெகு சீக்கிரத்திலேயே நிறைவு பெற்றன. " நிகழ்ச்சி முடிந்து விட்டது. விரைவாக கலைந்து செல்லுங்கள்" என்று மக்களுக்கு உத்தரவிட்டான் கருணாகரன் .

"உங்கள் அனுமதிக்கு நன்றி.உங்கள் உதவியை மறக்கவே மாட்டோம்" என்றான் கடோத்கஜன்.

"நன்றி இருக்கட்டும். இன்று இரவு எங்கே தங்க போகிறீர்கள்?"

"சத்திரத்தில் தான் "

" நல்லது. அங்கே உங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால் என்னுடைய பெயரை சொல்லுங்கள்.உங்களுக்கு வேண்டியது கிடைக்கும்."

"சந்தோஷம் பிரபுவே! நாங்கள் கிளம்புகிறோம்"

"தாராளமாக கிளம்பலாம் அந்த பெண்ணை மட்டும் விட்டு விட்டு "

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"இன்னுமா புரியவில்லை உனக்கு. அந்த பெண் வேண்டும் எனக்கு " என்றான் மதி மாறன் ..

"நாங்கள் கலை கூத்தாடிகள் தான். ஆனால் மானத்தை விற்று பிழைப்பவர்கள் இல்லை. அவள் என் தங்கையை போன்றவள்!" என்று குமுறினான்கடோத்கஜன்.

" அவனிடம் என்ன பேச்சு ?அவளை தூக்கி வாருங்கள்" என்றான் மதி மாறன் .

கருணாகரனின் வாள் கடோத்கஜனின் கழுத்தில் பதிந்து அவனை தடுத்து நிறுத்தியது.

ஆதித்தனும் அவனது நண்பர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மதிமாறன் ஆடல் அழகியை நெருங்கினான். அவள் மருளும் விழிகளோடு அவனை திகைப்புடன் பார்த்தாள்.

விகாரமாக சிரித்தபடி அவளை நெருங்கினான் மதி மாறன் . அதே நேரம் அவனது காலடியில் பாய்ந்து நின்றது ஒரு அம்பு.

" அப்படியே நில்! அடுத்த அடி எடுத்து வைத்தால் உன் உயிர் பறவை உடலை விட்டு பறந்து விடும்" என்றது ஒரு கணீர் குரல்.

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 10

தர்க்க சாஸ்திரி

ஏதோ ஒரு கடல் கொள்ளையனால் புதைத்து வைக்கப்பட்ட ஒரு தங்க புதையல் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தது.

ஏதோ யோசனையில் இருந்த ஆதித்தன்" யார் இந்த சிகப்பு முகமூடி ? ரகசிய தீவின் ஆளுநரான மதி மாறனை அவன் எதற்காக எதிர்க்க வேண்டும்?" என்றான்.

நீலன் தன் தொண்டையை ஓரு முறை கனைத்து கொண்டான். ஆதித்தனின் கேள்விக்கு முழுதாக விடை தெரியாவிட்டாலும் தனக்கு தெரிந்த விசயங்களை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் அப்படியே தன் நண்பனிடம் சொல்லி விட முடிவு செய்தான்.

"ஆதித்தா! நீ கேட்ட கேள்விக்கு எனக்கு முழுமையாக பதில் தெரியாது. ரகசிய தீவில் நான் சரக்குகளை ஏற்றி இறக்கும்போது அவனை பற்றி மக்கள் பேசுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். அவன் ஒரு ஏழை பங்காளன். இருப்பவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்பவன்"

"அப்படியானால் அவன் என் ஜாதி என்று சொல்" என்றான் ஆதித்தன். தன்னுடைய கொள்கைகளை அப்படியே பின்பற்றும் அந்த சிகப்பு முகமூடி மனிதனை நினைத்து ஆதித்தன் மகிழ்ச்சியடைந்தான்.

"ஆமாம். அவன் உன்னுடைய ஜாதிதான். வறியவர்களின் துயரை துடைப்பதில் முதலில் நீளும் கைகள் அவனுடையவை. அவன் அந்த தீவிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பது மட்டும் உண்மை. ஆனால் அவனது ஊர், பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவன் எங்கே தங்கியிருக்கிறான், அவனுடைய கூட்டாளிகள் யார்? என்று எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு விசயம் நிச்சயம். அவனது எதிரி ரகசிய தீவின் ராஜ பிரதிநிதியான மதி மாறன் தான். அவனது எதிரிகள் அனைவரும் சிகப்பு முகமூடிக்கு உதவி செய்வதாக தகவல் .இன்னொரு விசயத்தை மக்கள் ரொம்பவும் தீர்க்கமாக நம்புகிறார்கள். அது சிகப்பு முகமூடிக்கு மரணம் இல்லை என்பது "

" மனிதனாக பிறப்பவன் இறப்பது இயற்கைதானே? இவன் மட்டும் எப்படி விதிவிலக்காக மாறினான்" என்றான் யவனன்.

"அதுதான் எனக்கும் தெரியவில்லை.மதிமாறன் ஒரு முறை பொறி வைத்து சிகப்பு முகமூடியை கையும் களவுமாக பிடித்து அவனை கொன்று எரித்து விட்டதாக கேள்வி. சில மாதங்களுக்கு பிறகு அந்த மாயாவி மீண்டும் உயிரோடு வந்து விட்டான். முன்பை விட அதிகமாக இப்போது மதிமாறனுக்கு இடைஞ்சல் தந்து கொண்டிருக்கிறான்"

" அவன் ஏன் குறிப்பாக மதி மாறனை எதிர்த்து புரட்சி செய்கிறான்?"

"தீவின் விடுதலை தான் அவனது லட்சியம். ஆனால் எனக்கென்னவோ இருவருக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. சிகப்பு முகமூடி தேடும் அதே தங்க புதையலை மதிமாறனும் தேடிக் கொண்டிருக்கிறான். அவனது வலது கையான ஒருவன் அதற்காக முழு மூச்சாக அலைந்து கொண்டிருக்கிறான்"

"மார்க்கதரிசியின் தங்க புதையலை அடைய ஏகப்பட்ட பேர் கிளம்பியிருப்பார்கள் போலத் தெரிகிறதே?"

"எனக்கு தெரிந்து இப்போதைக்கு இவர்கள் இருவரும் தான் போட்டியில் உள்ளனர்"

"கடவுளின் முழு ஆசீர்வாதமும் உனக்கு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது நீலா!" என்றான் ஆதித்தன்.

" எதை வைத்து என்னை கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவன் என்று குறிப்பிடுகிறாய்? நானோ தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறேன். நீயோ என்னை பகடி செய்கிறாய்"

"இல்லை. பல கெட்டதுகள் நடக்கும் போது அவற்றின் நடுவே ஓன்றிரண்டு நல்ல விசயங்களும் நடந்து விடும். அந்த முகமூடியை பற்றி நீ சொன்ன விசயங்களை நன்றாக அலசி ஆராய்ந்ததில் நஞ்சுண்டனுக்கு பாதகமாகவும் உனக்கு சாதகமாகவும் ஒரு விசயம் இருக்கிறது." என்றான் ஆதித்தன்.

நீலனின்புருவங்கள் முடிச்சிட்டன. யவனன் ஆதித்தன் பேசுவதை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"நஞ்சுண்டன் நமக்கு முன்பாக ரகசிய தீவை அடைந்திருப்பான் இல்லையா?" என்றான் ஆதித்தன் பூடகமாக .

" அவன் நாம் ரகசிய தீவை அடையும் முன்பாக அவன் தீவை அடைந்திருப்பான். அவன் கையில் முழுதாக இரண்டு நாட்கள் இருக்கின்றன. கப்பலின் பெயரையும், வடிவமைப்பையும் மாற்றி விட்டதால் அந்த கப்பல் தான் முத்தழகி என்று யாருக்கும் தெரியாது. ஆயுதம் வந்த கப்பல் இது தான் என்று மதிமாறனுக்கும் தெரியாது. அவன் வழக்கமாக வரும் முத்தழகியில்தான் ஆயுதம் வரும் என்று நினைத்து கொண்டு அசட்டையாக இருப்பான் "

"மதிமாறனிடம் ஆயுதங்களை ஓப்படைப்பதால் நஞ்சுண்டனுக்கு பலன் எதுவுமில்லை"

"ஆமாம். ஆயுதங்களை நஞ்சுண்டன் சிகப்பு முகமூடியிடம் தான் விற்க முனைவான். இவ்வளவு நேரம் அவன் வாளாவிருக்க மாட்டான். அவன் சிகப்பு முகமூடியிடம் பேரம் பேச துவங்கியிருப்பான்."

"அதற்கு வாய்ப்பே இல்லை நீலா.சிகப்பு முகமூடியார் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது என்று சொல்கிறாய். அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரிந்தால் தானே நஞ்சுண்டன் அவனை சந்தித்து பேரம் பேச முடியும்?"

"ஆகா! என்ன ஒரு யூகம் ? இதற்குத்தான் ஆதித்தன் வேண்டும் என்பது !" என்ற நீலனின் முகத்தில் நிம்மதி பரவியது.

ஆதித்தனின் மதியுகத்தை கண்ட யவனன் வாயடைத்து போயிருந்தான். ஆதித்தனை சாதாரணமாக எடை போட்டதன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அவன்.

"சிகப்பு முகமூடியை நஞ்சுண்டனால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதது நமக்கு சாதகமான முதல் விசயம். இரண்டாவது விசயம் நஞ்சுண்டன் சிகப்பு முகமூடியை பார்த்து பேசிய சில நாட்களிலேயே ஆயுதங்களை விற்று விட்டு கிடைத்த பணத்துடன் ரகசிய தீவிலிருந்து கிளம்பி விடுவான்"

" எதை வைத்து இப்படி கூறுகிறாய்?" என்றான் குழப்பத்துடன் யவனன்.

"அதற்கு பலமான காரணம் இருக்கிறது. முத்தழகி ரகசிய தீவிற்கு வர வேண்டிய நேரத்தில் வரவில்லை. ஆனால் அதே நேரம் வேறோரு கப்பல் ரகசிய தீவிற்கு வந்து சேருகிறது. அதன் பணியாளர்கள் முத்தழகியில் வேலை செய்த அதே பணியாளர்கள். மேலும் நஞ்சுண்டன் ரகசிய தீவில் இறக்க வேண்டிய சரக்குகளை இறக்கிவிட்டு அதற்கான பணத்தை பெற்று கொள்வான். பணியாளர்கள், முத்தழகியின் அதே சரக்கு இரண்டும் சேர்ந்து உருமாறிபெயர் மாறி வந்திருப்பது முத்தழகி தான் என்று வணிகர்களுக்கு தெரிந்துவிடும். அதே விசயம்மதிமாறனுக்கு தெரிந்தால் ஆயுதங்களை தேடி நஞ்சுண்டனை தேடிப் பிடிப்பான். ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் விற்று விட்ட நஞ்சுண்டன் அவனிடம் பிடிபட்டு சாக விரும்ப மாட்டான். அதனால் கிடைத்த விலைக்கு ஆயுதங்களை விற்று விட்டு தப்பியோட வே முனைவான். அவன் சிகப்பு முகமூடியை கண்டுபிடிக்க தாமதமாகும் நாட்கள் தான் நமக்கான அவகாசம் .அதற்குள் நாம் விரைந்து செயல்பட்டாக வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"ஆதித்தா! நீ சொல்வது தர்க்கபூர்வமாக சரியாகத் தான் இருக்கிறது. நஞ்சுண்டன் தாமதிக்கும் ஓவ்வொரு நாளும் நமக்கு வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. எப்படியாவது முத்தழகியை மீட்டு விடுவேன்" என்றான் நீலன்.

"நாம் மூவர் தான் இருக்கிறோம். நம்மால் எப்படி ? " என்று இழுத்தான் யவனன்.

"அவநம்பிக்கை வேண்டாம் இப்பாலஸ்.ஆதித்தன் திட்டமிடுவதை மட்டும் நாம் செய்தால் போதும். வெற்றி நிச்சயம் " என்று சிரித்தான் நீலன்.

அதன் பிறகு நீலன் எதுவும் பேசவில்லை. அவனது மனம் அமைதியில் ஆழ்ந்தது. கள்வர் புரத்து கள்வனின் உதவியால் தன்னுடைய முத்தழகியை எப்படியும் மீட்டு விடலாம் என்பதால் அவன் தன்னுடைய முழு கவனத்தையும் கப்பலை செலுத்துவதில் காட்டினான்.

இரண்டு நாட்கள் பயணத்திற்கு பின் கழுகு ரகசிய தீவின் துறைமுகத்தை அடைந்தது. கப்பலை நங்கூரமிட்டு நிறுத்திய நீலன் கப்பலின் மேல் தளத்திற்கு அவசர அவசரமாக ஓடினான். ஆதித்தன் கொடுத்த கண் மருந்தை இரண்டு நாட்களாக பயன்படுத்தியிருந்ததில் அவனுடைய கண் பார்வை பாதி குணமாகியிருந்தது. தன் கண்களுக்கு நேராக கையை வைத்தவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நின்றிருந்த கப்பல்களை குத்துமதிப்பாக பார்க்க ஆரம்பித்தான்.

அவன் தன்னுடைய உருமாறியமுத்தழகி கப்பலைத் தான் அவ்வளவு ஆர்வமாக தேடுகிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தன் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.

" என்ன நீலா.? உன்னுடைய மனைவியை இனம் கண்டு கொண்டு விட்டாயா?" என்றான் குறுநகையுடன் ஆதித்தன்.

"ஓராயிரம் பார்வையில் அவள் பார்வையை நான் அறிவேன். ஆயிரம் கப்பல்களுக்கு நடுவிலும் என்னுடைய முத்தழகியை என்னால் இனம் கண்டுகொள்ள முடியும். இந்த பார்வை வேறு சதி செய்கிறது "

"மருந்து போட்டும் மனைவியை இனம் காண முடியவில்லையா? மருந்து போடாவிட்டால் வேறு கப்பலை என்னுடைய கப்பல் என்று சொல்வாய் போலிருக்கிறதே?" என்று சிரித்தான் யவனன்.

இருவரின் சிரிப்பையும் கண்டுகொள்ளாத நீலன் கப்பலிலிருந்து தரையில் கால் பதித்தான்.

"முத்தழகியின்மீகாமனை இங்கே இருக்கும் யாராவது அடையாளம் கண்டு கொண்டு விட்டால் என்னாவது?" என்றான் ஆதித்தன்.

"இதற்காக நான் மாறுவேடம் போட முடியுமா? என்னை எப்போதும் தலைபாகையோடு தான் எல்லோரும் பார்த்து பழகியிருக்கிறார்கள். அந்த தலைபாகை என்னுடைய அடையாளமாகவே மாறிவிட்டது. நஞ்சுண்டன் அதை பிடுங்கி சென்று விட்டதால் தலை பாகை அணியாத என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. இயல்பான தோற்றத்தில் இருப்பது தான் என்னுடைய மாறுவேடம் " என்று சிரித்தான் நீலன்.

அவன் சொல்வது உண்மை தான் என்பது அவனை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாததில் தெரிந்தது.

மூவரும் துறைமுகத்தில் நடக்க தொடங்கிய போது அந்த விசித்திர சத்தம் கேட்டது. அது ஒரு வாத்தியத்தின் ஓசை. கூட்டமாக இருந்த அந்த திசையில் மூவரும் நடந்தனர். அங்கே ஒரு கலை கூத்தாடி குழுவினர் வித்தை காட்டி கொண்டிருந்தனர். ஒருவன் தன் உயரத்திற்கு இரண்டு மனித உருவ பொம்மைகளை முன்னும் பின்னுமாக மூங்கில் கழியில் கட்டி அதை தன்னுடைய கையில் வைத்திருந்தான். அவன் நடந்தால் அவையும் நடந்தன. மூன்று பேர் வரிசையாக நடப்பதை போல் அந்த காட்சி இருந்தது.

ஒரு பெண் கயிற்றில் நடந்து கொண்டிருந்தாள்.

கடோத்கஜன் ஒருவன் இரும்பு கம்பியை பலத்த கரகோசங்களுக்கு நடுவே தன் கழுத்தின் பின்புறமாக வைத்து முன்புறமாக வில்லாக வளைத்தான்.

அதை பார்த்த நீலன்" இதுவெல்லாம் ஒரு வித்தையா? கொல்லன் பட்டறையில் சொற்ப காசை கொடுத்தால் வளைத்து தரப் போகிறான்" என்றான்.

கூட்டம் கொல்லென்று சிரித்தது.

கடோத்கஜன் நீலனை திரும்பி பார்த்தான். அவன் கண்களில் இருந்த கோபத்தை பார்த்த நீலனின் முதுகெலும்பு ஜில்லிட்டது.