திங்கள், 27 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் 15

அஷ்டவக்கிரன் 15

டாக்டர் சம்பத்குமார் ஆள் அரவமற்ற காட்டு பகுதியில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.அவனுக்கு பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஜான் குரோவரின் ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் திட்டத்தை இந்தியாவில் இருக்கும் எவனோ ஒருவன் மோப்பம் பிடித்துவிட்டிருப்பதை அவனால் நம்பமுடியவில்லை. இந்த புது அவதார ரகசியம் ஜானுக்கும் தனக்கும் மட்டும்தான் தெரியும் என்று இதுவரை அவன் நினைத்து கொண்டிருந்தான். இப்போது முகம் தெரியாத மூன்றாவது நபர் ஒருவனுக்கும் அந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. அவன் அதை வைத்துக்கொண்டு இப்போது சம்பத்குமாரையே மிரட்ட தொடங்கிவிட்டான்.

சம்பத் தனது செல்போனை எடுத்து ஜான் குரோவரிடம் இந்த மிரட்டல் விவகாரத்தை சொல்லலாமா? என்று ஒரு நிமிடம் யோசித்தான். இந்த விசயம் தெரிந்தால் அவன் தன்னை கண்டபடி திட்டுவான். தன் மீதான அவனது நம்பகத்தன்மை குறைந்துவிடும். ஜான் இப்போது தன்னுடைய கவனத்தை பயோ வெப்பன் என்கிற உயிரியல் ஆயுதங்களின் பக்கம் திருப்பி இருக்கிறான். அதற்கு ஏராளமான பரிசோதனை எலிகள் தேவை. அவற்றை அவனால் அவனது நாட்டில் செய்ய முடியாது. அவ்வளவு கெடுபிடிகள், விதிகள் அவனது ஆய்வுக்கு தடையாக இருப்பதால் அவன் இந்தியாவை தேர்ந்தெடுத்து வைத்திருந்து சம்பத்தை தனது பிரதிநிதியாக வைத்து கொண்டு ஏராளமான பணத்தை அள்ளி இறைத்து கொண்டிருந்தான்.

கோடிகளில் நனைந்து கொண்டிருக்கும் ஜானை இந்த பிரச்சனையில் இழுத்து விடாமல்தானே இந்த விவகாரத்தை கவனித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு சம்பத் வந்துவிட்டிருந்தான்.அந்த பிளாக்மெயில் ஆசாமியின் குறிகண்டிப்பாக பணமாகத்தான் இருக்க வேண்டும் அதற்காக அவன் மீண்டும் தன்னை அழைப்பான் என்று சம்பத் எதிர்பார்த்தான்.

அவனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. டாக்டரிடம் தப்பாக ஏதோ ஒரு விசயம் இருப்பதை தெரிந்துகொண்ட மணிகண்டன் அடுத்த முறை போன் செய்தபோது சம்பத் நேராக விசயத்திற்கு வந்துவிட்டான்.

"உன்னோட வாயை மூட எவ்வளவு பணம் வேண்டும்?" என்றான் சம்பத்.

மணிகண்டனுக்கு அவனது பேச்சு ஆச்சரியமாக இருந்தது. என்ன விசயம் என்று அவனுக்கு சரியாக தெரியவில்லை. குத்து மதிப்பாக எதையோ கண்டுபிடித்து வைத்திருந்தான். அதற்கே இந்த டாக்டர் பதறி கொண்டு பணம் தர முன்வருகிறான் என்றால் விசயம் தான் நினைப்பதைவிட பெரிதாக இருந்திருக்கவேண்டும் என்று யூகித்தான்.

"நான் பணம் கேட்கவேயில்லையே ?" என்று இன்னொரு கொக்கியை வீசினான் அவன்.

சம்பத்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை..இவன் பணம் கேட்டு மிரட்டுவான் என்று பார்த்தால் இவன் பணமே வேண்டாம் என்று குழப்புகிறானே என்று அவனுக்கு தோன்றியது.

"பணம் வேணாம்னா வேறு என்னதான் வேணும்?"

"நேர்ல பார்க்கும்போது சொல்றேன். இன்னைக்கு சாயந்தரம் அஞ்சுமணிக்கு நான் சொல்கிற இடத்துக்கு வாங்க"

"எந்த இடம்னு சொல்லு, வர்ரேன்"

மணிகண்டன் இடத்தை சொன்னான்." இந்த இடத்துக்கு நீங்க மட்டும் தனியா வாங்க. வேறு மாதிரி யோசிச்சா நல்லா இருக்காது,"

"வேறுமாதிரின்னா?"

"நான் உங்களப்பாத்துட்டு ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வரலைன்னா என்னோட ப்ரண்ட் இந்த விவகாரத்த போலீஸ்சுக்கு கொண்டுபோயிருவான்"

"முட்டாள். அவனுக்கும் இந்த விசயம் தெரியுமா?"

" தெரியாது. ஆனால் சீல் வைச்ச கவரை அவனிடம் கொடுத்துட்டு வந்துருக்கேன். நான் வீட்டுக்கு போகலைன்னா அவன் போலீசுக்கு போயிருவான்"

"நீ நினைப்பதுபோல் எதுவும் நடக்காது. சீக்கிரமாக வா" என்றான் சம்பத்.

இப்போது அந்த முகம் தெரியாத மணிகண்டனுக்காகத்தான் அவன் காத்திருந்தான்

சம்பத் மணியை பார்த்தான். மணி 5.10.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் வருகிற அறிகுறி தென்படவில்லை.சம்பத் கால்களை உதைத்துகொண்டான்.அவன் தன்னை ஆழம் பார்க்கிறானோவென்ற சந்தேகம் சம்பத்திற்கு வந்துவிட்டது.இன்னும் பத்து நிமிடம் பார்த்துவிட்டு கிளம்பிவிடலாம் என்ற முடிவிற்கு சம்பத் வந்துவிட்டிருந்தான்.

பத்து நிமிடமும் முழுதாக கழிந்தது. நம்மிடம் விளையாடுகிறான் போலும் என்று நினைத்த சம்பத் தன்னுடைய காரை கிளப்பினான்.

அவன் தன்னுடைய காரை மெயின்ரோட்டை நோக்கி விரட்டியபோது அவனது போன் அடித்தது.

யார் என்று பார்த்தான் அவன்.அவன் தான் அந்த பிளாக்மெயிலர்.

"ஹலோ '

"ஸாரி டாக்டர். என்னோட வண்டி பஞ்சராகிவிட்டது. நான் சொன்ன இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்னாடி வாங்க"

" ஏன் இப்படி அலைகழிக்கிறாய்?"

"எச்சரிக்கையாக இருக்கிறேன். உசுரு பணத்தைவிட பெருசு. காத்துகிட்டு இருக்கேன். சீக்கிரமா வாங்க"

செல்லை அணைத்து சீட்டில் போட்ட சம்பத் ஆக்சிலேட்டரை அழுத்தினான்.

ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே நின்றிருந்த மணிகண்டன் கைகளை நீட்டி தன்னை அடையாளப்படுத்தினான்.
மணிகண்டனைப் பற்றி சம்பத் நிறையவே கேள்விப்பட்டிருந்தான்

"நீயா?" என்றான் அதிர்ச்சியோடு.

" என்னைத் தவிர வேறு யார் இதையெல்லாம் செய்வாங்க" என்று சிரித்தான் மணிகண்டன்.

காரைவிட்டு கீழே இறங்கினான் சம்பத்.

"நான் என்ன கண்டுபிடிச்சிருக்கேன்னு நீங்க கேக்கவேயில்லையே?"

"அது அனாவசியம். உனக்கு என்ன வேணும் ? பணம் வேணாம்னா வேற என்ன வேணும்?"

"அது சும்மா சொன்னது. எலும்பு வேண்டாம்னு எந்த நாயாவது சொல்லுமா?"

"சரி. எவ்வளவு வேணும்?"

"பத்து லட்சம்"

"காலைல ஹாஸ்பிடல் வந்து வாங்கிக்க. முதல்ல உன் பைக்கோட டயரை மாத்து"

"நாளைக்கு பணம் வந்தவுடன் பைக்கையே மாத்திடறேன்"

"நான் கிளம்புறேன்" என்ற சம்பத் அங்கிருந்து கிளம்பினான். இவன் இத்தோடு இதை நிறுத்தபபோவதில்லை என்று அவனுக்கு தோன்றியது. அவனுக்கு பணத்தேவை ஏற்படும்போதெல்லாம் நம்மிடம்தான் வந்து நிற்க போகிறான். இதை இப்போதே தடுத்து நிறுத்தியாக வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் அவன்.

அவனுக்கு ஸ்டில்லடோ ரவியின் நினைவு வந்தது. ஸ்டில்ல டோஜெர்மன் மேக்கத்தி.
பளபளவென்றுமின்னும் அந்த கத்தியால்தான் அவன் பல பேரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கிறான்.

செல்போனில் இருந்த அவனது நெம்பருக்கு அழைத்தான் சம்பத்.

"உண்மையை சொல்லாதவரை தினமும் ஒரு விரலை கட் பண்ணுவேன். சரியா? இன்னைக்கு சுண்டு விரல் "என்ற ரவி எதிரே இருந்தவனின் சுண்டு விரலை வெட்டினான்.அவன் அலற துவங்கினான்.." இவனை ரூம்ல போட்டு பூட்டு. நாளைக்கு இன்னொரு விரலை வெட்டனும். சாப்பிட பிரியாணி சிக்கன்னு கொடுங்க" என்றான் எதிரே நின்றிருந்ததன் ஆட்களிடம்.

அடித்த போனை அப்போதுதான் கவனித்தவன்" சொல்லுங்க டாக்டர், "என்றான்.

"ஒரு ஆளை போடனும் ரவி"

"செஞ்சுரலாம். ஆளை பத்தி முழு டீடெய்ல் வாட்ச்அப் பண்ணுங்க"

"அனுப்புறேன். ஆனா இதுல நீயும் மாட்ட கூடாது. நானும் மாட்ட கூடாது. உன்னோட ஸ்டில்ல டோவை இதில் யூஸ் பண்ணாத. அந்தகத்தி உன்னோட சிக்னேச்சர். போலீஸ் ஈசியா உன்னை பிடிச்சுரும்"

"அப்ப வேற என்ன பண்றது?"

"துப்பாக்கி"

"ஓகே. செஞ்சிடலாம்"

என்ற ரவி வாட்ஸ்ப்பில் வந்த தகவல்களை பார்த்தான்.

அவன் யோசிக்க ஆரம்பித்தான்.மணிகண்டனை கடத்தி கொலை செய்தால் போலீஸ் விசாரணை வரும். அதை திசைதிருப்ப என்ன செய்யலாம்?

ஸ்பெர்லைட் கலவரம் அதற்கான ஆட்கள் தேவைப்படுவது அவனது நினைவிற்கு வந்தது.மணிகண்டனின் உடலை ஸ்பெர்லைட் கலவரத்தில் நுழைத்துவிட்டால்தான் மாட்டிகொள்ளமாட்டோம் என்று அவனுக்கு தோன்றியது.

ஸ்டில்ல டோரவி தனக்குள் சிரித்துகொண்டான். பணத்தை வாங்கியதும் எல்லா செலவையும் தானே செய்து ஒரு கல்யாணத்தை செய்துவிட வேண்டும் என்று நினைத்தான் மணிகண்டன்.

புதன், 15 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்12

Aஆப்ரேசன் அஷ்வக்கிரன்

அத்தியாயம் 11

பூபதி கருவறையில் இருந்த சாமியை பார்த்து கொண்டிருந்தான்.அவன் எப்போதும் வைக்கும் ஒரே பிராத்தனையை இப்போதும் வைத்தான்."சோமசுந்தரம் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்"சோமசுந்தரம் அவனுடைய மனைவியின் தம்பி. அவனைப் பற்றி நினைப்பதற்கு இப்போது பூபதி மட்டும்தான் இருந்தான். தன் அருகே இருந்தமங்கலத்தை பார்த்த பூபதி "போலாமா?" என்றான்.

"போலாம்பா!" என்றாள மங்களம்.

மங்களம் அவனது ஒரே மகள்.

"ஆமா. நீ என்ன வேண்டிகிட்ட சாமியிடம் "

" நான் வேண்டுவதற்கு நிறைய இருக்குப்பா. காணாம போன பெரிய அண்ணன் அருணாசலத்தை பற்றி. எப்பவாவது வந்துட்டு போற வாசுவை பத்தி. எந்த நினைப்பும் இல்லாம அருணாசலத்தோட நினைவுல சுயபுத்தி இல்லாத அம்மாவை பக்தி. வார்த்தையில் என்னை கொல்கிற என் மாமியாரை பற்றின்னு. நான் வேண்டுனா லிஸ்டு ரொம்ப பெருசா போகும்." என்று கசப்புடன் புன்னகைத்தாள் மங்களம்.

"கடவுள் ஏன் தான் நம்மை இப்படி சோதிக்கிறானோ தெரியலை. உன்னோட அண்ணன் கடைசியா எப்போ வந்தான்?"

"மூணு மாசம் முன்னாடி."

"என்ன வேலை செய்யறானாம்?"

"கேட்டேன் சொல்லலை"

" இந்த ஊர் தான் அவனை விரட்டிவிட்டுச்சு. சரி உட்காரு. போகலாம்." என்ற பூபதி தன்னுடைய TVS 50 ஐ கிளப்பினான். மங்களம் உட்கார்ந்ததும் வண்டி கிளம்ப ஆரம்பித்தது.

பூபதி நகராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்துகொண்டிருந்தான்.கிருஷ்ணாபுரத்தின் சாதிய தீண்டாமை அவனை அவனது குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருந்தது.

சின்ன வயதில் பூபதிக்கு சாதியென்றால் என்னவென்றே தெரியாது. மற்றவர்களிடம் அப்பா துண்டை இடுப்பில் கட்டியபடி பேசுவதும் சின்ன பசங்கள் எல்லாம் அப்பாவை பேர் சொல்லி வாடா போடா என்று கூப்பிடுவதும் அவனுக்கு கோபத்தை தந்தன. வேற வழியில்லை. கண்ணு. அவங்க உசந்த சாதி. நாம தாழ்ந்த சாதி. அடங்கித்தான் போகவேண்டும் என்ற அப்பாவின் அறிவுரையும் அவனுக்கு எரிச்சலை உருவாக்கின. அவன் யார் வீட்டிலும் நுழைந்ததில்லை யாரும் அவனை வீட்டின் உள்ளே கூப்பிடமாட்டார்கள். சில தெருக்களில் செருப்பு போட்டு நடக்க முடியாது. பதினைந்து வருடம் வரை பூபதி செருப்பை போட்டதில்லை.

வாடா போடா என்று அப்பாவை அழைக்கும் முதலாளிகள் அதை அப்படியே தங்கள் மகன்களிடம் சொல்லிகொடுத்துவாடா போடா என்று அழைக்கச் சொல்லி "நான் கூப்பிடுறதை பார்த்து அப்படியே கூப்பிட்டு பழகுறான்" என்று சொல்லி சிரிப்பார்கள்.பூபதியின் அப்பா அதை ஏற்றுகொண்டாலும் பூபதியால் அதை ஏற்க முடிந்ததில்லை. அவன் திரும்ப ஏண்டா என்று கேட்டுவிடுவான். அதனால் பூபதி மீது அவர்களுக்கு ஒரு கண்.

இதிலிருந்து விடுபட ஒரே வழி படிப்புதான் என்று முடிவு செய்த பூபதி படிக்க ஆரம்பித்தான். நன்றாக படிக்கும் பூபதியின் படிப்பை கெடுக்கவும் வேலைகள் நடந்தன. உடல்நிலை சரியில்லாத அம்மாவிற்கு பணம் வேண்டுமென்று முதலாளிகளின் வீட்டுவாசல்படியில் நின்றபோது " இவன் படிச்சு என்ன பண்ண போறான்? பணம் தர்றேன் பேசாம பண்ணையத்துக்கு அனுப்பேன்" போன்ற நிபந்தனைகள் விதிக்கபபட்டன. இவற்றையெல்லாம் மீறித்தான் அவனால் படிக்க முடிந்தது. அவனால் எல்லா முயற்சிகளும் செய்தும் பத்தாவது வரை படிக்கத்தான் அவனது குடும்ப சூழல் இடம் கொடுத்தது.

அப்போதுதான் ஊருக்குள் சிவப்பு கொடிகட்ட துவங்கியிருந்த கம்யூனிஸ்ட கட்சி அவனை ஈர்த்தது. கட்சியில் உறுப்பினரானான். ஏராளமான புத்தகங்களை படித்து அறிவை விரித்துகொண்டான்.தோழர்கள் அவனுக்கு பஞ்சாயத்தில் டிராக்டர் ஓட்டும் வேலையை வாங்கி தந்தனர். தன் சமூக மக்கள் அதிகமாக இங்கே வேலையில் இருப்பதை பூபதி பார்த்தான்.ஏன் வேறு எந்த சாதியினரும் சமூகத்தினரும் இந்த வேலைகளை செய்வதில்லை? காலம்காலமாக ஒரே சாதி மட்டும் ஏன் இந்த வேலையை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மெல்லமெல்ல கேள்விகள் கேட்க ஆரம்பித்து சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்தான். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக வளர ஆரம்பித்தவன் எல்லா பிரச்சனைகளிலும் தலையிட ஆரம்பித்தான். போராட்டம், மறியல் என்று சுற்ற ஆரம்பித்தான்.

இவனை என்ன செய்து தடுப்பது என்று யோசித்தவர்கள் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.பூபதியின் வாழ்க்கை திசைமாறியது. வந்த மனைவியின் பேச்சை கேட்டு பூபதி பொது வாழ்க்கைக்கு முற்றுபுள்ளிவைத்தான் அவனுக்கு முதலில் பிறந்தவன் அருணாசலம். அவனுக்கு பின்னால் பிறந்தவன் வாசு. கடைசியாக பிறந்தவள் மங்களம்.

அவனது மனைவி சரஸ்வதியின் தம்பி தான் சோமசுந்தரம். சொந்த மச்சினன்.பூபதியைவிட அதிகமாக சாதியால் பாதிக்கப்பட்டவன். ஒரு பிரச்சனையில் குடும்பத்தோடு ஊரைவிட்டே போனவன். அவன் எங்கிருக்கிறான் என்று இன்றுவரை பூபதிக்கு தெரியாது.

குடும்பம் நன்றாக போய்கொண்டிருந்தபோது தான் மூத்தமகன் அருணாசலம் திடிரென்று ஒருநாள் காணாமல் போனான்.அவனை யாரோ காரில் தூக்கி சென்றதாக அதை நேரில் பார்த்த வாசு கூறினான். போலீசில் கம்ளைண்ட் செய்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூத்தமகன் காணாமல்போன அதிர்ச்சியில பூபதியின் மனைவி சரஸ்வதிக்கு சித்தபிரமை ஏற்பட்டுவிட்டது.அண்ணனை கண்முன்னால் இழந்த சோகத்தில் வாசு அதிர்ச்சியில் மூழ்கினான். நள்ளிரவு தூக்கத்தில் திடிரென்று எழுந்து கொண்டு அண்ணன் வேணும் என்று அழ ஆரம்பித்துவிடுவான்.திடிர் திடிரென்று வீட்டைவிட்டு ஓடிவிடும் வாசு இரண்டு மூன்று நாட்கள் கழித்து திரும்ப வீட்டிற்கு வந்துவிடுவான். மனைவியை குணப்படுத்த பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தான் பூபதி. ஆனாலும் அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.

தன் மகன் உளவியலாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் அதை குணப்படுத்த என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.வாசு எப்படியோ அடித்து பிடித்து காலேஜ் வரை வந்துவிட்டான்.பூபதியை தீண்டிய அதே சாதிய பாகுபாடு அவனையும் தீண்ட தொடங்கியபோது இந்த ஊரே வேண்டாம் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டான்.அவ்வப்போது அவனது சொந்த சுபாவப்படி வருவான். போவான்.அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் எதுவும் தெரியாது.

மிச்சமிருப்பது மங்களம். அவளால் அதிகம் படிக்க முடியவில்லை. மனநலமற்ற தாயை வைத்து கொண்டு அவளே எல்லா வீட்டுவேலைகளையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவளால் பள்ளிகூடம் போக முடியவில்லை. ஆனால் எழுதப்படிக்க கற்றுகொண்டிருந்தாள்..அவளுக்கு சொந்தக்கார பையனான செல்வத்தையே கல்யாணம் செய்து வைத்துவிட்டான் பூபதி. அவன் டெர்லைட் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான். சரியான அம்மா கோண்டு.

அவனது அம்மா பார்வதி. பணத்தாசை பிடித்தவள். பூபதியின் வீட்டை எழுதி வாங்குவது அவளது திட்டம்.வாசுவுக்கும் அதில் சம்மதம் தான். ஆனால் காணாமல்போன மூத்தமகன் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் என்பதால் அந்த சொத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. வாசு மாதாமாதம் பார்வதிக்கு பணம் அனுப்பி கொண்டிருந்ததாலேயே அவள் மங்களத்திடம் கருணை காட்டிகொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. மூன்று மாதமாக வாசு பணம் அனுப்பவில்லை. திட்டுவதற்கு மருமகளும் இல்லை.அவள் வாசுவை தேடிக்கொண்டிருந்தாள். மருமகளை திட்ட கூடுதலாக ஒரு காரணம் பார்வதிக்கு இருந்தது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் பிள்ளை பெறாத மருமகளை வார்த்தை சாட்டையால் விளாசி கொண்டிருந்தாள் அவள். அவளது இம்சை கடவுளுக்கே பொறுக்காமல் மங்களம் கர்ப்பமாகிவிட்டாள். மூன்று மாதத்தில வளைகாப்பு முடிந்து அப்பாவின் வீட்டிற்கே வந்துவிட்டாள் மங்களம்.

தான் கர்ப்பமாக இருப்பதை வாசுவிடம் சொல்ல முயன்ற மங்களத்திற்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது. அவனது போன் எப்போதும் சுவிட்ச் ஆப் என்றே கூறிக்கொண்டிருந்தது. அவனாகவே அவளை தேடி வந்தால்தான் உண்டு. தன் தாயின் ஆட்டத்தை தட்டி கேக்காததன் கணவன் செல்வத்தின் மீது அவளுக்கு மெலிதான கோபம் உண்டு.

வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பூபதி "இன்னும் ஒரு ஏழு மாசம் நிம்மதியா இருக்கலாம்" என்றான்.

"அம்மாவை பாத்துக்க நான் வந்துட்டேன்னு சொல்றியாப்பா?"

"இல்லைம்மா. நியாயமா உங்கம்மாதான் உனக்கு எல்லா வேலையும் இப்ப செய்யனும். ஆனா நிலைமையை பாத்தியா? நீதான் உங்கம்மாவை பாத்துக்கனும். நான் உன்னோட மாமியார் வாயை சொன்னேன்"

"நான் இல்லாம எப்படிப்பா அம்மாவை பாத்துக்குற?"

"வீட்டுல வைச்சு பூட்டித்தான்.அதைவிடும்மா. அப்படியே பழகிருச்சு. வாரிசு வரப்போகுது. சந்தோஷமா இருப்போம்.எனக்கு இருக்குறது நீ மட்டும்தான் மா"

அவனுக்கு கண்ணீரால் பாதை மறைத்தது. மேல்துண்டால் துடைத்துகொண்டான்

"ஏம்பா. அழுதியா?"

"இல்லைம்மா. தூசி கண்ல விழுந்துருச்சு. ஆமா நாளைக்கு நீ செக்கப்புக்கு போகனுமா?"

"ஆமாப்பா"

"அந்த டாக்டர் பேரு என்னம்மா?"

"அவரு பேரு டாக்டர் சம்பத்குமார்"

டாக்டர் சம்பத்குமார் மங்களத்தின் கேஸ் பைலை தனியாக எடுத்து வைத்தான்.

"எட்டாவது கேஸ் சிக்கிருச்சு" என்றன அவனது உதடுகள்.

அஷ்டவக்கிரன்11

Aஆப்ரேசன் அஷ்வக்கிரன்

அத்தியாயம் 11

பூபதி கருவறையில் இருந்த சாமியை பார்த்து கொண்டிருந்தான்.அவன் எப்போதும் வைக்கும் ஒரே பிராத்தனையை இப்போதும் வைத்தான்."சோமசுந்தரம் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும்"சோமசுந்தரம் அவனுடைய மனைவியின் தம்பி. அவனைப் பற்றி நினைப்பதற்கு இப்போது பூபதி மட்டும்தான் இருந்தான். தன் அருகே இருந்தமங்கலத்தை பார்த்த பூபதி "போலாமா?" என்றான்.

"போலாம்பா!" என்றாள மங்களம்.

மங்களம் அவனது ஒரே மகள்.

"ஆமா. நீ என்ன வேண்டிகிட்ட சாமியிடம் "

" நான் வேண்டுவதற்கு நிறைய இருக்குப்பா. காணாம போன பெரிய அண்ணன் அருணாசலத்தை பற்றி. எப்பவாவது வந்துட்டு போற வாசுவை பத்தி. எந்த நினைப்பும் இல்லாம அருணாசலத்தோட நினைவுல சுயபுத்தி இல்லாத அம்மாவை பக்தி. வார்த்தையில் என்னை கொல்கிற என் மாமியாரை பற்றின்னு. நான் வேண்டுனா லிஸ்டு ரொம்ப பெருசா போகும்." என்று கசப்புடன் புன்னகைத்தாள் மங்களம்.

"கடவுள் ஏன் தான் நம்மை இப்படி சோதிக்கிறானோ தெரியலை. உன்னோட அண்ணன் கடைசியா எப்போ வந்தான்?"

"மூணு மாசம் முன்னாடி."

"என்ன வேலை செய்யறானாம்?"

"கேட்டேன் சொல்லலை"

" இந்த ஊர் தான் அவனை விரட்டிவிட்டுச்சு. சரி உட்காரு. போகலாம்." என்ற பூபதி தன்னுடைய TVS 50 ஐ கிளப்பினான். மங்களம் உட்கார்ந்ததும் வண்டி கிளம்ப ஆரம்பித்தது.

பூபதி நகராட்சியில் மேஸ்திரியாக வேலை செய்துகொண்டிருந்தான்.கிருஷ்ணாபுரத்தின் சாதிய தீண்டாமை அவனை அவனது குடும்பத்தை சின்னாபின்னமாக்கியிருந்தது.

சின்ன வயதில் பூபதிக்கு சாதியென்றால் என்னவென்றே தெரியாது. மற்றவர்களிடம் அப்பா துண்டை இடுப்பில் கட்டியபடி பேசுவதும் சின்ன பசங்கள் எல்லாம் அப்பாவை பேர் சொல்லி வாடா போடா என்று கூப்பிடுவதும் அவனுக்கு கோபத்தை தந்தன. வேற வழியில்லை. கண்ணு. அவங்க உசந்த சாதி. நாம தாழ்ந்த சாதி. அடங்கித்தான் போகவேண்டும் என்ற அப்பாவின் அறிவுரையும் அவனுக்கு எரிச்சலை உருவாக்கின. அவன் யார் வீட்டிலும் நுழைந்ததில்லை யாரும் அவனை வீட்டின் உள்ளே கூப்பிடமாட்டார்கள். சில தெருக்களில் செருப்பு போட்டு நடக்க முடியாது. பதினைந்து வருடம் வரை பூபதி செருப்பை போட்டதில்லை.

வாடா போடா என்று அப்பாவை அழைக்கும் முதலாளிகள் அதை அப்படியே தங்கள் மகன்களிடம் சொல்லிகொடுத்துவாடா போடா என்று அழைக்கச் சொல்லி "நான் கூப்பிடுறதை பார்த்து அப்படியே கூப்பிட்டு பழகுறான்" என்று சொல்லி சிரிப்பார்கள்.பூபதியின் அப்பா அதை ஏற்றுகொண்டாலும் பூபதியால் அதை ஏற்க முடிந்ததில்லை. அவன் திரும்ப ஏண்டா என்று கேட்டுவிடுவான். அதனால் பூபதி மீது அவர்களுக்கு ஒரு கண்.

இதிலிருந்து விடுபட ஒரே வழி படிப்புதான் என்று முடிவு செய்த பூபதி படிக்க ஆரம்பித்தான். நன்றாக படிக்கும் பூபதியின் படிப்பை கெடுக்கவும் வேலைகள் நடந்தன. உடல்நிலை சரியில்லாத அம்மாவிற்கு பணம் வேண்டுமென்று முதலாளிகளின் வீட்டுவாசல்படியில் நின்றபோது " இவன் படிச்சு என்ன பண்ண போறான்? பணம் தர்றேன் பேசாம பண்ணையத்துக்கு அனுப்பேன்" போன்ற நிபந்தனைகள் விதிக்கபபட்டன. இவற்றையெல்லாம் மீறித்தான் அவனால் படிக்க முடிந்தது. அவனால் எல்லா முயற்சிகளும் செய்தும் பத்தாவது வரை படிக்கத்தான் அவனது குடும்ப சூழல் இடம் கொடுத்தது.

அப்போதுதான் ஊருக்குள் சிவப்பு கொடிகட்ட துவங்கியிருந்த கம்யூனிஸ்ட கட்சி அவனை ஈர்த்தது. கட்சியில் உறுப்பினரானான். ஏராளமான புத்தகங்களை படித்து அறிவை விரித்துகொண்டான்.தோழர்கள் அவனுக்கு பஞ்சாயத்தில் டிராக்டர் ஓட்டும் வேலையை வாங்கி தந்தனர். தன் சமூக மக்கள் அதிகமாக இங்கே வேலையில் இருப்பதை பூபதி பார்த்தான்.ஏன் வேறு எந்த சாதியினரும் சமூகத்தினரும் இந்த வேலைகளை செய்வதில்லை? காலம்காலமாக ஒரே சாதி மட்டும் ஏன் இந்த வேலையை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

மெல்லமெல்ல கேள்விகள் கேட்க ஆரம்பித்து சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ள ஆரம்பித்தான். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக வளர ஆரம்பித்தவன் எல்லா பிரச்சனைகளிலும் தலையிட ஆரம்பித்தான். போராட்டம், மறியல் என்று சுற்ற ஆரம்பித்தான்.

இவனை என்ன செய்து தடுப்பது என்று யோசித்தவர்கள் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.பூபதியின் வாழ்க்கை திசைமாறியது. வந்த மனைவியின் பேச்சை கேட்டு பூபதி பொது வாழ்க்கைக்கு முற்றுபுள்ளிவைத்தான் அவனுக்கு முதலில் பிறந்தவன் அருணாசலம். அவனுக்கு பின்னால் பிறந்தவன் வாசு. கடைசியாக பிறந்தவள் மங்களம்.

அவனது மனைவி சரஸ்வதியின் தம்பி தான் சோமசுந்தரம். சொந்த மச்சினன்.பூபதியைவிட அதிகமாக சாதியால் பாதிக்கப்பட்டவன். ஒரு பிரச்சனையில் குடும்பத்தோடு ஊரைவிட்டே போனவன். அவன் எங்கிருக்கிறான் என்று இன்றுவரை பூபதிக்கு தெரியாது.

குடும்பம் நன்றாக போய்கொண்டிருந்தபோது தான் மூத்தமகன் அருணாசலம் திடிரென்று ஒருநாள் காணாமல் போனான்.அவனை யாரோ காரில் தூக்கி சென்றதாக அதை நேரில் பார்த்த வாசு கூறினான். போலீசில் கம்ளைண்ட் செய்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூத்தமகன் காணாமல்போன அதிர்ச்சியில பூபதியின் மனைவி சரஸ்வதிக்கு சித்தபிரமை ஏற்பட்டுவிட்டது.அண்ணனை கண்முன்னால் இழந்த சோகத்தில் வாசு அதிர்ச்சியில் மூழ்கினான். நள்ளிரவு தூக்கத்தில் திடிரென்று எழுந்து கொண்டு அண்ணன் வேணும் என்று அழ ஆரம்பித்துவிடுவான்.திடிர் திடிரென்று வீட்டைவிட்டு ஓடிவிடும் வாசு இரண்டு மூன்று நாட்கள் கழித்து திரும்ப வீட்டிற்கு வந்துவிடுவான். மனைவியை குணப்படுத்த பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தான் பூபதி. ஆனாலும் அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.

தன் மகன் உளவியலாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தாலும் அதை குணப்படுத்த என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.வாசு எப்படியோ அடித்து பிடித்து காலேஜ் வரை வந்துவிட்டான்.பூபதியை தீண்டிய அதே சாதிய பாகுபாடு அவனையும் தீண்ட தொடங்கியபோது இந்த ஊரே வேண்டாம் என்று ஊரைவிட்டே ஓடிவிட்டான்.அவ்வப்போது அவனது சொந்த சுபாவப்படி வருவான். போவான்.அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் எதுவும் தெரியாது.

மிச்சமிருப்பது மங்களம். அவளால் அதிகம் படிக்க முடியவில்லை. மனநலமற்ற தாயை வைத்து கொண்டு அவளே எல்லா வீட்டுவேலைகளையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவளால் பள்ளிகூடம் போக முடியவில்லை. ஆனால் எழுதப்படிக்க கற்றுகொண்டிருந்தாள்..அவளுக்கு சொந்தக்கார பையனான செல்வத்தையே கல்யாணம் செய்து வைத்துவிட்டான் பூபதி. அவன் டெர்லைட் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தான். சரியான அம்மா கோண்டு.

அவனது அம்மா பார்வதி. பணத்தாசை பிடித்தவள். பூபதியின் வீட்டை எழுதி வாங்குவது அவளது திட்டம்.வாசுவுக்கும் அதில் சம்மதம் தான். ஆனால் காணாமல்போன மூத்தமகன் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் என்பதால் அந்த சொத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. வாசு மாதாமாதம் பார்வதிக்கு பணம் அனுப்பி கொண்டிருந்ததாலேயே அவள் மங்களத்திடம் கருணை காட்டிகொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. மூன்று மாதமாக வாசு பணம் அனுப்பவில்லை. திட்டுவதற்கு மருமகளும் இல்லை.அவள் வாசுவை தேடிக்கொண்டிருந்தாள். மருமகளை திட்ட கூடுதலாக ஒரு காரணம் பார்வதிக்கு இருந்தது. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் பிள்ளை பெறாத மருமகளை வார்த்தை சாட்டையால் விளாசி கொண்டிருந்தாள் அவள். அவளது இம்சை கடவுளுக்கே பொறுக்காமல் மங்களம் கர்ப்பமாகிவிட்டாள். மூன்று மாதத்தில வளைகாப்பு முடிந்து அப்பாவின் வீட்டிற்கே வந்துவிட்டாள் மங்களம்.

தான் கர்ப்பமாக இருப்பதை வாசுவிடம் சொல்ல முயன்ற மங்களத்திற்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைத்தது. அவனது போன் எப்போதும் சுவிட்ச் ஆப் என்றே கூறிக்கொண்டிருந்தது. அவனாகவே அவளை தேடி வந்தால்தான் உண்டு. தன் தாயின் ஆட்டத்தை தட்டி கேக்காததன் கணவன் செல்வத்தின் மீது அவளுக்கு மெலிதான கோபம் உண்டு.

வண்டி ஓட்டிக்கொண்டிருந்த பூபதி "இன்னும் ஒரு ஏழு மாசம் நிம்மதியா இருக்கலாம்" என்றான்.

"அம்மாவை பாத்துக்க நான் வந்துட்டேன்னு சொல்றியாப்பா?"

"இல்லைம்மா. நியாயமா உங்கம்மாதான் உனக்கு எல்லா வேலையும் இப்ப செய்யனும். ஆனா நிலைமையை பாத்தியா? நீதான் உங்கம்மாவை பாத்துக்கனும். நான் உன்னோட மாமியார் வாயை சொன்னேன்"

"நான் இல்லாம எப்படிப்பா அம்மாவை பாத்துக்குற?"

"வீட்டுல வைச்சு பூட்டித்தான்.அதைவிடும்மா. அப்படியே பழகிருச்சு. வாரிசு வரப்போகுது. சந்தோஷமா இருப்போம்.எனக்கு இருக்குறது நீ மட்டும்தான் மா"

அவனுக்கு கண்ணீரால் பாதை மறைத்தது. மேல்துண்டால் துடைத்துகொண்டான்

"ஏம்பா. அழுதியா?"

"இல்லைம்மா. தூசி கண்ல விழுந்துருச்சு. ஆமா நாளைக்கு நீ செக்கப்புக்கு போகனுமா?"

"ஆமாப்பா"

"அந்த டாக்டர் பேரு என்னம்மா?"

"அவரு பேரு டாக்டர் சம்பத்குமார்"

டாக்டர் சம்பத்குமார் மங்களத்தின் கேஸ் பைலை தனியாக எடுத்து வைத்தான்.

"எட்டாவது கேஸ் சிக்கிருச்சு" என்றன அவனது உதடுகள்.

திங்கள், 13 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்!

ஆபரேசன் அஷ்டவக்கிரன்.

அத்தியாயம் 10

டிரைவர் சொன்னதை கேட்டதும் சதாமின் நடுமுதுகில் வேர்த்தது.

"நீ சொல்வது உண்மையா?" என்றான் பதட்டத்துடன்.

" என்னோட கண்ணால பார்த்தேன்.துரை பாண்டியனை கொல்ல வந்த கும்பலிடம் இருந்து இவங்க ரெண்டுபேர் தான் காப்பாத்துனாங்க. இரண்டுபேருமே காக்கி கலர் பேண்ட் போட்டுகிட்டு போலீஸ்னு சொல்லிட்டு இருந்ததை நானே பார்த்தேன்.அதுக்கு பிறகுதான் துரைபாண்டியன் போலீசில் சரணடைந்தான்.அவ்வளவுதான் எனக்கு தெரியும்" என்றான் டிரைவர்.

"அவனுக போட்டோவை எனக்கு வாட்ஸ்அப் பண்ணு" என்ற சதாம் காரில் ஏறிக்கொண்டான்.

வந்துசேர்ந்த இருவரின் போட்டோவையும் தன் ஆட்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்அப் குருப்பில் சுற்றலில் விட்டவன்" காரை எடு" என்றான்.

தம்பி தேடிக்கொண்டிருந்த சரக்கு கிடைத்துவிட்டது. ஆனால் அதை தயாரிப்பவர்கள் மீது அவனுக்கு போதுமான நம்பிக்கை இல்லை. போலீஸ் என்று டிரைவர் சொன்னதும் கொஞ்சம் உஷாராகி விட்டான்.

அவனுக்கு குற்றாலத்தை தெரியும். அவ்வப்போது பவுடர் வாங்க வருகிறவன். கையில் காசு இல்லாவிட்டால் கடனுக்கு சரக்கு வாங்கி போகிறவன் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து போனை எடுக்காமல் பிரசரை ஏற்றுகிறவன். இழுத்தடித்து எப்படியோ காசை கொடுத்து செட்டில செய்துவிடுவான்.அவனை போலீஸ் என்று டிரைவர் சொன்னதை அவனால் நம்பமுடியவில்லை.

குற்றாலத்தின் கூட இருந்தவன் அவ்வளவு நல்லவனாக தோன்றவில்லை.அவன் ஒருவேளை போலீசாக இருந்து குற்றாலத்தை இன்பார்மராக பயன்படுத்துகிறானோ என்றுகூட நினைத்தான் சதாம்.

நமக்கு எதற்கு வம்பு. ஏதாக இருந்தாலும் தம்பியே முடிவெடுக்கட்டும் என்று கடைசியாக நினைத்துகொண்டான்

அவன் தம்பியின் இடத்திற்குள் நுழைந்தபோது ஒருவனை கட்டிவைத்து முகத்தில் குத்திகொண்டிருந்த தம்பி ரத்தம் படிந்த கையை பைப் தண்ணீரில் கழுவிவிட்டு "சதாம். சாம்பிள் கொண்டுவந்துருக்கியா?" என்றான்.

"இதோ" என்ற சதாம் பவுடர் பாக்கெட்டை கொடுத்தான்.

"நம்ம கெமிஸ்டை கூப்பிடுங்கடா" என்றான் தம்பி.

கண்ணாடி அணிந்து பிரெஞ்சுபியர்ஸ் தாடியோடு எங்கிருந்தோ வந்தவன் பவுடர் பாக்கெட்டை வாங்கினான்.

"இதை டெஸ்ட் பண்ணு.. ஆஸ்திரேலியா சரக்கோடு ஓத்து போகுதான்னு பாரு" என்றான தம்பி.

அவன் தலையாட்டிவிட்டு இருட்டில் மறைந்தான்

"சொல்லு சதாம். இவனை எங்கே பிடித்தாய்?"

"எனக்கு தெரிஞ்ச பயதான். குற்றாலம்னு பேரு. அவனாதான் என்னை போன் பண்ணி கூப்பிட்டான்.அவன் கூட இன்னொருத்தன் இருந்தான். அவன்தான் பார்ட்டியாம்"

"அவனுக்கு இது எப்படி கிடைச்சதுன்னு தெரியுமா?"

"தெரியலை. முதல்ல அவன் கொடுத்தது ஓரிஜினலா இல்லையான்னு பார்ப்போம்"

"துரை பாண்டியன் இடத்தை இவன்பில் அப்பண்ணினால் பரவாயில்லை."

"இவன் கொஞ்சம் திமிரா இருக்கான்"

"இவனுக்கு எப்படி அந்த வித்தை தெரிந்தது? இங்கே அது தெரிஞ்ச ஒரே ஆள் அவன்தான்"

"தெரியலை. விசாரிக்கனும்"

உள்ளே வந்த கெமிஸ்ட் "தலைவரே. சரக்கு தரம்.துரையோட அதே ஸ்டேண்டர்டு." என்றான்.

"அப்பா. நிம்மதி" என்றான் தம்பி.

சதாமின் செல்போனில் வாட்ஸ்அப் நோட்டிபிகேசன் சத்தம் தொடாந்து வர ஆரம்பித்தது.

"என்னாச்சு சதாம்? போன்ல இத்தனை நோட்டிபிகேசன்?"

" ஒரு சின்ன பிரச்சனை"

" என்னன்னு சொல்லு"

" இந்த போட்டோவை பாருங்க. இவனுக ரெண்டுபேர் தான் சரக்கை என்னிடம் கொடுத்தது" என்ற சதாம் போனை தம்பியிடம் கொடுத்தான்.

"இதுல யாரு சரக்கு பார்ட்டி?"

சதாம் வாசுவின் படத்தை காட்டினான்.

தம்பி அதை ஜும் செய்து பார்த்தான்.

" இவன் பேரு?"

"வாசு"

" இந்த பேரை எங்கியே கேள்விப்பட்டு இருக்கேன்" என்ற தம்பி வாட்ஸ்அப் குரூப் சாட்டை பார்க்க ஆரம்பித்தான்.

"இவர்கள் இரண்டு பேரையும் நம் ஆளுக ஏற்கனவே பார்த்திருப்பதாக சொல்கிறார்களே?"

"துரை பாண்டியனை காப்பாற்றியது இவனுக தானாம். இவனுக ரெண்டுபேரும் போலீஸ்னு என்னோட டிரைவர் சொல்றான்."

"இவனை போலீஸ்னு நினைக்கலாம். ஆனா கூட இருக்கிற இந்த கோமாளியை எப்படி போலீஸ்னு நம்புறது?"
அவன் சுட்டிகாட்டியது குற்றாலத்தை.

"ஏதாவது அண்டர்கவர் ஆப்ரேசன் ல இருப்பாங்க போல. போலீஸ்ல தான் ஏகப்பட்டடிப்பார்ட்மண்ட் இருக்கே? அதுல ஏதுலயாவது வேலை பார்ப்பான் போல, இவனை எனக்கு கொஞ்ச நாளாத்தான் பழக்கம். அதுவும் பவுடர் வாங்க வரும்போது தான், "

" இரு. இப்ப கன்பார்ம் பண்றேன்" என்ற தம்பி ஜெயிலரை போனில் அழைத்தான்.

"சொல்லுங்க சார்"

"அந்த துரைபாண்டியனோட அசிஸ்டெண்ட். அவன் பேரு என்ன?"

"வாசு. அவன் நேத்தே ரிலீசாகி விட்டான். பேசிப் பார்த்தேன். ஒன்னும் கத்துக்கலைன்னு சொல்லிட்டான்"

"நீ முட்டாள்னு தெரியும். ஆனா இவ்வளவு பெரிய முட்டாள்னு தெரியாது. அவன் இப்ப எங்கிட்டவந்துட்டான். அவன் உங்க டிப்பார்ட்மெண்டுதானே?"

" என்னங்க சொல்றீங்க?"

"பொய் சொல்லாதே.அவன் உங்க ஆளு தானே?"

"அவன் எங்க ஆளுன்னு சொன்னானா?"

"இல்லை."

"அவங்க மாமா மாதிரி போலீசாகனும்னு வேணா சொன்னான்,

"அவங்க மாமா போலீசா?"

"அவரும் போலீசாக ஆசைப்பட்டாருனு சொன்னான் "

"குழப்பாதே! போனை வை" என்று போனை அணைத்தான் தம்பி.

"அந்த துரைபாண்டியன் ஏதோ தெளிவா பிளான் பண்ணியிருக்கான். இந்த வாசு அவனோட ஆள் தான். நமக்கு வாசுன்னு சின்ன மீனை போட்டு பெருசா எதையோ பண்ண நினைக்கிறான். இது ஒரு டிராப்னு நினைக்கிறேன். சதாம். அந்த துரைபாண்டியன் பைத்தியமாக நடித்து கூட நம்மை ஏமாற்றலாம். நீ போய் அவனை உடனே பாரு.அதுக்கு முன்னால அந்த குற்றாலத்தின் நெம்பரை கொடு. நான் பேசணும்"

என்றான் தம்பி.

நெம்பரை கொடுத்துவிட்டு வெளியேறினான் சதாம்.

தம்பிக்கு தெளிவாக புரிந்துவிட்டது.துரை பாண்டியன் தான் இதன் சூத்ரதாரி.வாசுவுக்கு தொழில் கற்றுகொடுத்ததும் அவன் தான். எதற்காக இந்த நாடகம்? அவன் குற்றாலத்தை போனில் அழைத்தான்.

" நான் தம்பி பேசறேன்"

"சொல்லுண்ணே"

"அந்த வாசுகிட்ட போனை கொடு"

"இதோ"

"வாசு"

"சொல்லுங்க"

" நான் தம்பி. என்கிட்ட வேலைக்கு வர்ரியா? துரைபாண்டியனோட இடத்தை நீ எடுத்துக்க. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. தர்ரேன்"

"என்ன தருவீங்க?"

"என்ன வேணும்னு கேளு."

"எனக்கு மாயா வேணும்"

"எனக்கு புரியலை'

" எனக்கு துரைபாண்டியனோட பொண்ணுமாயா வேணும். இதை தவிர வேற டிமாண்ட் இல்லை."

"நேர்ல வா. பேசுவோம்" என்று போனை அணைத்தான் தம்பி.

மாயா தன்னிடம் இருந்து தப்பிபோய் இரண்டு நாட்களாகிவிட்டதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது காணாமல்போன அதே மாயாவை தேடிக்கொண்டு ஒருவன். தம்பிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இப்போது மாயாவுக்கு எங்கே போவது? அவன் வெகுவேகமாக சிந்திக்க ஆரம்பித்தான்.

அதேநேரம் சதாம் அரசு மன நல விடுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்

ரிசப்சனில்" நான் துரைபாண்டியனை பார்க்கனும்" என்றான்.

"நீங்க?"

"அவர் தம்பி."

"அது போலீஸ் கேசுங்க. போலீஸ் பர்மிசன் இல்லாம நாங்க யாரையும் விடக்கூடாது"

"ஓ! அப்படியா?சரி. நான் பர்மிசனுடன் வருகிறேன்" என்று திரும்பி நடந்தான் சதாம்.

"ஷ்" என்ற சத்தத்திற்கு திரும்பினான் அவன்.

ஓரமாக மறைந்து நின்றிருந்த வார்டன் "நான் துரைபாண்டியனிடம் கூட்டிபோனால் என்ன தருவ?" என்றான்.

சதாம் நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவனிடம் நீட்டினான். அவசரமாக அதை பதுக்கியவன்" என் பின்னாடியே வா" என்றான்.

வராந்தாவில் நடந்து சென்றவன் ஒரு கதவை திறந்தான்" உள்ளேதான் இருக்கான். போய் பாரு. பத்து எண்றதுக்குள்ள வந்துரு" என்றான்.

அறையின் நடுநாயகமாக ஒருவன் உட்கார்ந்து சுவரை வெறித்து கொண்டிருந்தான்.

"துரை பாண்டியன்" என்றபடி அவன் முதுகில் கைவைத்தான் சதாம்.

திரும்பியவன் துரைபாண்டியன் இல்லை. வேறோருவன். விகாரமாக சிரித்தவன்" நான் தான் துரைபாண்டியன்" என்று சிரித்தான்

"பத்து எண்ணியாச்சு. வெளியே வா" என்று வார்டன் அவனை வெளியே இழுத்தான்.

துரைபாண்டியன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான் என்று சதாமுக்கு புரிந்தது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்9

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்

அத்தியாயம் 9

வாசு சிறையைவிட்டு வெளியே வந்தபோது அவனுக்காக குற்றாலம் காத்துகொண்டிருந்தான்.

"என்னப்பா !உன்னோட வாத்யார்பூரா பாடமும் ஒழுங்கா சொல்லிகொடுத்தாரா? இல்லை அரியர் ஏதாவது வைச்சிருக்காரா?"

"முக்கியமான மேட்டரை மட்டும் இன்னும் சொல்லி தரலை."

"அதையும் சொல்லிகொடுத்தா அவன் பொண்ணை நீ கண்டுபிடிச்சு காப்பாத்தமாட்டியே? சரியான கொடக்கண்டன் அவன் "

" இருக்கட்டும். நானும் அந்த ஆள் இருக்கிற இடத்துல இருந்தா இதைத்தான் பண்ணுவேன்"

"சரி. ரெண்டுபேரும் பிளான் பண்ணினபடி ஒன்னாவே ஜெயிலுக்கு வந்து தொழில் கத்துகிட்ட. அடுத்தது என்ன பண்ண போற?'

" இரு. அந்தாளு கிளம்பும்போது ஒரு சீட்டை கொடுத்தான் .அதுல என்ன இருக்குன்னு பார்ப்போம்" என்ற வாசுதன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அந்த சுருட்டப்பட்ட சீட்டை பிரித்தான்.

அதில் ஒரு செல்போன் கடை அட்ரசும் அதன் கீழே 2112 என்ற நான்கு எண்களும் எழுதப்பட்டிருந்தன..

"இது என்ன நெம்பர்.? ஏடிஎம் கார்டு பாஸ்வேர்டு மாதிரி இருக்கு" என்றான் குற்றாலம்.

" அந்தாளோட போனை போலீஸ் சீஸ் பண்ணிட்டாங்க. அதே நெம்பரை திரும்ப வாங்கனும்னா துரைபாண்டியனோட அதே ப்ரூப் வேணும். அது அவன் மககிட்டத்தான் இருக்கனும். அவளைத்தான் தம்பி பிடிச்சு வைச்சிருக்கானே?"

"அது அவனுக்கு டீ குடிக்கிற காசுப்பா. இது வேற ஏதாவது நெம்பரா இருக்கலாம்"

"முதல்ல அந்த சீட்டுல இருக்கிற செல்போன் கடைக்கு போகலாம்"

"அதான் சரி. முதல்ல ஒரு ஆட்டோவை பிடிப்போம்" என்ற குற்றாலம் கைதட்டினான்.அதை மதித்து நின்ற ஆட்டோ வில் இருவரும் ஏறிக்கொண்டனர்.

"அடுத்தது என்னப்பா பண்ண போற?"

" அதை அப்புறம் பார்ப்போம். நான் மூணு மாசம் உள்ளே போயிட்டேன். வெளியே என்ன நடந்ததுன்னு சொல்லவே மாட்டேங்குறியே?"

"தலை நீ. நீ இல்லா நாங்க என்ன பண்ணமுடியும்? முன்ன மாதிரி வாழ்க்கை செழிப்பா இல்லை. மூணு மாசமா நாய்படாதபாடு. நம்ம பசங்க ஏதோ கிடைச்சதை வைச்சு வாழ்க்கையை ஓட்டுறோம்.கிருஷ்ணாபுரம்னு ஒரு ஊர்ல கலவரம் பண்ணனுமாம். ஆள் வேணும்னு வந்தாங்க. ரொம்ப தூரம்னு அந்த புராஜக்டை வேணாம்னு சொல்லிட்டோம்"

வாசுவின் புருவங்கள் நிமிர்ந்தன.

"எந்த கிருஷ்ணாபுரம்?" என்றான் பரபரப்புடன்.

"கவலைப்படாதே! நீ நினைப்பது சரிதான். உன்னோட சொந்த ஊர்தான்.அந்த பெர்லைட் கம்பெனில தான் ஏதோ பிரச்சனை பண்ண நினைக்கிறாங்க"

வாசு சிந்தனையில் ஆழ்ந்தான்.அவனையே பார்த்து கொண்டிருந்த குற்றாலம்" என்ன யோசிக்கிற? அந்த ஊரே வேணாம்னுதானே இங்க ஓடிவந்தாய்? ஆனா பாரு இப்ப அந்த ஊர்ல ஒரு பிரச்சனைன்னு சொன்னதும் தானா உன் மனசு பதறுது. அது தான் ஊர் பாசம், "

"உண்மைதான்" என்றான் வாசு.

"சார். நீங்க சொன்ன இடம் வந்துருச்சு" என்றான் ஆட்டோ டிரைவர்.

கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் துரைபாண்டியன் குறிப்பிட்டிருந்த கடையை தேடி நடந்தனர்.

ஒரு சந்தில் யாரும் கவனிக்காத இடத்தில் ஒளிந்திருந்தது அந்த செல்போன் கடை.

இருவரும் கடைக்குள் நுழைந்ததை பார்த்து அவன் எழுந்தான் காதில் இருந்த ஹேட் போனை கழற்றியவன் "ரீ சார்ஜா சார்" என்றான்.

வாசு எதுவும் பேசாமல் பேப்பரை நீட்டினான்.

அதை பார்த்தவன் முகத்தில் பரபரப்பு தொற்றியது.

" ஒரு நிமிசம் இருங்க." என்றவன் கடை ரேக்குக்கு பின்புறமாக சென்றான்.

பத்து நிமிடத்தில் திரும்ப வந்தவன்"இந்தாங்க" என்று ஒரு செல்போனை கொடுத்தான்.

"அவ்வளவுதான் கிளம்புங்க" என்றவன் மறுபடியும் ஹேட் போனை காதில் மாட்டிகொண்டு சாய்ந்தான்.

இருவரும் திரும்ப நடந்தனர்

அவன் கையிலிருந்த செல்போனை வாங்கி ஆன் செய்தான் குற்றாலம்.

" இது ரொம்ப காஸ்ட்லி செல்போன். இதோட செட்டப்பை பார்த்தால் சாட்டிலைட் போன் மாதிரி தெரியுது"

"அதேதான்" என்றான் வாசு.

"இதுல எதை பேசினாலும் டிராக் பண்ண முடியாதே?"

"ஆமா. இதைப் பத்திதுரை ஏற்கனவே சொல்லி இருக்காரு. இப்ப நாம ரூமுக்கு போவோம்" என்றான் வாசு.

அவனது மூளை எப்படி துரைபாண்டியனை நெருங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தது. தானாக போனால் குலம் என்ன கோத்திரம் என்ன என்று விசாரிப்பான். நீ தானே என்னை தேடி வந்தாய் என்று குத்தி காட்டி பேசவும் வாய்ப்பிருக்கிறது. அவனே தன்னை தேடி வரனும். அதற்கு என்ன செய்யலாம்?

அவன் தன்னுடைய பழைய அறைக்குள் நுழைந்ததும் அவனது ஆட்கள் அவனை சூழ்ந்துகொண்டனர்.வாசு திரும்பி குற்றாலத்தை பார்த்தான்.

" நான் தான் போன் பண்ணி நீரிலீசுன்னு சொன்னேன். இவனுக யாரும் இன்னைக்கு தொழிலுக்கு போகலை"

"இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு தானே?" என்றான் ஒருவன்.

" வைச்சிட்டாப் போச்சு" என்றான் குற்றாலம்.

அன்று இரவு மொட்டைமாடியில் கச்சேரி துவங்கியது.

இரவு அனைவரும் தூங்கியபிறகு வாசு குற்றாலத்திடம் பேச ஆரம்பித்தான்.

"குற்றாலம். தம்பி என்னை தேடனும்? அதுக்கு என்ன பண்ணலாம்?"

"அவனும் தான் புது டிரக் டேஸ்டரை தேடிட்டு இருக்கான்"

"நம்மை அவனுக்கு அறிமுகப்படுத்திவைக்க யாராவது வேணும்"

"யாரு வருவா? நம்ம ஹிஸ்டரி ரொம்ப மோசமா இருக்கு. இது வேற புது தொழில். அதுவும் 80 பர்செண்ட்தான் தெரியும்"

"வேற வழி இல்லை. ரிஸ்க் எடுத்துத்தான் ஆகனும். இப்ப என்னோட சரக்கு தான் என்னை தேட வைக்கனும்"

"என்ன பண்ணலாம்னு யோசி. "

"யோசிக்கிறேன்".என்றான் வாசு சிந்தனை வசப்பட்டவனாக. 

மறுநாள் காலையில் சிறையில் கிடைத்த சொற்ப பணத்துடன் ரூமைவிட்டு வெளியேறினான் வாசு.

தனக்குபழக்கமான இடத்தில் கொஞ்சம் பவுடரை வாங்கியவன் ஒரு சைண்டிபிக் கடையில் சில எக்யூப்மெண்டுகளை, கெமிக்கல்களை வாங்கிகொண்டு அறைக்கு திரும்ப வந்தான். டாய்லெட்டுக்குள் நுழைந்து உள்ளே தாழிட்டவன் அதை மினிலேபாக மாற்றினான்.

வெளியே குற்றாலம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தான்.

இவ்வளவு நேரமாக டாய்லெட்டில் என்ன செய்கிறான்? ஒரு வேளை நைட் தின்றசில்லி சிக்கன்காரம் ஒத்துகொள்ளாமல் வயிற்றுபோக்கு ஏற்பட்டுவிட்டதோ என்றுகூட அவன் நினைத்தான்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவன் தரமுயர்த்தப்பட்ட சரக்கோடு வெளியே வந்தான்.

"இது 80 பர்செண்ட் தர முயற்த்தப்பட்ட சரக்கு. இதை தம்பி கண்ணுக்கு கொண்டு போகனும்"

"கவலைய விடு.சதாம்னு ஒருத்தன் தம்பி கேங்ல எனக்கு பழக்கம்.அவன்கிட்ட முதல்ல போவோம்"

"இப்பவே போன் பண்ணு"

" இரு கூப்பிடுறேன்" என்ற குற்றாலம் போன் போட்டான்

"யார் ரா?" என்றது எதிர்முனை.

"அண்ணே! நான் குற்றாலம் பேசறேன்"

"சொல்றா சப்பை. என்ன மேட்டரு? பணம்னா போனை வைச்சிரு. உன்னை நம்பி பத்து காசு தரமாட்டேன்"

"தம்பியண்ணன் ஏதோ பவுடர் தேடுறதா கேள்விப்பட்டேன்"

"அதுக்கு என்ன இப்ப?"

" ஒரு பார்ட்டி கைல இருக்கு. பாத்தா பவுடர் அதே மாதிரி இருக்கு"

"அதை முதல்ல பாத்துருக்கியாடா நீ? விளையாட்டு பண்ணாதே"

"நிஜமா ண்ணே. நீ முதல்ல சாம்பிள் சரக்கை பாரு. அப்புறம் பேசு."

"சரி.எங்கே வரனும்"

"கிளப்புக்கு."

"அரைமணி நேரத்துல அங்கே இருப்பேன்" என்று போனை வைத்தான் சதாம்.

"போலாம்பா, "என்றான் குற்றாலம்.

கிளப்.

டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தனர் மூவரும்.

" யாரு இவன்?" என்றான் சதாம் வாசுவை காட்டி.

"இவர் தான் தயாரிப்பு"

"மாசம் நூறு கிலோ வேணும் தரமுடியுமா?"

"முதல்ல சரக்கை பாருண்ணே"

சதாம் சாம்பிள் பாக்கெட்டை பிரித்து ஒரு சிட்டிகையை எடுத்து மூக்கில் வைத்தான் அவனுக்கு எந்தவித்தியாசமும் தெரியவில்லை.

"அதேமாதிரிதான் இருக்கு. ஆனா சில டெஸ்டுக்கு பின்னாடிதான் கன்பார்ம் பண்ணமுடியும். இதுக்கு மட்டும் காசு வாங்கிக்க. தம்பிகிட்டபேசிட்டு கூப்பிடுறேன்"

"சரிண்ணே "

" இதுக்கு எவ்வளவுன்னு சொல்லு?"

"நீ சொல்லுப்பா." என்றான் குற்றாலம் வாசுவை பார்த்து.

" ஒரு லட்சம்" என்றான் வாசு.

"இந்தா." என்று இரண்டாயிரம் ரூபாய் கட்டை டேபிளில் வைத்தான் சதாம்.

வாசு அதை எடுத்துகொண்டான்.

"சரி. கிளம்பு. நானே கூப்பிடுறேன்" என்றான் சதாம்.

இருவரும் கிளம்பிய பின்பு யாருக்கோ போன் செய்த சதாம்" துரைபாண்டியன் மாதிரியே இன்னொருத்தன் வந்துருக்கான்.அவன் கொடுத்த சாம்பிளை டெஸ்ட்பண்ணிட்டு பேசிக்கலாம்" என்று போனை அணைத்தான்.

அவன் தன்னுடைய காரை நெருங்கிய போது டிரைவர் பதட்டத்துடன் "நீங்க வரமாட்டிங்கன்னு நினைச்சேன்" என்றான்

சதாம் புரியாமல் ஏன் என்றான்.

"இப்ப ரெண்டு போலீஸ்காரர்கள் போனதை பார்த்தீர்களா?"

"போலீசா? யாரு?"

"கேப்பீங்கன்னு போட்டோ எடுத்து வைச்சிருக்கேன். பாருங்க" என்ற டிரைவர் போட்டோவை காட்டினான் அதில் வாசுவும் குற்றாலமும் இருந்தனர்

"இவனுக போலீசா?" என்றான் சதாம் அதிர்ச்சியுடன்.

"துரை பாண்டியனை காப்பாத்தி ஜெயில்ல போட்ட தே இவனுக தான் .இதுல ஒருத்தன் இன்ஸ்பெக்டர். இன்னொருத்தன் சப் இன்ஸ்பெக்டர்.எப்பவும் மப்டில தான் இருப்பாங்க" என்றான் டிரைவர்.

சதாமின் முதுகில் வேர்வை ஊறத்தொடங்கியது

#தொடரும்

வியாழன், 9 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்8

ஆப்ரேசன்அஷ்டவக்கிரன்

அத்தியாயம் 8

"வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார்.
மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன்
சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம்
அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல்
மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த
மகரிஷியின் அந்த விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான்.
இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.

உன்னோட ராஜ வாழ்வும்,
பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.

ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.
தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.

பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.
முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.

எந்த நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க
இந்த வாழ்க்கை நிலையில்லாதது என்றார்."

துரைபாண்டியன் கைதிகளை உயரத்தில் இருந்து கண்காணிக்கும் வாட்சர் டவரில் இருந்து விழுவதை முதலில் பார்த்தது வாசு தான் . அதற்கு முந்தைய தினம் இரவு தான் தன்னுடையஅண்ணன் அருணாசலத்தை பற்றி கனவு கண்டு விழித்து கொண்டு விட்டிருந்தான் அவன்.

அப்போது இருவரிடையே நடந்த உரையாடலின்போது தான் தம்பியிடமிருந்து தப்பிக்க நான்காவதாக ஒருவழியை கூறியிருந்தான் அவன். தம்பியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி பழைய நினைவுகளை இழந்ததுபோல் நடிப்பது இல்லை சித்த சுவாதீனமானவனைப்போல் நடிப்பது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தாலும் துரைபாண்டியன் மீதான தம்பியின் பிடி தளர்ந்துவிடும். துரையின் மகளை பிடித்து வைத்து மிரட்ட வேண்டிய தேவையும் அவனுக்கு இல்லை. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் திட்டத்தை வாசு அவனிடம் கூறியிருந்தான்.

தன்னுடைய திட்டத்தைத்தான் துரை இப்போது நிறைவேற்றிவிட்டான் போலிருக்கிறது என்று வாசு நினைத்தான். ஆனால் அவனது தலையிலிருந்து உண்மையாகவே ரத்தம் வெளியேறியதை பார்த்தபோது அவனது நினைப்பு தவறு என்று புரிந்தது.தம்பியின் எதிரிகள் இருந்த சிறை அறையில் சந்தோஷ கொண்டாட்டங்கள் தொடங்கிய போது தான் தன்னை மீறி எதிரிகள் துரையை தொட்டுவிட்டார்கள் என்பது அவனுக்கு புரிந்தது. அதில் ஒருவன்" நீ இருக்கும்போதே சம்பவம் பண்ணிட்டோம். பாத்தியா? "என்று அடிக்குரலில் அவனை கேலி செய்தபோது வாசுவிடம் கையலாகாத கோபம் ஒன்று பிறந்தது. நாளை காலை அவனுக்கு விடுதலை. இப்போது அடி தடியில் ஈடுபட்டு அதை கெடுத்து கொள்ள அவன் விரும்பவில்லை. எனவே மவுனமாக இருந்தான்.

படுகாயமடைந்த துரை ஜெயில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.அவனுக்கு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெயிலர் இந்த சம்பவத்தை தம்பியிடம் தெரிவித்த போது அவன் குமுறி கொந்தளித்துவிட்டான்

"என்னதான் பண்றீங்க எல்லாரும்? இவ்வளவு பணம் வாங்கிட்டு அவனை சம்பவம் செய்யவிட்ருக்கீங்க? அவன் எனக்கு பொன்முட்டையிடும் வாத்து. அவனை எப்படியாவது காப்பாத்துங்க"

"உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை. ஆனா தலையில் பலமா அடிபட்டதுல?"

"பழச மறந்துட்டானா?"

"இல்லைங்க. பைத்தியமாயிட்டான்"

"என்னய்யா சொல்ற?' என்கிட்ட துப்பாக்கி இருந்தா முதல்ல உன்னைத்தான் சுடுவேன்"

"சுடுங்க. உங்ககிட்ட வாங்குன பணத்துக்கு நாலுதடவை சாகலாம்"

"சுட மாட்டேன்னு நினைச்சு பேசுற போல. அடுத்த மாசம் 5 ம் தேதிக்குள்ள ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு அனுப்பியாகனும். இவன் வேற இப்படி பண்ணிட்டான். இவனை மறுபடியும் ஜெயிலுக்குத்தானே கொண்டு போவீங்க?"

"இல்லைங்க. அது சரிவராது. அவனோட டிரீட்மெண்ட் முடிஞ்சதும் மனநல விடுதிக்குத்தான் அனுப்பனும். நார்மலான ஆட்களோட அவனை வச்சிருக் கமுடியாது. அது தான் புரொசிஜர்.,"

"ஓ! இது வேறயா? அவனுக்கு அசிஸ்டெண்டா ஒருத்தன் இருந்தானே? அவன் பேரு கூட?"

"வாசு"

"ஆங். அவன் தான்.அவனால இதை செய்ய முடியுமான்னு கேட்டு பாரு."

"அவன் வெறும் எடுபிடிங்க. அந்த துரை தன்னோட தொழில் ரகசியங்களை சொல்ல சான் சே இல்லை."

' கல்லை வீசு.மாங்காயா கல்லான்னு பார்ப்போம். உட்கார்நத இடத்துலேயே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லாதே"

"சரிங்க. நாளைக்கு அவனுக்கு விடுதலை. வெளியே போகும்போது இதைப்பற்றி கேட்கிறேன்"

"கேட்டுட்டு கூப்பிடு" என்ற தம்பி போனை அணைத்தான்.

மறுநாள் ஜெயிலர் அறையில் கையெழுத்து போட்டுவிட்டு கைதிகள் உடையை துறந்து தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டிருந்தான் வாசு.

துணி மாற்றிகொண்டவன் மீண்டும் ஜெயிலர் அறைக்குள் நுழைந்தான்.

"இனிமேலாவது ஒழுங்கா இரு" என்றார் ஜெயிலர் மனதிற்குள் எதையோ யோசித்தபடி.

"சார். ஒரு விண்ணப்பம். நான் துரைபாண்டியனை ஒரு தடவை பாக்கனும். அதுக்கு நீங்க அனுமதி தரனும்

"அவன் சுயநினைவில் இல்லையேப்பா. அவனை பாத்து என்ன பண்ண போற?"

"தொழில் கத்து கொடுத்த குரு சார். கடைசியா ஒரு தடவை பாத்துட்டு போயிர்றேனே?"

"அப்ப முழுசா தொழில் கத்துகிட்டியா?"

"இல்லை.சார். எடுபிடிதான் சார் நானு. கோடிகளில் கொட்டும் விசயத்தை யாராவது சொல்லிதருவாங்களா சார்"

"அப்ப உனக்கு ஒன்னும் தெரியாது"

"சத்தியமா தெரியாது சார். எனக்கு வித்தை தெரிஞ்சா நேரா தம்பி கிட்ட போயிடமாட்டேன்?"

"அதுவும் சரிதான்."

"நானும் ஒழுங்கா படிச்சிருந்தா என்னோட மாமா மாதிரி போலீசாகி இருப்பேன்"

"உங்க மாமா போலீசா?"

"இல்லை சார். அவரும் போலீசாகனும்னு ஆசைப்பட்டாரு"

" பட வா' ஓடிரு. யோவ் செண்ட்ரி இவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் அந்தலூசைகாட்டுய்யா"

"ரொம்ப தேங்க்ஸ் சார்."

வாசு செண்ட்ரியோடு ஜெயில் ஹாஸ்பிடல் நோக்கி நடந்தான்.

வார்டுக்கு வெளியே நின்றுகொண்ட செண்ட்ரி" நீயே உள்ளே போய் அவனை பாரு" என்றார்.

"நீங்க கூட வரலை?"என்றான் வாசு.

"நான் உள்ளே வந்தா துப்பாக்கிய பிடுங்கிக்குவான் யா. அவனிடம் திரும்ப வாங்க முடியாது. ரெண்டுபேரும் ராணுவ ரகசியமா பேசபோறீங்க? நீ ஒரு மொள்ளமாரி. அவனோரு முடிச்ச விக்கி பாத்துட்டு சீக்கிரம் வந்துசேரு" என்றான் செண்ட்ரி.

வாசு உள்ளே நுழைந்தபோது துரைபாண்டியன் ஆடிகொண்டிருந்தான்.அவனது கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு படுக்கை காலோடு இணைக்கப்பட்டிருந்தது.

வாசுவுக்கு அவனது நிலைமையை பார்த்து பரிதாபமாக இருந்தது.

"வாத்யாரே" என்றான் மெல்லிய குரலில்.

பாபாமுத்திரையோடு ஆடிக்கொண்டிருந்ததுரை ஆட்டத்தை நிறுத்தினான்.

"இதெல்லாமஉண்மைன்னு நினைச்சியா?" என்றான் கண்ணடித்தபடி.

"நல்லாவேசம் கட்ற வாத்தியாரே!" என்றான் வியப்புடன் வாசு.

"அவர்கள் என்னை கொல்ல வந்தது உண்மை. மேலிருந்து தள்ளிவிட்டதும் உண்மை. காயமானதும் உண்மை. இந்த நடிப்பு மட்டும் பொய். நீ சொன்னதை நான் சரியான இடத்துல யூஸ் பண்ணிட்டேன். டாக்டர்தான் குழப்பத்துல இருக்கான். எப்படியோ என்னை இங்கிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள்.என் உயிரை நான் காப்பாற்றிகொண்டுவிட்டேன். தாங்க்ஸ் வாசு"

"கடைசியா உன்னை ஒரு தடவை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். உன்னை இப்படி ஒரு நிலமைல பாக்க சந்தோஷமா இருக்கு"

"என் மகளை எப்படியாவது காப்பாத்து வாசு. உன்னை நம்பித்தான் நான் இருக்கேன்"

"கவலைப்படாதே வாத்யாரே. சொன்ன சொல்லை காப்பாத்துவான் இந்த வாசு. உன் பொண்ணோட உன்னை வந்து பாக்குறேன். ஆனா உன் பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாதே? நீயும் போட்டோ காட்டலை.நானும் பாக்கலை. பின்ன எப்படி அடையாளம் கண்டுபிடிக்குறது?"

"சிம்பிள். தம்பியை பிடி. அவனிடம் இருப்பதுதான் என் மகள். அவனை நெருங்க ஒரே வழி நான் கற்றுகொடுத்த வித்தையை நீ அவனிடம் காட்டுவதுதான்"

"எனக்கு முழுசா தெரியாதே?"

"இப்போதைக்கு அவன் 80 பர்செண்ட்டே போதும்னுதான் நினைப்பான்.இந்தா இதை வெளியே போய் படி" என்ற துரை ஒரு உருட்டப்பட்ட சீட்டை அவன் கைகளில் திணித்தான்.

அதை வாங்கிகொண்டு"டிரை பண்றேன் வாத்யாரே" என்ற வாசு அங்கிருந்து செண்ட்ரியோடு வெளியேறினான்.

சன்னல் வழியாக அவன் போவதை பார்த்து கொண்டிருந்த துரைபாண்டியன தனக்குள் சிரித்துகொண்டான். "டெல்லி அப்பளம்" என்று முணுமுணுத்தான் துரை.

உண்மையில் தனக்கு தெரிந்த நூறு சதவீத தொழில் நுணுக்கத்தை அவன் வாசுவிற்கு கற்றுகொடுத்துவிட்டான். ஆனால் வேண்டுமென்றே எண்பது சதவீதம் மட்டுமே கற்றுகொடுத்ததாக வாசுவிடம் பொய் சொல்லிகொண்டிருந்தான். அதற்கு அவன் டெல்லி அப்பள டெக்னிக் என்று பெயர் வைத்திருந்தான்.

டெல்லியில் நடந்த ஒரு பொருட்காட்சியில்தான் அந்த அப்பளம் முதலில் அறிமுகமாகி சக்கைபோடு போட்டது. அதை எப்படி தயாரிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அதை தெரிந்துகொள்ள விரும்பிய ஒருவன் அப்பளமாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக வேலைக்கு சேர்ந்தான்

அப்பளமாஸ்டர் ஐந்து டப்பாக்களில் ஐந்துமாவுகளை கொட்டிவைத்து குறிப்பிட்ட விகிதங்களில் அந்த மாவை கலந்து அப்பளத்தை உருவாக்குவதை அவன் பார்த்தான். அந்த ஐந்துவகை மாவுகள் என்னவென்று அவனுக்கு தெரியவில்லை. கலக்கும் விகிதமும் தெரியவில்லை. முதலில் மாவை கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன் மாஸ்டர் வாங்கும் மளிகை கடையில் விசாரித்தபோதுதான் தெரிந்தது மாஸ்டர் ஒரே மாவை வாங்கித்தான் ஐந்து டப்பாக்களில் கொட்டி தன்னை திணற அடித்திருக்கிறார் என்று. புத்திசாலிகள் ரகசியத்தை வெளியே சொல்வதில்லை. காரணம் கற்றுகொண்டு தனக்கு எதிராக கடைபோட்டுவிடுவானோ என்ற பயம். அதே பயம்துரைக்கும் இருந்தது. அதனால்தான் அவன் நீ இன்னும் முக்கியமான விசயத்தை கற்றுகொள்ளவேயில்லை என்று பயமுறுத்தி கொண்டிருந்தான்.

தான் ஒரு டிரக் டேஸ்டராக மாறியதே தெரியாமல் சிறையிலிருந்து வெளியேறி கொண்டிருந்தான் வாசு. அவனுக்காக வெளியே குற்றாலம் காத்துகொண்டிருந்தான். அந்த சிறையில் இரண்டாவது டிரக் டேஸ்டர் உருவாகிவிட்டிருந்தான்

புதன், 8 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்7

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் !

அத்தியாயம்7

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

“ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று
சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.

ஏன் சிரித்தார்கள் ? என் குறைவான ஞானத்தைக் கண்டு
சிரித்தார்களா? நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு
சிரித்தார்களா? இல்லை.

இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப்
பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,
என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை,
என் அறிவை மதிப்பிட்டார்கள்.

என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள்
தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத்
தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான்
ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.

இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள்.
அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.

பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில்
தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை ?அதனால் தான்
இவர்களை வெளியே போகச் சொன்னேன்” என்றார்
அஷ்டவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து
சபையை விட்டு வெளியேறினார்கள்.

முதல்முறையாக தன் உயிரை காப்பாற்றிய வாசுவை நன்றியுடன் பார்த்தான் துரைபாண்டியன்.

"நீ எவ்ளோ பெரிய ஆள். இப்படி நடுரோட்ல உன்னை போட பாக்குற அளவுக்கு என்ன செஞ்ச?" என்றான் வாசு.

"எத்தினி தபா உன்கிட்ட பவுடர் கேட்டு நடந்துருப்போம் .ஒரு தடவையாவது கொடுத்திருப்பியா? இன்னைக்கு பாரு. நாங்கதான் உன்னை காப்பாத்தி இருக்கோம். இந்த நன்றிக்காகவாவது கொஞ்சம் பவுடர் தரலாமே? நீ ஒன்னும் கடனுக்கு தர வேணாம். டேபிள் கேஷ்.என்ன சொல்ற?" என்றான் குற்றாலம்.

வாசுவையே பார்த்து கொண்டிருந்ததுரை பாண்டியன்" நீ யாருகிட்ட வேலை செய்யற?" என்றான்.

"நான் யாருகிட்டயும் வேலை செய்யலை. எங்க பசங்களோட தனியா வேலை செய்யறேன் இவனும் என்னோட பார்ட்னர்தான்" என்றான் வாசு.

"சரி. என்ன படிச்சிருக்க?"

"பி எஸ்சி கெமிஸ்ட்ரி. எதுக்கு கேக்குற? ஏதாவது வேலை தரப்போறீயா?" என்றான் வாசு.

"நாம ஒரு டீ சாப்பிட்டுகிட்டே பேசலாமா?"

"சரி. ஆனா பில் நீ தான் தரணும்." என்றான் குற்றாலம்.

"ஏன் காசு இல்லையா?"

"என்னை கேவலப்படுத்தாதே. ஜீ பேல பணம் அனுப்புற லிமிட்தாண்டியாச்சு. இனி பணம் அனுப்பனும்னா நாளைக்குத்தான். அதனால சொன்னேன்"

"அவன் அப்படித்தான். வா போலாம்"

அருகே இருந்த பேக்கரியில் நுழைந்த வாசு "மூணு டீ.சுகர் கம்மி. அதிகம்னு ஏதாவது சொல்லனுமா?" என்றான் துரையை பார்த்து.

"வேணாம். இன்னும் அந்த நிலைமைக்கு இன்னும் உடல் வரவில்லை"

காலி சேரில் மூவரும் அமர்ந்தனர். வந்துசேர்ந்த டீயை உறிஞ்சிய துரை" எங்கிட்ட வேலை செய்யறியா?" என்றான்.

"எதுக்கு? தம்பி எங்களை தூக்கி போட்டு மிதிக்கவா? நீயே அவங்கிட்ட தானே வேலை செய்யற?"

"இல்லை. இப்ப வேலையைவிட்டுட்டேன்"

"அப்ப நீயும் எங்கள மாதிரி அன்னக்காவடின்னு சொல்லு. இப்பகுடிக்கிற டீக்காவது காசு வைச்சிருக்கியா?" என்றான் குற்றாலம்.

துரைசெல்போனை நோண்டிபேங்க் பேலன்ஸை காட்டினான். பேலன்ஸ் 5 கோடி என்றது.

"ஓ! பணக்கார அன்ன காவடியா? எப்ப வேலைக்கு சேரப்போறேன்னு கேக்காத அல்ரெடி நாங்க வேலைக்கு சேர்ந்தாச்சு. என்ன செய்யனும்னு சொல்லுங்க முதலாளி. அந்த பேங்க் பேலன்ஸ் குறையுற வரை இப்படித்தான் கூப்பிட போறேன்." என்றான குற்றாலம்.

"ஷ்" என்று அவனை அடக்கிய வாசு"தம்பிக்கு எதிரா தனியா கடை போடப்போறியா?" என்றான்.

" இல்லை. அப்படி செஞ்சிருவனோங்கிற பயத்துலதான் என் மகளை கடத்தி வைச்சிருக்கான்.அவன் சொல்றதை செய்யலைன்னா என் மகளை கொன்றுவான்"

"இதுல நான் என்ன செய்யனும்?"

" என் மகளை அவங்கிட்டருந்து காப்பாத்தனும்?"

"இந்தாளு நம்ம கதையை முடிக்க பார்க்கிறான். ஒரு டீ வாங்கி கொடுத்ததுக்காகவெல்லாம் உயிரைவிட முடியாது. உன்னோட பேலன்ஸை அப்படியே வைச்சுக்க" என்றான் குற்றாலம்.

" நான் இந்த டீலுக்கு ஓத்துக்கிறேன்.எனக்கு உன்னோட பணம் வேணாம்"

"வேறு என்ன வேணும்?" என்றான் துரை குழப்பத்துடன்.

"நானும் உன்னை மாதிரி ஆகனும்.ஐ மீன் டிரக் டேஸ்டர்"

துரை சிரித்தான்.

"நீ புத்திசாலி. மீன் வேண்டாம். மீன்பிடிக்க கற்றுகொடுன்னு கேக்குற. உன்னோட காக்கி பேண்டை வைச்சு போலீஸ்னு நீ அவர்களை நம்ப வைச்ச போதே நீ சாதாரண ஆள் இல்லை. சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி கொள்கிறவன் என்று யூகித்தேன். அதை நிருபித்துவிட்டாய்..நீ கெமிஸ்ட்ரி படிச்சிருக்க. என்னோட தொழிலை ஈசியாகத்துக்குவ. எனக்கு தகுந்த சிஷ்யன் தான் நீ. நான் உனக்கு 80 பர்செண்ட்தான கத்து கொடுப்பேன்."

"மீதி?"

"என்னோட மகள் என்னிடம் வந்தபிறகு "

"சரிப்பா. இவன் வேலை கத்துகிட்டு உம்பொண்ணை மீட்கலைன்னா?" என்றான் குத்தாலம்.

" நான் எதுவும் பண்ணமாட்டேன். ஆனா தம்பி இவனை கொல்லுவான்"

"என்னப்பா குழப்புற? உனக்கு பதிலா இவன் கிடைச்சிட்டான்னு உன்னைவிட்டுவிடுவான் இல்லையா?"

"அதனால்தான் இவனுக்குநூறு பர்செண்ட் சொல்லி தராமல் 80 பர்செண்ட் சொல்லிதருகிறேன்னு சொன்னேன்"

"நீ பெரிய விடாக்கொண்டன்யா"

"எனக்கு எங்க வைச்சு சொல்லி தரப்போற?"

"ஜெயில்ல "

"என்னப்பா சொல்ற?"

"உண்மையத்தான் சொல்றேன்"

" பாட்சா ரஜினி மாதிரியே பேசுற. எங்களுக்குத்தான் புரியமாட்டேங்குது"

"பாரு வாசு. ஆஸ்திரேலியாவுல என்னோட சரக்குக்கு செம டிமாண்ட். அமவுண்டும் அதிகம். மாசம் நூறு கிலோ அங்கே தரமா அனுப்புறான் தம்பி. நான் அவனைவிட்டு போனா அந்த வியாபாரமும் அவனைவிட்டு போயிரும். எனக்கு அவனிடமிருந்து தப்பிக்க இரண்டு முணுவழி தான் இருக்கு.அதுல ஒன்னு செத்து போறது.இன்னொன்னு எங்கியாவது ஓடிப்போய் தலைமறைவாவது.இன்னொன்னு என்னை போல் இன்னொருவனை தயார் செய்து இறக்குவது. நான் மூணாவதை தேர்ந்தெடுத்தேன் அது தான் நீ"

" இன்னொரு வழி இருக்கு.அதை நீ மறந்துட்ட வாத்யாரே" என்றான் வாசு.

" என்ன அது?"

"தொழில் கத்துகிட்ட பின்னாடி சொல்றேன்" என்றான் வாசு.

"அடுத்ததா நீங்க ரெண்டுபேரும் என்ன பண்ண போறீங்க?" என்றான் குற்றாலம்.

"சண்டை போடப்போறோம்" என்றான் துரை.

"எதுக்கு சண்டை?" என்றான் குற்றாலம்.

"டீ குடிச்சதுக்கு யார் காசு தருவதுன்னு எங்களுக்குள் இப்ப சண்டை வரப்போகுது. அப்பத்தான் போலீஸ் வரும். எங்களை கைது பண்ணும். என் வீட்டில் போதை பொருள் இருந்ததால் எனக்கு சீக்கிரம் ஜாமீன் கிடைக்காது. ஆனா அடிதடி சண்டையில் வாசுவுக்கு இரண்டு அல்லது மூன்று மாத தண்டனை கிடைக்கும். ரெண்டுபேரும் ஒரே ஜெயில்ல தான் இருப்போம். அங்கே கண்டிப்பாக தம்பி சரக்குக்காக வருவான். ஜெயில்ல எல்லோரையும் விலைக்கு வாங்க அவனால் முடியும். என்னோட அசிஸ்டெண்டாக உன்னை வைத்து கொண்டு எல்லாவற்றையும் சொல்லிகொடுத்துவிடுவேன். இதுல குற்றாலத்துக்குரோலே இல்லை"

"அப்ப நான் கிளம்புறேன். டீக்கு காசு இல்லைன்னு ஜெயிலுக்கு போனென்னு தெரிஞ்சா எங்கம்மாவிளக்கு மாத்துலயே அடிக்கும். ரொம்ப கேவலமா இருக்கு.நான் போனவாட்டி அடிச்சுக்குங்க" என்ற குற்றாலம் எழுந்து நடந்தான்.

கல்லாவில் இருந்தவன்" சார். டீக்கு காசு" என்றான்.

"இதென்ன நெய் பிஸ்கட்டா? இதுல ஒன்னை எடுத்துக்கிறேன். பில்லுல சேர்த்துக்கோ. மொத்த பில்லும் அவங்க தருவாங்க.தருவீங்கதானேப்பா"

துரை தலையாட்டினான்.

"மொத்தமா செட்டிலாயிரும் சந்தோசமா? யாராவது கேட்டா எனக்கும் அவனுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிரு. வரட்டுமா" என்ற குற்றாலம் வேகமாக வெளியேறினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் துரையும், வாசுவும் டீ காசு கொடுக்க போட்ட சண்டையில் கடை இரண்டானது. "யாராவது ஒருத்தராவது பில் கொடுங்க" என்று கதறிய கடைகாரனின் அலறல் காற்றில் கரைந்தது.

கடைசியாக வழக்கம்போல் வந்துசேர்ந்த போலீஸ் ஜீப் இருவரையும் அள்ளி சென்றது. கோர்ட்டில் 6 ஆண்டு தண்டனை துரைக்கு. மூன்று மாத சிறை வாசுவுக்கு.

துரை எதிர்பார்த்ததுபோலவே தம்பிதுரையை பார்க்க சிறைக்கு வந்துவிட்டான்.

"என்னைவிட்டு போக நினைச்சா இதுதான் கதி. இங்க எல்லாரையும் விலைக்கு வாங்கிட்டேன்.அந்த ஆஸ்திரேலியா சரக்குமட்டும் ரெடி பண்ணி குடு.இல்லைன்னா உன்னோட பொண்ணு கதை முடிஞ்சிரும்."

" எனக்கு ஒரு லேப் வேணும்"

" ஏற்பாடு பண்றேன். என்ன வேணுமோ கேளு. தருவாங்க. இங்கே வருகிற சரக்கைதரமுயர்த்தி கொடு. இனி நீ ராஜா மாதிரி இருக்கலாம்."

"நான் என் பொண்ணை பார்க்கனும்"

"அது முடியாது. போன்ல பேசு.மூணு மாசம் ஆகட்டும் கூட்டிட்டு வர்றேன்"

துரைக்கு உள்ளே கேட்டதெல்லாம் கிடைத்தது. வாசு அவனது அசிஸ்டெண்டானான். துரையிடமிருந்து எல்லா வித்தைகளையும் கற்றுகொள்ள ஆரம்பித்தான் வாசு.

அவ்வப்போது இரவில் காணாமல்போனதன் அண்ணன் அருணாசலத்தை எண்ணி பாதி தூக்கத்தில் எழுந்து கொள்வது அவனது வாடிக்கையாக இருந்தது. மூன்று மாதம் விரைவாக ஓடி மறைந்தது

"நான் நாளைக்கு ரிலீசாயிருவேன்" என்றான் வாசு.

"நீ போயிட்டா என்னை தம்பியின் எதிரிகள் கொன்றுவிடுவார்கள். அவர்களிடமிருந்து ஏற்கனவே ஒரு முறை நீ என்னை காப்பாற்றி இருக்கிறாய். இனி காப்பாற்ற யாருமில்லை என்பதால் என் கதையை முடித்துவிடுவார்கள்.நான் சாவை பற்றி கவலைப்படவில்லை. என் மகளை தனியாக விட்டுட்டு சாகிறேனே என்று தான் கவலைப்படுகிறேன்"

"உன் உயிரை யாரும் எடுக்க முடியாது வாத்யாரே.  நான் சொல்ற மாதிரி செய். நான் உன்னை காப்பாத்துறேன்.அன்னைக்கு டீ கடைல நான் சொன்ன நாலாவது விசயம் இது தான்" என்ற வாசு அவன் காதில் கிசுகிசுத்தான்.

இப்படி ஒருவழி இருப்பதைதான் ஏன் யோசிக்கவில்லை என்று திகைத்தான் துரைபாண்டியன்.

வாசு ரிலீசான மறுநாள் வாட்சர் டவரிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு கிடந்தான் துரைபாண்டியன்!பகலில் எங்கே வேண்டுமானாலும் நடமாடலாம் என்று அவனுக்கு தரப்பட்ட சலுகையை அவன் பயன்படுத்தி கொண்டு விட்டிருந்தான்.

#தொடரும்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன் 5

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்!

அத்தியாயம் 5

""ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது
அவருக்கு ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல்
கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு துன்பப்பட்டார்.

அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.
நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு “நாராயணா” என்று அலறினார். கண் விழித்தார்.

கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.
சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர்
இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில்
பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.

பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன்
இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.

“நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது
போல் கனவு கண்டேனா?

அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது
போல் கனவு காண்கிறேனா?” என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும்
பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக்
கொண்டே இருந்தது.

“நான் பிச்சைக்காரனாஅல்லது மன்னனா” என்று
அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து
வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து
பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர்.
யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.!"

அவதார் பாபாவிடம் தன்னுடைய சிறிய வயது நினைவாக எஞ்சி இருந்தது அந்த ஆலமரமும் சுமைதாங்கி கல்லும்தான்.அதை இந்த டாக்குமெண்டரியில் பார்த்தபோது அவனது தேடல்முடிவுக்கு வந்ததுபோல் உணர்ந்தான்.

அதேநேரம் அவன் மனதிற்குள் இந்த ஆலமரம் இத்தனை வருடங்களாக எந்த சேதமும் இல்லாமல் அதே இடத்தில் எப்படி இருக்கிறது? சாலை விரிவாக்கம் என்ற பெயரிலோ வேறு ஏதாவது காரணத்திற்காகவோ இன்னமும் அந்த மரம் வெட்டப்படாமல் இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம்தான் என்று நினைத்தான்.அவன் கேள்விக்கு பதில் சொல்வதுபோல் தொகுப்பாளன் அந்த ஆலமரத்திற்கு முன்பாக நின்று "நீங்க பாக்கும் இந்த ஆலமரத்தின் வயது நூறுக்கு மேல். இந்த ஆலமரம்தான் கிருஷ்ணாபுரத்தின் தொன்மையான பழைய அடையாளம். இதை இப்போது தோட்டகலை துறை பாதுகாத்து வருகிறது. ஸ்டெர்லைட்டை சுற்றி பதினேட்டு கிராமங்கள் இருக்கின்றன. " என்றான்

பாபாவிற்கு அந்த ஆலமரம் எப்படி தப்பிபிழைத்து நிற்கிறது என்று இப்போது தெளிவாக புரிந்தது.அவன் தன் உதவியாளனை அழைத்து" அந்த விஜய் மல்ஹோத்ராவை உள்ளே வரச்சொல்" என்றான். நாடறிந்த முக்கிய விஜபிக்கள் தன்னை பார்க்க வருவது அவர்கள் அப்பாயிண்டமெண்ட் வாங்கும்போதே அவனுக்கு தெரியவந்துவிடும். அவர்களை பற்றிய முழு விவரங்களையும் அவன் கூகுளில் சர்ச் பண்ணி படித்துவிடுவான் இந்த விசயத்தில் படைத்த ஆண்டவன் கைவிட்டாலும் கூகுளாண்டவர் அவனை கைவிட்டதில்லை.அவன் தேடிப் படிக்கும் விசயங்களிலேயே ஒருவாறு அவர்களின் பிரச்சனைகளை இனம்கண்டுவிடுவான்.

சாதாரண பொது ஜனங்களிடம் அவன் வேறு உபாயம் வைத்திருந்தான்.அவனது ஆட்கள் பாபாவை பார்க்க காத்திருக்கும் ஆட்களுடன் கலந்து உட்கார்ந்திருப்பார்கள். கூட இருக்கும் பக்தகோடிகளிடம் வாயை பிடுங்கி என்ன பிரச்சனை என்று தெரிந்துகொண்டு விசயத்தை துண்டு சீட்டில் பாபாவுக்கு கடத்தி விடுவார்கள். பாபா அவர்கள் உள்ளே நுழைந்ததுமே அவர்களின் பிரச்சனையை சொல்லி வாயை பிளக்க வைத்துவிடுவான்.

நந்தகுமார் குல்கர்ணியும் விஜய் மல்ஹோத்ராவும் அறைக்குள் நுழைந்தனர். அறை முழுக்க மெத்தையால் மூடப்பட்டு நடுநாயகமாக உட்கார்ந்திருந்தான் பாபா. பதவிசாகஉட்கார்ந்தார்கள் இருவரும்.

" என்ன நந்தகுமார் செளக்கியமா?"

"நீங்க இருக்கும்போது என்ன குறைபாபா. இவரு என்னோட நண்பர் இவருக்குத்தான் பிரச்சனை, " என்றான் நந்தகுமார் வாயெல்லாம் பல்லாக.

"நான் விஜய் மல்ஹோத்ரா" என்ற விஜய் தன்னை இப்படிஅறிமுகப்படுத்தி கொள்ளும்போதெல்லாம் எதிராளியின் கையை பற்றி இறுகக் குலுக்கியே பழக்கப்பட்டவன். இப்போது அந்த பழக்கத்தைவிட முடியாமல் சமாளிப்பாக கைகளை குவித்துகொண்டான்.

"சொல்லு விஜய்? என்ன பிரச்சனை ஸ்டெர்லைட்டில்?" என்றான் பாபா.

முதுகில் சவுக்கடிபட்டதுபோல் நிமிர்ந்து உட்கார்ந்தான் விஜய்.

"பாபா. உங்களுக்கு எப்படி?" என்றான் அதிர்ச்சியோடு அவன்.

"அதுதான் பாபா" என்றான் நந்தகுமார்.

"இதுவரை கேன்சர்னு பிரச்சனை பண்ணாங்க. இப்ப அனுமான் மாதிரி குழந்தைகள் பிறக்குதுன்னு ஆரம்பிச்சிருக்காங்க"

"இதை யாரு முதல்ல நியூசுக்கு கொடுத்தது?"

" மணின்னு ஒரு லோக்கல் பெய்டு நிருபர். மீடியாவுலவேலை செஞ்சிருந்தா அவனோட ஓனரை விலைக்கு வாங்கியிருக்கலாம். இவன் ப்ரீலேன்சர், காசு கொடுத்தா வாங்க மாட்டேங்குறான்."

"அப்ப பின்னாடி வேற யாரோ இருக்காங்க. யாருன்னு பாரு"

"பெரியசாமின்னு ஒருத்தன். ஸ்டெர்லைட் லாரி டெண்டர்ல தோத்துபோனவன்.அவனும் மணியும் சொந்தக்காரனுக. அவன் தான் ஏதோ விளையாட்டு காட்டுறான்னு தோணுது."

"பேசாம அவனுக்கு சப் காண்ட்ராக்ட் கொடுப்பது"

"அது ஆவாது சாமி. இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் குணம் அவனுடையது. சரிரெண்டு லாரி ஓட்டுன்னு கம்பெனிக்கு உள்ளே விட்டா ஆளுங்களை பேசி கலைச்சி குருமூர்த்தியோட பிழைப்பை கெடுத்து மொத்த காண்ட்ராக்டும் தனக்கே வர்ர மாதிரி செய்வான். ஹீ இஸ்டேன்ஜரஸ் பெல்லோ"

"அப்ப வேற வழியத்தான் யோசிக்கனும்"

"என்ன பண்ணனும் சாமி. இந்த பிரச்சனையிலிருந்து எப்படியாவது காப்பாத்துங்க"

"சின்னதா ஒரு கலவரம் பண்ணு. அதுல நாலஞ்சு பேரு சாகனும். அதுல இந்த மணியும், பெரியசாமியும் இருக்கனும். கலவரத்துல செத்ததா கணக்கு காட்டனும், ".

"ஸ்டேட் கவர்மெண்ட் நம்மளுதுதான். என்ன வேணா பண்ணலாம். நாலஞ்சு பேரு என்ன பத்து பதிமூணு பேரை கூட கொல்லலாம். ஆனா இந்த குழந்தைங்க மேட்டர்?" என்ற விஜய் தன் செல்போனில் இருந்த இறந்து பிறந்த சிசுக்களின் போட்டோவை காட்டினான். அதை வாங்கி பார்த்து கொண்டிருந்த பாபா" முதல்ல எரியுறதை பிடுங்குவோம். பிறகு கொதிப்பது தன்னால் அடங்கிவிடும்" என்றான்.

போட்டோக்களை உற்று பார்த்தவன்" இதுவரை எத்தனை குழந்தைகள் இது மாதிரி பிறந்திருக்கின்றன?"

" ஏழு பாபா"

" இன்னும் ஒரு குழந்தை பிறந்தால் எட்டு. எட்டுன்னா அஷ்டம்.கிருஷ்ணன் எட்டாவதாக பிறந்தவன். சகுனி, பீஷ்மனும் எட்டாவது பிறந்தவர்கள். இந்த பிரச்சனையை திசை மாற்றி உன்னோட கம்பெனியை காப்பாத்தனும்"

பாபா யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் மனதில் பளிச்சென்றுவந்து உட்கார்ந்தது அந்த பெயர்.

அஷ்டவக்கிரன்.

"பாரு விஜய் மல்ஹோத்ரா. புராண காலத்துல உடம்புல எட்டு கோணலுடன் அதி புத்திசாலியான ஒரு மகரிசி இருந்தார் .அவரு பேரு அஷ்டவக்கிரன்.அவர் மீண்டும் பிறக்கப்போவதாக ஒரு நியூசை கிளப்பிவிடுவோம்"

"மீடியாவுல வந்தா அந்த நியூஸ் பத்தோட பதினொண்ணா போயிரும்"

"சரி. அதை நானே சொல்றேன் .அந்த அஷ்டவக்ர மகரிசி என்னோட கனவில் வந்து தமிழ்நாட்டின் கிருஷ்ணாபுரத்தில்தான் மறுபடியும் பிறக்கபோவதாக அறிவித்தார் என்று. உலகம்இப்போது நம்புமல்லவா?"

"உலகம் நீங்க சொன்னா நம்பும்"

"நானே ஆன்மீக சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வரப்போகிறேன். அதற்குள் நீ கலவரத்தை நடத்தி முடித்துவிடு. அதன்பிறகு நான் அங்கே வந்து இந்த அஷ்டவக்கிரர் விவகாரத்தை கிளப்பி மக்களை திசைதிருப்புகிறேன்."

"நல்லது பாபா. இதுக்கு எவ்வளவு பீஸ்னு சொன்னா?" என்று இழுத்தான் விஜய்.

" நான் அடியாள் இல்லை. ஆன்மீகவாதி. இங்கே ஆசிரமத்திற்கு நன்கொடை மட்டுமே வாங்கப்படும். தமிழ்நாட்டிற்கு நான் வந்தபின்பு நீ நிறைய செலவு செய்யவேண்டியதாக இருக்கும்"

"எவ்வளவு செலவானலும் நான் பார்த்து கொள்கிறேன் பாபா"

"சரி. கிளம்புங்கள்.என் உதவியாளனை பாருங்கள். பண விவகாரங்களை அவன் தான் பார்த்து கொள்கிறான்.நான் பணத்தை தீண்டுவதில்லை" என்று சிரித்தான் பாபா.

மறுநாள் பாபா பத்திரிக்கையாளர்கள் நடுவே அஷ்டவக்கிரன் விவகாரத்தையும் தன்னுடைய தமிழக விஜயத்தையும் அறிவித்தான்.அவனது பேட்டி ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரலானது. தமிழ்நாட்டில் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

யார் அந்த அஷ்டவக்கிரன்? என்ற கூகுள் சர்ச்சுகளும் கவர் ஸ்டோரிகளும் வெளியாக ஆரம்பித்தன.

ஒரு புலனாய்வு இதழ் இதுவரை உடல் சிதிலமாக பிறந்த ஏழு குழந்தைகளின் ஸ்கேன் ரிப்போர்ட எங்கே? உடல் ஊனமாக இருந்தால் ஸ்கேனில் முதலிலேயே தெரிந்திருக்குமே ? பிறகு கருவை அழிக்காமல் இருந்தது யார் குற்றம்? பிண்ணனியில் மருத்துவ மாபியாக்களா என்று சந்தேகத்தை விதைத்திருந்தது.

அவதார் பாபாவின் பேட்டியை டாக்டர் சம்பத்குமாரும் பார்த்துகொண்டிருந்தார். அவர் உடனே ஜான் கிரேவரை அழைத்தார்.

" என்னாச்சு சம்பத்? ஏதாவது பிரச்சனையா?"

" இல்லை. இங்கே பிரச்சனை வேற மாதிரிபோயிட்டு இருக்கு. யாரோஅவதார் பாபான்னு ஒருத்தன் அஷ்டவக்கிரன் மீண்டும் பிறப்பான்னு சொல்லிட்டு தமிழ் நாட்டுக்கு வரப்போறான்."

" வரட்டும் அதுவும் நல்லதுதான். பாரு சம்பத்.நம்ம மருந்து todox எண்பது சதவீதம் வேலை செய்யுது. என்ன பிரச்சனைன்னா நியாண்டர்தால் மனிதனின் சில அம்சங்கள் மரபணுரீதியாக வந்துசேர்ந்து கடைசியில் குழந்தைகளின் உடலமைப்பை அனுமான் மாதிரி மாற்றிவிடுகிறது. நீ கொடுத்த ரிப்போர்டபடி அதை கண்டுபிடிச்சாச்சு. இனி குறைகள் நீக்கப்பட்todox இன்னும் சில நாட்களில் தயாராகிவிடும். அதை உயிர்காக்கும் முக்கியமான மருந்துன்னு உனக்கு அனுப்பி வைக்கிறேன். லேபிள் வேற.உள்ளே இருக்கும் சரக்கு நம்முடையது"

"ஒரு பத்திரிக்கை ஸ்கேன் ரிப்போர்ட் கேக்குது"

" கொடு. பத்தாவது மாசத்தின் துவக்கத்தில்தானே உருவம் மாறுது. அதனால் பிரச்சனை இல்லை.நம்ம மருந்துக்கு எட்டாவது ஆளை ரெடி பண்ணு."

"ஓகே சார். இப்பவே தேடிபிடிக்கிறேன்" சம்பத் போனை வைத்துவிட்டார்.

டிவி பார்த்து கொண்டிருந்த பெரியசாமி அருகே இருந்த மணிகண்டனிடம் "யார் ராஇந்த அவதார் பாபா?" என்றான்.

"காசிமடாதிபதியாம்" என்றான் மணிகண்டன்.

"இங்கே எப்ப வர்ரானாம்?"

"தெரியலை. சீக்கிரம் வருவான்"

"வரட்டும் கைலாசத்திற்கு அனுப்பி வைப்போம்" என்று விகாரமாகசிரித்தான் பெரியசாமி. இரண்டு பேர் ஒரு வரை ஒருவர் பார்க்காமலேயே கொல்ல திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். தனக்கான ஆபத்து காத்திருப்பது தெரியாமல் பாபா தமிழக சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினான்.

#தொடரும்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்4


"தன் தந்தையை மீட்க மிதிலையை சென்றடைந்தான் அஷ்டவக்கிரன்.அரண்மனைக்கு செல்லும் வழியில் ஜனகன் நகர்வலம் வருவதை கண்டான்.நடுதெருவில் நடந்து சென்ற அஷ்டவக்கிரனை ஓரமாக நடந்து செல்லும்படி பணியாளர்கள் மிரட்டினார்கள்."ஓ! அரசனே! கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள்,உடல் ஊனமுற்றோருக்கு அரசனாக இருந்தாலும் வழி விட வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுவதை நீ படித்ததில்லையா? "என்றான்.அவனது தைரியத்தை பாராட்டிய ஜனகன் அவனை அரண்மனைக்கு அழைத்து சென்றான்.அங்கே நடந்த வாத போட்டியில் வென்ற அஷ்டவக்கிரன் தன் தந்தையை மீட்டதுடன் வந்தியை தோற்கடித்து நாட்டை விட்டே துரத்தினான்.அவனது அறிவுகூர்மையை கண்ட ஜனகன் அவரை குருவாக்கி கொண்டான்."


காசி.!
நகரத்தின் நான்கு பக்கமும் பிணம் எரியும் சுடுகாட்டை கொண்ட பல்லியும் கழுகும் வசிக்க இறைவனால்  தடைவிதிக்கப்பட்டதாக நம்பப்படும்இந்துக்களின் புனித நகரம். அந்த நகரத்தில் தமிழகத்தின் பல சமூகங்களுக்கு விடுதிகள் உண்டு. ஏராளமான மடங்களும் உண்டு.

அப்படி ஒரு மடத்தின்தலைவன் தான் அவதார் பாபா. அவதார் பாபா இன்னொரு இறைவன்.அவனால் செய்துமுடிக்க முடியாத விசயங்களே இங்கே கிடையாது. ஆன்மீகம் என்பது எவ்வளவு பெரிய முதலீடு இல்லாத வியாபாரம் என்பது அவனுக்கு நன்றாக தெரியும். அந்த ஆன்மீக பைத்தியம் உண்மையான மனநலன் பாதித்த நபரை கூட சித்தர் முனிவர், யோகி என்று நம்பவைத்துவிடும். அதிகமேதமைக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் ஒரு நூல்தான் இடைவெளி என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்

எல்லா மதங்களிலும் பைத்தியக்காரத்தனம் உண்டு என்றாலும் இந்துமதத்தில் அது கூடுதலாகவே உண்டு என்பதையும் அதை சாதாரண பாமரன் நம்பும் வரை தன் போன்ற ஆசாமிகளுக்கு கவலை இல்லை என்பதையும் அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.

அவனுக்கு இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் 18 மொழிகளிலும் எழுதவும் பேசவும் தெரியும். கம்யூட்டரை வெகு அனாயசமாக கையாளும் திறன்படைத்தவன். காலத்திற்கு தகுந்ததுபோல் தொழிலை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்பது அவனது நம்பிக்கை. மற்ற சாமியார் களைப்போல் வாயில் லிங்கம் எடுப்பது வெறும் கையில் விபூதி எடுப்பது போன்ற சில்லறைத்தனமான வேலைகளை அவன் செய்வதில்லை. மக்களின் அன்றாடபிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது வேலை.

இதனால் அவனுக்கு இந்துமதத்தின் மீது பற்று இல்லை என்றெல்லாம் நினைத்து விடக்கூடாது. மற்ற சாமியார்களைப்போல் அவனுக்கும் தீவிர இந்துத்துவாதான் போர்வை. அந்த இந்துத்துவ வெறி தான் அவனை ஆளுங்கட்சியே பணிந்து வணங்கும் சாதுசேனாவில் முக்கிய புள்ளியாக்கியது. மக்களை மதரீதியாக சாதி ரீதியாக பிளவுபடுத்தி ஆட்சியை நிலைக்க செய்வதற்கான ஆலோசனைகளை தருவது தான் சாதுசேனாவின் வேலை. அதில் அவதார் பாபா தான் முக்கிய புள்ளி.

வழிவழியாக பிராமணர்களே தலைவர்களாக இருந்து வரும் மடம் அது. இதற்கு முன்பு தலைவராக இருந்தவர் சிறுபிள்ளையாக இருந்த அவதார் பாபாவை அடுத்த தலைவராக தேர்ந்தெடுத்தார். அதுவரை ஜோஷி சர்மாவின் மகனாக இருந்ததேஜஸ்வி சர்மா மடத்திற்குள் அடுத்த சன்னிதானமாக நுழைந்தான்.அங்கே அவனது பெயர் அவதார் பாபா என்று மாற்றப்பட்டது. நான்கு வேதங்கள் அவனுக்கு கற்பிக்கப்பட்டன. தீட்சை வழங்கி கஷாயம் தரப்பட்டது. அவனுக்கும் வீட்டிற்குமானதொடர்பு முற்றாக அறுந்தது

வயதான தலைவரின் மரணத்திற்கு பின்பு அவதார் பாபா மடத்தின் அடுத்த தலைவரானான்.அதன்பின் மடத்தின் வளர்ச்சிஅதிகரிக்க ஆரம்பித்தது.மடத்தின் பாரம்பரிய வழக்கத்தின்படி பட்டியல் இன மக்கள் மீதான மறைமுக தீண்டாமை நீடித்தது -அவதார் பாபாவே அதை ரசிக்க ஆரம்பித்தான். பிராமணன் உயர் பிறவி என்ற கற்பிதத்தில் அவன் மூழ்கி கிடந்தான்.

அந்த கற்பிதமும் ஒருநாள் உடைந்து சிதறியது. அவனது தந்தை ஜோஷி சர்மா மரணப் படுக்கையில் கிடந்தபோது அவனைப் பார்க்க விரும்புவதாக தகவல் வந்தது. ஞானிக்கு நாளென்ன கோளென்ன? தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற சில எதிர்ப்புகளை தாண்டிபாபா பயணப்பட்டான்.

மரண தறுவாயில் இருந்த தந்தையை காண அவன் தன்னுடைய பூர்வாசிர வீட்டிற்கு சென்றபோது அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

அப்பாவும் மகனும் மட்டும் தனிமையில் இருந்தபோது பாபா" பாபுஜி .நான் தேஜஸ்வி வந்திருக்கேன். என்னை பாருங்கள்" என்றான்

சன்னியாசியான போதே தேஜஸ்வி சாஸ்திரப்படி இறந்துவிட்டான்.அவன் பெயரைக்கூட உச்சரிக்க கூடாது. ஆனால் அது அவன் தகப்பன் வைத்த பெயரல்லவா? எத்துணை கனவுகள், லட்சியங்களுடன் இப்படி ஒரு பெயரை வைத்திருப்பான்? உலகிற்கு இன்று அவதார் பாபா. அவனது தகப்பன் கண்களுக்குசிறுவன் தேஜஸ்விதான்.

சர்மா கண்களை சிரமப்பட்டு திறந்தார்

" வந்துட்டியா பேட்டா ?"

" வந்துட்டேன். நிறைவேறாத ஆசை எதாவது இருந்தால் சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். நீங்கள் இல்லாவிட்டால் நான் இல்லை."

"உன்னிடம் ஒரு உண்மையை சொல்லனும். அது தான் வரச்சொன்னேன்."

"சொல்லுங்கள்"

"நீ என்னோட மகன் இல்லை."

"அப்பா. என்ன சொல்றீங்க?"

"ஆமாம்பா. உண்மையைத்தான் சொல்றேன். நான் உன்னை வளர்த்தவன். அதுவும் மடத்தலைவர் வற்புறுத்தி சொன்னதால். உன்னோட உண்மையான அப்பா அம்மா வேறு "

அவதார் பாபாவிற்கு இது புது தகவலாக இருந்தது.கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது



"நான் யார்? என்னோட அப்பா அம்மா யார்?"

"உன்னோட பேரு அருணாசலம். நீ ஒரு தமிழ்ஆத்மி. உன்னோட ஊர் கிருஷ்ணபுரம்."

" அது எந்த மாவட்டம்?"

அவன் கேள்வியை முடிக்கும் முன்பாக அவரது உயிர் பிரிந்தது. பாபா மவுனமாக எழுந்து கொண்டுவிட்டான். சர்மாவின் கடைசி காரியங்களை அவரது சொந்த மகனை பார்க்க சொல்லிவிட்டு வளர்த்தகடமைக்கு நிறைய பணமும் கொடுத்துவிட்டு பாபா மடத்திற்கு திரும்பிவிட்டான்

அன்றிலிருந்து அவனது இரவு தூக்கம் பறிபோனது. தன் பால்யகால நினைவுகளில் கிருஷ்ணாபுரத்தை பற்றிய நினைவுகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடத்துவங்கினான். துண்டாக ஒரு காட்சி மட்டும் அவன் நினைவடுக்கிலிருந்து மீண்டது. அவனும் இன்னொரு சிறுவனும் ஒரு ஆலமரத்தின் விழுதுகளை பற்றி விளையாடுவது போலவும் அதன் அருகே ஒரு சுமைதாங்கி கல் இருப்பதுபோலவும் ஒரு காட்சி மட்டும் அவனுக்கு கிடைத்தது.

அன்றிலிருந்து தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களிடம் அவன் கிருஷ்ணாபுரத்தை பற்றியும் அந்த ஆலமரத்தை பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தான். ஓய்வு நேரங்களில் கூகுளில் தமிழ்நாட்டில் எத்தனை கிருஷ்ணாபுரங்கள் இருக்கிறைன என்று கணக்கெடுத்து சலித்தான். தமிழ்நாட்டிலிருந்துதான் எப்படி காசிக்கு அதுவும் சர்மாவின் வீட்டிற்கு வந்துசேர்ந்திருப்போம்? இரண்டு நகரங்களுக்கும் தொடர்புள்ள ஒரு ஆள் இருந்திருக்கவேண்டும். யார் அந்த ஆள்? இல்லை மடத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று நினைத்த பாபா எல்லா பழைய டாக்குமெண்டுகளையும் தேட ஆரம்பித்தான்.

அவனது மூளை பழைய தலைவர் எப்போது தமிழகத்திற்கு ஆன்மீக பயணம் சென்றார் என்று கண்டுபிடி என்றது. தலைவர் அப்படியான பயணத்தில்தான் தன்னை பார்த்திருக்கவேண்டும் அடுத்த தலைவராக்க நினைத்திருக்கவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.

அவன் பழைய மட தலைவரின் ஆன்மிக சுற்றுலா பட்டியலை தேடிக் கண்டுபிடித்தான். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு மடத்தின் பழைய தலைவர் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது பழைய கோப்பு ஒன்றிலிருந்து அவனுக்கு கிடைத்தது. அதன்பிறகு அவர் ஆன்மீக பயணத்தை தமிழகத்தில் மேற்கொள்ள வே இல்லை.

அவர் பயணம் செய்த ரூட் மேப் மட்டும் அவனுக்கு கிடைக்கவேயில்லை. ஆசிரமத்தில் இருக்கும் அனைவருமே வடஇந்தியர்கள் என்பதால் அவர்களுக்கு தொலைதூரத்தில் இருக்கும் தமிழகத்தின் ஊர்களை பற்றி எப்படி தெரியும்? இந்த தென்னக விஜயத்தை ஏற்பாடு செய்தது தமிழகத்தை சேர்ந்த யாரோ ஒரு பக்தராக இருக்கலாம் என்றுஅவனுக்கு தோன்றியது.. 

தன்னுடைய எல்லா முயற்சியிலும் தோற்றுபோய் நின்றான் அவதார் பாபா. அவனது முன்னாள் ஞானகுரு அடிக்கடி சொல்வார் நீ எதை நினைக்கிறாயோ அதை பிரபஞ்சமும் இயற்கையும் உனக்காக கொண்டுவந்து தரும் என்று. அந்த வாக்கு அனுபவபூர்வமாக பல முறை பலித்திருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான்.அவன் இயற்கையின்அழைப்பிற்காக காத்திருக்க துவங்கினான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு இயற்கையின் அழைப்பு அவனுக்கு விஜய்மல்ஹோத்ரா வடிவில் வந்துசேர்ந்தது.

ஆசிரமத்தின் முகப்பில் உட்கார்ந்திருந்த விஜய் மல்ஹோத்ராவும் நந்தகுமார் குல்கர்ணியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.

"இதுவரை கேன்சர்னுதான் பிரச்சனை செய்தார்கள். இப்போது புதிதாக வால் முளைத்த குழந்தைகள்"

"இந்த குழந்தை பிறப்புடன் உன் கம்பெனிய சம்மந்தப்படுத்தி முதல்ல பத்திரிக்கைல நியூஸ் போட்டவன் யாரு?"

" மணின்னு பெய்டு ரிப்போர்டர் ஒருத்தன்.பணத்துக்காக என்ன வேணா செய்வான்."

"அவனை விலைக்கு வாங்கிவிடுவது?'

" முடியலை பணத்துக்கு மசியமாட்டேங்கிறான்.அவனுக்கு பின்னாடி பெரிய கை எதுனா இருக்கும் போல "

"கவலைப்படாதே! எல்லாத்தையும் பாபா பாத்துக்கு வாரு"

அறைமுழுக்க திண்டு போட்டு அதில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தஅவதார் பாபா" அடுத்தது யாரு? என்றான்.

" விஜய் மல்ஹோத்ரா"

"பத்து நிமிசம் கழிச்சு அவனை உள்ளே வரச்சொல். அதற்குள் அவனைப் பற்றி கூகிளில் விசாரித்து தெரிந்துகொள்கிறேன்"

அவதார் பாபா தன் முன்னால் இருந்த லேப்டாப்பில் விஜய் மல்ஹோத்ராவை பற்றி சர்ச் பண்ண ஆரம்பித்தான்.

விஜய் மல்ஹோத்ராவின் பிறப்பு, பெற்றோர், தொழில், படிப்பு என்று தேடிக்கொண்டிருந்தான் பாபா. அவனது கவனத்தை கலைத்தது விஜயின் பெர்லைட் பேக்டரி.

ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கும் அவனது பேக்டரியை பற்றிய ஒரு லிங்கை செய்தான்

யூடியூப்பில் வீடியோ ஓட ஆரம்பித்தது டாக்குமெண்டரியின் துவக்கத்தில் தொகுப்பாளர் ஒரு ஆலமரத்தின் கீழ் நின்றுகொண்டிருந்தான்." இது தான் கிருஷணாபுரத்தின் பஸ்ஸ்டாப். பக்கத்துலேயே சுமைதாங்கி கல் ஒன்னு இருக்கிறதை பாக்குறீங்க. இது வயித்துல குழந்தையோட இறந்துபோகிற கர்ப்பிணி பெண்கள் நினைவாக வைக்கப்படும் ஒன்று. பதினெட்டு கிராமங்களுக்கு நடுவேதான் இந்த ஸ்பெர்லைட் இருக்கு"

பாபா தேடிக்கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் அவனுக்கு அகப்பட்டுவிட்டது. இது தான் இது தான் அவன் பிறந்த ஊர்.

"அவனை உடனே உள்ளே வரச்சொல் " என்றான் அவதார் பாபா பரபரப்புடன்

புதன், 1 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் 3

"தசரத மகாராஜாவின் மந்திரியாக வந்தி என்பவன் இருந்து வந்தான் கல்வி, கேள்விகளில் சிறந்தவனான அவன் ஒரு வாதப் போட்டி ஒன்றை வைத்து பலரை தோற்கடித்து அடிமைகளாக்கி வந்தான். அவனது தற்பெருமையை அடக்க நினைத்த கஜோளsகர் அவனை வாதத்தில் வெல்ல தலைநகரத்திற்கு கிளம்பி சென்றார். அங்கே நடந்த போட்டியில் வந்திவெற்றிபெற்று கஜோளகbshரை  அடிமையாக்கியதாகவும் நீருள் மூழ்கடித்து கொன்றதாகவும் இரண்டு விதமான தகவல்கள் இருக்கின்றன. தந்தையை இழந்த அஷ்டவக்கிரன் வாதப் போட்டியில் கலந்து வந்தியை அடிமையாக்க விரும்பினான். உடலில் எட்டு குறைகளும் அருவருப்பான தோற்றமும் கொண்ட அவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. தன் ஞானத்தை மட்டுமே நம்பிய அஷ்டவக்கிரன் தன் தந்தையின் மீட்க மறைவுக்கு பழிவாங்க தனி ஆளாக அரண்மனை இருக்கும் தலைநகரத்திற்கு கால்நடையாக புறப்பட்டு சென்றான், "




மணிகண்டன் PLS என்ற பெயர் பொறித்த போர்டின் முன்பாக வண்டியை நிறுத்தி இறங்கினான்.இருட்டில் எங்கோ ஒரு நாய் ஊளையிடும் சத்தம் அமானுஷ்யமாக கேட்டது. தெருவோரத்து டியூப்லைட் அணைந்து அணைந்து எரிந்து இன்சால் மெண்டில் வெளிச்சத்தை நின்னு கோரி வரனும் பாடல்ஸ்டைலில் வழங்கி கொண்டிருந்தது.

எங்கிருந்தோ இருட்டில் உற்பத்தியாகி வந்த வாட்ச்மேன்" யார் வேணும் தம்பி?" என்றான். குரலில் அவசரமாக கீழே போட்டு அணைத்த பீடியின் மிச்ச நாற்றம் அடித்தது. "பெரியசாமி அண்ணனை பாக்கனும். போன் பண்ணி பேசிட்டேன். இங்கதான் இருப்பேன்னு சொன்னாரு" என்றான் மணிகண்டன்

"ஆபிஸ் ரூம்லதான் இருக்காரு. போய் பாருங்க"

மணிகண்டன் பெரியசாமி லாரி சர்வீஸ் என்று தமிழில் எழுதப்பட்ட போர்டை கடந்து நடந்தான். பெரியசாமியின் டஸ்டர்கார் வெளியே நின்றிருந்தது. அதன் டிரைவர் இவனை பார்த்து சினேகமாக சிரித்துவிட்டு செல்லில் மீண்டும் மூழ்கினான்.

மணி ஸ்லிப்பரை வெளியே விட்டுவிட்டு ஆபிசிற்குள் நுழைந்தான். கண்ணாடி அறைக்குள் பெரியசாமியாருடனோ போனில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. மணிகண்ணாடி கதவை தட்டினான். பேசிகொண்டிருந்த பெரியசாமி பேச்சை நிறுத்தாமல் உள்ளே வா என்று கையால் சைகை செய்தான்.

உள்ளே நுழைந்தவனை உட்காரசொல்லி சைகை செய்தவன்" அவ்வளவுதான். இதை மட்டும் செய். காலைல கூப்பிடு" என்றபடி செல்போனை அணைத்தான்.

"சொல்றா. எப்படி இருக்க? ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்துருக்க? ஏதாவது விசேசமா? எவனாவது ஏமாந்து உனக்கு பொண்ணு தர்ரேன்னு சொல்லிட்டானா?" என்ற படி அகலமாய் சிரித்தான் பெரியசாமி.

"கலாய்க்காதண்ணே. ஒரு முக்கியமான விசயம். அதான் உன்னை பாக்க இந்நேரத்துக்கு வந்தேன்"

"குடிக்க மட்டும் கூப்பிட்டுவிடாதே.அந்த சனியனை விட்டு ரொம்ப நாளாச்சு. பணம் எதுனா வேணும்னா வாங்கிட்டு கிளம்பு. அதுவும் சித்தி பையன்னு தர்றேன்."

" அது இல்லைண்ணே. நானும் நீ பெரியம்மா பையன்னு உனக்கு சாதகமான ஒரு விசயத்தை கொண்டுவந்துருக்கேன். என்ன ஏதுன்னு காதுகொடுத்து கேக்க மாட்டேங்குறியே"

"சரி. சொல்லு. என்ன விசயம்?"

"அந்த பெர்லைட் கம்பெனியோட லாரி காண்ட்ராக்ட் உனக்கு கிடைச்சா எப்படி இருக்கும்?"

"நல்லாத்தான் இருக்கும். ஆனால் குருமூர்த்தி இருக்கும்வரை அதுக்கு வாய்ப்பில்லை. இந்த முறை டெண்டரில் அவன் தானே ஜெயித்தான்?"

தினமும் 80 லாரிகள் பெர்லைட் கம்பெனியின் மூலப்பொருள்களை, கழிவுகளை ஏற்றி செல்லும் இறக்கிவைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன. கோடிகளில் காசு புரளும் அந்த காண்ட்ராக்ட் மீது பெரியசாமிக்கு ரொம்ப நாளாக ஒரு கண். அதற்கு தடைகல்லாக இருப்பது குருமூர்த்தி. அதை கெடுக்க லேபர் யூனியன் லீடர் தமிழ்வாணனை கையில் போட்டு கொண்டு பெர்லைட்டால் கேன்சர் வருகிறது என்ற பிரசாரத்தை மக்களிடையே பரப்பி கொண்டிருந்தான் பெரியசாமி.

கோர்ட் வழக்கு, நீதிமன்ற தடை,, மீண்டும் திறப்பு என்று பெர்லைட்டின் செயல்பாடு நித்திய கண்டம் பூரண ஆயுசாக மாறிக்கொண்டிருந்தது. பெரியசாமி பெரிய அளவில் பணம் செலவு செய்தும் ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

இப்போது அதே பிரச்சனையை தூக்கி கொண்டு மணிகண்டன் வந்திருக்கிறான். இருவரின் அம்மாக்களும் அக்கா தங்கை என்பதால் இருவரும் நெருங்கிய சொந்தம் வேறு.மணிகண்டனை முழுதாக நம்பமுடியாது. பத்திரிக்கைநிருபராக இருந்தபோதே பெரும் புள்ளிகளை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எழுதி அவர்களை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிப்பது அவனது வேலை. அவனது மிரட்டலுக்கு பயப்படாதவர்கள் போலீசில் புகார் செய்து பெரிய பிரச்சனையான போதெல்லாம் பெரியசாமி தான் தலையிட்டு அவனை காப்பாற்றி இருக்கிறான்.அவனது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டதால் அவனுக்கு மீடியாவில் வேலை தர யாரும் தயாராக இல்லை.

அதற்காக ஓய்ந்து உட்காருகிறவன் இல்லை மணிகண்டன். ப்ரி லேன்ஸ் ரிப்போர்டர் என்ற பெயரில் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான். சில நேரங்களில் பணத்திற்காக அவன் போலீசிடம் ஆட்காட்டி வேலையும் செய்வதுண்டு.

ஏதோ ஒரு முக்கியமான விசயத்தோடு தான் தம்பி தன்னை தேடி வந்திருககிறான் என்று உணர்ந்து கொண்ட பெரியசாமி நிமிர்ந்து உட்கார்ந்தான்
" என்ன மணி? செத்து புதைச்ச பிணத்தை தோண்டுற?" என்றான்.

"ஆதாயம் இருக்கு.அது தான் தோண்டுறேன்."

"நீ என்ன சொல்ல வர்ர ?"

"பாருண்ணே. கேன்சர்னு சொல்லி பயம் காட்டுனா வேலை நடக்காது. வேற ஐடியா தர்றேன்."

"சொல்லு. கேப்போம்."

"இதை பாத்தியா?" என்ற மணி வாட்ஸ்அப்பில் வந்த போட்டோவை காட்டினான்.

"என்னடா இது? குரங்கிலிருந்து பிறந்த முதல் மனுசன் மாதிரியிருக்கு."

"நேத்து நைட்டு பொறந்த குழந்தை இது.இதுக்கு காரணம் பெர்லைட்டின் கழிவுதான்னு பிரச்சனையை கிளப்பு"

" ஒரு குழந்தைதானே பொறந்திருக்கு. ஜனங்க இதை எப்படி நம்புவாங்க?"

"தப்பு. இது ஏழாவது குழந்தை.இதுக்கு முன்னாடி ஆறு குழந்தை இதேமாதிரி பொறந்துசெத்துருச்சு.நாளைக்கு ஒரு கவர் ஸ்டோரி எழுதப்போறேன். இதுக்கெல்லாம் காரணம் பெர்லைட் தான்னு"

"பண்ணு. இது சரியா வரும். பாடுபட்டு சம்பாதிப்தே குழந்தைகளுக்காகத்தான்.அவர்களுக்கே பாதிப்புன்னா ஜனம் சும்மா இருக்காது. கொந்தளிச் சுரும். எனக்கு கிடைக்காத அந்த லாரி காண்ட்ராக்ட் அந்த குருமூர்த்திக்கும் கிடைக்ககூடாது. அவன் கை நிறைய சம்பாதிப்பதை நான் வாயில் விரலை வைச்சுகிட்டு வேடிக்கை பாக்கவா?"

"நிர்வாகம் கண்டிப்பா நம்மை ஆப் பண்ண பாக்கும். அப்ப லாரி காண்ட்ராக்டை பதிலுக்கு கேப்போம்"

" இதுக்கு எவ்வளவு வேணும்?"

"வேணும்கிற போது நானே கேக்கிறேன். நல்ல பொண்ணா ஒன்னை பாருண்ணே. தனியா படுக்க அலுப்பா இருக்கு"

"உன் கல்யாண செலவு என்னுதுடா. கவலைப்படாதே! ஏதாவது ஒரு பொண்ணை பிடிச்சுருவோம்." என்றான் உற்சாகத்துடன் பெரியசாமி..

மும்பை.

பார் ஒன்றில் ஒலித்த இந்தி குத்து பாடலுக்கு ஆடுபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் விஜய் மல்ஹோத்ரா.
அவனது போன் அடித்தது.

"ஹலோ" என்றவனுக்கு எதிர்முனை பேசுவது புரியவில்லை. அருகே இருந்த நந்தகுமார் குல்கர்ணியிடம்" எக்ஸ்கியூஸ்மீ " என்றவன் வெளியே வந்தான்.

"இப்ப சொல்லுங்க"

"சார்.நான் பாஸ்கர் பேசறேன்"

"சொல்லுங்க பாஸ்கர். பெர்லைட் ல எதுனா பிரச்சனையா? இல்லைன்னா கூப்பிட மாட்டிங்களே"

"டிவி பாத்தீங்களா?"

"இல்லையே?"

"பாருங்க சார். பாத்துட்டு கூப்பிடுங்க"

இணைப்பு துண்டிக்கப்பட்டது

" என்னாச்சு?ஏன் டென்சன் ?" என்றார். பின்னாலேயே வந்த நந்தகுமார் குல்கர்ணி

" என்னோட கம்பெனில ஏதோ பிரச்சனை. மேனேஜர் டிவியை பாக்க சொல்றான்"

" என்னோட ரூமுக்குவா. அங்கே டிவி பார்ப்போம்"

அறையில் டிவியை போட்டதும் நியூஸ் ஓடியது.

"தமிழகத்தில் இயங்கிவரும் பெர்லைட் ஆலையால் கேன்சர் வருவதாக கூறப்பட்ட நிலையில் அங்கே இருக்கும் சுற்றுவட்டார கிராமங்களில் அனுமன் வடிவத்தில் வால்முளைத்த குழந்தைகள் தொடர்ந்து பிறந்து வருவது பீதியை கிளப்பி இருக்கிறது. பெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கிஇருக்கின்றன"

"300 கோடி நந்தகுமார். மொத்தமும் வீணா போயிரும் போலிருக்கு"

"பிரச்சனையை சமாளிச்சுதானே தீரணும்? நீ பிரச்சனை வந்தா ஓவரா குடிக்கிற. குடிச்சா பிரச்சனை தீருமா?"

"வேறு என்ன பண்ண சொல்ற?"

"இதுக்குன்னு சில ஆளுக இருக்காங்க.அவங்ககிட்ட போனா பணம்தான் செலவாகும். பிரச்சனையை அவங்க பாத்துப்பாங்க"

"யாரு அப்படிப்பட்ட ஆள்?"

"அவதார் பாபா. காசிமடத்தின் அதிபதி. டிஜிட்டல் சாமியார். பவர் புரோக்கர். பிரதமரே அவனை பார்த்தா எந்திரிச்சு நின்னு கால்ல விழுவாரு.ஒரு தடவை அவரை பார்ப்போமா?

"ஏற்பாடு பண்ணுங்க" என்றான் விஜய் மல்ஹோத்ரா.

அதே நியூசை பார்த்து கொண்டிருந்த டாக்டர் சம்பத்குமாரின் இதயம் ஒரு முறை நின்று துடித்தது. விசயம் இப்படி திசை திரும்பும் என்பதை அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு புது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்கு தெரியவில்லை.

சம்பத்குமார் ஜான் கிரேவருக்கு நடந்துகொண்டிருக்கும் விசயங்களை விளக்கி ஒரு ஈமெயிலை தயார் செய்ய ஆரம்பித்தார்.