ஐந்து வருசத்துக்கு முன்னால் கொன்ன ஒருத்தன் உயிரோடு வந்து உங்க முன்னாடி நின்னா எப்படி இருக்கும்.?எனக்கு குழப்பமாக இருந்தது.நான்தானே அவனைக் கொன்றேன்.அதைக் கண்டுபிடிக்காமலிருக்க அதே ஸ்டைலில் இன்னும் இரண்டு பேரை எந்த மோட்டிவும் இல்லாமல் கொன்று போலீசைக் குழப்பினேன்.இறந்த உடல்களில் வலதுபுறம் கத்திகுத்து காயங்கள் இருந்ததால் கொலையாளி இடதுகை பழக்கமுள்ளவன் என்று முடிவானது.நானும் இடதுகை பழக்கமுள்ளவன் என்பதால் சந்தேகம் என் மீதும் கவிழ்ந்தது.அதிர்ஸ்டவசமாக நகரத்தில் என்னை போலவே இடதுகை பழக்கம் கொண்டவர்கள் நான்குபேர் இருந்தனர்.இறுதிவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.அவனை நான் ஏன் கொன்றேன்? அவன் என் தங்கையை காதலித்தான்.
என் குடும்ப கவுரவம்,பெருமைகளை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை.என் தங்கையோ காதல் மயக்கத்தில் காது கேளாதவளாக இருந்தாள்.அவனை தனியே அழைத்து பணம் தருகிறேன் என் தங்கையை விட்டு விலகி விடு என்று எச்சரித்தேன்.அவன் எதையும் கேட்கிற நிலையில் இல்லை என்பது புரிந்தவுடன் அவன் கதையை முடித்தேன்.அவனது உடலில் ஒன்று என்ற எண்ணை எழுதினேன்.போலீஸ் என்னை பிடித்து விடுவார்கள் என்பதால் தேவையில்லாமல் இரண்டு கொலைகளை செய்தேன்.இதை தெரிந்து கொண்ட என் தங்கையையும் நான்காம் எண்ணுக்குப் பலியாக்கினேன்.சொத்தெல்லாம் எனக்கு வரும் என்ற சுய ஆதாயமும் ஒரு காரணம்.அவளது மரணம் போலீசின் சந்தேக வளையத்திலிருந்து என்னை வெளியேற்றியது.
இரவு நேர கனவுகளில் அவன் என்னை பயமுறுத்த ஆரம்பித்தான்.இரவுகளிலும்,இருளிலும் அவன் தென்படலானான்."என் வாழ்க்கையை திருப்பி கொடு."இது காதருகில் கேட்கும் அவனது குரல்.!
சைக்காலாஜிகல் டாக்டரோ இல்யூசன் என்று சொல்லி மருந்துகளை கொடுத்தார்.ஒரளவு நான் அமைதி கொள்ளும் போது அதைக் கெடுக்க அவனைப் போன்ற உருவத்தை கொண்ட இவன் இந்த நகரத்திற்கு குடி வந்தான்.அவனைப் பார்க்கும் போதெல்லாம் வேர்த்து விருவிருத்துப் போவேன்.என்னால் இருவருக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.இவனையும் கொன்றால்தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்.இதோ கிளம்பி விட்டேன் ஐந்தாம் எண்ணை அவன் உடலில் பொறிக்க.!
படுக்கையிலிருந்த அவனை குத்திக்கிழித்த போது எல்லா லைட்டுகளும் எரிந்தன.படுக்கையிலிருந்தது டம்மி பொம்மை.அதிர்ச்சியுடன் திரும்பிய போது இன்ஸ்பெக்டர்,அவன்,சைக்காலாஜிகள் டாக்டர் மூவரும் நின்றிருந்தனர்.எப்படி கண்டு பிடித்தார்கள் என்னை.?
இன்ஸ்பெக்டர் சிரித்தார்.
"எப்படி கண்டு பிடிச்சேன்னு பாக்குரியா.?இதோ ஒன்னாம் நெம்பர்காரனுடைய மோதிரமும்,உன் தங்கையின் கையிலிருந்த மோதிரமும் ஒரே மாதிரி இருந்ததை விசாரிக்கப் போய் காதல் விவகாரத்தை கண்டு பிடிச்சேன்.இன்னைக்கு தேதியில் நகரத்தில் இருக்கும் ஒரே இடதுகையன் நீ மட்டுமே.!மத்தவங்களை வெளியூருக்கு அனுப்பி விட்டோம்.இதோ இவன் அவனைப் போலிருக்கும் இவன் அவனது உறவுக்காரனே.!டாக்டர் ஹிப்னாடிசம் பண்ணும்போது இந்த கொலை விவகாரத்தை உளறிவிட்டாய்.!அவர் என்னிடம் சொன்னதன் பேரிலேயே இந்த செட்டப்புடன் ரெடியாக இருக்க முடிந்தது.போகலாமா ஸ்டேசனுக்கு.!"
நான் எனக்கான தண்டனை தளம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இன்ஸ்பெக்டர் லாக்கப்பில் என்னை பூட்டி வைத்து விட்டு வெளியேறினார்.நான் வெற்று சுவரை வெறித்துக் கொண்டிருந்த போது அவன் சுவற்றிலிருந்து உருப்பெற்று வந்தான்.மூச்சு விடும் தூரத்தில் நின்றவன் "என் வாழ்க்கையை திருப்பி கொடு."என்றான்.என் அலறல் சுவர்களில் எதிரொளித்து திரும்பலாயிற்று.
சனி, 26 செப்டம்பர், 2015
அவனும்,இவனும்.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக