வெள்ளி, 11 செப்டம்பர், 2015

மாண்டவன் மீண்டான்.!

நான் பெரிசின் வீட்டை அடைந்த போது மணி பத்து.இங்கு பெரிசென்று நான் செல்லமாக குறிப்பிடுவது துரைசிங்கத்தை.போலீஸ் டிபார்ட்மெண்டின் நெ.ஒன் துப்பறியும் நிபுணர்.எந்த கேஸையும் எளிதில் கண்டுபிடித்துவிடும் உடம்பெல்லாம் மூளை உள்ள ஆசாமி.ஆள் ஒரு டைப்பான ஆள்.என்னைத்தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஆள்.சில சமயம் என்னாலும் புரிந்து கொள்ளமுடியாத ஆசாமிதான்.நான் கதவை தட்டு தட்டு என்று தட்டினேன்."யோவ் பெரிசு.!மணி பத்தாச்சு.!இன்னுமாய்யா தூங்குற? "

"கதவ உடச்சிராதே.!"என்றபடி வந்து கதவை திறந்தது பெரிசு.

"அப்படியே கன்னை நெத்தியில வைச்சு சுட்டா என்ன பண்ணுவே.?"
"சினைபன்னி மாதிரி நடக்கிற உன் ஷி சத்தம் நீதான் வர்ரங்கிறதை சொல்லீருமே.!காலையில உன் மூஞ்சியில முழிச்சிருக்கிறேன்.என்னாவப் போவுதோ.!"
"எல்லாம் நல்லாத்தான் நடக்கும்.இன்னைக்கு ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்கிற.?"
"நைட்டு கொஞ்சம் சரக்கு ஒவரா போயிருச்சுடா.!சரி இன்னைக்கு என்ன கேஸ்.?"
"சொல்ரேன்.முதல்ல குளிச்சு ரெடியாகு.!பெரிசு பாத்ரூமிற்குள் போய் கதவை சாத்திக்கொண்டுவிட்டது.ஏதேதோ வினோத சத்தங்கள் கேட்டு ஒய்ந்த பின் பெரிசு வெளியே வந்து டிரஸ் பண்ணத்துவங்கியது.கதவை யாரோ தட்டினார்கள்.நான் கன்னை எடுத்துக்கொண்டு கதவை திறக்கப்போனேன்.பெரிசு பகபகவென சிரித்துவிட்டு."ஒட்டல்ல இருந்து பையன் சாப்பாடு கொண்டுவந்திருக்கிறான்.கன்னை பாத்து காய்ச்சல் வந்துரப்போகுது.!"என்றது.திறந்த போது பையன் டிபன் கேரியருடன் நின்றிருந்தான்."மதியம் எதுவும் வேண்டாம்.!"என்று சொல்லிவிட்டு கேரியரை டைனிங்டேபிளில் விரித்தது.
"சாப்பிடச் சொல்ல மாட்டியா?"

"நீ வரும்போதே சாப்பிட்டிருப்பாய்.!"சரி கேஸை சொல்லு.!சாப்பிட்டுகிட்டே கேட்கிறேன்.!"
"நானும் சாப்பிட்டுகிட்டே சொல்ரேன்.என்னை பாக்க வைச்சு தின்னா உனக்குத்தான் வயிறு வலிக்கும்!"

"ரொம்பத்தான் அக்கரை.!பசிக்குதுன்னு சொல்லிட்டே திங்கலாம்.!சரி சொல்லு.!"
"டிரக் பெடலிங் மாணிக்கம் மூணு மாசத்துக்கு முன்னாடி கொல்லப்பட்ட கேஸ்.!போதை மருந்து கடத்தி விக்கிரது அவனோட வேலை.!மூணு மாசத்துக்கு முன்னாடி அப்படி கடத்திட்டு வரும்போது அவன் காரை மறிச்ச நாலு பேரு அவனை சுட்டுக் கொன்னு பக்கத்துல ஒடுன ஆத்துல தூக்கிப் போட்டுட்டானுக.!இதுல கண்டு பிடிக்க என்ன இருக்குன்னு நம்மகிட்ட அனுப்பி இருக்காங்க.!"

"அதை நான் கடைசில சொல்ரேன்.இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கே.?"

"என்னது.?"

"சுட்டுக்கொன்னவனுக எதுக்காக ஆத்துல தூக்கிப் போடனும்.!"
நான் யோசிக்க ஆரம்பித்தேன்.கையை கழுவிவிட்டு வந்த பெரிசு கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.ஒரு போட்டோவை தனியாகப் பிரித்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு "இதை பார்த்தால் என்ன தோனுது.?"
காரின் உள்ளே தோட்டாக்கள் தெறித்து ரத்தமயமாகி இருந்த போட்டோ அது.
"எனக்கெதுவும் தோணலை.!உனக்கு? "
"அன்னைக்கு பத்து கோடி ரூபாய்க்கு சரக்கை கொண்டு வந்திருக்கிறான்.சுட்டுக்கொன்னவனுக காரில் சரக்கிருக்கான்னு ஏன் சீட்டை கிழிச்சு செக் பண்ணலை.!சீட் மேல இருக்கிற துண்டு வித்தியாசமா இருக்கே.!"

மூணு போட்டோவை எடுத்து டேபிளில் போட்ட பெரிசு "இந்த போட்டோக்களுக்கு விடை தெரிஞ்சா கேஸ் முடிந்து விடும்.!"

"என்ன தெரியனும்.!

"செத்தவனை தர தரன்னு சேத்துல இழுத்துட்டு போய் ஆத்துல தள்ளியிருக்காங்க.!செத்தவனோட வெயிட் 120 கிலோ.அவனை இழுத்துட்டு போனவனுக வெயிட் 80 கிலோன்னு வைச்சுகிட்டாலும் உடம்பின் மேல் பாகம் 60கிலோ.அதை இரண்டு பேருக்கும் சரி பாதியா பிரிச்சா தலைக்கு முப்பது கிலோ.!எண்பது.+முப்பது :நூத்திபத்து கிலோ.ஆனா பதிஞ்ச ஷி அடையாளம் நடுவுல நாலு இஞ்ச்  இறங்கியிருக்கு.!மத்த ரெண்டு பேரோட ஷி தடம் இரண்டு இன்ச்தான் இறங்கியிருக்கு.!

"அப்படின்னா என்ன நடந்திருக்கும்னு நினைக்கிறாய்.?"

"ஷிவை கழட்டு.!"புரியாமல் எதுக்கு என்றேன்.
"புரியர மாதிரி சொல்ரேன்.!"
கழட்டிய ஷிவிற்குள் ஒட்டடை குச்சியை சொருகி அக்குளில் வைத்துக்கொண்டு அதே போல் மற்றோன்றையும் செய்து அக்குளில் வைத்துக்கொண்டு கால்களை தரையில் துவள விட்டபடி பின்னோக்கி நடந்து காட்டியது.
"அப்படின்னா மாணிக்கம் சாகலையா.?"
"இல்லை.!பத்து கோடி ரூபாய் சரக்கை ஆட்டையப் போட்டுட்டு எதிரிகள் சுட்டுக்கொன்னமாதிரி செட் பண்ணிட்டு தலை மறைவாயிட்டான்.அவன் பாடி இன்னும் நமக்கு கிடைக்கலைங்கிறதை நீ யோசிக்கனும்.!"ஒவ்வொரு குச்சியிலும் ரெண்டு ஷுவை கட்டியிருக்கான்.ஆனா இழுத்துட்டுப்போன டைரக்சனுக்கு சம்பந்தமில்லாம இரண்டு காலடித்தடம் இருக்க இதுதான் காரணமா இருக்கனும்.சுட்டுட்டு துண்டை சீட் மேல போட்டதுதான் அவன் செய்த ஒரே தப்பு.!"
ஆகா என்ன ஒரு டிவிஸ்ட்.!இதுக்குத்தான் பெரிசு வேணும்கிறது.!
"நாலு துப்பாக்கிய கொண்டு போய் வெவ்வேறு இடத்துல நின்னு காரச் சுட்டிருக்கான்.தன்னுடைய ரத்தத்தை கார் முழுக்க தெளிச்சிருக்கான்.கடைசில துண்டை சீட்ல போட்டு மாட்டிகிட்டான்.துண்டுல ஒரு தோட்டா கூட பாயவில்லை.!கவனிச்சியா.!"

"பார்த்தேன்.!"

"அப்ப மாணிக்கம் சாகலை.!உயிரோடதான் இருக்கானா.!"

"அவன் அட்ரஸ் வேணுமா.?"

"அந்தளவுக்கு கண்டபிடிச்சாச்சா?"

"சிங்கம்.!துரை சிங்கம்.!மீசையை முறுக்கியவரை பார்க்க சற்று பொறாமையாகத்தான் இருந்தது.
"ஆமா.!இந்த மாணிக்கம் ஏன் எல்லா போட்டோவுலயும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கான்.!"
"அவனுக்கு மாறுகண்ணுப்பா.!அதை மறைக்க கூலிங்கிளாஸ் போடுரான்.!அடுத்தது எங்க போறோம்.?"
"மாணிக்கம் பொண்டாட்டிய பாக்க போறோம்.!இருப்பா பாடிஸ்பிரே அடிச்சிட்டு வர்ரேன்."!
"அவ புருசன் உயிரோட இருக்கான் பெரிசு.!"

"பாத்து ரசிக்கவும் தடாவாடா.!"

இருவரும் காரில் கிளம்பினோம்.ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காரை நிறுத்தச்சொன்ன பெரிசு."மாணிக்கம் புள்ளைக்கு எதாவது வாங்கிட்டுப் போவோம்.!"நீ போய் வாங்கிட்டு வா.!நான் வெயிட் பண்ரேன்."

"யோவ்.!இதெல்லாம் ரொம்ப ஒவரு.!நாம விசாரணைக்கு போரோம்.!அந்த நினப்பு இருக்கா.?"

"இதுவும் விசாரணையின் ஒரு அங்கம்தான்.!நீ போய் வாங்கிட்டு வா.!"
நான் பிஸ்கெட்,பழங்களை வாங்கிக் கொண்டு வரும்போது பெரிசு யாரிடமோ போனில் பேசிவிட்டு அணைத்தது.
"அந்தப்பக்கம் போக விட்டுட்டு இந்தப் பக்கம் யாருக்கு போன் பண்ணுகிறாய்.?"
"அதெல்லாம் ரகசியம்."என்று சிரித்தது.மாணிக்கத்தின் வீட்டில் அவன் மனைவியை நான் விசாரணை செய்து கொண்டிருக்க,பெரிசு அவன் மகளை "எம்பேத்தி மாதிரியே இருக்காளே "?என்று கொஞ்சிக் கொண்டிருந்தது.மாணிக்கத்தின் மனைவியை பெரிசு திரும்பிக்கூட பார்க்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.திரும்பி வரும்போது "விசாரணையில் எனக்கெதுவும் கிடைக்கவில்லை.!உனக்கெதாவது கிடைச்சுதா."?
பெரிசு கையை விரித்துக்காட்டியது."நெறயா தகவல் கிடைச்சுது.!
"அந்த சின்ன புள்ளைகிட்டயா.?"
"குழந்தைகள் பொய் பேசாது பையா.!"
இடையில் வந்த ஒரு போனை எடுத்துப்பேசிய பெரிசு ஒரு அட்ரஸை குறிப்பிட்டு அங்கே போகச் சொன்னது.அந்த அட்ரஸிற்கு அருகாமையில் காரை நிறுத்தச்சொன்ன பெரிசு காரை விட்டு இறங்கி செல்லில் யாரிடமோ பேசத்தொடங்கியது.அடுத்த பத்தாவது நிமிடம் ஒருவன்கூலிங்கிளாஸ் அணிந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி பெரிசை நெருங்கினான்.அவன்கையில் விலங்கை மாட்டி காரினுள் தள்ளிய பெரிசு."கேஸ் முடிஞ்சுது.!காரை எடு போகலாம்.!"என்றது.
"யோவ்.!நமக்குத்தேவை மாணிக்கம்.இவன் யாருய்யா.!"

"அடேய் லூசு.!இவன்தாண்டா மாணிக்கம்.!பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி முகத்தை மாத்தியிருக்கான்.!மூஞ்சை மாத்தினவனால கண்ணை மாத்த முடியலையே.!இவன் பொண்ணு உண்மையை சொல்லிருச்சு.!அப்பா வேற மாதிரி இருந்தாருன்னு சொல்லும்போதே கணிச்சேன்.நாம விசாரிச்சிட்டு போனவுடனே  இவன் பெண்டாட்டி இவனுக்கு போன் பண்ணீட்டாள்.அதை நம்மாளுக டிரேஸ் பண்ணி இவன் அட்ரஸையும்,போன் நெம்பரையும் கண்டு பிடிச்சி எனக்கு சொன்னாங்க.!நான் இவனுக்கு போன் பண்ணி நீ ஆத்துல என்ன பண்ணுணேன்னுதெரியும்!நீ உயிரோட இருக்கிறது எனக்குத்தெரியும்.வெளிய சொல்லாம இருக்கனும்னா பணம் வேணும்னு மிரட்டுனேன்.எங்கிட்ட டீல் பேச வந்து மாட்டிகிட்டான்.!"

"பத்து கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டுத்தான் செத்த மாதிரி நாடகம் ஆடினேன் "என்றான் மாறுகண் மாணிக்கம்.

போலீஸ் நிலையத்தை நோக்கி வண்டி ஒடத்தொடங்கியது.பெரிசு பைலை முகத்தில் மூடியபடி தூங்கத் தொடங்கியது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக