வியாழன், 8 அக்டோபர், 2015

தீர்ப்பு.!

ஒரு வழக்கு உங்கள் முன் வருகிறது.இரண்டு பேர் பக்கமும் நியாயம் இருப்பது போல் தோன்றுகிறது.என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்கள் என்று ஊரே எதிர்பார்க்கும்போது என்னசெய்வீர்கள்?
அந்த தயாரிப்பாளர் தீர்ப்பே சொல்லாமல் கேஸை தள்ளுபடி செய்தார்.ஆம்.!வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜெயந்திமாலாவுக்கும்,பத்மினிக்கும் போட்டி நடனமும்.,பாட்டும் இடம் பெற்றது.வீரப்பாவின் "சபாஸ்.!சரியான போட்டி.!"என்ற வசனம் உண்மையானது.இரண்டுபேரூமே நாட்டியத்தில் பேர் வாங்கியவர்கள்.தோற்க யாருக்கும் சம்மதமில்லை.போட்டி நடனம் கவுரவ பிரச்சனையாக மாறிவிட்டது.தயாரிப்பாளருக்கோ நெருக்கடி அதிகரித்தது.போட்டி நடனம் என்றதால் ரசிகர்கள் எதிர்பார்பப்பும் அதிகரித்தது.பார்த்தார் வாசன்.பாடலின் இறுதியில் சாண்டலியர் விழுந்து நொறுங்கி நடனம் முடிவடைவதாக காட்சியை முடித்தார்.அமைதிபடையின் "பேச்சு மாறி போச்சுன்னா பழசு மறந்து போயிருமாடா மணியா.?"காட்சி நினைவுக்கு வருகிறதா.?பேச்சுக்கு பதிலாக காட்சியை வைத்து தீர்ப்பை சொல்லாமலே தப்பித்தார் வாசன்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக