"அஷ்டவக்ரா ( சமஸ்கிருதம் : अष्टावक्रः , IAST : Aṣṭāvakraḥ ) அல்லது Ushtaavukruhu இந்து மதத்தில் ஒரு மரியாதைக்குரிய வேத முனிவர் . அவரது பெயரின் அர்த்தம் "எட்டு குறைபாடுகள்", அவர் பிறந்த எட்டு உடல் குறைபாடுகளை பிரதிபலிக்கிறது. அவரது தாய்வழி தாத்தா வேத முனிவர் ஆருணி , அவரது பெற்றோர் இருவரும் அருணியின் பள்ளியில் வேத மாணவர்கள். அஷ்டவக்ரர் படித்து,!w முனிவராகவும், இந்து இதிஹாச இதிகாசங்கள் மற்றும் புராணங்களின் புகழ்பெற்ற பாத்திரமாகவும் ஆனார்"
வாஷிங்டன்Dc.
அமெரிக்காவின் இன்றைய தலைநகரம்.அமெரிக்கவிடுதலைக்கு முன்பாக Distric of columbia என்று அழைக்கப்பட்ட மாகாணம் அமெரிக்காவின் முதல் அதிபரான!!!!! ஜார்ஜ்வாஷிங்டனுக்கு மரியாதை தரும் விதமாக வாஷிங்டன்என்று பெயரிடப்பட்டது.அந்தவாஷிங்டனில் ஒரு அதிகாலை.rrrrr,&யில் இந்த கதை ஆரம்பமாகிறது.
drfdefinitely!
Tzooo
நீங்கள் ஜான் கிரேவரை டிவி , பத்திரிக்கை என்று ஏதொவொன்றில் உலtfகின் டாப் 5 மில்லியனர்களில் ஒருவனாக பார்த்திருப்பீர்கள். போர்ப்ஸ் பத்திரிக்கை வருடாவருடம் வெளியிடும் டாப் டென் மில்லியனர்களில் முதல் ஐந்து இடங்களில் மாறிமாறி இடம்பிடிப்பவன். சில வருடங்கள் நெம்பர் ஒன்னாகவும் இருந்திருக்கிறான். கம்யூட்டர் வித்தகனாக தன்னுடைய தொழிலை ஆரம்பித்த கிரேவர் போட்டிக்கு ஆள் இல்லாமல் மோனோ பாலியாக பணத்தை குவித்து நெம்பர் ஒன் மில்லியனர் ஆனதும் அவனது கிரேவர் பவுண்டேசன் உலகம் முழுக்க இருக்கும் அறக்கட்டளைகளுக்கு பணத்தை வாரி இறைப்பதும் பழைய கதை. ஏழைகளுக்கு உதவுவது எல்லாம் மேற்பூச்சு தான். ஜெனடிக் இன்ஜினியரிங், குளோனிங், பயோ வெப்பன்ஸ், ஸ்டெம் செல் ஆய்வு என்று சட்டத்திற்குட்பட்ட சட்டத்திற்குட்படாத செயல்களில் ஈடுபடும் லேபுகளுக்குddwrryrdrrfrrr மறைமுகமாக பணத்தை கொடுத்து கொண்டிருந்தான்.
கம்யூட்டரில் அவனுக்கு போதுமான பணம் கிடைத்தாலும் கிரேவர் போதுமென்று ஓய்வதாக இல்லை. தன் இடத்தை தக்கவைத்து கொள்ள வேண்டுமானால் முன்பைவிட அதிகமாக ஓடவேண்டும் என்று அவனுக்கு தெரியும். அப்படி ஓட மெடிக்கல் இண்டஸ்டிரீஸ்தான் தன்னுடைய ஓடுகளம் என்று அவன் முன்பே முடிவு செய்து வைத்திருந்தான். வெவ்வேறு பினாமி பெயர்களில் உலகத்தரமான லேபுகள்அவனுக்காக செயல்பட்டு கொண்டிருந்தன.
சைனாவில் ரகசியமாக செயல்பட்டு கொண்டிருந்த அவனது லேப் கடந்த பத்தாண்டுகளாக புது விதவைரங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருந்தது. கிரேவரிடம் ஒரு ரகசிய திட்டம் இருந்தது. உலகத்தையே ஒரு பெண்ட மிக்கிற்குள ஆழ்த்துவது அதன் மூலம் பணம் சம்பாதிப்பது. 700 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த பூமி கிரகத்தில ஒரு நோயை பரப்பி அதற்கு தடுப்புமருந்தை நூறு ரூபாய்க்கு விற்றாலும் வரும் தொகை எங்கோ போய்விடும். சாதாரணமாக கிரேவர் குனிந்து தன்னுடைய ஷிவை கட்டும் நேரத்திற்குள் அவனது கணக்கில2850 ரிங்கிட்டுகள் ஏறி இருக்கும். அப்படி இருந்தும் அவனது பண வெறி அடங்கவில்லை. அவனது கனவை நிறைவேற்றுவதில் அவனது லேப்கள் தொடர்ந்து தோற்று கொண்டிருந்தன.
அவனது லேப்கள் உருவாக்கி இபோலா, நிபா, ஜிகா, சார்ஸ், போன்றவைரஸ்கள் அவன் எதிர்பார்த்ததை போல் பெண்ட மிக்கை உருவாக்காமல் எண்டமிக், எபிட மிக் என்ற இரண்டு வகைகளில் அடங்கி காணாமல்போனதில் அவனுக்கு ஏமாற்றம்தான். ஆனால் அதிர்ஷ்ட தேவதைஅவனை 2000 ம் ஆண்டில் கட்டி அணைத்தாள்.
சைனா லேபிலிருந்து எதிர்பாராமல் கசிந்தடி வைரஸ் அவனது கனவை நிறைவேற்றியது. எதிர்பாராமல் வைரஸ் கசிந்துவிட்டதால் அவனுக்கு மாற்று மருந்தை கண்டுபிடிக்க ஆறு மாதமாகிவிட்டது. அந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட மனித மரணங்கள் தன்னுடைய தடுப்புமருந்தை என்ன விலை கொடுத்தாவது வாங்க வைக்கும் என்று அவனுக்கு தெரியும். உயிர் பயத்தை காசாக்குவது எப்படி என்று அன்று தான் ஜான் அனுபவபூர்வமாக தெரிந்துகொண்டான். குவிந்த பணத்தை எண்ணமுடியாமல் அவனது பணம் எண்ணும் இயந்திரங்கள் திக்கி திணறி ஜாமாயின.
அதே பணம் அவனுக்கு வேறுவிதமான பிரச்சனையை கொண்டுவந்தது. ஏராளமான வரி கட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோதுதான் ஜான் சிந்தித்தான். தொழில் துவங்கதான் கஷ்டப்பட்டபோது உதவி செய்யாத அரசாங்கம் சம்பாதிக்கும்போது சாக்குபையோடு பங்கு கேட்டுவருவதா? என்று யோசித்தவன் தன்னுடைய மனைவி மரியாவை விவகாரத்து செய்துவிட்டு சொத்தில கணிசமான பாகத்தை கைமாற்றினான். விவாகரத்து என்பது வெறும் கண்துடைப்பு வேலை என்று அவனுக்கும் தெரியும். அரசுக்கும் தெரியும். அவனது கைகள் எவ்வளவு தூரம் நீளும் என்று அனைவருக்கும் தெரியும்
இவ்வளவு பணத்தை சம்பாதித்தபின்பு ஜான் கிரேவருக்கு மரணபயம் வந்துவிட்டது. இவ்வளவு பணத்தை சம்பாதித்து எவனுக்கோ கொடுத்துவிட்டு சாவதா? தன் மகன் தன்னைப்போல் திறமைசாலியாக இல்லாதுபோனால் என்னாவது? ஜாக்கிசானின் மகனைப்போல் ஊதாரியாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனை அரிக்க ஆரம்பித்துவிட்டது.இன்னும் சில பத்தாண்டுகளில் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகள் மூலம் மனிதனின் வாழ்நாள் நீடிக்கப்படலாம். அது வெல்லாம் கிரேவருக்கு போதாது. அவனது உள்ளத்தினஉள்ளத்தில ரகசியமாக ஒரு ஆசை ஒளிந்திருந்தது.அது சாகாவரம்.
அதற்கு இப்போதைய தொழில்நுட்பங்கள் ஒத்துழைக்காது. அதற்கு ஒரு மாற்றுவழியை அவன் கண்டுபிடித்து வைத்திருந்தான்.
இன்று செப்டம்பர் 20.அவன் தன் முன்னாள் காதலி அன்னாவை சந்திக்கும் நாள். வருடத்திற்கு ஒரு நாள் அன்னாவோடு தான் இருப்பேன் அதில் தலையிடக்கூடாது என்று திருமணத்திற்கு முன்பே அவன் மரியாவிடம் ஒப்பந்தம் செய்திருந்தான். அதேபோல் அன்னாவும் அவள் கணவனிடம் ஒப்பந்தம் செய்திருந்தாள். ஜானுக்கு டைவர்ஸ் ஆகிவிட்டாலும் இருவரும் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள். செப்டம்பர் 20 ன் முக்கியத்துவம் அவளுக்கு தெரியும். அதனால் அவள் நேற்றே அம்மா வீட்டிற்கு கிளம்பிவிட்டிருநதாள்.
ஜான் காலை கடன்களை முடித்துவிட்டு குளித்து உடைமாற்றி கிளம்பினான். காரை கிளப்பியபோது ஓடிவந்தபாடிகார்டுகளை தேவையில்லை என்று கையை காட்டினான்.
காரை உச்ச வேகத்தில் செலுத்தி அவன் அன்ன்னாவின் மாளிகையை நெருங்கினான்.அதுவும் அவன் பரிசாக கொடுத்ததுதான்.அவன் காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது காத்திருந்த அன்னா அவனை அணைத்துகொண்டாள்.
"காலேஜ்ல பாத்த மாதிரியே இருக்க " என்று சிரித்தான் ஜான்.
"நீ மாறிட்ட "
"ஆமா. முடி கொஞ்சம் கொட்டிருச்சு.நட டைமில்லை"
"நான் அதை சொல்லலை. உன் கேரக்டரை சொன்னேன்"
"அனுபவம்"
"தப்பு. பணம். அது தரும் திமிர்."
"அது தரும் தைரியத்தை மனிதர்கள் தருவதில்லையே? ஆமா மைக் எங்கே?"
"வழக்கம்போல் பசங்களுடன் தங்கச்சி வீட்டுக்கு போயிட்டார்"
"இந்த ஒப்பந்தத்தை பத்தி அவர் என்ன நினைப்பார்?,
"மரியா என்ன நினைக்கிறாளோ அதையேதான்"
"ஆனா நாம நிஜமா அப்படி இல்லை. எனக்கு உன்னை பிடிக்கும். இந்த உகைத்துல நான் உன்னை மட்டும்தான் நம்புறேன். நீ என்னுடைய மறைமுக வணிக கூட்டாளி என்பது உலகிற்கு தெரியாது. உலகம் நம்மை பத்தி என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்லை."
"மீ டூ. என்ன சாப்பிடுற? காபி? டீ?"
"காபி. சாப்பிட ஏதாவது ரெடி பண்ணு. நான் கான்பரன்ஸ் ஹால்ல இருக்கேன்"
"திறந்து தான் இருக்கு.போ.வர்றேன்"
ஜான்கான்பரன்ஸ் ஹாலில் நுழைந்து காலியான ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.
அவனுக்கு எதிரே இருந்த கம்யூட்டரை இயக்கி உயிர்பெறவைத்தான்
லைவில் சில பேர் திரையில் தோன்ற ஆரம்பித்தனர். அவர்கள் ஜானால் ஆதாயம் அடைந்த வர்கள்.அவர்களால் ஜானும் ஆதாயம் அடைந்திருக்கிறான்
"ஹேய். ஹவ் ஆர் யூ?" என்றான் ஜான்.
"பைன். உன்னுடைய T வைரஸ் இன்னும் கல்லாவை நிரப்பி கொண்டிருக்கிறது. 2015 ல் உலகம் ஒரு பெண்ட மிக்கிற்கு தயாராக வேண்டும்னு நீ பேசியபோது உன்னை முட்டாள் என்று நினைத்தேன். அப்பபுரியலை இப்ப புரியுது" என்றார். திரையில் ஒருவர்.
"அடுத்தது. என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறாய் ஜான், ?" என்றார் இன்னொருவர்.
"சொல்கிறேன்." என்றான் ஜான்.
அன்னா கொண்டுவந்த காபி கோப்பையை எடுத்து கொண்ட ஜான் "கதவை பூட்டிவிட்டு போ அன்னா" என்றான்.
அவள் வெளியேறியதும் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டது.
"ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்"
"கேள்"
"1940 லிருந்து இன்றுவரை உலகம் பல மடங்கு வேகத்துல முன்னேறி போயிட்டிருக்கு.உலகம் தோணினதுலருந்து இவ்வளவு வேகமா வளர்ச்சி நடந்ததேயில்லை.ஆதி மனிதனுக்கு சக்கரத்தையும் தீயையும் கண்டு பிடிக்கவே சில நூற்றாண்டுகள் பிடித்தது.ஆனால் 18, 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு தொழில்நுட்பம் வேகமா வளர ஆரம்பித்து விட்டது.காரணம் என்னன்னு தெரியுமா? "
"1947ல்ல ராஸ்வேல்ல நடந்த பறக்கும் தட்டு விபத்துல தப்பி பிழைத்த ஏலியன்களை நம்ம கவர்மெண்ட் சிறை பிடித்ததாகவும் அவர்களோடு ஐசனோவர் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டுதான் இன்றைய தொழில்நுட்பங்களை பெற்றார்னு ஒரு தியரி இருக்கே? "
"ஏரியா 51.அதை இன்னுமா நம்புறீங்க? அது ஒரு கான்ஸ்பயரி தியரி.அங்கே பப்ளிக் போக முயற்சி பண்ணியும் அது முடியலை.அது ராணுவ கேந்திரம்னுதான் நான் நினைக்கிறேன்.செவ்வாய் கிரகத்திலும் 24 மணிநேரம்தான்.பூமி மாதிரி.அதனால மனிதனோட பூர்வீகம் செவ்வாய் கிரகமா இருக்கலாம்னு கூட ஒரு தியரி இருக்கு.எல்லாமே காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.நம்புகிறவர்கள் நம்பட்டும்.உண்மை கற்பனையை விட பயங்கரமாக இருக்கும்! "
"அப்ப இந்த வளர்ச்சி எப்படி சாத்தியம்.?"
"நிறைய பொருள்கள்தான் காரணம்.ஆதிமனிதனிடம் பொருள்கள் அதிகம் இல்லை.18 ம் நூற்றாண்டில் நிறைய பொருள்கள் இருந்தன.அவற்றை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து புது பொருள்களைஉருவாக்க முடிந்தது.உதாரணமாக செல்போன்.அதில் எத்தனை பர்பஸ்கள் ஒளிந்திருக்கின்றனவென்று பாருங்கள்.காலண்டர்,டைம்,ஸ்டாப் வாட்ச்,போன்,பிங்கர் பிரிண்ட்,பேஸ்லாக்னு பல கருவிகளின் வேலையை ஒரே கருவி குறைத்து விட்டது.இந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் மனிதனின் மூளை சுருங்க ஆரம்பித்திருக்கிறது! விளைவு அல்சைமர்.இதுக்கு முன்னாடி இந்த வியாதி இருந்திருக்கலாம்.நாம இப்பத்தான் கவனிக்க ஆரம்பிச்சிருக்கோம்.!"
"உங்க தியரி வித்தியாசமா இருக்கு! "
"மனுச மூளை தன்னோட பத்து சதவீதத்தை பயன்படுத்திதான் இத்தனை கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது.அதே மூளை நூறு சதவீதம் வேலை செய்தால் என்னாகும்? "
"என்னாகும்? "
"புதிதாக ஒரு மனித இனம் உருவாகும்.சூப்பர் பவர் ஹியூமன்! குரங்கிலிருந்து மனுசன் பொறந்தான்.மனுசனிலிருந்து Sph பிறக்க போகிறான்."
"நம்மைவிட அறிவுள்ளவன் நம்மை அழித்து விடுவான்! "
"குடும்பம்,அன்பு,பாசம்,காதல்னு அவனை கட்டி போட நிறைய விசயங்கள் இருக்கின்றன.எமோசன் பொதுவானது! "
"இதுக்கு மெடிக்கல் கவுன்சில் அனுமதி தருமா? குளோனிங்கே தடை செய்யப்பட்டிருக்கிறதே? "
"நான் அதை இங்கே செய்யவில்லை.நிறைய பிரச்சனை வரும்.அதனால் இந்தியாவை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.சிக்கல் என்னன்னா அந்த அறிவுஜீவி குழந்தைக்கு உடல் ஒத்துழைப்பதில்லை.ஊனமாக பிறந்து இறந்து விடுகின்றன.என் மருந்தின் தரத்தை கூட்டி கொண்டிருக்கிறேன்."
"எடிசனுக்கு காது கேக்காது.ஸ்டீபன் ஹாப்கிங்ஸ்க்கு உடல் ஒத்துழைக்காது.அப்படி குறையோடு இருந்து விட்டு போகட்டுமே? "
"நோ.!எனக்கு குறையில்லாத மேதாவி குழந்தை வேணும்.இதுவரை ஆறு குழந்தைகள் பிறந்து செத்திருக்கின்றன.ஏழாவது குழந்தை கர்ப்பத்தில் இருக்கிறது.சொற்ப குறைகளையும் நிவர்த்தி செய்து விட்டால் எட்டாவது குழந்தை Sphஆக பிறந்து விடும்.புது மனிதன்.புது இனத்தின் முதல் குழந்தை."
"இந்த ஆபரேசனுக்கு என்ன பெயர்? "
"ஆப்ரேசன் அஷ்டவக்ரன்.இந்திய தொன்மங்களில் உள்ள ஒரு ஞானியின் பெயர். "
"இதோட நோக்கம்? "
"சாகாவரத்திற்கான வேலைகளை துரிதப்படுத்துவது.!ஐம்பதாண்டு தொழில்நுட்ப வளர்ச்சியை ஐந்தாண்டுகளில் கொண்டு வருவது.இவர்களுக்கு எதையும் கற்றுதர வேண்டியதில்லை.தானாகவே எல்லாவற்றையும் கற்று கொள்வார்கள்.ஒரு Sph பத்து மனித மூளைகளுக்கு சமம்.!"
அறையில் மவுனம் நிலவியது.
"டன்! "என்றார்கள் ஒருமித்த குரலில் அவர்கள்.!
அவர்களின் திட்டத்தை குலைக்க சாதாரண பிக்பாக்கெட் திருடன் ஒருவனால் முடியும் என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை!