திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ரகசிய மருந்து

"என்ன காந்திபாபு! இந்த தடவை என்ன செய்ய போகிறாய்? "என்றான் பாண்டி.

சிகரெட் குடித்தபடி டி.வி பார்த்துக் கொண்டிருந்த காந்திபாபு "சொல்கிறேன்! "என்றான்.எளிதில் மாட்டிக் கொள்ளாத குற்றங்களின் பிதாமகன்.பாண்டியும், சேகரும் அவனது கூட்டாளிகள்.இப்போது ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார்கள்.

"சேகர்! எனக்கு ஒரு மூணு சிம்கார்டு வேணும்! பேன்சி நம்பரா கடைசி நெம்பர் மட்டும் தொடர்ச்சியா முடிகிற மாதிரி! "

"புரியலை! தெளிவா சொல்லுப்பா! "என்ற சேகர் டீ சர்டை தலை வழியாக நுழைத்து கொண்டிருந்தான்.

"ம்! 98420 42235ன்னு ஒரு நம்பர் வாங்குனா அடுத்த ரெண்டு சிம்மோட கடைசி நம்பர்36,37 ன்னு முடியனும்.எந்த நெட்வோர்க்கா இருந்தாலும் சரி! "

"ஒன்னும் பிரச்சனையில்லை! நமக்கு தெரிஞ்ச கடைக்காரன் புரூப் இல்லாமயே தருவான்.!வாங்கிரலாம்! "என்றான் சேகர் டீ சர்ட் காலரை சரி செய்தபடி.

"ரைட்டு! பாண்டி நான் சொல்ரதை ஒரு பேப்பர்ல எழுது! "

"இருப்பா! "என்றவன் டேபிள் டிராயரை திறந்து பேப்பரும் பேனாவும் எடுத்தபடி "சொல்லுப்பா! "என்றான்.

"ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம தமிழ்ல எழுதிக்க!"

"தப்பிருந்தா திருத்திக்கலாம்! சொல்லுப்பா! "

தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தான் காந்திபாபு!

"வாலிப வயோதிக அன்பர்களே! துரித ஸ்கலிதம், உறுப்பு விரைப்பின்மை, விந்து முந்துதல், போன்ற பாலியல் குறைகளை நீக்கி நீண்ட நேர இன்பத்தை பெற இன்றே வாங்குவீர் காமா கேப்சூல்கள்! கொல்லிமலை சித்தர்களின் ஒலைசுவடியிலிருந்து திரட்டப்பட்ட மூலிகைகளின் தொகுப்பு காமா கேப்சூல்கள்! தமிழகமெங்கும் விநியோகஸ்தர்கள் தேவை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்! "

"பாண்டி எழுதிட்டியா! சேகர் வாங்கிட்டு வர்ர சிம் நெம்பரை அந்த இடத்துல எழுதிக்கலாம்! "

"எழுதிட்டம்பா! "என்று பாண்டி நீட்டிய பேப்பரை சரி பார்த்தவன் "ரைட்டு! ரெண்டு பேரும் கிளம்புங்க! முதல்ல சிம்ம வாங்குங்க! அப்புறம் தினதந்தி ஆபிஸ் போங்க! நல்ல கில்மா போட்டோ ஒன்னை செலக்ட் பண்ணி கலர்ல போட சொல்லுங்க! அப்பத்தான் அட்ராக்சனா இருக்கும்.படிக்க தூண்டும்! கன்னித்தீவுக்கு பக்கத்துல இரண்டு மாசத்துக்கு தொடர்ச்சியா வர்ர மாதிரி காண்ட்ராக்ட் சைன் பண்ணுங்க! பணம் குறைவாத்தான் கேப்பாங்க! "

"என்ன காந்திபாபு! என்ன ஐடியா இது! "

"செக்ஸ் பிரச்சனைக்காக மட்டும் 1857 கோடிரூபாய் நாட்ல செலவு பண்ராங்க! எல்லா சேனல்லயும் நைட் சிலாட் இதுதான் ஒடுது! அதை பேஸ் பண்ணி ஒரு ஐடியா! "

"நீ செஞ்சா சரியாத்தான் இருக்கும்! "

அவர்கள் கிளம்பினார்கள்.மூன்று மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் திரும்பி வந்த போது காந்திபாபு காத்திருந்தான்.
"நீ சொன்ன மாதிரி செஞ்சாச்சுப்பா! "

"ஓ.கே! டபுள் சிம்ல ஒன்னை தூக்கி போட்டுட்டு வாங்குன சிம்மை போடுங்க! நாளையிலிருந்து நிறைய போன் வரும்! புரபசனல் மாதிரி இங்கிலீஷ் கலந்து சார் போட்டு பேசுங்க! "

"ரைட்டு பாபு! மாத்திரைக்கு எங்க போறது? "என்றான் சேகர்.

"அதுவும் கொல்லிமலை மூலிகை வேற! "என்றான் பாண்டி.

"சித்த மருத்துவத்துல செடியை அரைச்சு டியூப் மாத்திரைல அடைக்கிறதை பார்த்திருக்கேன்.அதுக்கு லைசென்ஸ் தேவையில்லை.!அந்த மாத்திரை அட்டை தயாரிக்கிற மிஷின் ஒன்னை வாங்கரோம்.வைட்டமின் மாத்திரைய வாங்கி ரீபேக்கிங் பண்ணி காமா கேப்ஸ்யூல்னு விக்கரோம்! "

"சாப்பிட்டு நிக்கலைன்னா! "

"மனசுதான் செக்ஸுக்கு வேணும்.மாத்திரை வெறும் நம்பிக்கைதான்.மாத்திரையையூஸ் பண்ணும்போதே அனுமான் தாயத்து கட்டிய கோழை வீரனாக மாறியது போல்தான்.என்ன தாயத்து எப்பவும் தேவைப்படும்.அதே மாதிரி அவன் மாத்திரைக்கு பழக்கமாகிருவான்.மாத்திரை இல்லாம செக்ஸ் வைச்சுக்க முடியாத நிலைக்கு அவன் மனசு அடிமையாயிரும்.!"

"லாஜிக்கெல்லாம் ரைட்டுப்பா!ஒவ்வொரு மாத்திரையா வித்து எப்படிப்பா பணம் பண்ரது? "

"தமிழ்நாட்டுல முப்பது மாவட்டம் இருக்குன்னு வச்சிக்கலாம்.நம்ம மாத்திரைக்கு டீலரானா 20000 ரூபாய்க்கு மாத்திரை தருவோம்.20000ரூபாய் லாபமாக தருவோம்.கிட்டத்தட்ட டபுள் மடங்கு.கஸ்டமர் அட்ரஸ், போன் நம்பர் கொடுத்திருவோம்.மாத்திரையை டோர் டெலிவரி பண்ணி காசை எடுத்துக்க வேண்டியதுதான்.!"

"ஆன்லைன் டெலிவரி மாதிரி! "

"ஆமாம்.வைட்டமின் மாத்திரைக்கு 2000ரூபாதான் நாம செலவு பண்ணுவோம்.நம்ம அடக்கம் 18000.18000 *30 மாவட்டம் பெருக்கி பாரு! "

"லட்சத்துல வரும் போல இருக்கே! "

"எல்லா டீலருக்கும் அனுப்புற முதல் லாட்லயே 5,40000அடிக்க முடியும்! இங்கிலீஷ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்தா அதோட ரேஞ்ச் வேற! அதை அடுத்ததா பண்ணுவோம்! "

"மாட்டிட்டா? "

"வாய்ப்பேயில்லை! இதை வெளிய சொல்ல வெட்கப்படுவாங்க! மனைவிக்கே தெரியாமதான் இதை சாப்பிடுவாங்க! செக்ஸ் பிரச்சனைங்கிறது கடல் மாதிரி.ஒரே மாத்திரைல தீர்வு கிடைக்காது.மாட்டிகிட்டாலும் நல்ல வக்கீல் நம்மள காப்பாத்திருவாரு! "

அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு காலையில் முதல் போன் காலுக்காக காத்திருந்தனர்.
அடித்த போனை எடுத்த காந்திபாபு "ஹலோ! வெல்கம் டூ காமா கேப்ஸ்யுல் சார்! "

"நான் டேவிட்டுங்க! திருச்சியிலிருந்து பேசரேன்! இந்த மாத்திரைய பத்தி! "

"சார் சொன்னா நம்ப மாட்டிங்க சார்! சாகரதுக்கு முன்னாடி நம்ம டேப்ளேட்டை சாப்டிருந்தா சவப்பெட்டியை மூட முடியாது சார்! அந்தளவு பவர் சார்! "தொடர்ந்து காந்திபாபு பேசிக் கொண்டிருந்தான்.

அந்த அறை ரிங்டோன்களால் நிறைய ஆரம்பித்தது.#உண்மை சம்பவம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக