திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பெரிய ரகசியம்

ஏர்போர்ட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சிங்கப்பூர் விமானம் இறங்கியவுடன் இறங்கிய பாசென்ஜர் லிஸ்டை சரி பார்த்து கொண்டிருந்தான் கஸ்டம்ஸ் அதிகாரி அருண்.தோளை தட்டியவுடன் நிமிர்ந்தான்.உயரதிகாரி விக்னேஷ் விஷமச்சிரிப்புடன் சொன்னார்.”உன்னோட டுவின்ஸ் குரூப்பும் இதுலதான் வருது பையா! “என்றார்.
அருணின் முகத்தில் நூறு வாட்ஸ் பல்ப் வெளிச்சம் பரவியது.
“நிஜமாவா சொல்ரீங்க? “என்றான்.

“லிஸ்டுல பேர் இருக்கு பாரு! இந்த மூணு மாசமா நீ சரியில்லை.மேல பெருசா இருக்கிற பொண்ணுக லக்கேஜை ரொம்ப நொண்டுர! நொண்டுர மாதிரி ரொம்ப நேரம் நிக்க வைச்சு ரசிப்ப போல தெரியுது! “

“அப்படி இல்லை பாஸ்! “என்றான் அருண்.

“பாரு பையா! பெருசா இருந்தா நமக்குத்தான் கிளாமர்.அவங்களுக்கு ரொம்ப கஷ்டம்.மூச்சு விட முடியாது.நுரையீரல் உபாதை! ஹேப்படிஸ் பி ன்னு நிறைய பிராபளம்.பமீலா ஆண்டர்சன் கூட இதால சீக்கிரம் சாகப் போறதா கேள்வி! “

“இன்னைக்கு ஒரு முடிவுக்கு வந்துரும் எல்லாமே! “

கியுவின் கடைசியில் நின்றது மாலினியின் ஆக்சன் கேர்ள்ஸ் இசைகுழு! முழுதும் பெண்கள் நிறைந்த பாடல்குழு.எல்லோருக்குமே சொல்லி வைத்தது போல் பெரிய மார்பகங்கள்.அதனால் அருண் வைத்த பெயர் டுவின்ஸ் கேர்ள்ஸ்.அவர்களின் உடமைகளை பரிசோதிப்பதற்குள் நெளிந்து, வளைந்து, குனிந்து உடல் வெப்பநிலையை ஏற்றி விடுவார்கள்.சிங்கப்பூர், மலேசியா என்று அடிக்கடி பறந்து கொண்டிருப்பவர்கள்.
அரட்டையடித்தபடி வந்தவர்களில் மாலினி “ஹாய் ஆபிசர்! “என்று லிப்ஸ்டிக் உதடுகளில் புன்னகைத்தாள்.காற்றோட்டமாக திறந்து விடப்பட்டிருந்த அவள் டாப்ஸை பார்த்து எச்சிலை விழுங்கியவன் “இந்த டிரிப் எப்படி இருந்துச்சு! “

“உடம்பெல்லாம் வலிக்குது ஆபிசர்! “என்று நெட்டி முறித்தவளை பார்த்து உடல் உஷ்ணம் ஏறலாயிற்று.சூட்கேஸை திறந்து ஆராய்ந்தவன் அவளது ப்ராவை கையில் எடுத்தான்.”கிப்டா வேணும்னா வைச்சுக்க! நான் வேற வாங்கிக்கிறேன்! “என்று நக்கலடித்தாள்.எதையோ கூர்ந்து பார்த்த அருண் இண்டர்காமில் லேடி செக்யூரிட்டியை அழைத்தான். எட்டி பார்த்தவளை “மாலினிய செக் பண்ணு! முக்கியமா கழுத்துக்கு கீழே! “என்றான்.

“ஹலோ ஆபிசர்! என்ன பண்ரீங்க நீங்க! “

“சின்ன டவுட் மேடம்! கிளியர் பண்ண உடனே போகலாம்! சுகந்தி அழைச்சுட்டு போங்க! “
மாலினி புலம்பியபடி சுகந்தியோடு  தனியறை நோக்கி நடந்தாள்.

“என்னப்பா பண்ர? அங்க செக் பண்ணா கேமரா வழியா கூட பார்க்க முடியாதுப்பா? “என்ற விக்னேஷை “தெரியும் பாஸ்! செக்யூரிட்டிகளை கூப்பிட்டு மீதி பத்து பேரையும் தனி ரூம்லஅடைக்க சொல்லுங்க! சொல்ரேன்.!”

அருணின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டதும்”இப்ப சொல்லு! “என்றான் விக்னேஷ்.
“பாருங்க பாஸ்! மூணு மாசம் முன்னாடி ஐ.பிலருந்து நமக்கு அலர்ட் வந்துச்சு! நம்ம டெர்மினல்ல பொண்ணுங்க மூலமா ஹேராயின் அதிகம் கடத்தரதா! எவ்வளவு சோதிச்சும் ஒன்னும் மாட்டலை.அப்பத்தான் இந்த குரூப் மேல டவுட் வந்துச்சு! எப்படி சொல்லி வைச்ச மாதிரி ஒரே சைஸ்ல இருக்காங்கன்னு.!எல்லாமே செயற்கை மார்பகம்.வட்ட வடிவத்தின் கீழ் பகுதிய கிழிச்சு உள்ளே சிலிக்கான் பைய வைச்சு தைச்சுருவாங்க.உணர்ச்சியெல்லாம் மாறாது.இயற்கையானது போலவே இருக்கும்.சிலிக்கான் ஜெல் நிரம்பிய பைக்கு பதிலா ஹேராயின் பேஸ்டை வைச்சு கடத்துவாங்களோன்னு ஒரு டவுட்டு! “

“அடிக்கடி ஆபரேசன் பண்ண முடியுமா? “

“அடிக்கடி ஆபரேசன் பண்ரவங்களுக்காக இப்ப ஜிப் வைக்கிற டெக்னாலாஜி வந்துருச்சே! அதை யூஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்.!”

“பிளாஸ்டிக் ஸ்கேனர்ல வெளிய தெரியாது.ஆமா!மூணு மாசமா இதை ஏன் கண்டு பிடிக்கலை? “

“இங்க பிளைட் ஏறுப்போது உள்ளாடைகளை செக் பண்ணுவேன்.போகும் போதும் வரும்போதும் சைஸ் மாறாது.இந்த முறை மாலினி பணத்துக்கு ஆசைப்பட்டு அதிக லோடை ஏத்தியிருக்கனும்.போகும் போது 36சைஸ் ப்ரா இருந்தது.இப்போ 40ல ப்ரா இருக்கு! விளைவுக்கு எதிர் விளைவு இருக்கும்தான்.ஆனால் இவ்வளவு பெரிசா வளர சாத்தியமில்லை.அதான் கண்டு பிடிச்சிட்டேன்! “

“பயங்கர ஐடியாவா இருக்கே! “விக்னேஷ் வியந்து கொண்டிருந்த போது இண்டர்காம் அழைத்தது.மறுமுனையில் சுகந்தி “சார்! மாலினி ஜெஸ்ட்ல ஜிப் மாதிரி ஏதோ இருக்கு! “என்றாள்.”ரெண்டு அறை விடு! ஒரு பையை எடுத்து கொடுப்பாள்.அதை எடுத்துட்டு வா! “என்று கட் செய்தான்.”பாதியில வளர்ந்து ரொம்ப செழிப்பா முன்னுக்கு வந்தா பிரச்சனைதான்! “என்ற அருணை நோக்கி கையில் கிடைத்த புத்தகத்தை எரிந்தவன் “வக்கிரமா பேசாதடா! “என்றான்.குனிந்து தப்பித்த அருண் “நீங்கதான் ஆபாசமா புரிஞ்சுகிட்டிங்க பாஸ்! நான் தொழில் அதிபர்களை சொன்னேன்! “என்று எழுந்து ஓடினான்#18+இரண்டாவது கதை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக