ஐந்து வருசத்துக்கு முன்னால் கொன்ன ஒருத்தன் உயிரோடு வந்து உங்க முன்னாடி நின்னா எப்படி இருக்கும்.?எனக்கு குழப்பமாக இருந்தது.நான்தானே அவனைக் கொன்றேன்.அதைக் கண்டுபிடிக்காமலிருக்க அதே ஸ்டைலில் இன்னும் இரண்டு பேரை எந்த மோட்டிவும் இல்லாமல் கொன்று போலீசைக் குழப்பினேன்.இறந்த உடல்களில் வலதுபுறம் கத்திகுத்து காயங்கள் இருந்ததால் கொலையாளி இடதுகை பழக்கமுள்ளவன் என்று முடிவானது.நானும் இடதுகை பழக்கமுள்ளவன் என்பதால் சந்தேகம் என் மீதும் கவிழ்ந்தது.அதிர்ஸ்டவசமாக நகரத்தில் என்னை போலவே இடதுகை பழக்கம் கொண்டவர்கள் நான்குபேர் இருந்தனர்.இறுதிவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.அவனை நான் ஏன் கொன்றேன்? அவன் என் தங்கையை காதலித்தான்.
என் குடும்ப கவுரவம்,பெருமைகளை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை.என் தங்கையோ காதல் மயக்கத்தில் காது கேளாதவளாக இருந்தாள்.அவனை தனியே அழைத்து பணம் தருகிறேன் என் தங்கையை விட்டு விலகி விடு என்று எச்சரித்தேன்.அவன் எதையும் கேட்கிற நிலையில் இல்லை என்பது புரிந்தவுடன் அவன் கதையை முடித்தேன்.அவனது உடலில் ஒன்று என்ற எண்ணை எழுதினேன்.போலீஸ் என்னை பிடித்து விடுவார்கள் என்பதால் தேவையில்லாமல் இரண்டு கொலைகளை செய்தேன்.இதை தெரிந்து கொண்ட என் தங்கையையும் நான்காம் எண்ணுக்குப் பலியாக்கினேன்.சொத்தெல்லாம் எனக்கு வரும் என்ற சுய ஆதாயமும் ஒரு காரணம்.அவளது மரணம் போலீசின் சந்தேக வளையத்திலிருந்து என்னை வெளியேற்றியது.
இரவு நேர கனவுகளில் அவன் என்னை பயமுறுத்த ஆரம்பித்தான்.இரவுகளிலும்,இருளிலும் அவன் தென்படலானான்."என் வாழ்க்கையை திருப்பி கொடு."இது காதருகில் கேட்கும் அவனது குரல்.!
சைக்காலாஜிகல் டாக்டரோ இல்யூசன் என்று சொல்லி மருந்துகளை கொடுத்தார்.ஒரளவு நான் அமைதி கொள்ளும் போது அதைக் கெடுக்க அவனைப் போன்ற உருவத்தை கொண்ட இவன் இந்த நகரத்திற்கு குடி வந்தான்.அவனைப் பார்க்கும் போதெல்லாம் வேர்த்து விருவிருத்துப் போவேன்.என்னால் இருவருக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.இவனையும் கொன்றால்தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்.இதோ கிளம்பி விட்டேன் ஐந்தாம் எண்ணை அவன் உடலில் பொறிக்க.!
படுக்கையிலிருந்த அவனை குத்திக்கிழித்த போது எல்லா லைட்டுகளும் எரிந்தன.படுக்கையிலிருந்தது டம்மி பொம்மை.அதிர்ச்சியுடன் திரும்பிய போது இன்ஸ்பெக்டர்,அவன்,சைக்காலாஜிகள் டாக்டர் மூவரும் நின்றிருந்தனர்.எப்படி கண்டு பிடித்தார்கள் என்னை.?
இன்ஸ்பெக்டர் சிரித்தார்.
"எப்படி கண்டு பிடிச்சேன்னு பாக்குரியா.?இதோ ஒன்னாம் நெம்பர்காரனுடைய மோதிரமும்,உன் தங்கையின் கையிலிருந்த மோதிரமும் ஒரே மாதிரி இருந்ததை விசாரிக்கப் போய் காதல் விவகாரத்தை கண்டு பிடிச்சேன்.இன்னைக்கு தேதியில் நகரத்தில் இருக்கும் ஒரே இடதுகையன் நீ மட்டுமே.!மத்தவங்களை வெளியூருக்கு அனுப்பி விட்டோம்.இதோ இவன் அவனைப் போலிருக்கும் இவன் அவனது உறவுக்காரனே.!டாக்டர் ஹிப்னாடிசம் பண்ணும்போது இந்த கொலை விவகாரத்தை உளறிவிட்டாய்.!அவர் என்னிடம் சொன்னதன் பேரிலேயே இந்த செட்டப்புடன் ரெடியாக இருக்க முடிந்தது.போகலாமா ஸ்டேசனுக்கு.!"
நான் எனக்கான தண்டனை தளம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இன்ஸ்பெக்டர் லாக்கப்பில் என்னை பூட்டி வைத்து விட்டு வெளியேறினார்.நான் வெற்று சுவரை வெறித்துக் கொண்டிருந்த போது அவன் சுவற்றிலிருந்து உருப்பெற்று வந்தான்.மூச்சு விடும் தூரத்தில் நின்றவன் "என் வாழ்க்கையை திருப்பி கொடு."என்றான்.என் அலறல் சுவர்களில் எதிரொளித்து திரும்பலாயிற்று.
சனி, 26 செப்டம்பர், 2015
அவனும்,இவனும்.!
திங்கள், 14 செப்டம்பர், 2015
கொலைகள் பலவிதம்.!
"காரணம் இன்றி காரியமில்லை.!இதுதான் கிரிமினாலாஜியின் அடிப்படை.இந்த காரணம்னு தமிழ்ல சொல்வதைத்தான் மோட்டிவ்னு இங்கிலீஸ்ல சொல்கிறோம்.எந்த கொலைக்கும் ஒரு காரணம் இருக்கும்.!அது அக்கியுஸ்டுக்கு மட்டுமே கொலை செய்யும்போது தெரியும்.!விசாரணையின் முடிவில் அந்தக் காரணம் எல்லோருக்குமே தெரிய வரும்.!"புரபஸர் சற்றே நிறுத்தினார்.
"எந்த மோட்டிவும் இல்லாமல் ஒரு கொலையை செய்ய முடியாதா புரபஸர்.!"இது நான்.கிரிமினாலாஜி மாணவன்.
எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"குட் கொஸ்டின்.!ஒரு கொலை.!ஒரு கொலைக்கு எந்த மோட்டிவும் இல்லை என்பதே ஒரு மோட்டிவாக மாறிவிடும் அல்லவா.!அந்த ஓரு கொலைக்கு மோட்டிவ் தெரியலைன்னாலும் அடுத்தடுத்த கொலைகளில் மோட்டிவ் இல்லை என்பது தெரிந்துவிடும்.!எவனோ ஒருவன் காரணமே இல்லாம கொலை பண்றான்னு கண்டு பிடித்து விடலாமே.!"
"அப்ப மோட்டிவை வைத்து கொலைகாரனை கண்டுபிடிக்க முடியுமா.?"
"அப்படியும் சொல்ல முடியாது.பதினேட்டாம் நூற்றாண்டில் ஜாக் தி ரிப்பர்னு ஒரு கொலைகாரன் ஐந்து விலைமாதர்களை கொலை செய்தான்.விலை மாதர்களை கொல்வது அவனது மோட்டிவாக இருந்தது.ஆயிரம் துப்பு கிடைத்தும் கொலையாளி இன்னைக்கு வரை பிடிபடவேயில்லை.ஜாக் தி ரிப்பர் யாருன்னு ஏகப்பட்ட அனுமானங்கள்.அவன் இங்கிலாந்து அரசகுடும்பத்தை சேர்ந்த மன நோயாளி என்பதுவரை பல யூகங்கள் இன்னைக்கு வரைக்கும் ஜாக் தி ரிப்பரை சாகாமல் வைத்திருக்கிறது.!"
"அவன் சீரியல் கில்லர்தானே புரபசர்.!"
"யெஸ்.!இதில் என்ன காமெடின்னா தெருவுல போற எவனாவது அந்தகாலகட்டத்துல ஒரு விலை மாதை கொன்றிருந்தாலும் அது ரிப்பரின் கணக்கில்தான் சேரூம்.!இதே மாதிரிதான் ஜோடியாக் கில்லர் தான் செய்த கொலைகளைப்பற்றி போலிசுக்கு சங்கேத வார்த்தைகளில் கடிதம் எழுதினான்.ஏழு பேத்துல ஒருவனாக அவன் மேலும் சந்தேகம்.அவனை தூக்கில் போட்ட பின் கொலையும் நடக்கலை.கடிதமும் வரலை.அதே போல் சன் ஆப் சாம்.இவங்க ரெண்டு பேத்துக்கும் மோட்டிவே கிடையாது.சன் ஆப் சாம் காதில் குரல் கேட்டால் கொலை செய்யும் இயல்பு கொண்டவன்.!"
"நம்ம காலேஜ் கேம்பஸ்குள்ள இந்த ரெண்டு மாசத்துல ரெண்டு கொலை நடந்துருக்கே புரபஸர்.!அதுக்கு என்ன மோட்டிவ் இருந்திருக்க முடியும்.?"
"போலீஸ் விசாரிக்கிற கேஸைபத்தி பேசக்கூடாது பையா.!லீவ் இட்.!கிளாஸ் இத்தோடு முடிகிறது.!"
புரபஸர் கிளம்பி விட்டார்.எனக்கு சைக்கோ கொலைகாரர்கள்,சீரியல் கில்லர்கள் மீது ஒருவிதமான போதையிருந்தது.மோட்டிவ் இல்லாத ஒரு கொலை.!நாமே செய்தால் என்ன.?நான் கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆள்.இந்த சப்ஜெக்ட் என்னை திரில்லான ஒரு விசயத்தை செய்ய தூண்டிக் கொண்டிருந்தது.யாரை கொல்வது.?மோட்டிவ் இல்லாத கொலை சாத்தியமில்லை என்று சொன்ன புரபஸர்.!சரியான தேர்வுதான்.!ஏற்கனவே இரண்டு கொலைகளை யாரோ செய்திருக்கிறார்கள்.அந்த எக்ஸின் கணக்கிலேயே நான் செய்த கொலையும் சேர்ந்துவிடும் என்பது திருப்தியாக இருந்தது.!இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பரந்துவிரிந்த காலேஜ் கேம்பஸ் மற்றோரு கொலைக்கு காத்திருந்தது.மறுநாள் புரபஸரும் நானும் அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாக இருந்தோம்."தனியாக பேசனும்னு சொன்னியே! அது என்னன்னு சொல்லுப்பா.?"
"மோட்டிவ் இல்லாம ஒரு கொலையை செய்ய முடியாதா சார்.!"
"அதான் சொன்னேனே.!மோட்டிவ் இல்லாததே ஒரு மோட்டிவாக மாறிவிடும்னு.!"
"எனக்கு இந்த சப்ஜெக்டெல்லாம் படிச்சு ஒரு கொலை செய்தால் என்னன்னு ஓரு எண்ணம் வந்திருச்சு புரபஸர்.!என் ஆசைக்கு ஒரு தடவை செத்துப்போயிருங்களேன்.!
"நான் கத்தியை உருவினேன்.
"மூணு வருசம் படிக்கிற உனக்கே கொலை செய்ய ஆசை வந்தா முப்பது வருசமா இதையே பாடமா நடத்துற எனக்கு கொலை பண்ற வெறி இருக்காதா.?"
"என்ன சொல்ரீங்க புரபஸர்.!"
"மெண்டல் ஆஸ்பிட்டல் டாக்டர்க பாதிபேரு மெண்டல் மாதிரியே இருப்பாங்க.!அதே மாதிரிதான் நானும்.!இப்போது நான் முழுக்கொலைகாரனை உள்ளே ஒளிய வைச்சிருக்கேன்.கேம்பஸ்ல செத்த இரண்டு பேத்தையும் நான்தான் கொன்னேன்.இப்ப மூணாவதா உன்னையும் கொல்லப் போகிறேன்.!"
நான் இதை எதிர்பார்க்கவில்லை.கையிலிருந்த கத்தி நழுவியது.நான் ஒட முற்பட்டபோது புரபஸரின் பெல்ட் என் கழத்தை சுற்றி நெரித்தது."மோடிவ் இல்லாத மூணாவது கொலை.!ஒவ்வொரு கொலையும் ஒவ்வோரு விதம்."!புரபஸர் காதருகே முணுமுணுத்ததை கடைசியாகக் கேட்டேன்.!
ஞாயிறு, 13 செப்டம்பர், 2015
எதிர்பாராதது!
அவன் தனக்கான இரை இவள்தான் என்று முடிவு செய்து விட்டான்.அவள் நல்ல சிவந்த நிறம்.பின்பக்கம்வரைநீண்டிருந்த கருத்த முடி.கேரளாவாக இருக்கலாம் என்று அவள் ஊரை யூகம் செய்ய வைத்தது.நெற்றியில் சிறிய திருநீர் கீற்று.அவள் ஹேண்ட்பேக்கை மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.அவன் தன் பேண்ட் பாக்கெட்டை தொட்டுப்பார்த்துக்கொண்டான்.ஜெர்மன் தயாரிப்பான ஸ்டில்லடோ கத்தி பத்திரமாக இருந்தது.பொறு.!சற்று நேரத்தில் உனக்கான இரை கிடைத்து விடும்.நேற்று கத்திக்கு கொஞ்சம் வேலை அதிகம்தான்.தெருவில் சோடியம் விளக்குகள் சோகையாய் ஒளிவீச ஆரம்பித்திருந்தன.மெல்ல இருள் கவிய ஆரம்பித்திருந்தது.காலையிலேயே அவள் வரும்பாதையை பார்த்து வைத்திருந்தான்.அவளுக்கு முன்பாக அவன் ஆள் அரவமற்ற இடத்தில் காத்திருக்க வேண்டும்.அவன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
தனக்கான தேர்ந்தெடுத்த இடத்தில் காத்திருக்க ஆரம்பித்தான்.தன்னுடைய செயலை நினைத்து அவனுக்கே பயமாக இருந்தது.சீக்கிரமாக இதிலிருந்து விடுபட வேண்டுமென நினைத்துக் கொண்டான்.அவள் நடந்து வரும் ஒசை அருகாமையில் கேட்டது.ஸ்டில்லடோவை கையில் தயாராக வைத்துக்கொண்டு வேட்டைக்குத் தயாரானான். வழியை மறித்துக் கொண்டு இருளில் அவன் வெளிப்பட்டதை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.அலற நினைத்தவளின் திறந்த வாயில் கொண்டு வந்திருந்த துணியை அடைத்தவன் கழுத்தில் கத்தியை வைத்து "கத்தாதே.!"என்றபடி இருட்டுக்குள் அவளை இழுத்தான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அழுது கொண்டிருந்த அவளை விட்டுவிட்டு அவன் இருளில் கரைந்தான்.
விக்,டோபா தயாரிக்கும் கடையை சாத்த ஆரம்பிக்கும்போது அவன் சரியாக வந்து விட்டான்."இன்னைக்கு எவ்வளவு.?"என்றான் கடைக்காரன்.
"நீங்கதான் சொல்லனும்.!"என்று கையிலிருந்த முடி நிறைந்த பையை நீட்டினான்.தராசில் எடையை போட்டவன் "ஒரு கிலோ இருக்கு.!இந்தா மூவாயிரம்."என்று ரூபாய்களை கொடுத்தவன்,"இன்னும் எத்தனை பொண்ணுககிட்ட முடிய கட் பண்ணி விக்கப் போகிறாய்.!சீக்கிரமா எதாவது வேலய தேடிக்கோ.!"என்றான்.
"போய்த்தான் ஆகனும்.!இன்னைக்கு கேரளாக்காரின்னு நெனச்சு ஒருத்தி சடைய அறுத்தேன்.அப்புறம்தான் அது சவுரின்னு தெரிஞ்சது.அதுக்கே அழுது தீர்த்துட்டா."
அவன் நாளைக்கு ஏதாவது வேலைக்குப் போகனும் என்று நினைத்தவனாக நடக்க ஆரம்பித்தான்.!
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
மாண்டவன் மீண்டான்.!
நான் பெரிசின் வீட்டை அடைந்த போது மணி பத்து.இங்கு பெரிசென்று நான் செல்லமாக குறிப்பிடுவது துரைசிங்கத்தை.போலீஸ் டிபார்ட்மெண்டின் நெ.ஒன் துப்பறியும் நிபுணர்.எந்த கேஸையும் எளிதில் கண்டுபிடித்துவிடும் உடம்பெல்லாம் மூளை உள்ள ஆசாமி.ஆள் ஒரு டைப்பான ஆள்.என்னைத்தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஆள்.சில சமயம் என்னாலும் புரிந்து கொள்ளமுடியாத ஆசாமிதான்.நான் கதவை தட்டு தட்டு என்று தட்டினேன்."யோவ் பெரிசு.!மணி பத்தாச்சு.!இன்னுமாய்யா தூங்குற? "
"கதவ உடச்சிராதே.!"என்றபடி வந்து கதவை திறந்தது பெரிசு.
"அப்படியே கன்னை நெத்தியில வைச்சு சுட்டா என்ன பண்ணுவே.?"
"சினைபன்னி மாதிரி நடக்கிற உன் ஷி சத்தம் நீதான் வர்ரங்கிறதை சொல்லீருமே.!காலையில உன் மூஞ்சியில முழிச்சிருக்கிறேன்.என்னாவப் போவுதோ.!"
"எல்லாம் நல்லாத்தான் நடக்கும்.இன்னைக்கு ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்கிற.?"
"நைட்டு கொஞ்சம் சரக்கு ஒவரா போயிருச்சுடா.!சரி இன்னைக்கு என்ன கேஸ்.?"
"சொல்ரேன்.முதல்ல குளிச்சு ரெடியாகு.!பெரிசு பாத்ரூமிற்குள் போய் கதவை சாத்திக்கொண்டுவிட்டது.ஏதேதோ வினோத சத்தங்கள் கேட்டு ஒய்ந்த பின் பெரிசு வெளியே வந்து டிரஸ் பண்ணத்துவங்கியது.கதவை யாரோ தட்டினார்கள்.நான் கன்னை எடுத்துக்கொண்டு கதவை திறக்கப்போனேன்.பெரிசு பகபகவென சிரித்துவிட்டு."ஒட்டல்ல இருந்து பையன் சாப்பாடு கொண்டுவந்திருக்கிறான்.கன்னை பாத்து காய்ச்சல் வந்துரப்போகுது.!"என்றது.திறந்த போது பையன் டிபன் கேரியருடன் நின்றிருந்தான்."மதியம் எதுவும் வேண்டாம்.!"என்று சொல்லிவிட்டு கேரியரை டைனிங்டேபிளில் விரித்தது.
"சாப்பிடச் சொல்ல மாட்டியா?"
"நீ வரும்போதே சாப்பிட்டிருப்பாய்.!"சரி கேஸை சொல்லு.!சாப்பிட்டுகிட்டே கேட்கிறேன்.!"
"நானும் சாப்பிட்டுகிட்டே சொல்ரேன்.என்னை பாக்க வைச்சு தின்னா உனக்குத்தான் வயிறு வலிக்கும்!"
"ரொம்பத்தான் அக்கரை.!பசிக்குதுன்னு சொல்லிட்டே திங்கலாம்.!சரி சொல்லு.!"
"டிரக் பெடலிங் மாணிக்கம் மூணு மாசத்துக்கு முன்னாடி கொல்லப்பட்ட கேஸ்.!போதை மருந்து கடத்தி விக்கிரது அவனோட வேலை.!மூணு மாசத்துக்கு முன்னாடி அப்படி கடத்திட்டு வரும்போது அவன் காரை மறிச்ச நாலு பேரு அவனை சுட்டுக் கொன்னு பக்கத்துல ஒடுன ஆத்துல தூக்கிப் போட்டுட்டானுக.!இதுல கண்டு பிடிக்க என்ன இருக்குன்னு நம்மகிட்ட அனுப்பி இருக்காங்க.!"
"அதை நான் கடைசில சொல்ரேன்.இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கே.?"
"என்னது.?"
"சுட்டுக்கொன்னவனுக எதுக்காக ஆத்துல தூக்கிப் போடனும்.!"
நான் யோசிக்க ஆரம்பித்தேன்.கையை கழுவிவிட்டு வந்த பெரிசு கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.ஒரு போட்டோவை தனியாகப் பிரித்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு "இதை பார்த்தால் என்ன தோனுது.?"
காரின் உள்ளே தோட்டாக்கள் தெறித்து ரத்தமயமாகி இருந்த போட்டோ அது.
"எனக்கெதுவும் தோணலை.!உனக்கு? "
"அன்னைக்கு பத்து கோடி ரூபாய்க்கு சரக்கை கொண்டு வந்திருக்கிறான்.சுட்டுக்கொன்னவனுக காரில் சரக்கிருக்கான்னு ஏன் சீட்டை கிழிச்சு செக் பண்ணலை.!சீட் மேல இருக்கிற துண்டு வித்தியாசமா இருக்கே.!"
மூணு போட்டோவை எடுத்து டேபிளில் போட்ட பெரிசு "இந்த போட்டோக்களுக்கு விடை தெரிஞ்சா கேஸ் முடிந்து விடும்.!"
"என்ன தெரியனும்.!
"செத்தவனை தர தரன்னு சேத்துல இழுத்துட்டு போய் ஆத்துல தள்ளியிருக்காங்க.!செத்தவனோட வெயிட் 120 கிலோ.அவனை இழுத்துட்டு போனவனுக வெயிட் 80 கிலோன்னு வைச்சுகிட்டாலும் உடம்பின் மேல் பாகம் 60கிலோ.அதை இரண்டு பேருக்கும் சரி பாதியா பிரிச்சா தலைக்கு முப்பது கிலோ.!எண்பது.+முப்பது :நூத்திபத்து கிலோ.ஆனா பதிஞ்ச ஷி அடையாளம் நடுவுல நாலு இஞ்ச் இறங்கியிருக்கு.!மத்த ரெண்டு பேரோட ஷி தடம் இரண்டு இன்ச்தான் இறங்கியிருக்கு.!
"அப்படின்னா என்ன நடந்திருக்கும்னு நினைக்கிறாய்.?"
"ஷிவை கழட்டு.!"புரியாமல் எதுக்கு என்றேன்.
"புரியர மாதிரி சொல்ரேன்.!"
கழட்டிய ஷிவிற்குள் ஒட்டடை குச்சியை சொருகி அக்குளில் வைத்துக்கொண்டு அதே போல் மற்றோன்றையும் செய்து அக்குளில் வைத்துக்கொண்டு கால்களை தரையில் துவள விட்டபடி பின்னோக்கி நடந்து காட்டியது.
"அப்படின்னா மாணிக்கம் சாகலையா.?"
"இல்லை.!பத்து கோடி ரூபாய் சரக்கை ஆட்டையப் போட்டுட்டு எதிரிகள் சுட்டுக்கொன்னமாதிரி செட் பண்ணிட்டு தலை மறைவாயிட்டான்.அவன் பாடி இன்னும் நமக்கு கிடைக்கலைங்கிறதை நீ யோசிக்கனும்.!"ஒவ்வொரு குச்சியிலும் ரெண்டு ஷுவை கட்டியிருக்கான்.ஆனா இழுத்துட்டுப்போன டைரக்சனுக்கு சம்பந்தமில்லாம இரண்டு காலடித்தடம் இருக்க இதுதான் காரணமா இருக்கனும்.சுட்டுட்டு துண்டை சீட் மேல போட்டதுதான் அவன் செய்த ஒரே தப்பு.!"
ஆகா என்ன ஒரு டிவிஸ்ட்.!இதுக்குத்தான் பெரிசு வேணும்கிறது.!
"நாலு துப்பாக்கிய கொண்டு போய் வெவ்வேறு இடத்துல நின்னு காரச் சுட்டிருக்கான்.தன்னுடைய ரத்தத்தை கார் முழுக்க தெளிச்சிருக்கான்.கடைசில துண்டை சீட்ல போட்டு மாட்டிகிட்டான்.துண்டுல ஒரு தோட்டா கூட பாயவில்லை.!கவனிச்சியா.!"
"பார்த்தேன்.!"
"அப்ப மாணிக்கம் சாகலை.!உயிரோடதான் இருக்கானா.!"
"அவன் அட்ரஸ் வேணுமா.?"
"அந்தளவுக்கு கண்டபிடிச்சாச்சா?"
"சிங்கம்.!துரை சிங்கம்.!மீசையை முறுக்கியவரை பார்க்க சற்று பொறாமையாகத்தான் இருந்தது.
"ஆமா.!இந்த மாணிக்கம் ஏன் எல்லா போட்டோவுலயும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கான்.!"
"அவனுக்கு மாறுகண்ணுப்பா.!அதை மறைக்க கூலிங்கிளாஸ் போடுரான்.!அடுத்தது எங்க போறோம்.?"
"மாணிக்கம் பொண்டாட்டிய பாக்க போறோம்.!இருப்பா பாடிஸ்பிரே அடிச்சிட்டு வர்ரேன்."!
"அவ புருசன் உயிரோட இருக்கான் பெரிசு.!"
"பாத்து ரசிக்கவும் தடாவாடா.!"
இருவரும் காரில் கிளம்பினோம்.ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காரை நிறுத்தச்சொன்ன பெரிசு."மாணிக்கம் புள்ளைக்கு எதாவது வாங்கிட்டுப் போவோம்.!"நீ போய் வாங்கிட்டு வா.!நான் வெயிட் பண்ரேன்."
"யோவ்.!இதெல்லாம் ரொம்ப ஒவரு.!நாம விசாரணைக்கு போரோம்.!அந்த நினப்பு இருக்கா.?"
"இதுவும் விசாரணையின் ஒரு அங்கம்தான்.!நீ போய் வாங்கிட்டு வா.!"
நான் பிஸ்கெட்,பழங்களை வாங்கிக் கொண்டு வரும்போது பெரிசு யாரிடமோ போனில் பேசிவிட்டு அணைத்தது.
"அந்தப்பக்கம் போக விட்டுட்டு இந்தப் பக்கம் யாருக்கு போன் பண்ணுகிறாய்.?"
"அதெல்லாம் ரகசியம்."என்று சிரித்தது.மாணிக்கத்தின் வீட்டில் அவன் மனைவியை நான் விசாரணை செய்து கொண்டிருக்க,பெரிசு அவன் மகளை "எம்பேத்தி மாதிரியே இருக்காளே "?என்று கொஞ்சிக் கொண்டிருந்தது.மாணிக்கத்தின் மனைவியை பெரிசு திரும்பிக்கூட பார்க்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.திரும்பி வரும்போது "விசாரணையில் எனக்கெதுவும் கிடைக்கவில்லை.!உனக்கெதாவது கிடைச்சுதா."?
பெரிசு கையை விரித்துக்காட்டியது."நெறயா தகவல் கிடைச்சுது.!
"அந்த சின்ன புள்ளைகிட்டயா.?"
"குழந்தைகள் பொய் பேசாது பையா.!"
இடையில் வந்த ஒரு போனை எடுத்துப்பேசிய பெரிசு ஒரு அட்ரஸை குறிப்பிட்டு அங்கே போகச் சொன்னது.அந்த அட்ரஸிற்கு அருகாமையில் காரை நிறுத்தச்சொன்ன பெரிசு காரை விட்டு இறங்கி செல்லில் யாரிடமோ பேசத்தொடங்கியது.அடுத்த பத்தாவது நிமிடம் ஒருவன்கூலிங்கிளாஸ் அணிந்தபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி பெரிசை நெருங்கினான்.அவன்கையில் விலங்கை மாட்டி காரினுள் தள்ளிய பெரிசு."கேஸ் முடிஞ்சுது.!காரை எடு போகலாம்.!"என்றது.
"யோவ்.!நமக்குத்தேவை மாணிக்கம்.இவன் யாருய்யா.!"
"அடேய் லூசு.!இவன்தாண்டா மாணிக்கம்.!பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி முகத்தை மாத்தியிருக்கான்.!மூஞ்சை மாத்தினவனால கண்ணை மாத்த முடியலையே.!இவன் பொண்ணு உண்மையை சொல்லிருச்சு.!அப்பா வேற மாதிரி இருந்தாருன்னு சொல்லும்போதே கணிச்சேன்.நாம விசாரிச்சிட்டு போனவுடனே இவன் பெண்டாட்டி இவனுக்கு போன் பண்ணீட்டாள்.அதை நம்மாளுக டிரேஸ் பண்ணி இவன் அட்ரஸையும்,போன் நெம்பரையும் கண்டு பிடிச்சி எனக்கு சொன்னாங்க.!நான் இவனுக்கு போன் பண்ணி நீ ஆத்துல என்ன பண்ணுணேன்னுதெரியும்!நீ உயிரோட இருக்கிறது எனக்குத்தெரியும்.வெளிய சொல்லாம இருக்கனும்னா பணம் வேணும்னு மிரட்டுனேன்.எங்கிட்ட டீல் பேச வந்து மாட்டிகிட்டான்.!"
"பத்து கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டுத்தான் செத்த மாதிரி நாடகம் ஆடினேன் "என்றான் மாறுகண் மாணிக்கம்.
போலீஸ் நிலையத்தை நோக்கி வண்டி ஒடத்தொடங்கியது.பெரிசு பைலை முகத்தில் மூடியபடி தூங்கத் தொடங்கியது.!
செவ்வாய், 8 செப்டம்பர், 2015
இறவாத மனிதன்.!
"அப்பாடா என்ன வெய்யிலு.!"உள்ளே வந்த அனிதா டேபிள் மேல் இருந்த தண்ணீர் டம்ளரை மடமடவென குடித்தாள்.
அனிதா.!என்னுடைய செக்ரட்ரி.தனியாகவே துப்பறியும் திறமை பெற்ற திறமைசாலி.இப்போதுகூட ஒரு கேஸை பைனல் பண்ணிவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.
"ஆமாம்.!இன்னைக்கு வெயில் கொஞ்சம் அதிகம்தான்.!"
"உங்களுக்கு என்ன பாஸ்.!ஏசில உக்காந்துகிட்டு ஜாலியா இருக்கீங்க.!"
"சவாலான கேஸ் ஏதாவது வேணும்னா சொல்லு.!ரெடி பண்றேன்.!"
"நான் பர்சனலா ஒரு கேஸை டீல் பண்ணீட்டு இருக்கேன்.கேட்டா அதிர்ச்சியாயிருவீங்க.!"
"அப்படியா.!சொல்லு கேட்போம்.!"
"காளிப்பட்டி ஜமீன் நினைவிருக்கா பாஸ்.!"
"ம்.ஞாபகம் இருக்கு.!அவங்க குடும்ப நகை ஒன்னை காணோம்னு ஒரு கேஸ் வந்துச்சே.!அதைக்கூட நீதான் டீல் பண்ணியதாக நினைவு.!"
"எக்ஸாக்ட்லி.!நான்தான் அந்த கேஸை டீல் பண்ணேன்.அப்பதான் இந்த கேஸை பர்சனல் இண்ரஸ்ட்ல கண்டு பிடிக்க ஆரம்பிச்சேன்.!ஒரு மனிதனால் அதிகபட்சம் எத்தனை வருசம் உயிரோட வாழ முடியும்.?சொல்லுங்க பாஸ்.!"
"அதிகபட்சமா நூற்றிஇருபது வருடம் வாழ முடியும்."
"இருநூத்தி ஐம்பது வருசமா ஒரு மனிதன் வாழ்ந்துகிட்டு இருக்கான்னு சொன்னா நம்புவீங்களா.?
"ரிடிகுலஸ்! சான்ஸே இல்லை.!"
"உண்மை பாஸ்.!"
கையிலிருந்த பைலை எடுத்து விரித்தாள்.
"கள்ளிப்பட்டி ஜமீனோட முப்பாட்டனார் மகேந்திர பூபதியோட குடும்ப ஒவியத்துல கடைசியா நிக்குற ஆளை பாருங்க! அவன்பேரு கபாலி.ஜமீனோட ஆஸ்தான மந்திரவாதி.இந்த ஒவியம் வரையப்பட்ட வருசம் 1850,அப்பவே அவனுக்கு 35வயசிருக்கனும்.அதற்கடுத்த போட்டோவுல பாருங்க! ஜமீனோட அடுத்த வாரிசுகூட கபாலி இருக்கிற போட்டோ.இதை எடுத்த வருசம்1917.இப்பவும் அதே 35வயசுலயே இருக்கான்.அவருகூட சண்டை போட்டுட்டு வெளிய போனவன் கலெக்டர் வில்லியத்துக்கு துபாஸியா வேலை செய்த போது எடுத்த படம்.!இதை எடுத்த வருசம் 1942,இப்பயும் அதே 35 வயசுல மாறாத இளமையோடு இருக்கிறான்."
"இது சாத்தியமே இல்லை.இந்த டீடெய்ல் உனக்கு எப்படி கிடைச்சுது.?"
"ஜமீனோட இரண்டாவது வாரிசு கபாலியப் பத்தி நிறைய விசயத்தை தன் டைரில எழுதியிருக்காரு.அவன் ரொம்ப நாள் இளமையா,சாகாம இருப்பதைப் பற்றி அவருக்கு சந்தேகம் வந்துருச்சு.கலெக்டர் மூலமா அவன் ஜமீனுக்கு நெருக்கடி கொடுத்ததையெல்லாம் டைரில எழுதியிருக்காரு.அதை வைச்சுத்தான் துபாஸ் போட்டோவ கண்டு பிடிச்சேன்.!
இன்னொரு பயங்கரமான விசயம் இருக்கு.!"
"இதை விடவா.?"
"ஆமாம்.!நாலு வருசத்துக்கு ஒருமுறை வருகிற பஞ்சமி திதியில் ஒரு கன்னிப்பெண்ணை காளி சிலைக்கு பலி கொடுத்து அவளுடைய ரத்தத்தோடு சில மூலிகைகளை கலந்து சாப்பிட்டுத்தான் கபாலி இளமையாக இருப்பதாக ஜமீன் சந்தேகப்பட்டு எழுதியிருக்காரு.அந்த உண்மைதான் ஜமீனை கபாலிகிட்டயிருந்து காப்பாத்தியிருக்கு.!நாலு வருசத்துக்கு ஒருமுறை பலி விழுவதையும் அவர் கன்பார்ம் பண்ணியிருக்காரு.!"
"இப்ப நாம என்ன பண்ணப் போகிறோம்.?"
"ஜமீனோட மலைக்கோயில்ல வருகிற பஞ்சமிதிதியில் ஒரு பலி விழும்னு எதிர்பார்க்கிறேன்.அன்னைக்கு அந்த சாவே இல்லாத மனிதனை அங்கே பார்க்கலாம்.அவனை பிடிக்கிறோம்.சாவே இல்லாத மருந்தை அவனிடமிருந்து தெரிஞ்சுக்கிறோம்."
"ஒ.கே.டன்."
அனிதா வெளியேறிய பின் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்டேன்.
எப்படி.?எப்படிக் கண்டு பிடித்தாள் என்னை? அந்த சாவே இல்லாத மனிதன் நான்தான் என்று அவளுக்குத் தெரியுமா.?என் மூளை விறுவிறுவென வேலை செய்தது.பஞ்சமி திதிக்கு பலி தேடி அலைய வேண்டிய வேலை மிச்சம்.!அனிதாவையே பலியாக்கி விட வேண்டியதுதான்.ஏதேனும் காரணம் சொல்லி அவள் மறுத்தால் என்ன செய்வது.?
அடுத்தடுத்த நாட்களில் அனிதாவின் "சார்.!பஞ்சமி திதி மறந்துராதீங்க."என்ற நினைவூட்டல் வேறு பெண்ணை தேடுவதை நிறுத்த வைத்தது.
பஞ்சமி திதியில் மலைக்கோயிலில் காத்திருந்தோம்.பாழடைந்த கோயில் ஆள் அரவமற்றுக் கிடந்தது.ஒன்பது டூ பத்துவரை திதி.அப்போதுதான் பலி கொடுக்க வேண்டும்.இருள் கவிழ்ந்து கொண்டு வந்தது.எட்டு மணி.
அனிதா "பாஸ்.!பாத்ரூம் போயிட்டு வந்துடுரேன்."என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை.போனவள் வெகுநேரம் ஆளைக்காணவில்லை.ஏதோ சத்தம் கேட்டு மலையடிவாரத்தைப் பார்த்தபோது என்னுடைய காரை அனிதா ஒட்டிக்கொண்டு போவது தெரிந்தது.டூப்ளிகேட் சாவி.!
நான் யார் என்று தெரிந்துதான் வந்திருக்கிறாள்.
போன் அடித்தது.!"சார்.!நான் அனிதா பேசுகிறேன்.நீங்கதான் கபாலின்னு எனக்குத் தெரியும் சார்.பேரு,ஊரு,தொழிலை மாத்த தெரிஞ்ச உங்களுக்கு கையிலுள்ள மண்டையோட்டு பச்சையை மாத்த தெரியலையே.!1942க்குப் பிறகு நீங்க என்னென்ன பேருல வாழ்ந்தீங்கன்னு நான் கண்டு பிடிக்காமயா இருந்திருப்பேன்.நீங்க உயிரோட இருக்க எத்தனை பொண்ணுகளை கொன்னுருப்பீங்க.!இந்த ஒரு தடவை நிஜமாவே செத்துப் போயிருங்க சார்.!குட்பை.!"
செல்லை தூக்கி எரிந்தேன்.திதி ஆரம்பித்திருந்தது.மையிருட்டு என்னை சூழ இத்தனை நாட்களாக ஏமாற்றி வந்த மரணத்தை சந்திக்க தனியனாக தயாரானேன்.!