திங்கள், 27 ஜூன், 2016

காதல் தற்கொலை

"குட்மார்னிங்! எழுந்திருங்கள்.!"என்ற சில்வியாவின் வார்த்தைகளோடு கண் விழித்தான் ராம்."குட்மார்னிங்.!"என்று பதில் சொன்னவன் பாத்ரூமிற்குள் புகுந்தான்.காலை கடன்களை முடித்து விட்டு வந்த போது சில்வியா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்."டிபன் ஆர்டர் பண்ணவா.?"என்றவளை "வேணாம்.!வழக்கம் போல் வெளியில பார்த்துக்கிறேன்.!"என்று அமர்த்தினான்."சரி! கிளம்புகிறேன்.!"என்றவனை எழுந்து வந்து தழுவி முத்தமிட்டவளிடம் மூச்சு வரவில்லை.அவன் வீட்டை பூட்டிய போது உள்ளே ஹல்லோகிராம் புரஜக்டரும்,டிவி சத்தமும் நின்றது.

காரை கிளப்பியவனின் நினைவுகள் பின்னோக்கி ஒடின.சில்வியா.!அழகி.!வாழ்வின் எல்லாமுமாக மாறியவள்.இரவுகளின் செல்ல சிணுங்கல்கள்,சின்ன சண்டைகள்,இனிப்பு முத்தங்கள் என்று பூமியில் சொர்க்கத்தை காட்டியவள்.எல்லாம் ஒரு கார் விபத்தில் தலைகீழானது.ராம் காரை பார்க் செய்து விட்டு ஹாஸ்பிடலில் நுழைந்த போது ஆத்மா வரவேற்றார்."என்ன பையா.!செயற்கை சிந்தியாவோடு செட்டிலாகிட்டியா.?"என்று புன்னகைத்தார்.

"ஒரே மாதிரி புரோக்கிராமிங்கில் சில்வியா நடப்பது போரடிக்குது.செயற்கையாக இருக்குது.!"

"என்னப்பா இப்படி சொல்ர.!ஒருத்தன் பொண்டாட்டியே வேணாம்.ஹல்லோகிராமே போதும்.எதிர்த்து பேசரதில்லைன்னு சொல்ரான்.!"

அவர்கள் வேக நடை நடந்து திறந்த ரூமில் இன்னொரு சிந்தியா மெலிந்த உடலோடு படுத்திருந்தாள்.
"நாலு வருசமாச்சு.!கோமால விழுந்து.எப்ப வேணா எந்திரிப்பான்னு எதிர்பார்க்கிறோம்.!"

உடல் முழுதும் டியூப்புகளுடன் இருந்தவளை பார்த்து கொண்டிருந்தான்.
"வேற கல்யாணம் பண்ணிக்கலாமே.?"

"சிந்தியா மாதிரி வருமா.?"

"பெட்டரா கூட இருக்கலாம்.திங் பாஸிட்டிவ்.!"

அவர் ஸ்கேன் மீட்டரை பரிசோதித்துக் கொண்டிருந்த போது கர்ச்சீப்பின் நுனியை அவள் கண்களில் வைத்து அழுத்தினான்.எந்த ரியாக்சனும் இல்லாததால் ஏமாந்தான்."நம்புப்பா.!நாங்களும் கருமுழி சுத்துதான்னு டெஸ்ட் பண்ணிட்டுத்தான் இருக்கோம்.!"

"ஒகே.!டாக்டர்! நான் கிளம்புகிறேன்.!

அவன் அலுவலகத்தில் கடமைக்கு வேலை செய்து கொண்டிருந்தான்.மாலையில் பூட்டை திறக்கும் போதே புரஜக்டர் ஆன் ஆகி அவள் கதவை திறந்து வரவேற்பது அவன் நினைவில் வந்து சலிப்பை ஏற்படுத்தியது.எல்லோரும் போன பிறகு மாடிக்கு போனவன் வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.சில்வியா இறந்து விட்டாளா.?இல்லையான்னு தெரியாத நிலை அவனுக்கு குழப்பத்தை தந்தபடி இருந்தது.செயற்கை சிந்தியாவுடனான ஒரே நாளை பிரதி எடுத்த அடுத்த நாள் போரடித்தது.தன் செல்போனின் வாய்ஸ் ரிகார்டரை ஆன் செய்தவன்."என் சாவுக்கு யாரும் காரணமில்லை.என் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தற் கொலை செய்கிறேன்.ஐ லவ் சிந்தியா.!"பேசி பதிவு செய்தவன் கைப்பிடி சுவற்றில் வைத்து விட்டு குதிக்க தயாரானான்.
குதிக்க தயாராகி ஏறி நின்ற போது போன் அடித்தது.அவன் அந்த அழைப்பு தன் முடிவை மாற்றி விடுமோ என்று பயந்து புறக்கணித்தான்.போனின் மறுமுனையில் ஆத்மா "சில்வியா கண்ணு முழிச்சிட்டான்னு சந்தோஷமான விசயத்தை சொல்ல போன் பண்ணிணால் ஏன் எடுக்க மாட்டேங்கிறான்.?"என்று குழம்பி கொண்டிருந்தார்.அவன் தன் நிழலை நோக்கி காற்றை கிழித்தபடி பயணமாகி கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக