திங்கள், 27 ஜூன், 2016

காதல் தற்கொலை

"குட்மார்னிங்! எழுந்திருங்கள்.!"என்ற சில்வியாவின் வார்த்தைகளோடு கண் விழித்தான் ராம்."குட்மார்னிங்.!"என்று பதில் சொன்னவன் பாத்ரூமிற்குள் புகுந்தான்.காலை கடன்களை முடித்து விட்டு வந்த போது சில்வியா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்."டிபன் ஆர்டர் பண்ணவா.?"என்றவளை "வேணாம்.!வழக்கம் போல் வெளியில பார்த்துக்கிறேன்.!"என்று அமர்த்தினான்."சரி! கிளம்புகிறேன்.!"என்றவனை எழுந்து வந்து தழுவி முத்தமிட்டவளிடம் மூச்சு வரவில்லை.அவன் வீட்டை பூட்டிய போது உள்ளே ஹல்லோகிராம் புரஜக்டரும்,டிவி சத்தமும் நின்றது.

காரை கிளப்பியவனின் நினைவுகள் பின்னோக்கி ஒடின.சில்வியா.!அழகி.!வாழ்வின் எல்லாமுமாக மாறியவள்.இரவுகளின் செல்ல சிணுங்கல்கள்,சின்ன சண்டைகள்,இனிப்பு முத்தங்கள் என்று பூமியில் சொர்க்கத்தை காட்டியவள்.எல்லாம் ஒரு கார் விபத்தில் தலைகீழானது.ராம் காரை பார்க் செய்து விட்டு ஹாஸ்பிடலில் நுழைந்த போது ஆத்மா வரவேற்றார்."என்ன பையா.!செயற்கை சிந்தியாவோடு செட்டிலாகிட்டியா.?"என்று புன்னகைத்தார்.

"ஒரே மாதிரி புரோக்கிராமிங்கில் சில்வியா நடப்பது போரடிக்குது.செயற்கையாக இருக்குது.!"

"என்னப்பா இப்படி சொல்ர.!ஒருத்தன் பொண்டாட்டியே வேணாம்.ஹல்லோகிராமே போதும்.எதிர்த்து பேசரதில்லைன்னு சொல்ரான்.!"

அவர்கள் வேக நடை நடந்து திறந்த ரூமில் இன்னொரு சிந்தியா மெலிந்த உடலோடு படுத்திருந்தாள்.
"நாலு வருசமாச்சு.!கோமால விழுந்து.எப்ப வேணா எந்திரிப்பான்னு எதிர்பார்க்கிறோம்.!"

உடல் முழுதும் டியூப்புகளுடன் இருந்தவளை பார்த்து கொண்டிருந்தான்.
"வேற கல்யாணம் பண்ணிக்கலாமே.?"

"சிந்தியா மாதிரி வருமா.?"

"பெட்டரா கூட இருக்கலாம்.திங் பாஸிட்டிவ்.!"

அவர் ஸ்கேன் மீட்டரை பரிசோதித்துக் கொண்டிருந்த போது கர்ச்சீப்பின் நுனியை அவள் கண்களில் வைத்து அழுத்தினான்.எந்த ரியாக்சனும் இல்லாததால் ஏமாந்தான்."நம்புப்பா.!நாங்களும் கருமுழி சுத்துதான்னு டெஸ்ட் பண்ணிட்டுத்தான் இருக்கோம்.!"

"ஒகே.!டாக்டர்! நான் கிளம்புகிறேன்.!

அவன் அலுவலகத்தில் கடமைக்கு வேலை செய்து கொண்டிருந்தான்.மாலையில் பூட்டை திறக்கும் போதே புரஜக்டர் ஆன் ஆகி அவள் கதவை திறந்து வரவேற்பது அவன் நினைவில் வந்து சலிப்பை ஏற்படுத்தியது.எல்லோரும் போன பிறகு மாடிக்கு போனவன் வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.சில்வியா இறந்து விட்டாளா.?இல்லையான்னு தெரியாத நிலை அவனுக்கு குழப்பத்தை தந்தபடி இருந்தது.செயற்கை சிந்தியாவுடனான ஒரே நாளை பிரதி எடுத்த அடுத்த நாள் போரடித்தது.தன் செல்போனின் வாய்ஸ் ரிகார்டரை ஆன் செய்தவன்."என் சாவுக்கு யாரும் காரணமில்லை.என் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தற் கொலை செய்கிறேன்.ஐ லவ் சிந்தியா.!"பேசி பதிவு செய்தவன் கைப்பிடி சுவற்றில் வைத்து விட்டு குதிக்க தயாரானான்.
குதிக்க தயாராகி ஏறி நின்ற போது போன் அடித்தது.அவன் அந்த அழைப்பு தன் முடிவை மாற்றி விடுமோ என்று பயந்து புறக்கணித்தான்.போனின் மறுமுனையில் ஆத்மா "சில்வியா கண்ணு முழிச்சிட்டான்னு சந்தோஷமான விசயத்தை சொல்ல போன் பண்ணிணால் ஏன் எடுக்க மாட்டேங்கிறான்.?"என்று குழம்பி கொண்டிருந்தார்.அவன் தன் நிழலை நோக்கி காற்றை கிழித்தபடி பயணமாகி கொண்டிருந்தான்.

உண்மை.!

அடித்த போனை எடுத்தவன் மறுமுனையில் சக்தியின் "அம்மா போன் பண்ணாங்க.!"என்ற குரலில் எரிச்சலானான்."என்னவாம்.?"
"அப்பாக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காம்.பாக்கநான் போகனும்.?"

"அப்படியே போயிரு.!திரும்ப வராதே.!உங்கப்பன் உன்னை லவ் பண்ணதுக்கு போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி ஜட்டியோட உக்கார வைச்சத நான் இன்னும் மறக்கலை.செருப்புல பூந்த கல்லா கசப்பா அந்த நினைவு இருக்கு.!அந்தாளோட ஈகோவை அடக்கத்தான் உன்னை கல்யாணமே பண்ணினேன்.!"

"அப்ப உண்மையா என்னை லவ் பண்ணலையா.?"

"அது ஒரு ஓரமா இருக்கு.!ஆனா மெயின் மேட்டர் இதுதான்.!ஜெயிச்சு காட்டுரேங்கிற வெறி.!"

"இப்ப நான் போறதா வேணாமா.?"

"போ.!ஆனா வராதே.!"

"நான் போயே தீருவேன்.!"

"அவ்வளவு திமிராடி உனக்கு.!"என்ற போது போன் கட்டானது.லேண்ட் லைனை வைத்து விட்டு
எரிச்சலின் உச்சிக்கு போனவன் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த போனை பிடுங்கி ஆன் செய்தான்.

உடனே அடித்த போனை எடுத்தால் அண்ணன்.!
"உனக்கெல்லாம் எதுக்குடா போனு.!தூக்கி குப்பைல போடு.!"

"என்ன ஆச்சு.?ஏன் திட்ர.?"

"நம்ம அப்பாக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சுடா.!அந்த வழியா வந்த உன் மாமனார்தான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து பிளட் கொடுத்திருக்கார்.மக உன்னை கூட்டிட்டு ஒடி கல்யாணம் பண்ணிய கடுப்புல மனைவி மூலமா சக்திக்கு மெசேஜ் பாஸ் பண்ணியிருக்காரு.உடனே ஹாஸ்பிட்டலுக்கு வா.!"

சக்தி அப்பான்னு சொன்னது மாமனாரையா.?அவன் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை துப்பினான்.

முகம் பார்க்காமல் திரும்பி நின்ற மாமனாரிடம் "தேங்க்ஸ்.மாமா!"என்றான்.

"யாரா இருந்தாலும் இந்த உதவியை செய்திருப்பேன்.!என்றார் விரைப்பாய்.
"தெரியும்.!இந்த தேங்ஸ் அதுக்கில்லை.!இப்படி ஒரு நல்ல பெண்ணை எனக்காக பெத்து வளர்த்ததுக்கு.!"
அவர் வியப்பாய் பார்த்து கொண்டிருந்த போது வார்டில் நுழைந்தவன் பார்வையாலேயே சக்தியிடம் மன்னிப்பு கேட்க துவங்கியிருந்தான்.

பிரமாண்ட பொய்.!

"இது கனவா.?நனவான்னு தெரியலையே.?"என்றான் சிவா.!

"எனக்கும்தான் பாஸ்.!"என்றான் ராஜ்.

"இந்த ரூம்ல எல்லாமே நம்மளைத் தவிர பிரம்மாண்டமாய் இருக்கு.!எப்படிடா.?"

"ஒரு இங்கிலீஷ் படத்துல பார்த்தேன் பாஸ்.சின்ன பசங்க ஒரு கிறுக்கு விஞ்ஞான கருவினால ரொம்ப பொடிசா மாறிருவானுக.!அந்த மாதிரி எதுனா கண்டுபிடிச்சி நம்மளை பண்ணியிருப்பாங்களோ.?"

"இங்க அந்தளவுக்கு டெக்னாலாஜி வளரலை.!கடைசியா பாலுவை பிடிக்க வரும்போது தலைல அடி பட்டு மயங்குனது நினைவிருக்கு.!முழிச்சு பார்த்தா இப்படி ஒரு விபரீதம்.!"

சுற்றிலும் இருந்த பிரமாண்ட சோபா,நாற்காலிகளை,டைனிங் டேபிளை பார்வையிட்டவன்."நாம சின்னதாகி விட்டோமா.?இல்லை இதெல்லாம் பெரிசா இருக்கான்னு குழப்பமா இருக்கு.!"

"சட்டை பட்டனில் ஜி பி ஆர் வைச்சிருக்கேன்.அத வைச்சு நம்மாளுக வந்துருவாங்க.!இப்ப மணி என்ன.?"

"ஒண்ணாகப் போகுது.!"

"கொஞ்ச நேரத்துல உண்மை தெரியப் போகுது.! வெயிட் பண்ணுவோம்.!"

அவர்கள் சோர்ந்து உட்காருவதை கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் பாலு.
"என்னை பிடிக்க வந்து எங்கிட்டயே மாட்டிகிட்டானுக.அவனுக சைஸ் நார்மல்தான்.அந்த ரூமில் இருப்பதெல்லாம் பெரிசு.கொஞ்ச நாள் இதுல இருந்தா பைத்தியம் புடிச்சுடும்.இந்த செட்டப் மன உளைச்சலை உருவாக்கும்.!"என்றான்.
அருகேயிருந்த அடியாள் "பாஸ்.!மணி ஒன்னாச்சு.!அவனுகளுக்கு சாப்பிட எதாவது கொடுக்கனும்.இல்லைன்னா செத்துருவானுக.!"
"கீழே உள்ள ரகசிய வழியில் தட்டை தள்ளி விடு.!"
ஒடிப்போய் தட்டை எடுத்து சாப்பிட்டவர்கள் ஜாலியாக ஆடு புலி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தனர்.
போலீஸ் டிராக் பண்ணி வந்து பாலுவை கைது செய்து இருவரையும் மீட்டபோது குழப்பத்துடன் கேட்டான்."அந்த ரூம் ஒரு செட்டப்புன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க.?"

"எல்லாமே பெரிசா செய்து வைத்து குழப்பினாய்.ஆனால் சாப்பாட்டை அப்படி செய்ய முடியவில்லையே.இட்லி,புரோட்டாவெல்லாம் பெரிசாயில்ல செய்திருக்கனும்.அதுலதான் இது செட்டப்புன்னு தெரிஞ்சுது.!"

அவன் தலை கவிழ்ந்து வெளியேறினான்.

திருப்பம்

இருளில் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தவளை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன்.பணம்,நகை அவனது நோக்கம் இல்லை.குடித்திருந்த சரக்கு பெண்ணை தேட வைத்த போதுதான் அவளைப் பார்த்தான்."இந்தா! நில்லு.!"என்று அவளின் தோளை பிடித்தவனை தட்டி விட்டு விட்டு ஓட ஆரம்பித்தாள்.குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு போய் மேட்டரை முடித்தவன் அவள் அழுவாள் என்று எதிர்பார்த்து ஏமாந்தான்."என் வாழ்க்கையே போச்சுன்னு அழுவாம இருக்கே.?"என்றான் குழப்பமாய்."நான் ஏன் அழுவனும்.?இனி நீதான் அழுவனும்.!"

"நான் எதுக்கு அழனும்.?"என்றான் குழப்பமாய்.

"எய்ட்ஸ் வந்தா அழுவாம சிரிப்பியா.?"

"என்னடி சொல்ர.?"

"ஆமாய்யா.!நான் தப்பான தொழில் பண்ணி இந்த வியாதி வந்துருச்சு.அதான் ஜி.ஹேச்சுல மருந்து வாங்கிட்டு வருவேன்.அப்படி இன்னைக்கு வரும்போது பாய்ஞ்சிட்டே.!"

"மொதல்லயே சொல்லலாம்ல.!"

"சொல்லியிருந்தா வேறோரு குடும்ப பொண்ண நாசம் பண்ணியிருப்பாய்.சரி நான் கிளம்பரேன்.மறுபடியும் ஆஸ்பத்திரில பார்க்கலாம்.!"

அவள் இருட்டில் மறைய அவன் போதை இறங்கி சிலையாக நின்று கொண்டிருந்தான்.

இருளில் நடந்தவள் கண்களை துடைத்து கொண்டாள்."நீ ரேப் பண்ணிட்டு ஜாலியா சுத்திட்டு சந்தோஷமா இருப்பாய்.நான் மட்டும் அழுதுட்டு வேற கல்யாணம் பண்ண முடியாம போலீஸ்,கோர்ட்டுன்னு அலையனுமா.?இனி ஒவ்வொரு நாளும் சாவை நினைத்து பயந்துகிட்டே நீ வாழனும்டா.!"
காலிங் பெல்லின் ஓசைக்கு கதவை திறந்த அம்மாவிடம் "கீழ விழுந்து உடம்பெல்லாம் மண்ணாயிருச்சு.!நான் குளிக்கனும்.!"என்றாள்.