செவ்வாய், 27 டிசம்பர், 2016

ப்ரியம்

வேலாயுதம் குனிந்து தன் ஷுவை கட்டிக் கொண்டிருந்தார்.டிரைவர் காரை எடுக்க தயாராக இருந்தான்.அடித்த போனை வெறுப்பாக எடுத்து "ஹலோ! "என்றார்.மறுமுனை "தலைவரே! நான் செல்வராஜ் பேசரேன்.வாக்கிங்குக்கு கிளம்பீட்டிங்களா? "என்றது.செல்வராஜ் உளவுத்துறையின் முக்கிய புள்ளி.வேலாயுதம் பற்றிய எந்த விசயமாக இருந்தாலும் முதலில் தகவல் கொடுத்து விடுவான்.வேலை வாங்கி கொடுத்த விசுவாசம்."சொல்லு செல்வம்.கரெக்டா கிளம்பர நேரத்துல பிடிச்சிட்ட! என்ன விசயம்? "என்றார் ஆர்வமாக.

"ஐயா! இன்னைக்கு வாக்கிங் போனா உங்க சோலிய முடிக்க பிளான் பண்ணியிருப்பதாக தகவல்! "

"இப்பத்தான் டாய்லெட் போயிட்டு வந்தேன்.மறுபடியும் போக வைச்சிருவ போலிருக்கே? பிளான் பண்றது யாரு? எதாவது தெரியுமா? "

"வேற யாருங்க? உங்ககூட மா.செ.ஆகனும்னு போட்டி போட்டு தோத்தவருதான்."

"நினைச்சேன்.சரி நான் பாத்துக்கிறேன்.மத்யானம் வீட்டு பக்கம் வந்துட்டு போ! "என்று போனை அணைத்தார்.எம்.எல்.ஏவாவும் மாவட்ட செயலாளராகவும் இருப்பது ஒரு தப்பா என்று நினைத்துக் கொண்டார்.உடம்பில் சுகர் அதிகமாக இருப்பதால் பீச்சில் நடந்து கொண்டிருந்தார்.அதற்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.சுகரா? உயிரா என்றால் உயிர்தான் பெரிது என்ற கட்டத்தில் இருந்தார்."ஐயா! போலாங்களா? "என்ற டிரைவரை "வேணாம்பா! ஆமா வேணி எங்க? "என்றார்."அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க! "

"இவ வேற! நேரந்தெரியாம! "என்று சலித்து கொண்டபோது வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் வேணி.அவரது மனைவி.

"இன்னும் குளிக்கலையா? போய் குளிங்க.தின்னூறு கூட வைக்க முடியலை.!"என்றவளின் முழு உருவத்தை இமைக்காமல் பார்த்தவரை "என்னாச்சுங்க! இப்படி பாக்கரீங்க? "என்றாள்.

"நான் செத்துட்டா என்ன பண்ணுவ வேணி? "என்றார்.

"காலங்காத்தால பேசர பேச்சா இது.!

"அட சொல்ரி! வாக்கிங் போனா என்னை வெட்ட பிளான் பண்ணிட்டானுக.!எப்ப சாவேன்னு எனக்கே தெரியாது.நடக்காம எப்படி சுகர் குறையும்.?"

"இது ஒரு பிரச்சனையா? நின்னுகிட்டே ஓடுர மாதிரி மிஷினு இருக்கே? ஒன்னு வாங்கிக்கிறது? "

"அதுல ஸ்பீட் அட்ஜெஸ்மெண்ட் இருக்காமே? ஸ்பீடா வைச்சு விழுந்து தொலைச்சிட்டா? "

"போய் குளிச்சிட்டு வாங்க! பேசிக்கலாம்.!"

அவர் குளித்துவிட்டு வந்த போது பந்தல்ரவி மொட்டை மாடிக்கு தன் ஆட்களுடன் மூங்கில் கழிகளை ஏற்றிக் கொண்டிருந்தான்.பார்த்தவுடன் "வணக்கம் தலைவரே! "என்றவனை "என்னடா பண்ரீங்க இங்க? "என்றார்."அக்காதான் வரச் சொன்னாங்க! அவங்களையே கேளுங்க! "என்றான்.

தோசை சுட்டு கொண்டிருந்தவளை "என்னம்மா இது? "என்றார்.

அடுப்பை அணைத்தவள் "மேல வந்து பாருங்கள்! "என்றாள்.
மேலே போய் பார்த்த போது கொட்டைமாடியின் ஒரு கிரவுண்ட் காலி இடத்தில் பாம்பு போல் மூங்கில்கழிகள் கட்டப்பட்டிருந்தன."கோயில்ல கியூவுக்கு இப்படித்தான் மடிச்சு மடிச்சு மூங்கிலால் கட்டி வைச்சிருப்பாங்க.இதுக்குள்ள நடந்து போயிட்டு வாங்க.இந்த ஏரியாவுலயே பெரிய பில்டிங் நம்மளுடையதுதான்.துப்பாக்கில கூட சுட முடியாது! "என்றவளை காதலுடன் பார்த்தவர் "எம்மேல இம்புட்டு பிரியமா? "என்றார்.
"பீரோவில் இருக்கும் நூறு பட்டுப்புடவையும் நீங்க செத்துட்டா வீணா போயிராது? அதுக்குத்தான் இதெல்லாம்! "என்றாள் வேணி.அவர் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தார்.

ப்ரியம்

வேலாயுதம் குனிந்து தன் ஷுவை கட்டிக் கொண்டிருந்தார்.டிரைவர் காரை எடுக்க தயாராக இருந்தான்.அடித்த போனை வெறுப்பாக எடுத்து "ஹலோ! "என்றார்.மறுமுனை "தலைவரே! நான் செல்வராஜ் பேசரேன்.வாக்கிங்குக்கு கிளம்பீட்டிங்களா? "என்றது.செல்வராஜ் உளவுத்துறையின் முக்கிய புள்ளி.வேலாயுதம் பற்றிய எந்த விசயமாக இருந்தாலும் முதலில் தகவல் கொடுத்து விடுவான்.வேலை வாங்கி கொடுத்த விசுவாசம்."சொல்லு செல்வம்.கரெக்டா கிளம்பர நேரத்துல பிடிச்சிட்ட! என்ன விசயம்? "என்றார் ஆர்வமாக.

"ஐயா! இன்னைக்கு வாக்கிங் போனா உங்க சோலிய முடிக்க பிளான் பண்ணியிருப்பதாக தகவல்! "

"இப்பத்தான் டாய்லெட் போயிட்டு வந்தேன்.மறுபடியும் போக வைச்சிருவ போலிருக்கே? பிளான் பண்றது யாரு? எதாவது தெரியுமா? "

"வேற யாருங்க? உங்ககூட மா.செ.ஆகனும்னு போட்டி போட்டு தோத்தவருதான்."

"நினைச்சேன்.சரி நான் பாத்துக்கிறேன்.மத்யானம் வீட்டு பக்கம் வந்துட்டு போ! "என்று போனை அணைத்தார்.எம்.எல்.ஏவாவும் மாவட்ட செயலாளராகவும் இருப்பது ஒரு தப்பா என்று நினைத்துக் கொண்டார்.உடம்பில் சுகர் அதிகமாக இருப்பதால் பீச்சில் நடந்து கொண்டிருந்தார்.அதற்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.சுகரா? உயிரா என்றால் உயிர்தான் பெரிது என்ற கட்டத்தில் இருந்தார்."ஐயா! போலாங்களா? "என்ற டிரைவரை "வேணாம்பா! ஆமா வேணி எங்க? "என்றார்."அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க! "

"இவ வேற! நேரந்தெரியாம! "என்று சலித்து கொண்டபோது வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் வேணி.அவரது மனைவி.

"இன்னும் குளிக்கலையா? போய் குளிங்க.தின்னூறு கூட வைக்க முடியலை.!"என்றவளின் முழு உருவத்தை இமைக்காமல் பார்த்தவரை "என்னாச்சுங்க! இப்படி பாக்கரீங்க? "என்றாள்.

"நான் செத்துட்டா என்ன பண்ணுவ வேணி? "என்றார்.

"காலங்காத்தால பேசர பேச்சா இது.!

"அட சொல்ரி! வாக்கிங் போனா என்னை வெட்ட பிளான் பண்ணிட்டானுக.!எப்ப சாவேன்னு எனக்கே தெரியாது.நடக்காம எப்படி சுகர் குறையும்.?"

"இது ஒரு பிரச்சனையா? நின்னுகிட்டே ஓடுர மாதிரி மிஷினு இருக்கே? ஒன்னு வாங்கிக்கிறது? "

"அதுல ஸ்பீட் அட்ஜெஸ்மெண்ட் இருக்காமே? ஸ்பீடா வைச்சு விழுந்து தொலைச்சிட்டா? "

"போய் குளிச்சிட்டு வாங்க! பேசிக்கலாம்.!"

அவர் குளித்துவிட்டு வந்த போது பந்தல்ரவி மொட்டை மாடிக்கு தன் ஆட்களுடன் மூங்கில் கழிகளை ஏற்றிக் கொண்டிருந்தான்.பார்த்தவுடன் "வணக்கம் தலைவரே! "என்றவனை "என்னடா பண்ரீங்க இங்க? "என்றார்."அக்காதான் வரச் சொன்னாங்க! அவங்களையே கேளுங்க! "என்றான்.

தோசை சுட்டு கொண்டிருந்தவளை "என்னம்மா இது? "என்றார்.

அடுப்பை அணைத்தவள் "மேல வந்து பாருங்கள்! "என்றாள்.
மேலே போய் பார்த்த போது கொட்டைமாடியின் ஒரு கிரவுண்ட் காலி இடத்தில் பாம்பு போல் மூங்கில்கழிகள் கட்டப்பட்டிருந்தன."கோயில்ல கியூவுக்கு இப்படித்தான் மடிச்சு மடிச்சு மூங்கிலால் கட்டி வைச்சிருப்பாங்க.இதுக்குள்ள நடந்து போயிட்டு வாங்க.இந்த ஏரியாவுலயே பெரிய பில்டிங் நம்மளுடையதுதான்.துப்பாக்கில கூட சுட முடியாது! "என்றவளை காதலுடன் பார்த்தவர் "எம்மேல இம்புட்டு பிரியமா? "என்றார்.
"பீரோவில் இருக்கும் நூறு பட்டுப்புடவையும் நீங்க செத்துட்டா வீணா போயிராது? அதுக்குத்தான் இதெல்லாம்! "என்றாள் வேணி.அவர் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தார்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஒரு ஹீரோ இரண்டு படம்!

“தமிழில் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லைங்க தம்பி! வித்தியாசமான சப்ஜெக்ட்! நீங்க பண்ணிணா நல்லாருக்கும்! “என்றார் கதாசிரியரும், டைரக்டருமான மார்த்தாண்டம்.

“வர்ர டைரக்டரெல்லாம் இதேதான் சொல்ரீங்க.ஆனா பழைய மாவை அரைக்கிறீங்க! பேஸ்புக்ல கழுவி ஊத்தராங்க! “என்றான் குமார்.தமிழ் திரையுலகின் முண்ணனி ஹிரோவாக வளர்ந்து வரும் நடிகன்.
அடிபட்ட பார்வை பார்த்த மார்த்தாண்டம் “என்னோட கதை சைக்கோ மாதிரி தம்பி! எப்படி அந்நியன்ல டிஸ்ஆர்டர் பர்சனாலிட்டியை யூஸ் பண்ணாங்களோ அதே மாதிரி இதுல நெக்ரோ மேனியாக்குன்னு ஒரு விசயத்தை யூஸ் பண்ணியிருக்கேன்.!

“நெக்ரோமேனியாக்குன்னா என்னன்னே? “

“செத்த பிணத்துடன் செக்ஸ் வைச்சிக்கர பழக்கத்துக்கு பேரு.!நம்ம கதை வில்லன் இந்த கேட்டகிரி.ப்ளாஷ்பேக் கேட்டா மிரண்டுருவீங்க! “

“சொல்லுங்கண்ணே! கேப்போம்! “

“ஒரு கிராமம் தம்பி! அந்த ஊருல கன்னி கழியாம விபத்துலயோ, நோயிலியோ செத்துப்போற பொண்ணுக சொர்க்கத்துக்கு போக முடியாதுன்னு ஒரு நம்பிக்கை.அதனால வெட்டியானை விட்டு அந்த செத்த உடம்போட செக்ஸ் வைச்சுக்க சொல்லி அப்புறம் புதைப்பாங்க! மின் மயானம் வந்ததால அவனுக்கு வேலை இல்லாம போகுது.பொழப்பு தேடி சிட்டிக்குள்ள வர்ரவனுக்கு அந்த எதிர்ப்பே இல்லாத, சத்தமே இல்லாத செக்ஸ் தேவைப்படுது.பொண்ணுங்களை கொன்னுட்டு செக்ஸ் வைச்சிக்கிறான்.அவனை போலீஸான நீங்க கண்டு பிடிக்கரீங்க! “

“அண்ணே! ப்ளாஷ்பேக்லயே அசத்திட்டீங்க! சிகப்பு ரோஜாக்கள் மாதிரி இருக்குண்ணே! இந்த படத்தை நாம பண்ரோம்! “

“இன்னொரு விசயம்.இதில் உங்களுக்கு டபுள் ரோல்.ஹீரோ வில்லன் ரெண்டுமே நீங்கதான்! ஒரு லவ் ஸ்டோரியும், க்ரைம் ஸ்டோரியும் சேர்ந்தே வரும்.ராஜேஷ்குமார் நாவல் மாதிரி! “
“பிரமாதம்னே! இதை பண்ணலாம்னே! “

“அப்புறம் இன்னொரு புதுமை தம்பி.படத்துக்கு ரெண்டு பேரு! கடைசியா கமல் நடிச்ச உல்லாச பறவைகள்கிற படத்துக்குத்தான் டபுள் டைட்டில் வைச்சாங்க! அதுக்கப்புறம் நம்ம படத்துக்குத்தான்! “

“வித்தியாசமா பண்ரீங்கண்ணே! நாளைக்கு காண்ட்ரேக்ட் சைன் பண்ணிக்கலாம்ணே! சம்பளத்தை மேனேஜர்கிட்ட பேசிக்குங்கண்ணே! “
கும்பிட்டு விட்டு கிளம்பிய குமாரை வழியனுப்பி விட்டு மேனேஜரிடம் மூன்று கோடி ரூபாய்க்கு சம்பளம் பேசி முடித்து விட்டு கிளம்பினார்.மாலையில் காண்ட்ராக்ட் ரெடி பண்ணிக் கொண்டிருந்த போது போன் அடித்தது.குமாரின் மனேஜர்தான் லைனில் இருந்தார்.
“சொல்லுங்க! என்ன விசயம்? “என்றார் மார்த்தாண்டம்.

“குமார் அண்ணன் இன்னும் ஒரு சி சேர்த்து கேட்கிறாருங்க! “

“இதென்னங்க நியாயம்? “

“அண்ணனோட மார்க்கெட் உங்களுக்கே தெரியும்! டபுள் ரோல்னா நிறைய டைம் ஆகும்.வில்லன் வேசத்துக்கு வேற ஆள் போட்டாலும் சம்பளம் கொடுக்கத்தானே செய்வீங்க? அதைத்தான் அண்ணன் கேட்குறாரு! “

“இது தப்புங்க! முதல் டபுள் ரோல் படம்னு அவருக்குத்தாங்க பெருமை! “

“நாலு கோடின்னா படம் பண்ணலாங்க! இல்லைன்னா ஏவி எம் வெயிட்டிங்ல இருக்கு! “
“சரி! வாங்கிக்கலாம்! “
கோபத்துடன் போனை வைத்தவர் “என்னாச்சு சார்? “என்ற அசிஸ்டெண்டை நிமிர்ந்து பார்த்தார்.
“குமாருக்கு இன்னும் ஒரு கோடி வேணுமாம்! “

“முதல்ல வர்ர குதிரைங்க அவரு! கொடுக்கலாம் தப்பில்லை! “

“ஆனா இந்த சம்பளம் அதிகம்! ஸ்கிரிப்டை கொடு! “
வாங்கிக் கொண்டு அறையை தாழிட்டவர் விடிய விடிய எழுதிக் கொண்டிருந்தார்.மறுநாள் அட்வான்ஸ் கொடுத்து விட்டு ஷுட்டிங்கை ஆரம்பித்தார்.மூன்று மாதங்களுக்கு பிறகு குமாரின் “மவுன கொலை! “வெளியாகி ஓட ஆரம்பித்தது.அதில் ஆண்டி ஹீரோவாக குமார் கலக்கியிருந்தான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு குமாரின் மற்றோரு படமான “ஒற்றை ரோஜா “விற்கு விளம்பரம் வந்திருந்தது.முற்றிலும் காதல்கதை என்றது விளம்பரம்.
“என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? “என்றான் போனில் குமாரின் மேனேஜர்.

“ஆமாய்யா! உங்காளு நடிச்சது ஒரு படமில்லைய்யா! ரெண்டு படம்.சொன்ன கதையை தனித்தனி கதையா மாத்திட்டேன்! காண்ட்ராக்ட்ல தெளிவா சின்ன எழுத்துல எழுதியிருப்பேன் பாரு! “

“இதெல்லாம் தப்புங்க! “

“இதை நான் சொல்லனும்! தகுதிக்கு மேல சம்பளம் கேட்டா இதுதான் நடக்கும்.உங்காளு ஹீரோன்ற திமிரை காட்டுனான்.நான் கதாசிரியர்கிற திமிரை காட்டிட்டேன்.எல்லாமே சட்டப்படிதான் பண்ணியிருக்கேன்.போனை வை! அடுத்த படத்து கதையை யோசிக்கனும்! “

மார்த்தாண்டம் போனை வைத்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

கடைசி தூக்கம்!

"நீ சொல்ரது நம்பர மாதிரி இல்லை! "என்றான் பிலிப்.

"நிஜம்பா! நம்பு! அதுக்கு பேரு கிளீன் லெவின் சிண்ட்ரோம்.சுருக்கமா கே.எல்.எஸ்.தமிழ்ல சொன்னா கும்பகர்ணதூக்கம்.தூங்க ஆரம்பிச்சா 64நாளைக்கு தூங்குவாங்க! சாப்பாடு, தண்ணி எதுவுமில்லாம! விஞ்ஞானிகள் துருவ கரடியோட தூக்கத்துக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருக்குமான்னு ஆராய்ச்சி பண்ண முடிவு பண்ணியிருக்காங்க! "என்றான் ஜான்.

"அதனாலதான் அந்த ஒரு பெண்ணை கூட்டிட்டு வர நம்மளை அனுப்பியிருக்காங்களா? "என்றான் பிலிப்.

"ஆமா! சொல்லப்போனா அந்த தூக்கத்தினாலதான் அவ உயிரோட இருக்கா! D வைரஸ் அட்டாக் ஆனபோது நியூயார்க்ல எல்லோரும் செத்துட்டாங்க! யூனிவர்சல் டோனர் மட்டும் வைரஸ் அட்டாக்குக்கு ஆளாகாமல் தப்பிச்சுட்டாங்க! "

"யூனிவர்சல் டோனர்னா? "

"ஓ குரூப்புக்காரங்க! அவங்க ரத்தம் யாருக்கு வேணா சேரும்! அதனால அந்த பேரு! "

"நாம நியூயார்க்கை நெருங்கிட்டோம்! "என்றார் பைலட்.!

ஹேலிகாப்டர் நியூயார்க்கின் மீது பறக்கத் தொடங்கியது.சீல் வைக்கப்பட்ட நியூயார்க் சிதைய தொடங்கியிருந்தது.தார் சாலையில் புற்கள் வளர்ந்திருந்தன.மின்சார கம்பிகளின் மேல் கொடிகள் படர்ந்திருந்தன.நிறைய விலங்குகள் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தன.

"இவையெல்லாம் வைரஸ் தாக்குதலில் தப்பித்து விட்டன.!"என்றான் பிலிப்.

"64நாள் தூக்கத்துக்கு பின்னாடி நேத்துதான் முழிச்சிருக்கா! பிரிட்ஜிலிருந்ததையெல்லாம் தின்னுட்டு வெளியே வந்து பார்த்தால் ஒரு மனிதனும் இல்லை! விலங்குகளோட தாக்குதலுக்கு பயந்து ரூம்லயே அடைஞ்சு கிடக்கிறாள்.எப்படியோ ஒரு போனை கண்டு பிடிச்சு 119 க்கு கால் பண்ணியதால் மீட்க நாம வந்திருக்கிறோம்! "

"எந்த பில்டிங்குன்னு அந்த பொண்ணை கேளுங்க! "என்றார் பைலட்.

கையிலிருந்த செல்லை உயிர்பித்தவன் "கெல்லி! நீ எங்கிருக்கிறாய்னு அடையாளம் சொல்லு! நாங்க வந்துட்டோம்! "என்றான்.

அவள் அடையாளம் சொன்ன பில்டிங்கின் மொட்டை மாடி புல் வளர்ந்து குப்பை கூளமாக இருந்தது.நின்ற ஹேலிகாப்டரிலிருந்து குதித்த ஜான் "பைலட்! உங்களுக்கு சுட தெரியுமா? "என்றான்.

"துப்பாக்கியை பார்த்ததுடன் சரி! "என்றவரை நோக்கி தன் கன்னில் ஒன்றை எரிந்தவன் "சேப்டிக்கு வச்சிக்குங்க! "என்றான்.

"நாங்க ரெண்டு புளோர் கீழே போகனும்! வெயிட் பண்ணுங்க! "

அவர்கள் டார்ச் லைட்டுடன் இருளை கிழித்து கொண்டு முன்னேறினார்கள்.குப்பை கூளங்களை கடந்து ஒவ்வொரு அறையாக திறந்து கடைசியில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி கிடந்தவளை கண்டுபிடித்தார்கள்.
எலும்பும் தோலுமாக இருந்தவளை பார்த்து "நிஜமாவே அத்தனை நாள் நீ தூங்குவியா? "என்றான் பிலிப்.

"ஆமா! அதோட அறிகுறியா பயங்கரமா தலை வலிக்கும்.அப்புறம் தூங்க ஆரம்பிச்சுருவேன்! "என்றவளை இழுத்து கொண்டு மேலே வந்த போது பைலட் துப்பாக்கியின் சேப்டி லாக்கரை விடுவிக்க முடியாமல் "என்னை விட்டு போங்க! "என்று மரணபீதியில் அலறிக் கொண்டிருந்தான்.அவனை மூன்று புலிகள் தாக்க தயாராகிக் கொண்டிருந்தன.
ஜானும், பிலிப்பும் துப்பாக்கியை உயர்த்தும் முன்பாக பைலட் பயத்தில் மாடியிலிருந்து குதித்து விட்டான்.இப்போது அவன் துப்பாக்கி சேப்டீ லாக்கர் விடுபட்டு வெடித்தது.

"தப்பான நேரத்துல வெடிச்சிருச்சு! "

அடுத்தடுத்த தோட்டா முழக்கங்களுக்கு பின் இறந்து கிடந்த புலிகளை தாண்டினார்கள்.

"சரியா மாட்டிட்டோம்.எனக்கு ஹேலிகாப்டரை ஓட்டத்தெரியாது! "என்றான் பிலிப்.

"எனக்கும்தான்! "என்றான் ஜான்.

"இவளை காப்பாத்த வந்து நாம மாட்டிகிட்டோம்! "என்றான் பிலிப் வெறுப்புடன்.

"டோண்ட் ஒர்ரி! எனக்கு இதை ஓட்ட தெரியும்! "என்றாள் கெல்லி.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பறக்க ஆரம்பித்த ஹேலிகாப்டர் இரண்டாயிரம் அடி உயரத்தில் நிலையாக பறக்க ஆரம்பித்திருந்தது.ஜானும் பிலிப்பும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்த போது கெல்லியின் உதடுகள் உச்சரித்த வார்த்தையை இருவரும் கவனிக்க தவறினார்கள்!

"எனக்கு தலை பயங்கரமா வலிக்குது! நான் தூங்கப் போறேன்! "

சுவாமி

“எல்லா கார்பரேட் கம்பெனிகளுக்கும் அவரு டிரைனிங் கொடுக்கிறாருங்க! ரிசல்ட் நல்லாயிருக்குன்னு சொல்ராங்க! நம்ம கம்பெனிக்கும் வரச் சொல்லலாங்களா? “என்ற மேனேஜரை கேலியாக பார்த்தார் ராம நாதன்.

“யோவ்! இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு! காசை பிடிச்ச தண்டம்யா! “என்றார்.

“இல்லைங்க! அவரு சகாயம் நமக்கு யூஸ்புல்லா இருக்கும்னு தோணுது.நம்ம கம்பெனியோட கேஸ் பிளாண்டுக்கு ரிலையன்ஸ் தடைய மீறி மினிஸ்டர் சைன் பண்ணியதே இவர் சொல்லித்தாங்க! மினிஸ்டர் பி.ஏ சொன்னாருங்க! “

“சாமியாருங்களும் அரசியலுக்குள்ள வந்துட்டாங்களா? இந்த நாட்டை கடவுளால கூட காப்பாத்த முடியாதுய்யா! “

“அப்புறம் இன்னொரு விசயங்க! பதினைந்து வயசுல காணாம போன உங்க பையனை அவரு மூலமா கண்டு பிடிக்ககூட வாய்ப்பு இருக்கு! “

“யாரு அரவிந்தனையா?என்னோட முப்பது வருச உழைப்பு! ஐநூறு கோடி ரூபாய் சொத்து.!இதை கட்டி காப்பாத்த எவ்வளவு கெட்டிக்காரத்தனம் வேணும்.?கொஞ்சம் கூட அவங்கிட்ட திறமை இல்லையே! கோபம் வந்து திட்டுனேன்.வீட்டை விட்டு ஒடிட்டான்.எங்க தேடியும் அகப்படலை.வயசான காலத்துல இத்தனையையும் ஓய்வே இல்லாம வைக்கபோர் நாயா காத்துகிட்டு கிடக்கிறேன்.!”

“அவரு யோகா எக்ஸ்பர்ட்டுங்க! பி.எம்முக்கே அவருதான் சொல்லித்தர்ராரு.ஒரு கிளாஸ் அட்டெண்ட் பண்ணி பாருங்க! மனசு லேசாகிரும்.!”

“மனசு லேசாகுதோ இல்லியோ பர்ஸை லேசாக்கிருவானுக! சரி அவரை வரச் சொல்லு! பார்ப்போம்! “

“நாளைக்கு பத்து மணிக்கு வர்ரேன்னு சொல்லியிருக்காரு! “

“ரைட்டு அந்த சாமியார் பேரு என்ன சொன்ன? “

“மகேஸ் யோகி தீர்த்தங்கரா! “

அவர் வேலையில் ஆழ்ந்தார்.

மறுநாள் காவி உடையில் தலை நிறைய முடியோடு உதட்டில் வசீகர சிரிப்போடு நுழைந்தார் மகேஸ் யோகி!

முப்பது வயதிற்குள் தீர்க்கமான பார்வையோடு சோன்பப்டி விற்பவனை போலிருந்தவனை வியப்பாக பார்த்தார் ராமநாதன்.

“வாங்க சாமி! நான்தான் இந்த கம்பெனி ஒனர்.!மனசுல நிம்மதியே இல்லை சாமி! “

“அது என்னை போன்றவர்களிடம் மட்டுமே இருக்கிறது! “என்றான் வசீகர புன்னகையுடன்.

“உங்களை பத்தி சொல்லுங்க சாமி! “

“எனக்கு ஒய்வே கிடையாது.நிம்மதி தேடும் மக்களுக்கு நிம்மதியை தருவதே என் பணி.உலகத்தின் அத்தனை நாடுகளிலும் நமக்கு கிளைகள் உண்டு! “

“நல்லது சாமி! எம்பையனை காணோம்! ஞான திருஷ்டியில ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க சாமி! “

“உம் பையனிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறாய்! “

“என்னாது? அரவிந்தா நீயா? “என்றார் அதிர்ச்சியாய்.

“ஆமாப்பா! முப்பது வருசமா டென்சனாகி அலைந்து திரிந்து 500 கோடி சம்பாரிச்சிருக்கிறாய்! நான் பதினைந்து வருசத்துல 2500 கோடிய சம்பாரிச்சுட்டேன்.நோ டென்ஷன்.!நோ பரபரப்பு! “

“எப்படிடா இதெல்லாம்? “

“சிம்பிள்பா! நிறைய புக்கு படிச்சு வசீகரமா ஆன்மீகத்தை பேச கத்துகிட்டேன்.ஹிப்னாடிசத்து மூலம் கண் பார்வையை தீர்க்கமாக்கிக்கிட்டேன்.யோகாவை புதுவிதமா சொல்லித்தர்ரேன்னு ஒரு ஆசிரமத்தை ஆரம்பிச்சேன்.நாலைந்து எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து என்னை பத்தி எழுத வைச்சேன்.அவ்வளவுதான்.சர்க்கரையை மொய்க்குர எறும்பா என்னை சுத்திகிட்டாங்க! மக்களுக்கு எதாவது ஒரு மீட்பர் தேவைப்பட்டுகிட்டே இருக்கார்! “

“ஆன்மீகம்பெரிய பிஸ்னஸ் போல தெரியுதே? “

“ஆமாப்பா! வாயும் வசீகரமும்தான் முதல்! இப்ப தீர்த்தங்கரான்னு பிராண்டு பேர்ல சோப்பு, பவுடர் விற்கிறோம்.யோகாவுக்கும், சோப்பு விற்பதற்கும் என்ன சம்மந்தம்னு ஒருத்தனும் கேட்க மாட்டான்! “

“இப்படி சாமியாராயிட்டியே! கல்யாணம் காட்சின்னு எப்படி பண்ரது! “

“கல்யாணத்துக்கு பின்னாடி கிடைக்க வேண்டியதெல்லாம் காவி டிரஸ்லயே கிடைச்சுருதே! “

அவன் விடைபெற்றுக் கிளம்பினான்.அவர் தன் மகனின் புத்திசாலிதனத்தை வியந்து கொண்டிருந்தார்

பேரம்

"எம் பையன் பெங்களூர்ல சாப்ட்வேர் இன்ஜினியரா இருந்தான்.ஆன்மீகத்துல ஈடுபாடுன்னு ஆசிரமத்துக்கு போனான்.இப்ப வேலய விட்டுட்டு மொட்டைய போட்டுட்டு சன்னியாசி ஆயிட்டான்.எம் பையனை பாக்க விட மாட்டேங்குறாங்க! போதை மருந்து கொடுத்து மயக்கிட்டாங்க! எம் பையனை மீட்டு கொடுங்கன்னு கம்ப்ளைண்ட் பண்ண வந்திருக்கோம்! "கமிசனர் அலுவலகத்திற்கு முன்பாக மீடியாக்களின் மைக்குகளுக்கு முன் அந்த பெரியவர் கதறிக் கொண்டிருந்தார்.

அதை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த மகேஸ் யோகி டிவியை அணைத்தார்."என்னய்யா இது! ஆசிரமத்தோட நல்ல பேரை டேமேஜ் பண்ணிருவீங்க போல! யார்ய்யா அவரோட பையன்?உடனே வீட்டுக்கு அனுப்புங்க! "என்றார் பதட்டமாக!

"அவன் பேரு ஆனந்துங்க! எவ்வளவோ சொல்லியாச்சு சாமி! போக மாட்டேங்குறான்! "என்றார் செக்ரட்டரி!

"அவனை வரச் சொல்லு! நான் பேசரேன்! "

சற்று நேரத்தில் காவி உடையில் மொட்டை தலையுடன் நுழைந்தான் ஆனந்த்!

"என்னப்பா! அப்பா டிவில தாறுமாறா பேட்டி கொடுத்து நம்ம பேரை கெடுக்கிறாரு! இதை உருவாக்க எவ்வளவு கஸ்டப்பட்டேன்னு தெரியுமா? "

"மன்னிச்சிருங்க சாமி! தெரியாம பண்ணியிருப்பாரு! "

"பாரு தம்பி! இல்லாததையெல்லாம் பப்ளிக்ல சொல்லி பேர டேமேஜ் பண்ராரு.போதை மருந்தெல்லாம் கொடுப்பதா சொல்ரதெல்லாம் அபத்தமாயிருக்கு! நீ உடனே கிளம்பி வீட்டுக்கு போப்பா! "என்றார்.

"போலாம் சாமி! ஒரு ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால் கிளம்பிருவேன் சாமி! "

"என்னப்பா சொல்ர? "என்றார் அதிர்ச்சியாய்.!

"ஆமா சாமி! 500கோடி வைச்சிருக்கீங்க!ஐந்து கோடி தர மாட்டிங்களா? ஆன்மீகம்கிற பேருல மக்களிடம் ஆட்டைய போட்ட பணம்தானே இது! எனக்கு கொஞ்சம் கொடுத்தா என்ன? "என்றான் அலட்சியமாக!

"ப்ளாக்மெயிலா பண்ர? "என்றார் கோபமாக!

"சீக்கிரமா பணம் சம்பாதிக்க வேற வழி தெரியலை சாமி! எங்கப்பா நாளைக்கு ஹேபியஸ் கார்பஸ் மனு போட்ருவாரு.என்னை கோர்ட்ல நிறுத்துவாங்க! நான் சொல்ரதில்தான் உங்க எதிர்காலம் இருக்கு! "

மகேஸ் யோகியின் ஆட்கள் அவனை தாக்க நெருங்கிய போது அவன் புன்னகைத்தான்.
"இப்ப என்னை அடிச்சீங்கன்னா அந்தகாயத்தை கோர்ட்ல காட்டுவேன்.போதை மருந்து கொடுத்தாங்க! பொண்ணுகளை தப்பா யூஸ் பண்ணாங்கன்னு சொல்லுவேன்.!உங்க பிஸ்னஸ் படுத்துரும்! பாத்துக்குங்க! "

மகேஸ் யோகி கண்ணை காட்ட அவர்கள் விலகினார்கள்.

"நீ என்னை கார்னர் பண்ணிட்ட! எனக்கு வேற வழியில்லை! செக்ரட்டரி அவன் கேட்டதை கொடுங்க! "

செக்ரட்டரி நகரும் போது "எல்லாம் ஆயிரம் ரூபாயா வேணும்! "என்றான் ஆனந்து.

"இதை வாங்கி என்ன செய்வாய்? "என்றார் யோகி.

"பெங்களூர்ல மகேஸ் யோகியின் ஆசி பெற்ற ஆனந்த யோகின்னு சொல்லி ஒரு ஆசிரமம் அமைக்க போகிறேன்! "

"அதாவது எனக்கு போட்டியா? "

"ஆமா! கத்துகிட்டவனிடம்தானே வித்தையை காட்ட முடியும்! "

"அங்கேயும் உன்னை மாதிரி ஒருத்தன் வராமலா போவான்? "என்றார் யோகி!

"எல்லோரும் ஆனந்தாகி விட முடியாது குருஜீ! "அவன் பெட்டியோடு கிளம்பி போவதை வெறித்துக் கொண்டிருந்தார் யோகி!