"உங்கிட்ட எப்படி கேட்பதென்று தெரியவில்லை.?"என்றான் சிவா.இந்தியாவின் புகழ் பெற்ற ஆன்லைன் விற்பனை கம்பெனியான "விருங்கா."வின் பார்ட்னர்களில் ஒருவன்.
"நீ என்ன கேட்க போகிறாய் என்று எனக்கு தெரியும்.?"என்று புன்னகைத்தவன் மனோஜ்.விருங்காவின் இரண்டு பார்ட்னர்களில் அடுத்தவன்.புத்திசாலி.கூடவே பழைய பொருட்களை வாங்கி விற்க "சோல்ட்."என்னும் ஆன்லைன் தளத்தை நடத்துபவன்.
"அப்படின்னா என்னன்னு நீயே சொல்லு.?"
"நேத்து கஸ்டமர்கிட்ட இருந்து வந்த இ மெயில் கம்ப்ளைண்ட் எப்படி வந்ததுன்னு கேட்க போகிறாய்.!"
"ஆமா.!நாம புது பொருளைத்தானே சப்ளை பண்ணிட்டு இருக்கோம்.பழைய செல்போன்னு எப்படி கம்ப்ளைண்ட் வந்துச்சுன்னு தெரியலை.!"
"உண்மையை சொல்லட்டா.!அது புது செல்போன் இல்லை.பழசுதான்.நாம விக்கிறதுல நூத்துக்கு ஐந்து பொருள் பழயதை சரி பண்ணி மேக்கப் போட்ட ரீமேக்தான்.கிட்டத்தட்ட கிழவிய குமரியாக்கர மாதிரி.!புது செல் கொடுத்து பிரச்சனைய அமுக்கு.!"
"என்னப்பா சொல்ர.?"என்றான் அதிர்ச்சியாய்.
"ஆமா சோல்ட் மூலமா கம்யூட்டர்,லேப்டாப்,மொபைல்,டேப் எல்லாத்தையும் விலை கம்மியா வாங்கி சைனா உதிரி பாகங்களை அசம்பிள் பண்ணி சாப்ட்வேரை டெலிட் பண்ணி,தயாரிப்பு தேதிய மாத்தி ஒரிஜினலோட கலந்து ஒரிஜினல் விலையிலேயே பழசையும் விக்கிறோம்.யாரும் கண்டு பிடிக்க முடியாது.!நூத்துல ஐந்தா நாடு முழுக்க சிதறியதை நாம நினைச்சாலும் கண்டுபிடிக்க முடியாது.!இதை அசம்பிள் பண்ண தனியா ஒரு பேக்டரி வச்சிருக்கேன்.!"
"இது தப்பு மனோஜ்.!"
"எனக்கும் தெரியும்.அதிக லாபம்.வியாபார போட்டி.மேலும் இ வேஸ்டை ரீசைக்கிள் பண்ணி பூமிய காப்பாத்துரோம்னு நினைச்சிக்க.முதல்ல வர்ர எல்லாமே அழிஞ்சுரும்.ஒரு காலத்துல பைத்யம் பிடிச்ச மாதிரி நோக்கியா போனை வாங்குனாங்க.!இன்னைக்கு அதோட நிலை.?முதல் செல் நெட்வோர்க் பி.பி.எல்.இன்னைக்கு இல்லை.!ரீகல் நீலம் இன்னைக்கு காணோம்.உஜாலா வந்துருச்சு.இங்க எதுவும் நிரந்தரமில்லை.சோ வெளிநாட்டிலிருந்து நம்மை விட அப்பனெல்லாம் வரப்போறான்.அவனுக்கு முன்னாடி நாம ஒன்னுமேயில்லை.அரசு அவங்களைத்தான் சப்போர்ட் பண்ணும்.எல்லாம் அரசியல். கூடுதலான லாபத்தை சம்பாதிச்சுட்டு கம்பெனியை வித்துட்டு வேற பிஸ்னஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்போம்.!"
"நாம பண்றது தப்பில்லையா மனோஜ்.?"
"போடா டேய்.!என்னனென்னமோ சொல்லி ஒட்டு வாங்கி ஏமாத்துராங்க.அவங்களுக்கு முன்னாடி நாம ஒன்னுமேயில்லை.!நாம நல்லவனுக.ஆனா கொஞ்சம் வல்லவனுக.!அவ்வளவுதான்.அலட்டிக்காம வேலையை பாரு.!"
அவன் அலட்சியமாக வெளியேறினான்.சிவா யோசிக்க ஆரம்பித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக